Thursday, August 31, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

சிவாஜி நிலவரம் (நகைச்சுவை) !
சரவணன் : சூப்பர் சார்... ! எப்படி சொல்றதுன்னு தெரியலை, இருந்தாலும் உங்களை விட்டால் யாரிடம் சொல்வது என்றே தெரியவில்லை

சூப்பர் : என்ன சொல்ல வர்றீங்க, வழக்கமா எனக்கு தான் சொல்லவே வராது

சரவணன் : இதுவரைக்குக் 40 கோடி அள்ளிவிட்டாச்சி

சூப்பர் : தெரிஞ்சது தானே, 40க்கு 100 கிடைக்க போவதே

சரவணன் : கிடைக்காது போலிருக்கு

சூப்பர் : என்ன சார் சொல்றிங்க

சரவணன் : படத்தோட சீனு எல்லாம் இன்டர் நெட்டுல வந்துடுச்சின்னு சொல்லி...

சூப்பர் : அதுவும் தெரிஞ்ச விசயம் தானே !

சரவணன் : அதே தான், அதச் சொல்லி டைரக்டர் என்ன சொல்றாரு தெரியுமா?

சூப்பர் : சார் ... நீங்க புரோடியூசர், அவரு டைரக்டர் எனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்

சரவணன் : இப்ப என்ன ஆச்சு தெரியுமா, சுவிட்சர்லாந்தில எடுத்த சீன் எல்லாம்
எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சின்னு, டைரக்டர் அதிர்ச்சி ஆயிட்டாராம்

சூப்பர் : நான் கூட கேள்விப் பட்டேன் மிஸ்டர் சரவணன், இதெல்லாம் இன்டெர்நெட் இருக்கிறதால ஒடனே பரவிடுது

சரவணன் : ஆமாம், நானும் அதைத்தான் சொன்னேன். ஒன்னும், குடிமுழுகல இருக்கிறதையே காட்டலாம் என்றேன் டைரக்டர் கோபப்படுகிறார்

சூப்பர் : என்னவாம்

சரவணன் : எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, நான் எடுக்கிற படம் என்றால் அதை தனிக்கை குழுகூட ரிலிஸ் பண்ணறத்துக்கு முன்னால பார்க்கக் கூடாதுங்கிறார்.

சூப்பர் : ம்.. அப்பறம் தனிக்கை சர்டிபிகேட் இல்லாமல் எப்டி ரிலிஸ் செய்கிறதாம் ?


சரவணன் : அவரு இங்க இருக்கிற தணிக்கை குழுக்கிட்ட போறது இல்ல, நேர மும்பை இல்லாட்டி டெல்லி போய் வாங்கிக்கலாம்னு சொல்றார். போன படத்திலும் அப்படித்தான் செய்தாரம்.

சூப்பர் : சரி எதோ செய்யுங்க இதான் பிரச்சனையா ?

சரவணன் : சூப்பர் சார் அது பிரச்சனை இல்லை

சூப்பர் : வேறு எதுதான் பிரச்சனை. நம்ம கலிஞர் ஐயாதானே இப்ப முதல்வராக இருக்கிறார்

சரவணன் : இது அரசியல் விவகாரம் இல்லை, விவகாரம் டைரக்டரால

சூப்பர் : கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

சரவணன் : தெளிவா சொல்றத்துகுள்ள எதாவது யோசனை செஞ்சிக்கிட்டே இமயமலைப் பக்கம் போய்டுவிங்கலேன்னு...

சூப்பர் : சார்.. அதெல்லாம் ஒன்னுமில்லை கண்டிப்பா படம் முடியறவரைக்கு வேறு எங்கும் போக மாட்டேன்.. நா ஒருதரம் சொன்னா..

சரவணன் : போதும் நம்பிக்கை வந்துடுச்சி. நம்ப டைரக்டர் ஒங்கள வச்சி எடுத்தப்படக் காட்சிகள் வெளியில வந்ததால, வேறு காட்சிகள் வைத்து யாருமே செல்லாத அமேசன் காட்டுகுள்ள போய் எடுக்கப் போறாராம்.

சூப்பர் : என்ன சரவணன் சார் பயமுறுத்துறிங்க

சரவணன் : நானே பயந்து தான் போயிருக்கிறேன். இது வரைக்கும் செலவு செஞ்ச பணமே
அனகோண்டா மாதிரி கழுத்தைப் பிடிக்குது

சூப்பர் : அது சரி அமேசன் சூட்டிங்க் போன அனகோண்டாவே கழுததை பிடிச்சுடுமே

சரவணன் : இதைத்தான் நான் சொன்னேன்

சூப்பர் : அவரு அதுக்கு என்ன சொன்னார் ?

சரவணன் : இங்கேயே செட்டு போட்டு எடுத்திடலாம் என்கிறார்

சூப்பர் : நல்ல யோசனை தானே, சோழவரம் ஏரியோ, பிச்சாவரம் ஏரியோ அதுல ஒன்னுல செட்டுப் போட்டு எடுத்திடலாமே சரவணன் சார்

சரவணன் : அதுலயும் சிக்கல், சுற்றுச் சூழல் நிர்வாகத்தினர் அனுமதி கொடுக்க மாட்டாங்களாம் !

சூப்பர் : அதுவும் சரிதான், இதைத் தெரிஞ்சுமா டைரக்டர் பிடிவாதமாக இருக்கிறார்

சரவணன் : அவரு சொல்றார் 'இந்த ஒரு சீனுதான் படத்தில் முக்கியம், அதை வெச்சுதான் 200 நாள் ஓட்டலாம் என்று இருக்கிறேன் படத்தில் அமேசான் காடுகள் கண்டிப்பாக வரனும், கதைப்படி வில்லன் சுமன் படம் எடுக்கிறத்துக்காக ஹீரோயினியை அமேசான் காட்டுகுள்ள கடத்திட்டு போய்விடுவாராம்... அதை தெரிஞ்சிக்கிட்ட ஹீரோ, அனகோண்டாவுக்கு மத்தியில் வில்லனை அனகோண்டாவை வச்சே பின்னி எடுக்கிறார்.. அந்த சமயத்தில் ஒரு அனகோண்டா ஹீரோயினையை லபக்க முயற்ச்சிப் பண்ணுது... ஹீரோ ஹீரோயினை அனகோண்டா கிட்டேர்ந்து காப்பாத்துறார்.

அதனால சோழவரம் ஏரிகிடைக்க வில்லை என்றால், சோழாவரம் ரேஸ் மைதானம் இப்ப சும்மாதான் இருக்கு, அதை 60 நாளைக்கு லீசுக்கு எடுத்து, அமேசான் காடு மாதிரி செட்டு போட்டிடலாம், செயற்கையா வேண்டுமானால் பத்தாயிரம் அனகோண்டா செஞ்சிடலாம் ஒரு முப்பது கோடிதான் செலவு ஆகும்' என்று கூலாக சொல்கிறார்.

சூப்பர் : என்னது மூன்று நிமிச சீனுக்கு 30 கோடியா ? டைரக்டர் அப்படியா சொன்னார் ?

சரவணன் : ஆமாம் ! இதுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் படம் 2010 தீபவளிக்குதான் ரிலிஸ் ஆகும் என்னை கோவிச்சிக்காதிங்க என்று கறாராக சொல்கிறார். இதை உங்கள விட்டா நான் யாருகிட்ட சொல்றது.

சூப்பர் : எனக்கு கொழப்பமாக இருக்கு சரவணன் சார், மருமகனை தேற்றிவிட அடுத்த படத்தை அவரைவச்சி
டைரக்ட் பண்ணச் சொல்லலாம் என்று இருந்தேன் ... இப்ப யோசிக்கனும் போல இருக்கு.

சரவணன் : சூப்பர் சார், எதுக்கும் நம்ம படம் முடியட்டம் அதுக்குள்ள அவசரப்பட்டு அவருக்கு வாக்கு கொடுத்திடாதிங்க. உங்களுக்கு ஒன்னு தெரியுமா ?

சூப்பர் : சொல்லுங்க சரவணன் சார்

சரவணன் : ஏற்கனவே போட்ட பட்ஜட்டைவிட இரண்டு மடங்கு இதுவரைக்கும் எகிறிடிச்சு, கண்ணாடி முன்னால போயி என் முகத்தைப் பார்த்தால் ஏ.எம் ரத்தினமும். கே.டி.குஞ்சுமோனும் என்னைப் பார்த்து பழிச்சிக்காட்டி சிரிக்கிறமாதிரி இருக்கு 1

சூப்பர் : என்ன கொடுமை சரவணன் சார் !!! இது

பின்குறிப்பு : இது ஒரு லக்க லக்கவுக்கு .... சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி கல கலப்புக்காக எழுதிய கற்பணை உரையாடல்.

45 : கருத்துக்கள்:

said...

//இதுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் படம் 2010 தீபவளிக்குதான் ரிலிஸ் ஆகும் //

//ஏ.எம் ரத்தினமும். கே.டி.குஞ்சுமோனும் என்னைப் பார்த்து பழிச்சிக்காட்டி சிரிக்கிறமாதிரி //

Ha Ha Ha...

Good Comedy..

மிகவும் இரசித்தேன்..

ஆனால் நான் கேப்டன் பற்றி பதிவு போட்டவுடனே நீங்க சூப்பர் ஸ்டார் பற்றி பதிவு போட்டு Hijack பண்ணிடீங்களே..ம்ம்ம்ம்ம்

said...

என்ன மிஸ்டர் ஜி.கே., என்னை முந்திக்கொண்டு 6 மணிக்கே பதிவை வலையேற்றிவிட்டீர்கள் {:))))))))))))))))))
ஸ்வாமிஜி ரஜினிகாரு பிக்சர் பாக உந்தண்டி!
எக்கட மீரு தெச்சிச்சாரண்டி - நாக்கு ஒக்க காப்பி காவலண்டி!
பம்பிஸ்தாரா?

said...

//ஆனால் நான் கேப்டன் பற்றி பதிவு போட்டவுடனே நீங்க சூப்பர் ஸ்டார் பற்றி பதிவு போட்டு Hijack //

சிபா..!

எங்க தலைவரைப் பத்தி நியூஸ் வராம எல்லாம் அடக்கி வாசிக்கிறாங்க... அதுதான் பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்தேன் ! நீங்களும் சமயம் பாத்து கேப்டனைப் பத்திப்போட்டதும் நானும் எங்க தலைவரைப் பற்றி தட்டிவிட்டேன்!
:)))

said...

//SP.VR.SUBBIAH said... ஸ்வாமிஜி ரஜினிகாரு பிக்சர் பாக உந்தண்டி!
எக்கட மீரு தெச்சிச்சாரண்டி - நாக்கு ஒக்க காப்பி காவலண்டி!
பம்பிஸ்தாரா? //

ஐயா ....!
ரஜினி ரசிகர்கள் ஒதைக்க வருவாங்களேன்னு
நானே இப்ப எங்க பம்முறதுன்னு எடம் பாத்துக்கொண்டிருக்கின்றேன்.
:)))

said...

ha ha..
good comedy

said...

///பம்பிஸ்தாரா?///

இதுக்கு என்ங்க அர்த்தம் ?

பம்புல தன்னி அடிச்சீங்களான்னு கேக்குறாரா ?

said...

//கண்ணாடி முன்னால போயி என் முகத்தைப் பார்த்தால் ஏ.எம் ரத்தினமும். கே.டி.குஞ்சுமோனும் என்னைப் பார்த்து பழிச்சிக்காட்டி சிரிக்கிறமாதிரி இருக்கு 1

சூப்பர் : என்ன கொடுமை சரவணன் சார் !!! இது//
:))
நல்லா எழுதிருக்கீங்க கண்ணன். நல்ல கற்பனை வளம்.

//ரஜினி ரசிகர்கள் ஒதைக்க வருவாங்களேன்னு
நானே இப்ப எங்க பம்முறதுன்னு எடம் பாத்துக்கொண்டிருக்கின்றேன்//
பின்னாடியே ஆட்டோல்லாம் வந்துட்டிருக்காம். உஷார் ஐயா உஷாரு.
:)

said...

நல்ல நகைச்சுவைப் பதிவு கோவியாரே!:))))))))))))

இன்றுமுதல் விடுமுறையில் ஊருக்கு செல்கின்றேன், விரைவில் மீண்டும் சந்திப்போம்!கி.போ.ர-லிடமும் சொல்லிட்டு கிளம்பனும்!

அன்புடன்...
சரவணன்.

said...

பதிவு எப்படியோ!
சூப்பர் ஸ்டார் பேரையும், கூடவே படத்தையும் போட்டுட்டீங்க!
அப்புறம் என்ன கவலை?
100 நிச்சயம்!
:)))

said...

//கைப்புள்ள said... சூப்பர் : என்ன கொடுமை சரவணன் சார் !!! இது//
:))
நல்லா எழுதிருக்கீங்க கண்ணன். நல்ல கற்பனை வளம்.
பின்னாடியே ஆட்டோல்லாம் வந்துட்டிருக்காம். உஷார் ஐயா உஷாரு.
:) //

கைப்புள்ளயை ... இந்த பக்கம் வரவச்சிட்டுச்சே சிவாஜி !

கற்பனை கலாய்கறத்துக்குதான் நல்லா வருது... !

அதை வச்சி தான் 'காலம்' தள்ளிவிடுகிறேன்.

:))

said...

//உங்கள் நண்பன் said...
நல்ல நகைச்சுவைப் பதிவு கோவியாரே!:))))))))))))

இன்றுமுதல் விடுமுறையில் ஊருக்கு செல்கின்றேன், விரைவில் மீண்டும் சந்திப்போம்!கி.போ.ர-லிடமும் சொல்லிட்டு கிளம்பனும்!

அன்புடன்...
சரவணன்.
//

சரா ... ! எனக்கு 'திக்குன்னு' ஆகிபோச்சு...! சந்தோசமாக ஊருக்குப் போங்க ! அவ்வப்போது எங்களையும் கொஞ்சம் எட்டிப்பாருங்க...!

இல்லாட்டி கை ஒடிஞ்சாது போல் இருக்கும் !

said...

//SK said...
பதிவு எப்படியோ!
சூப்பர் ஸ்டார் பேரையும், கூடவே படத்தையும் போட்டுட்டீங்க!
அப்புறம் என்ன கவலை?
100 நிச்சயம்!
:)))
//

எஸ்கே ... ! பதிவைப் பத்தி சொல்லியிருந்தீர்கள் என்றால் மேலும் சந்தோசமாக இருந்திருக்கும்...!
:(

100 யாருக்கு வேணும் !

said...

//Anitha Pavankumar said...
ha ha..
good comedy
//

அனிதா ... ! வருகைக்கும் மறுமொழிக்கும்! நன்றி !!!

said...

// செந்தழல் ரவி said...
இதுக்கு என்ங்க அர்த்தம் ?
பம்புல தன்னி அடிச்சீங்களான்னு கேக்குறாரா ?
//

பம்பிஸ்தாரா என்றால் அனுப்புறிங்களா ? கிடைக்குமா என்று பொருள்.

வாத்தியாருக்கு சூடாக காபி வேணுமாம் !
:))

said...

அதான் சொல்லியிருந்தேனே!
இப்பதிவில் எனக்குப் பிடித்த இரண்டு விஷயங்களைப் பற்றி !

காமெடி உங்களுக்கு நன்றாக வருகிறது எனச் சொல்லி, அலுத்து விட்டது!!!
:))!

சிங்கையில் எல்லாம் ஆட்டோ இருக்குதானே!

said...

//சரா ... ! எனக்கு 'திக்குன்னு' ஆகிபோச்சு...! சந்தோசமாக ஊருக்குப் போங்க ! அவ்வப்போது எங்களையும் கொஞ்சம் எட்டிப்பாருங்க...!

இல்லாட்டி கை ஒடிஞ்சாது போல் இருக்கும் !
//

என்னங்க கோவி! இப்படி சொல்லிட்டீங்க! சும்மா ஒரு 3நாள் இல்லைனா 4நாள் மட்டும் தான், திரும்பவும் வருவேன்! தொந்தரவு தருவேன்!


அன்புடன்...
சரவணன்.

said...

:)))

நல்ல காமெடி கோவியாரே!!

said...

//காமெடி உங்களுக்கு நன்றாக வருகிறது எனச் சொல்லி, அலுத்து விட்டது!!!
:))!

சிங்கையில் எல்லாம் ஆட்டோ இருக்குதானே! //

எஸ்கே !
நல்ல வேளை காமடியே அலுத்துவிட்டது என்று சொலாமல் என்று சொல்லாதவரை சந்தோசம் !
:)))

சிங்கையில் ஆட்டோ வந்தால் சீன போலிஸ் பின்னாடி பட்டை போட்டு விட்டுவிடுவாங்க ! அதனால் பயம் இல்லை ! :))

ஆட்டோ இல்லை டாக்ஸிதான் உண்டு !

said...

// உங்கள் நண்பன் said...

என்னங்க கோவி! இப்படி சொல்லிட்டீங்க! சும்மா ஒரு 3நாள் இல்லைனா 4நாள் மட்டும் தான், திரும்பவும் வருவேன்! தொந்தரவு தருவேன்!
அன்புடன்...
சரவணன். //

சரா ...! பதிவில் பின்னூட்டத்தை வார்த்து, 4 நாளில் வருவேன் என்று வயித்திலும் வார்த்திட்டிங்க !
:))

ரயிலைக் காணூம் ! தண்டவாளம் மாறி எங்கேயாவது சென்று விட்டதா ?
:))

said...

எங்கள் தலைவரை நகைச்சுவைக்கு உள்ளாக்கும் G.K வை துபாய் குறுக்கு சந்து, நாலாவது பொட்டிக்கடை கீழ் அமைந்துள்ள ரசிகர் மன்றத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

said...

//கப்பி பய said...
:)))
நல்ல காமெடி கோவியாரே!!
//

கப்பி பாய்..!
பாராட்டுக்கு நன்றி !!
மீண்டும் வருக !!! :)

said...

GK,

சூப்பர் சூப்பர்தான்.. 21 தாண்டி வேகமாக போயிட்டே இருக்கிறாரே...

said...

//தம்பி said...
எங்கள் தலைவரை நகைச்சுவைக்கு உள்ளாக்கும் G.K வை துபாய் குறுக்கு சந்து, நாலாவது பொட்டிக்கடை கீழ் அமைந்துள்ள ரசிகர் மன்றத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
//
தம்பி ...!
சிம்ரன் ஆப்பக்கடைக்கு பக்கதிலா ரசிகர் மன்றம் இருக்கு ?
:))

said...

:-)))

said...

//சிம்ரன் ஆப்பக்கடைக்கு பக்கதிலா ரசிகர் மன்றம் இருக்கு ?
:))//

அவர்கள் எங்களின் கிளை ரசிகர் மன்றம், விரைவில் எங்களுடன் இணைந்து இந்த பதிவுக்கு எதிராக ஷேக் சயீத் ரோட்டில் ஷேக்கே காதின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு (எவ்வளவு நாளைக்குதான் மூக்கலயே வைக்கிறது) மாபெரும் கண்டனப்பேரணி நடைபெறும் என்பதை துபாய் குறுக்குத்தெரு நாலாவது வட்டத்தின் சார்பாக அறிவித்துக் கொள்கிறோம்.

said...

வழக்கம்போலவே ரசிகர்களின் வீட்டு காதணி விழா, திருமண விழா போன்ற விழாக்களுக்கு தலைமை தாங்குவதற்கென்றே அவதாரமெடுத்துள்ள எங்கள் தானைத் தலைவரின் தளபதி தனி விமானம் மூலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது சற்று முன் கிடைத்த செய்தி!!

said...

கோவி,

Fantastic. சூப்பரா யோசிக்கிறீங்க போங்க :)


//சரவணன் : நானே பயந்து தான் போயிருக்கிறேன். இது வரைக்கும் செலவு செஞ்ச பணமே
அனகோண்டா மாதிரி கழுத்தைப் பிடிக்குது

சூப்பர் : அது சரி அமேசன் சூட்டிங்க் போன அனகோண்டாவே கழுததை பிடிச்சுடுமே
//
இது .... ;-)

எ.அ.பாலா

said...

//enRenRum-anbudan.BALA said...
கோவி,

Fantastic. சூப்பரா யோசிக்கிறீங்க போங்க :)//

பாலா ...!
அடுத்தவங்களை வாருவதென்பது எனக்கு தேன் சாப்பிடுவது போல இனிக்கிறது.. அதுதான் இப்படியெல்லாம் எழுதவைக்கிறது...! :)))

said...

//அடுத்தவங்களை வாருவதென்பது எனக்கு தேன் சாப்பிடுவது போல இனிக்கிறது.. அதுதான் இப்படியெல்லாம் எழுதவைக்கிறது.//

கலாய்த்தல் திணையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

said...

//கலாய்த்தல் திணையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!//

விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கின்றன?

said...

ஹி ஹி -ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ என்னமோ ரஜினிய ஓட்டுங்க ஓட்டுங்க :)
ஓகோ இன்னொருதடவை ? சொல்லனுமே சிரிப்பா இருக்கு பாவமாவும் இருக்கு :))))))))

said...

ஷேக் சயீத் ரோட்டில் ஷேக்கே காதின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு (எவ்வளவு நாளைக்குதான் மூக்கலயே வைக்கிறது) மாபெரும் கண்டனப்பேரணி நடைபெறும் என்பதை துபாய் குறுக்குத்தெரு நாலாவது வட்டத்தின் சார்பாக//////

தம்பி துபாய்லயா இருக்கீங்க?

said...

/Sivabalan said...
GK,

சூப்பர் சூப்பர்தான்.. 21 தாண்டி வேகமாக போயிட்டே இருக்கிறாரே...
//

சிபா ... !
சூப்பர் மட்டும்தான் சூப்பர் ! இப்ப 32 ஆகிவிட்டது ... பார்ப்போம் எவ்வளவு வாய்ஸ் இருக்கிறதென்று !

:)

said...

//தம்பி said...
அவர்கள் எங்களின் கிளை ரசிகர் மன்றம், விரைவில் எங்களுடன் இணைந்து இந்த பதிவுக்கு எதிராக ஷேக் சயீத் ரோட்டில் ஷேக்கே காதின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு (எவ்வளவு நாளைக்குதான் மூக்கலயே வைக்கிறது) மாபெரும் கண்டனப்பேரணி நடைபெறும் என்பதை துபாய் குறுக்குத்தெரு நாலாவது வட்டத்தின் சார்பாக அறிவித்துக் கொள்கிறோம். //

குறுக்குத் தெருவில் நாலாவது வட்டமா.
அப்ப அது குறுக்குத் தெரு அல்ல... ரசிகர்களின் கிறுக்குத் தெரு...! எனக்கு ஒரு forum அனுப்பிவையுங்க... ! ரசிகர் மன்றத்தில் சேரனும்.

:))

said...

// குமரன் (Kumaran) said...
:-)))
//

ஆல்ப்ஸ் மலைக் குன்றத்தில் நீ(ங்கள்) சிரித்தால் குமரா ஆனை... மலை மீது எதிரொலிக்கும்.
:)))

said...

//தம்பி said...
வழக்கம்போலவே ரசிகர்களின் வீட்டு காதணி விழா, திருமண விழா போன்ற விழாக்களுக்கு தலைமை தாங்குவதற்கென்றே அவதாரமெடுத்துள்ள எங்கள் தானைத் தலைவரின் தளபதி தனி விமானம் மூலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது சற்று முன் கிடைத்த செய்தி!! //

தம்பி அவர்களே !
தானைத் தலைவரின் தளபதியே தனிவிமானத்தில் வந்தால் தலைவர்
தனிக் கப்பலில் வருவாரா ?
பாலை வனத்துக்கு கப்பல் ???
:))

said...

தம்பி துபாய்லயா இருக்கீங்க?

ஆமாங்க மகி, அட்ரஸ் கூட இங்க இருக்கே பாக்கலியா நீங்க!

said...

GV ஆவிய விட்டுட்டீங்களே GK

மனம் விட்டு சிரித்தேன்

said...

தனிக் கப்பலில் வருவாரா ?
பாலை வனத்துக்கு கப்பல் ???
:))

போதும்!!

said...

நகைச்சுவைன்னு சொல்றீங்க...ஆனா உண்மையிலேயே ஷங்கர் பிரம்மாண்ட மாயையில இருந்து வெளிய வர வேண்டிய நேரம் வந்துருச்சு. his movies are quite monotonous nowadays...

said...

//G.Ragavan said...
நகைச்சுவைன்னு சொல்றீங்க...ஆனா உண்மையிலேயே ஷங்கர் பிரம்மாண்ட மாயையில இருந்து வெளிய வர வேண்டிய நேரம் வந்துருச்சு. his movies are quite monotonous nowadays... //

ஜிரா...!
சரியாக சொன்னீர்கள் இங்கே நான் கோடிட்டதும் அதைத்தான் !
:)

said...

60 வருசமா சினிமா வளத்த கம்பெனி இன்னிக்கு ரஜினி கைலயும் சங்கர் கைலயும் இருக்கு என்னத்த சொல்ல என்ன கொடுமை இது சரவணன் ? :))

ஆமா எனக்கு எங்க நன்றி? :)))))))))

said...

//மகேந்திரன்.பெ said...
60 வருசமா சினிமா வளத்த கம்பெனி இன்னிக்கு ரஜினி கைலயும் சங்கர் கைலயும் இருக்கு என்னத்த சொல்ல என்ன கொடுமை இது சரவணன் ? :))
//
மகி

காலில் இருக்கு என்று சொல்லாமல் கையில் இருக்கிறது என்று சொல்லிட்டிங்க ! நல்லது
:))

said...

// மகேந்திரன்.பெ said...
ஹி ஹி -ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ என்னமோ ரஜினிய ஓட்டுங்க ஓட்டுங்க :)
ஓகோ இன்னொருதடவை ? சொல்லனுமே சிரிப்பா இருக்கு பாவமாவும் இருக்கு :)))))))) //

மகி,
ஓட்டுறதா ? அவர் தானுங்க எல்லோரையும் ஓட்டப்போகிறார். முதலில் சரவணனா ? சங்கரா ? பார்ப்போம் !

said...

எல்லோரையும் ஓட்டப்போகிறார். முதலில் சரவணனா ? சங்கரா ? பார்ப்போம் ///

எது மஞ்ச நோட்டீஸ் குடுக்குறது யாரு மொதல்லன்னு கேக்குறீங்களா? ஆனாலும் இம்மாந்தூரம் அவர வாரப்படாது ஆமா