பெண்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டால் பித்தம் பிடிக்குமா? பெண்களின் அறிவு ஆண்களின் அறிவைவிட எந்த விதத்தில் குறைந்தது?. பெரும்பாலானோருக்கு தெரிந்ததும், ஒப்புக்கொள்ளும் ஆண் பெண் வேறுபாடு என்பது உடல் சார்ந்த வேறுபாடே அன்றி. வேறு எந்த விதத்திலும் வேறுபாடு கிடையாது. உடல் பலம் சார்ந்த ஒரு சில வேலைகளை பெண்களால் செய்யமுடியாமல் இருக்கலாம். ஆனால் அதைச் செய்வது பற்றிய அறிவும், தெளிவும் பெண்களுக்கு நிச்சயம் இருக்கும்.
இதெல்லாம் அந்த மூதாட்டி ஒளவைக்குத் தெரியாதா ? ஒரு பெண்னாக இருந்து கொண்டு அதுவும் ஆத்திச் சூடி என்ற ஒரு அறிவுறை நூலை எழுதியவர் ஏன் 'தையல் சொல் கேளேல்' என்றார் ? அவர் தான் சொன்னதை அவருக்கே பொருத்திப் பார்க்காமல் சொன்னாரா ?
அதாவது பெண்களின் பருவத்தை 5 வயது முதல் 40 வயது வரை 7 பருவங்களாக அந்த காலத்தில் பிரித்து வைத்திருந்தனர்.
1. பேதை (வயது 5 - 7)
2. பெதும்பை (வயது 8 -11)
3. மங்கை (வயது 12-13)
4. மடந்தை (வயது 14-19)
5. அரிவை (வயது 20-25)
6. தெரிவை (வயது 26-31)
7. பேரிளம் (வயது 32-40)
இவற்றுள் 5 வயது முதல் 11 வயதுக்குள்ளான பருவத்தை (பேதை மற்றும் பெதும்பை) 'தையல்' என்று கூறுவர். தையல் பருவத்தில் பெண்கள் சிறுமி என்ற அளவில் கருதப்பட்டனர். அந்த வயதில் பொது அறிவு என்பது அவ்வளவாக வளர்ந்திருக்காது என்று கருதியே. அத்தகைய சிறிய பருவத்து பெண்கள் அதாவது சிறுமிகளால் சொல்லப்படுவதை ஆராயமல் கேட்க்கக் கூடாது என்பதற்காகவே ஒளவை பாட்டி அவ்வாறு சொன்னாள். 12 வயதுக்கு மேல் அறிவு ஓரளவுக்கு நன்கு வளர்ந்திருக்கும் என்பதால் பெண்களுக்கு மங்கை பருவத்தில் (வயது 12-13) திருமணம் செய்து கொடுக்கப்பட்டது.
அறிவில் சிறந்த மூதாட்டி உளறுவாரா என்ன ? அரைகுறையாக புரிந்து கொண்டு விளங்கிக் கொண்டு விளக்கம் சொல்பவர்களே... பெண்களை அந்த சொல் அதாவது 'தையல் சொல் கேளேல்' கேவலப் படுத்துவதாக உளறுகிறார்கள். ஒளவையின் சொல் அமுதமொழி என்பதற்கு இதுவே நற்சான்று !
தகவல் குறிப்புதவி நூல்: சித்தர் தத்துவம்
ஆசிரியர் : பா.கமலக்கண்ணன், வானதி பதிப்பகம்
Thursday, August 24, 2006
Subscribe to:
Post Comments (Atom)
17 : கருத்துக்கள்:
ஆராய்ச்சி அறிவுரை அக்கறை ஐடியா என்று உங்க ரேஞ்ச் எங்கயோ போயிட்டு இருக்கு இதில நக்கல் நையாண்டி கிண்டல் கோவி. கண்ணன்னு ஒருத்தர் இருந்தார் அவரைத்தான் காணோம் எங்க போனாருன்னு தெரியல.
// குமரன் எண்ணம் said...
ஆராய்ச்சி அறிவுரை அக்கறை ஐடியா என்று உங்க ரேஞ்ச் எங்கயோ போயிட்டு இருக்கு இதில நக்கல் நையாண்டி கிண்டல் கோவி. கண்ணன்னு ஒருத்தர் இருந்தார் அவரைத்தான் காணோம் எங்க போனாருன்னு தெரியல.
//
குமரன்...!
அவர் இருக்காருங்க அந்த கரோலின் மேட்டருக்கு அப்பறம் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன் என்று சொல்லுகிறார். நானும் அவரைத்தான் தேடுகிறேன். அக்காமாலா அடிச்சிருக்காருன்னு நெனைக்கிறேன்... தெளிஞ்சதும் சிக்காமலா போய்விடுவார்.
:))
அந்து வயது ஆண்குழந்தைகள் சொல்வதையும் ஆராயமல் கேட்கக் கூடாது. அப்படியிருக்க
ஏன் பெண் குழந்தைகளுக்கு மட்டும் சொல்ல வேண்டும். இந்தக் கருத்தை இன்னும் ஆராய வேண்டும்.
முன்னர் இந்த முதுமொழி பற்றி சத்தியராஜ்குமார் இன்னொரு கருத்து எழுதினார்.
நான் என்னமோ டைலரிங் சொல்லிக்கொடுக்கப் போறீங்கன்னு வந்தேன் :)
//Chandravathanaa said...
அந்து வயது ஆண்குழந்தைகள் சொல்வதையும் ஆராயமல் கேட்கக் கூடாது. அப்படியிருக்க
ஏன் பெண் குழந்தைகளுக்கு மட்டும் சொல்ல வேண்டும். இந்தக் கருத்தை இன்னும் ஆராய வேண்டும்.
முன்னர் இந்த முதுமொழி பற்றி சத்தியராஜ்குமார் இன்னொரு கருத்து எழுதினார்.
//
Chandravathanaa அவர்களே...!
இந்த கருத்து எந்த காலத்தில் சொல்லப்பட்டது என்று பார்க்கவேண்டும். அப்போது பெண்கள் பற்றிய சில கட்டுப்பாடுகள் உலகம் முழுதுமே இருந்தன. தமிழர்களிடத்தில் தான் பெண் புலவர்கள் தோன்றினர். ஒளவை சொன்ன செய்யுளில் உள்ள பொருளை மறந்துவிட்டு அல்லது பொருள் புரியாமல் தவறாக ஒளவையாரை தூற்றுவதையும், மேலும் அந்த சொல்லை வைத்துப் பெண்களை பழிப்பதை தவறு என சுட்டிக்காட்டவே எடுத்து எழுதினேன்.
ஆண் குழந்தை, பெண் குழந்தை
என்றெல்லாம் இங்கே பிரித்துப் பார்ப்பதைப் பற்றி சொல்லவில்லை. எந்த குழந்தையாக இருந்தாலும் குழந்தை தான். மேலும் ஒன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டு இருந்தார் (ஒளவை) என்றால் அவற்றை புகழவோ, இகழவோ அல்லது அதுபற்றி பேசவே இல்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். மாறாக உயர்வாக சொல்லுகிறார்கள் என்ற உள் அர்த்தம் சரியா என்று தெரியவில்லை. அது அவரவர் எடுத்துக் கொள்வதைப் பொருத்து.
ஒரு பெண்ணாகிய ஒளவையார் பெண்களைப் பற்றி எழுதிருக்கிறார். அவர் ஏன் ஆண்களைப் பற்றி எழுதவில்லை என்று அவருக்குத்தான் தெரியும்...!
நீங்கள் கொடுத்த சுட்டியில் சிறுகதைகள் இருக்கின்றன. அதில் எது இங்கே தொடர்புடையது என்று தெரியவில்லை!
மறுமொழிக்கு நன்றி !!
//மகேந்திரன்.பெ said...
நான் என்னமோ டைலரிங் சொல்லிக்கொடுக்கப் போறீங்கன்னு வந்தேன் :)
//
மகி,
பதிவிலேயே நாள் முழுதும் இருந்தால்
வீட்டில் டைலரிங் ஓட்டுவது போல் நன்றாக மிதி தான் விழும்!
:))
GK,
நல்ல விசயத்தை தந்துள்ளீர்கள்..
மிக்க நன்றி.
//Sivabalan said...
GK,
நல்ல விசயத்தை தந்துள்ளீர்கள்..
மிக்க நன்றி.
//
சிபா...!
எப்பவும் போல் தவறாமல் வந்து பாராட்டியதற்கு நன்றி !
குர் ஆன் காரர்களை விட மோசமான நியாயப்படுத்தல்
வெங்காயம்
இந்த நியாயப் படுத்தல் தேவையில்லை என்பது என் கருத்து!
இது எதில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வைத்து இந்தப் பதிவு அமையவில்லை எனக் கருதுகிறேன்.
ஆத்திச்சூடி -- வளரும், படிக்கும், குழந்தைகளுக்குச் சொன்ன ஒன்றை பொதுப்படையாக்கி அதை விளக்கவும் முயற்சித்திருப்பது ஔவ்வைக்கும் புகழ் சேர்க்கவில்லை!
இப்படிச் சொன்னதற்கு வருந்த வேண்டாம்!
'வெங்காயம்' எனச் சொல்லி மயூரனும் கிட்டத்தட்ட அதே தவற்றைச் செய்திருக்கிறார், 'மோசமான நியாயப்படுத்தல்' எனச் சொல்லியதின் மூலம்!!
கோவியாரே! நல்ல விசயம்! தெரியாத புது விசயம்,
////மகேந்திரன்.பெ said...
நான் என்னமோ டைலரிங் சொல்லிக்கொடுக்கப் போறீங்கன்னு வந்தேன் :)
//
நானும் அப்படித்தான் நினைத்து வந்தேன்!:)))))
அன்புடன்...
சரவணன்.
கேளேல் " :(
கேக்கனுமா கூடாதா :) யப்பா மொத மொதலா பதிவுக்கு ஒரு கேள்வி ?
// மகேந்திரன்.பெ said...
கேளேல் " :(
கேக்கனுமா கூடாதா :) யப்பா மொத மொதலா பதிவுக்கு ஒரு கேள்வி ?
//
மகி,
உங்கள் வீட்டுகாரவங்க கிட்டதான் கேட்கனும் நீங்கள் கேட்பவரா ? இல்லையா ? என்று !
:))))
// SK said...
இந்த நியாயப் படுத்தல் தேவையில்லை என்பது என் கருத்து!
//
எஸ்கே !
ம்... பெரியவுங்க கருத்து சொல்றீக !
சரியாத்தான் இருக்கும் !
:))
//உங்கள் நண்பன் said...
கோவியாரே! நல்ல விசயம்! தெரியாத புது விசயம்,
நானும் அப்படித்தான் நினைத்து வந்தேன்!:)))))
அன்புடன்...
சரவணன்.
//
சரா... !
டைலரிங் யாரு கத்துக்கிறாங்க... ! நமக்கு எல்லாம் ரெடி மேட் தான் சூட் ஆகுது !
:)
கோவியாரே.... கோவியாமல் பெண் புத்தி பின் புத்தி என்பதற்கும் ஒரு விளக்கம் எடுத்து விடுங்களேன்.
//திருவடியான் said...
கோவியாரே.... கோவியாமல் பெண் புத்தி பின் புத்தி என்பதற்கும் ஒரு விளக்கம் எடுத்து விடுங்களேன்.
//
திரு ...!
இது ரொம்ப சிம்பிள் !
அதாவது பெண்கள் பின்னால் (future) நடக்கப் போவதை ஊகித்து அறியும் ஆற்றல் உடையவர்கள் என்பதற்காக சொல்லியிருக்கலாம் !!!
:))))
Post a Comment