Saturday, February 10, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

சீசன் கவிதை : கருவை சுமந்து...!

ஒருதலைக் காதலா இது ...?
என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை,
எதுவும் சேரவில்லை என்றால்,
எப்படி என் கவிதைகள்
உன் கருவை சுமக்கின்றன ?

என் கடித உறைகள் தொடர்ந்து கிழிவதால்,
நான் கருவடைவது வாடிக்கை ஆகிவிட்டதோ ?

நீ கிழித்துப் போடும் ஒவ்வொரு
கடிதமும் உன்னால் கருக்கலைப்பு
செய்யப் படுகிறது,

முழுதாக சுமக்க கொள்ளை ஆசை
என்றாவது ஒரு நாள் நீ உன்னை
மறக்கும் போது என் கரு மேலும் வளர்ந்து
நிச்சயம் பிரசவமாகும்.

அதுவரை,
தொடர்ந்து இதய மையால் என்பேனா
காகித புணர்வை தொடர்ந்து நடத்தும் !

பிகு : காதலர் தினத்துக்கு காதலர் காத்திருக்கலாம்... கவிதைகள் காத்திருக்குமா ?
பிதற்றல்களைத் தொடர்ந்து ... நான் இங்கே

Thursday, February 08, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

நீ இல்லாத நான் !


காத்துக் கொண்டிருந்த
கள்வனைப்போல
நீ சென்றதும்
துள்ளிக் குதித்தது என் தனிமை.

நீயில்லாத என்னை, எண்ணிப் பார்க்கிறேன்

பூட்டிய அறை முழுவதும்
பரவும் பூக்களின் வாசம் போல்
என்னைப் பற்றி நினைகிறேன்

பதார்த்தமிருக்கிறது,
பருகும் பானமும் இருக்கிறது,
மகிழ்வினால் பசிதான் இல்லை

தொலைக் காட்சித் தொடரில்
அழுதுவடியும் பெண்களைப் பார்த்து
சிரிக்கிறேன், உன்னிடம் நான்
அழுவதைவிட இதுபரவாயில்லை

குளியலறைச் சுவற்றில் ஸ்டிகர் பொட்டு
நகத்தால் சுரண்டி பெயர்த்தெரிகிறேன்
அங்கும் உன் நினைவு வரும் என்பதால்

மலரக் காத்திருக்கும் மொட்டைப் போல
எனக்குள் மகிழ்வாக இன்னொரு உலகம்
இருப்பதை நீ இருக்கும் போது உணரமுடியவில்லை

இன்று மட்டும்,
குளிர்சாதன பெட்டியும் கிறுகிறுப்பதேன் ?
கண்ணாடி கோப்பைகள் கண்ணடிப்பது ஏன் ?
வி.சி.டி ப்ளேயர் மட்டும் ஓடுவதேன் ?
நள்ளிரவும் பகலும் ஒன்றாக இருப்பதேன் ?

கன்னத்தில் கைவைத்து
இது எத்தனை நாளைக்கு என்று
ஏக்கப் பெருமூச்சுவிடுகிறேன்
அந்த கடைசி நேரக் கையசைப்புக் காட்சி
அடிக்கடி மகிழ்வைத் தடைசெய்கிறது
மகனே! இன்னும் ஒரு மாதத்திற்கு தான்
உன் ஆட்டம் என்று !

தனிமையில் இனிமை அருமை.

நள்ளிரவு தாண்டி நீ தொ(ல்)லைபேச
அத்தனை மகிழ்வும் அரை நொடியில்
மறைந்து போக, நீ பேசி முடிந்ததும்
மீண்டும் குளிர்சாதன பெட்டியை
கண்கள் அனிச்சையாகத் தேட
அந்த இரவு எனக்கு விழித்துக்கொண்டிருந்து

அப்படியே மயங்கி கிடக்கிறேன்,
கண்கள் திறக்க முயற்சிக்கவில்லை,
உன்னைப் பற்றிய நினைவுகளும்
கூட என்னை பயமுறுத்துகிறது

பின்குறிப்பு : சிறில் அலெக்ஸ் கவிதையைத் தொடர்ந்து ... ஒரு ஆறுதல் கவிதை இது இப்படித்தான் பெரும்பாலும் நடக்கிறது. :)

Sunday, February 04, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

காவேரி பெண்ணே வா வா!



புகுந்த வீடா ?
பிறந்த வீடா ?
தஞ்சை தரணியில் உன்
புணர்ச்சி வேண்டி
வானம் பார்த்த பூமி
முப்போகத்திற்கு வேண்டி
நிற்க,

நிறைமாத கர்பம் ஒவ்வொரு ஆண்டும்
வேண்டும் என
மேட்டுர் அணை வேண்டி நிற்க,

கையளவு நீராவது
கடல் மணலை நெனைக்காதா
என பூம்புகார் கடற்கரை காத்திருக்க,

வரம் தரும் சாமியாக,
நீதிதேவன் தீர்ப்பு
இன்னும் சில மணித்துளிகளில்...

வாழாவெட்டியாக பிறந்த வீட்டில்
சிறைபட்டுக் கிடக்கும் உன்னை
இன்றாவது உன்வீட்டார்
தடுத்துவைத்தற்காக சீர்கொடுத்து
சீராக உன்னை
புகுந்தவீட்டிற்கு அனுப்புவார்களா ?



காவேரி நீர் பங்கிடு குறித்து ஞாயம் வெற்றிபெற வேண்டுவோம், வாழ்த்துவோம் !

Thursday, February 01, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

புது ப்ளாக்கர் - ஒரு எச்சரிக்கை !


சாம பேத தான தண்டம் என்ற வகையில் புது பளாக்கர் கட்டாயமாக அனைவரையும் மாறச் சொல்கிறது. அது பரவாயில்லை.

பின்னூட்டம் (Post a Comments) ஒரு சில இடுகைகளுக்கு வேண்டாம் அல்லது போதும் நிறுத்தாலாம் என்று நினைத்து

Post Options
Reader Comments
Allow
Don't allow

இதில் கைவைத்து விட்டால் அதன் பிறகு அடுத்துப் போடும் இடுகைக்குக்கு நீங்கள் கமெண்ட் அனுமதித்தாலும், பின்னூட்டம் போட முயற்சிக்கும் போது ப்ளாக்கர் அலட்சியப்படுத்திவிட்டு மேலே உள்ள படம் தான் தெரியும். அதாவது

We're sorry, but we were unable to complete your request. என்று சொல்லும் !

என்ற செய்தி வரும்... அதன் பிறகு பின்னூட்ட அனுமதி இருந்தாலும் புது இடுகைகளுக்கும் யாரும் பின்னூட்டம் (Comments) போட முடியாது.

இது புது பளாக்கரின் குறைபாடு இன்னும் சரிசெய்யப்படவில்லை. இதற்கான தீர்வு பல்வேறு இணையப் பக்கங்களிலும் தேடிப்பார்த்தேன் இதுவரை குறைபாடு களையப்பட்டதாகச் சொல்லப்படவில்லை. மேலும் இதே போல் தொந்தரவு புது ப்ளாக்கரில் காணப்படுவதாக பல ஆங்கில ப்ளாக்கர்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.

நேற்று ஒரு இடுகைக்கை பின்னூட்டம் போதும் என்று முடிவெடுத்து நிறுத்தினேன். அதன் பிறகு புதிய இடுகைகளுக்கும் பின்னூட்டம் அனுமதித்தும் ... பின்னூட்டம் இட முடியவில்லை

:(