எங்கே காதை கொடுங்கள்... உங்களுக்கு மட்டும் ரகசியமாக ஒன்று சொல்ல வேண்டும். தமிழ் பதிவர் உலகில் தற்போதைய ட்ரென்ட் கிசு கிசு. அடுத்தவர் பற்றிய விசயம். அடுத்தவர் பற்றிய செய்தி என்று இருக்க வேண்டும் - விசயம் என்று சொன்னதற்காக திரு குமரன் மற்றும் திரு ஜிராவும் சேர்ந்து 'நாங்கள் எழுதி எழுதி சொன்னாலும் (சொல் ஒரு சொல்) இந்த ஆளு படிக்க மாட்டேன்' என்கிறார் என்று கோவித்துக் 'கொல்லப்'போகிறார்கள்!.
அதாவது அடுத்தவர் பற்றிய விசயம் என்றால் அசடு வழிந்து படிப்பதில் யாருக்குத்தான் சுகம் இருக்காது. கிசு கிசுக்களை கேட்பதையே 'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று பலரும் உணருகிறோம்.
இன்றைய தமிழ்பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்களில் கிசு கிசு இல்லையென்றால் பத்திரிக்கை வியாபாரம் பிசு பிசுத்துவிடும். அந்த அளவிற்கு பொதுமக்களிடம் மதிப்பு பெற்றவர்கள், அறிமுகம் ஆனாவர்களான நடிகர் நடிகைகள், மற்றும் அரசியல் வாதிகளின் அந்தரங்கங்களை தெரிந்து கொள்வதில் பொதுமக்களுக்கு ஆர்வம் இருப்பதை பத்திரிக்கை உலகு நன்கு புரிந்து வைத்திருக்கிறது.
அதாவது ரகசியங்கள் பிசு பிசுத்தால் அது கிசு கிசு எனப்படுகிறது. தாங்கள் புகழடைய வேண்டும் என்று சிலர் தாங்களாகவே தங்களைப் பற்றிய கிசு கிசுக்களை வெளியிடுவார்களாம். அந்த ரகசியமமும் தெரியவரும் போது அது கிசு கிசு பற்றிய ஒரு மாபெரும் கிசு கிசுவாக அது மீண்டும் ரசித்துக் கேட்கப்படும் !
இதுவல்ல செய்தி. ரகசியங்கள் பற்றியது. ரகசியம் என்பது ஒரு தனிப்பட்ட ஒருவரின் சொந்த அனுபவமாகவோ, அல்லது ஒரு குழுக்கள், கட்சிகள், சங்கங்கள் ஆகியவற்றின் கொள்கையாகக் கூட இருக்கும். தம்பதிகளின், நண்பர்களின் அந்தரங்கம் பற்றியதாகக் கூட ரகசியம் இருக்கும். தனிநபர் ரகசியமாக இருந்தால் அவர் பிரச்சனையில் இருந்து விடுபட அல்லது மனபாரம் குறைய அந்த ரகசியத்தை தனக்கு நெருக்கமானவரிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஒரு வேளை அந்த ரகசியம் பற்றிய செய்தி நினைக்கும் போதெல்லாம் அவருக்கு மகிழ்வை தருவதாக இருந்தால் அதையும் நெருக்கமானவர்களிடம் தெரிவிப்பர். நட்பு, உறவு உன்னதங்களை உடையாமல் வைத்திருப்பதில் ரகசியத்தித்தை பாதுகாக்கும் நம்பகத்தன்மை பெரும் பங்கு வகிக்கிறது. எந்த ஒரு ரகசியமும் இருவருக்கு மட்டுமே தெரியும் வரைதான் அது ரகசியம் எனப்படும் என்று எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறோம்.
தனக்கு தெரியவந்த அல்லது தன் ரகசியத்தை தான் மட்டுமே வைத்திருக்கும் வரை ரகசியம் ரகசியமாக இருக்கும். ஒருவர் ரகசியம் செல்லும் போது ரகசியத்தை கேட்பவர்தான் அந்த ரகசியத்தை கட்டிக் காட்கவேண்டும். சொல்லுபவர் கேட்பவர் மீது நல்ல நம்புக்கை கொண்டிருந்தால் போதும், ஆனால் கேட்பவர் கேட்டுவிட்டு அந்த ரகசியத்தின் மீது சத்தியம் என்ற ஒரு போர்வையை போட்டு மறைத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் ரகசியத்தைசொன்னவர் வெளியில் சொல்லும் முன் வெளியில் சொல்லிவிடக் கூடாது. ஒரு ரகசியம் மற்ற ஒருவரிடம் செல்லும் போது ரகசியம் என்ற ஒன்றுடன் சத்தியமும் நம்பகத் தனமையும் சேர்ந்தே செல்கிறது.
அதே போல் ஒருவர் ஒரு ரகசியத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தால் தன் மனபாரத்தை இறக்கி வைப்பதற்கோ அல்லது மகிழ்ச்சியை பெருக்குவதற்கோ வாய்ப்பு இருந்தால் மட்டுமே சொல்லலாம், அதுவும் கேட்பவர் தன் முழு நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்றால் மட்டுமே சொல்லவேண்டும். அப்படி இல்லாது போனால் ரகசியம் கசிய ஆரம்பித்துவிடும். மற்றபடி தனிப்பட்ட ஒருவரின் ரகசியத்தினால் யாருக்கும் தற்போதோ, எதிர்காலத்திலோ எந்த பாதிப்பும் வரப்போவதில்லை என்று அவரே உணர்ந்திருந்தால் அதை வெளியில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.
பதிவின் நீளம் கருதி செய்திகளை சுருக்கிவிட்டேன்.
கட்டுரை ஏமாற்றம் அளித்தால், கிசு கிசு செய்திகளுக்கு இங்கே செல்லுங்கள் சாம்பு, சங்கம்
Tuesday, August 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
9 : கருத்துக்கள்:
நீங்களுமா?
அப்படினு வந்தேன்
ஹிஹி
//நாகை சிவா said...
நீங்களுமா?
அப்படினு வந்தேன்
ஹிஹி
//
சிவா... ! பதிவுகளோடு ஒத்துப் போகவிட்டாலும் தலைப்புகளோடு ஒத்துப் போகலாமே என்ற முயற்சிதான்.
நானும் ஹி ஹி !
இருவருக்கு மட்டும் தெரிந்தால் அது ரகசியம்
ஒருவருக்கு மட்டுமே தெரிந்தால் அது பரம ரகசியம்
என்ன மிஸ்டர் கண்ணன், சரிதானே?
//SP.VR.SUBBIAH said...
இருவருக்கு மட்டும் தெரிந்தால் அது ரகசியம்
ஒருவருக்கு மட்டுமே தெரிந்தால் அது பரம ரகசியம்
என்ன மிஸ்டர் கண்ணன், சரிதானே?
//
சுப்பையா சார் ...! நீங்கள் சரியாக சொல்லுகிறீர்கள். அனுபவம் !!!
பலருக்கு தெரிந்தால் அது மாபெரும் ரகசியம் !
:))
நான் ஒரு ரகசியம் சொல்லவா/இல்லை நாளைக்கு 11 மணிக்கு சொல்லவா :))))
// மகேந்திரன்.பெ said...
நான் ஒரு ரகசியம் சொல்லவா/இல்லை நாளைக்கு 11 மணிக்கு சொல்லவா :))))
//
மகி,
எதையாவது கொளுத்தப் போறத்துக்கு முன்னோட்டமா ?
எங்கே ஒளிந்து கொள்வது என்று பார்க்கிறேன் !
:)))
மகேந்திரன்.பெ said...
//நான் ஒரு ரகசியம் சொல்லவா/இல்லை நாளைக்கு 11 மணிக்கு சொல்லவா :)))) //
அதான் சொல்லிட்டியே!
கடைசிவர போண்டாவக் கொடுக்காமா இருட்டுலயே அனுப்பி வச்சிட்டியே?
அன்புடன்...
சரவணன்.
//அதான் சொல்லிட்டியே!
கடைசிவர போண்டாவக் கொடுக்காமா இருட்டுலயே அனுப்பி வச்சிட்டியே?
//
அப்ப இருட்டுல ஓரமா குந்திகினு போண்டா சாப்டது நீங்க இல்லையா ? வேற யாரா இருக்கும்? :) பி.நா?
நீங்க சொல் ஒரு சொல் படிக்கிறீங்க..படிக்கிறீங்க...படிக்கிறீங்க....போதுமா? :-)
ரகசியத்த அடுத்தவங்க கிட்ட சொல்றதே...நமக்குத் தெரியும்னு பெருமையாக் காமிச்சிக்கிறத்தான...
Post a Comment