Thursday, August 17, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

லிவிங் ஸ்மைல்ஸ் !

லிவிங் ஸ்மைல் பற்றி விவாதங்கள் வருவது கொஞ்சம் கசப்பானதாக இருந்தாலும், அவர் விரும்புவது போல் ... எல்லோரைப் போலவே அவரை எல்லோரும் சமமாக நினைப்பதால் (நினைப்பது அல்ல சமம் தான் !) அவர் விவாதத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல எனவே ஆரோக்கியமான விவாதமாக அவர் எடுத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன். அவருக்கு அந்த பக்குவம் இருக்கிறது. ஸ்மைல் ப்ளீஸ் :))



எனக்கு நன்கு அறிமுகமான லிவிங் ஸ்மைல்ஸ் - அதாவது பூக்களுடன் ஆன ஒரு பேட்டி இங்கே !

லிவிங் ஸ்மைல்ஸ் !!!

சிரிக்கும் பூவே ! உன் சிறப்பில் சிறந்தது எது,
மனமயக்கும் மணமா, நெஞ்சள்ளும் வண்ணமா?
இரண்டும் சேர்ந்திருப்பது தான் தன் சிறப்பென்றது மலர் !

ஆங்கில முத்தம் தந்து உன் இனிப்பு எச்சிலை
அள்ளிச் செல்லும் வண்ணத்து பூச்சி உனக்கென்ன உறவு?
தேனுக்கு மகரந்தம் விற்கும் பண்ட மாற்று வணிக உறவு !

வண்ணப் பூவே ! நீ விரும்பிச் சேருமிடம் அர்சனையா ? பஞ்சணையா?
அன்பை பறிமாரும் கைகள் தன் அன்பை சொல்லும்,
அன்பு பரிசு பூச்சென்டாய் செல்வதே என் விருப்பம் !

மனம் கொள்ளை கொள்ளும் வண்ணத்தில், உன்
நெஞ்சை அள்ளும் வண்ணமெதுவோ? அனைத்து வண்ணமும்
தன்னுள் பொதித்த அமைதி வெள்ளை வண்ணம் !


கரம் கொய்து கிள்ளி எடுக்கும் போது, உன்
கழுத்தை திருகியதாக கதறி அழுவாயா?
பிறவிப் பயனடைவதில், வலியென்பதும் வாழ்த்தும் வரம் தான்!

தெவிட்டாத தேன் தரும் பூவே, நீ கேட்கும்
தெவிட்டாத தேனிசை எது? தென்றல் வந்து தீண்டும் நேரம்,
தேனெடுக்க வண்டுகள் சுற்றி சுற்றி பாடும் அந்த இசை !

மணக்கும் பூவே உன்னை மயக்கும்
மணம் எதுவோ ? மகிழ்சியாய் குளிர்ச்சி தர, மாலை நேர
மல்லிகை வாசமே என்னை சிலிர்க்க வைக்கும் மணம் !

வாசப் பூவே நீ பேசும் மொழி எதுவோ?
நேசக் கரங்கள் மென்மையாய் தொட்டு பேச, நான்
வாசம் தந்து பேசும் மௌன மொழி !

கொடியில் ஆடும் மலரே ! நீ மகிழ்ந்து ஆடும்,
ஆட்டம் எப்போது? மங்கையர் தம் மனமகிழ, கூந்தலெனும்
ஊஞ்சலில் கொண்டாடமாய் ஆடுவேன் அப்போது !

சிலிர்க்கும் பூவே நீ சிரித்து மகிழ்வது எப்போது ?
மொட்டுக்குள் பூத்த புன்னகையை மூடிவைக்க முடியாமல்
சட்டென்று இதழ்விறித்து சிந்தாமல் சிரித்து வைப்பேனே அப்போது !



139 : கருத்துக்கள்:

said...

நல்ல கவிதை கண்ணன்

/* நீ விரும்பிச் சேருமிடம் அர்சனையா ? பஞ்சணையா?*/

குட்

said...

சாமி நீங்களுமான்னு நெனைச்சுகிட்டே வந்தன்னுங்க நல்லவேளையா வழக்கம்போல காப்பாத்திட்டீங்க : ஜிகே

said...

//ப்ரியன் said...
நல்ல கவிதை கண்ணன்

/* நீ விரும்பிச் சேருமிடம் அர்சனையா ? பஞ்சணையா?*/

குட்
//
ப்ரியன் ... !
உங்களுக்கு ஒரு பூங்கொத்து !
:))

said...

கோவி.கண்ணன்.

நல்ல கவிதை!
மகி போல் நானும் நினைத்துக் கொண்டுதான் வந்தேன் நல்லவேளை, நீங்களும் கத்தி எடுக்கவில்லை! பூக்களைத் தான் எடுத்துள்ளீர்கள்,
நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்!!!



அன்புடன்...
சரவணன்.

said...

//மகேந்திரன்.பெ said...
சாமி நீங்களுமான்னு நெனைச்சுகிட்டே வந்தன்னுங்க நல்லவேளையா வழக்கம்போல காப்பாத்திட்டீங்க : ஜிகே
//

மகி,
இன்னபா ... இது லிவிங் ஸ்மைல்னு ஸொல்லிக்கினே எல்லோரு அயுது வடியிறாங்க ... ! நீ பாட்டு குந்திக்கினு இருந்தா இன்னா ஆவறதுன்னு மனச்சாச்சி இல்ல மனசாச்சி சொன்னிச்சி இல்லையா அத் தான் எட்து உட்டேன் !

:)

said...

/*ப்ரியன் ... !
உங்களுக்கு ஒரு பூங்கொத்து !
:)) */

பூங்கொத்து வேண்டாம் ஒரு பூச்செடிப் போதும் :))

said...

// உங்கள் நண்பன் said...
கோவி.கண்ணன்.

நல்ல கவிதை!
மகி போல் நானும் நினைத்துக் கொண்டுதான் வந்தேன் நல்லவேளை, நீங்களும் கத்தி எடுக்கவில்லை! பூக்களைத் தான் எடுத்துள்ளீர்கள்,
நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்!!!

அன்புடன்...
சரவணன். //

சரா.. !

என் வழி தனி......னி வழி !

எல்லாரும் போற வயிலே போயிகினே இர்ந்தா ... அப்பால எம் மூஞ்சிய யாரு பாக்குறதாம் :))

said...

தல.. கவுத்தீட்டீங்களே...

said...

//ப்ரியன் said...
/*ப்ரியன் ... !
உங்களுக்கு ஒரு பூங்கொத்து !
:)) */

பூங்கொத்து வேண்டாம் ஒரு பூச்செடிப் போதும் :))
//

ப்ரியன் ... ! பூக்களைப் பறிக்காதீர்கள் என்கிறீர்கள்... ! புரிகிறது !
:))

உங்களுக்கு ஒரு பூச்செடியென்ன பூச்சட்டிகளோடு சேர்த்து
ஓராயிரம் பூச்செடிகள் கொடுக்கலாம்.. :)

said...

//என் வழி தனி......னி வழி !//



இது கூட வேற "யாரோட" வழி மாதிரித் தெரியுது,


டிஸ்க்:அதெப்படி தலைவர யாரோனு நீ சொல்லலாம்னு இப்ப இங்க அனானிங்க வருவாங்க, சமாளிச்சிக்கவேண்டியது உங்க பொறுப்பு,


அன்புடன்...
சரவணன்.

said...

//யெஸ்.பாலபாரதி said...
தல.. கவுத்தீட்டீங்களே...
//

நம் நண்பர்கள் யாரும் தலை கவிழக்கூடதென்று நினைத்து ... !
கொஞ்சம் பூக்களை தூவினேன்!
:))

said...

//உங்கள் நண்பன் said...

இது கூட வேற "யாரோட" வழி மாதிரித் தெரியுது,


டிஸ்க்:அதெப்படி தலைவர யாரோனு நீ சொல்லலாம்னு இப்ப இங்க அனானிங்க வருவாங்க, சமாளிச்சிக்கவேண்டியது உங்க பொறுப்பு,


அன்புடன்...//

சரா... !

யாரு எந்த வழி போனாலும் கடைசியில் ஒரே வழிதான் :))

சமாளித்துவிட்டால் போச்சு ...!

சிவாஜியை 100 தடவை பார்க்கலாம் என்று இருக்கிறேன் :))

சரவணன்.

said...

//சிவாஜியை 100 தடவை பார்க்கலாம் என்று இருக்கிறேன் :))//

கண்டிப்பா நல்ல படியா பாருங்க சென்னைல தான் அவருக்கு சிலை வச்சாசுல்ல அங்க போய் ஒரு 100 தடவை பாருங்க!



அன்புடன்...
சரவணன்.

said...

///
ஆங்கில முத்தம் தந்து உன் இனிப்பு எச்சிலை
அள்ளிச் செல்லும் வண்ணத்து பூச்சி உனக்கென்ன உறவு?
தேனுக்கு மகரந்தம் விற்கும் பண்ட மாற்று வணிக உறவு !
///

எனக்குப் பிடித்தது இது ரொம்ப நல்லா எழுதுயிருக்கீங்க

said...

//உங்கள் நண்பன் said...


கண்டிப்பா நல்ல படியா பாருங்க சென்னைல தான் அவருக்கு சிலை வச்சாசுல்ல அங்க போய் ஒரு 100 தடவை பாருங்க!

அன்புடன்...
சரவணன். //

என்னப்பு இது மனசில இருந்ததைப் போட்டு பட்டுன்னு ஒடச்சிட்டிங்களே !
இனி எப்படி சாமாளிப்பேன் !

ஐயோ
ரஜினி ரசிகர்கள் துறத்தி ஒதைக்கிற மாதிரியே இருக்கே !
:))

said...

//குமரன் எண்ணம் said...
எனக்குப் பிடித்தது இது ரொம்ப நல்லா எழுதுயிருக்கீங்க //

ஆமாங்க குமரன்,
எல்லோடும் பூவையும், வண்டையும் காதலன் காதலியாகத்தான் சொல்றாங்க ... அதான் கொஞ்சம் மாற்றிச் சொன்னேன். சரியாக கண்டுகொண்டு பாராட்டிவிட்டீர்கள் ... நன்றி !

said...

கண்ணன்,


You too'ன்னு கேட்கலாமின்னு தான் வந்தேன். ஆனா கலக்கீட்டிங்க போங்க...

கவிதை வரிகள் மிக அருமை...

வாழ்த்துக்கள்

said...

//லிவிங் ஸ்மைல் பற்றி விவாதங்கள் வருவது கொஞ்சம் கசப்பானதாக இருந்தாலும், அவர் விரும்புவது போல் .......எல்லோரைப் போலவே அவரை எல்லோரும் சமமாக நினைப்பதால் (நினைப்பது அல்ல சமம் தான் !) அவர் விவாதத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல எனவே ஆரோக்கியமான விவாதமாக அவர் எடுத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன். அவருக்கு அந்த பக்குவம் இருக்கிறது. ஸ்மைல் ப்ளீஸ் :))///

இதே இதே தான் நானும் அவருடைய பதிவில (பிளாக்கை விட்டா போகிறேன்) சொன்னேன்..(படிச்சு பாருங்க)அந்த பதிவுல உங்க பின்னூட்டத்த கூட quote பண்ணி சொல்லி இருந்தேன்.. ம்ம்ம்..ஆனா ஒன்னும் work out ஆக மாட்டேங்குது.. இந்த விவாத்துல (தேவையா இல்லையாங்கறது ரெண்டாவது விஷயம்)நிஜமான அக்கறையோடு சொல்லி இருக்கீங்க.. இத படிச்சா கண்டிப்பா வித்யாவுக்கு "ஸ்மைல்" வரனும்..

நான் ரசிச்சேன்..நல்லா இருக்கு கவிதை

மங்கை

said...

//ராம் said...
கண்ணன்,

You too'ன்னு கேட்கலாமின்னு தான் வந்தேன். ஆனா கலக்கீட்டிங்க போங்க...

கவிதை வரிகள் மிக அருமை...

வாழ்த்துக்கள் //

வாங்க ராம் !
தலைப்பைப் பார்த்து எல்லோரும் வருவார்கள் ... கொஞ்சம் உற்சாகப்படுத்தலாம் என்று தான் எழுதினேன்! பாராட்டுகளுக்கு நன்றி !

said...

//இதே இதே தான் நானும் அவருடைய பதிவில (பிளாக்கை விட்டா போகிறேன்) சொன்னேன்..(படிச்சு பாருங்க)அந்த பதிவுல உங்க பின்னூட்டத்த கூட quote பண்ணி சொல்லி இருந்தேன்.. ம்ம்ம்..ஆனா ஒன்னும் work out ஆக மாட்டேங்குது.. இந்த விவாத்துல (தேவையா இல்லையாங்கறது ரெண்டாவது விஷயம்)நிஜமான அக்கறையோடு சொல்லி இருக்கீங்க.. இத படிச்சா கண்டிப்பா வித்யாவுக்கு "ஸ்மைல்" வரனும்..

நான் ரசிச்சேன்..நல்லா இருக்கு கவிதை

மங்கை
//
மங்கை அவர்களே...
அந்த quote நானும் பார்த்தேன் .. நீங்களும் நன்றாக சொல்லியிருந்தீர்கள். வித்யாவும் விமர்சனங்களை மிகச்சரியாக அனுகவேண்டும்...! அனுகிவருகிறார் அதற்காக பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன், நாம் எல்லோரும் மற்றவர் பதிவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
:))

said...

கவிதை நன்று.

பிகு: இந்த கருத்து கவிதைக்கு மட்டும் தான் :-)

said...

//
Pot"tea" kadai said...
கவிதை நன்று.

பிகு: இந்த கருத்து கவிதைக்கு மட்டும் தான் :-)
//
பொட்டீக்கடை காரரே...! வருகைக்கு நன்றி ... தலைப்பு மட்டும் இல்லேன்னா எல்லோரும் எட்டிப்பார்த்துட்டு போய்டே இருப்பாங்க ! பின்னூட்ட பிஸ்னஸ் சரியாக நடக்காதே !

இப்ப பாருங்க வந்து செல்லமாக குட்டிட்டு போறாங்க !
:)

said...

//சிலிர்க்கும் பூவே நீ சிரித்து மகிழ்வது எப்போது ?
மொட்டுக்குள் பூத்த புன்னகையை மூடிவைக்க முடியாமல்
சட்டென்று இதழ்விறித்து சிந்தாமல் சிரித்து வைப்பேனே அப்போது !//

:))

said...

// Dev said...
//சிலிர்க்கும் பூவே நீ சிரித்து மகிழ்வது எப்போது ?
மொட்டுக்குள் பூத்த புன்னகையை மூடிவைக்க முடியாமல்
சட்டென்று இதழ்விறித்து சிந்தாமல் சிரித்து வைப்பேனே அப்போது !//

:))
//

தேவ்... நீங்களும் பின்னூட்டத்தில் சிந்தாமல் ஒரு சிரிப்'பூ' வை போட்டு சென்று விட்டீர்கள் ... பூக்கள் மொழி தெரியுமோ ?
:))

said...

ஹைய்ய்ய்யா...

கவிதை...

சூப்பர்...

அவ்வளவுதான் போடமுடியும்...நிறைய வேலை இருக்கு :)))

அம்புடன்,
செந்தழல் ரவி

said...

//செந்தழல் ரவி said...
ஹைய்ய்ய்யா...

கவிதை...

சூப்பர்...

அவ்வளவுதான் போடமுடியும்...நிறைய வேலை இருக்கு :)))

அம்புடன்,
செந்தழல் ரவி //

ரவி... ! உங்களுக்கு இன்னிக்கு வேலை இருப்பது தெரியும் ... இல்லை யென்றால் இன்னிக்கு இரண்டாம் பாகம் போட்டு இருப்பீர்கள் :))

said...

//இதழ்விறித்து //

கோவி, என்னங்க, உங்க எழுத்துப் பிழையார் இன்னிக்கு காணோம்?!!!

கவிதை அருமைங்க.. :)

said...

//பொன்ஸ் said...
//இதழ்விறித்து //

கோவி, என்னங்க, உங்க எழுத்துப் பிழையார் இன்னிக்கு காணோம்?!!!

கவிதை அருமைங்க.. :)
//
பொன்ஸ் அவர்களே முன்பு சின்ன 'ரி' போட்டேன் ... அப்பறம் மாற்றினேன்.. சரி திரும்பவும் மாற்றுகிறேன் :)

பாராட்டுக்கு நன்றி !

said...

//இப்ப பாருங்க வந்து செல்லமாக குட்டிட்டு போறாங்க //

யாருப்பா அது ஜிகே வ குட்டுறது .... யரா இருந்தாலும் சொல்லுங்க ஜிகே நான் கேக்கிறேன்...

யாரு குட்டுனாலும் செல்லமா குட்டாதீங்க நல்லா பலமா "குட்"டுங்கப்பா

said...

//மகேந்திரன்.பெ said...
யாருப்பா அது ஜிகே வ குட்டுறது .... யரா இருந்தாலும் சொல்லுங்க ஜிகே நான் கேக்கிறேன்...

யாரு குட்டுனாலும் செல்லமா குட்டாதீங்க நல்லா பலமா "குட்"டுங்கப்பா
//
மகி...பின்னூட்டம் பின் தங்குதேன்னு பார்த்தேன் ... என் பதிவுல வார்த்திட்டிங்க ... ! அங்கே வர்ரேன் :)

said...

என்னது இதுவரை எந்த அனானியும் வரலை?

said...

ஓகோ இதனால தானா ?

said...

ஜிகே கொஞ்ச நேரம் அதர் ஆப்ஷன ஆன் பன்னுங்களேன் :)))))

said...

//மகேந்திரன்.பெ said...
ஜிகே கொஞ்ச நேரம் அதர் ஆப்ஷன ஆன் பன்னுங்களேன் :)))))
//

மகி,
வம்பா ... ? நமக்கு ஏற்கனவே ப்ளாக்கர் ஆப்சனில் ~ஆப்பு~ கிடைக்குது ... இதில் அனானி ஆப்சன் ... ஏது ஏது தமிழ்மணத்தில் இருந்து என்னிய தூக்கறத்து வழிய வந்து ஐடியா ?

:))

said...

உங்கள துறத்தனும்னா அது என்னால மட்டும்தான் முடியுமா ?:))

said...

என்னான்னு பாத்தீங்களா? ஜிகே ? செயின விட்டா நல்லா விடுங்க எஸ்கே கமல் கவிதைய காணோமே எங்க அது ?

said...

இப்ப இங்க மணி 1.09 மதியம் துபாய்

said...

இப்ப வரைக்கும் எத்தனை பின்னூட்டம் வந்தது?

said...

மிச்சமெல்லாம் எங்கே? இன்னிக்கு 500 ஆக்காம விடமாட்டேன்

said...

livin lavida loca

said...

கண்ணா!
இப்போதைய சூழலில் பதிவுகாரைச் சுண்டி இழுக்கும் தலைப்பு! நல்ல கவிதையும் கூட!
யோகன் பாரிஸ்

said...

//Johan-Paris said...
கண்ணா!
இப்போதைய சூழலில் பதிவுகாரைச் சுண்டி இழுக்கும் தலைப்பு! நல்ல கவிதையும் கூட!
யோகன் பாரிஸ்
//

Johan-Paris ... !
ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதிவச்ச கவிதை எப்படி கரையேத்தரதுன்னு பாத்தப்ப ... இதான் சரியான சமயமாக ஆகிவிட்டது :)

கவிதையை பாராட்டியதற்கு நன்றி !

said...

கோவி.கண்ணன் கைது. தினமலரில் செய்தி

http://www.dinamalar.com/2006aug18/specialnews1.asp?newsid=8

said...

இந்தியாவில் நேரம் 2:53pm

அன்புடன்...
சரவணன்.

said...

//மகேந்திரன்.பெ said...
livin lavida loca
//

அடிக்கடி இப்படி இட்டாலியில்(?) எழுதி லொள்ளு பண்ணுறிங்க ... அப்படியே பொருளையும் போட்டால் நன்றாக இருக்கும் !

said...

//மகேந்திரன்.பெ said...
கோவி.கண்ணன் கைது. தினமலரில் செய்தி

http://www.dinamalar.com/2006aug18/specialnews1.asp?newsid=8
//
மகி...! நான் தப்பிச்சேன் ... அவன் தான் நானா ? என்று நேற்று இளா கூட கேட்டுவைத்தார் :)

said...

///ரவி... ! உங்களுக்கு இன்னிக்கு வேலை இருப்பது தெரியும் ... இல்லை யென்றால் இன்னிக்கு இரண்டாம் பாகம் போட்டு இருப்பீர்கள் :))///

சரியா கண்டு பிடிச்சீங்க...ஆனால் அடுத்த ஆப்பு திங்கள் கிழமை ஆரம்பமாகும்...தூங்கி வழிந்த தமிழ்மணம் ஒரு வழியா ஏந்திரிச்சிக்கிச்சி...

ஆனா - அடுத்த ஆப்பு வாங்கும் காய்கறி நபர் ஒரு பெண் என்பது தான் வருத்தம்...:))))) ஹி ஹி

என்ன செய்ய...நெருப்புல கையை வச்சா சுடுமா சுடாதா ? ஹி ஹி

said...

//ஆனா - அடுத்த ஆப்பு வாங்கும் காய்கறி நபர் ஒரு பெண் என்பது தான் வருத்தம்...:))))) //


ஏதோ பீன்ஸ் பொறியல் வாடை வருது!


அன்புடன்...
சரவணன்.

said...

//செந்தழல் ரவி said...

என்ன செய்ய...நெருப்புல கையை வச்சா சுடுமா சுடாதா ? ஹி ஹி
//
ரவி... அதெல்லாம் தெரியாது ...!
பொறியல் செய்யப் போறிங்களா ?
கண்டிப்பா பொகையிற வாசனை வரும்... !
:)

said...

//உங்கள் நண்பன் said...

ஏதோ பீன்ஸ் பொறியல் வாடை வருது!

அன்புடன்...
சரவணன். //
சரா...!
நீங்க வேற ... புளியை கறைச்சு வைக்காதிங்க !
:)

said...

////உங்கள் நண்பன் said...

ஏதோ பீன்ஸ் பொறியல் வாடை வருது!

அன்புடன்...
சரவணன். //
சரா...!
நீங்க வேற ... புளியை கறைச்சு வைக்காதிங்க !
:)

//


பாவங்க அந்த அக்கா.....!

said...

//அடிக்கடி இப்படி இட்டாலியில்(?) எழுதி லொள்ளு பண்ணுறிங்க //

அது ஷ்பானிஷ்ங்க இது கூடவா தெரியலை விளையாட்டு புள்ளையா இருக்கீங்களே

said...

//அடுத்த ஆப்பு வாங்கும் காய்கறி நபர் ஒரு பெண் என்பது தான் வருத்தம்...:))))) ஹி ஹி

என்ன செய்ய...நெருப்புல கையை வச்சா சுடுமா சுடாதா ? ஹி ஹி //


சரி சரி இன்னிக்கே செந்தமிழ் ரவிக்கு அனுப்ப வேன்டிய பின்னூட்டமெல்லாம் டைப்படிக்க ஆரம்பிக்கலாம் அவரு பதிவுக்கு பின்னூடம் பின்ன என்னா இபடித்தான் இருக்கு..... நீ உறுப்புடவே மாட்ட , நீயும் தாண்டா, யாருங்க அனானி, etc etc.....

said...

start countdown from today tik, tik, tik,

said...

பொரியலை நன்றாக வறுக்க தேவை ஓவனா - கேஸ் அடுப்பா என்ற போட்டியில் இப்போது தான் ஒரு முடிவுக்கு வந்து

விறகு அடுப்பே சிறந்த்து என்று தெளிந்தேன்...

:)))

said...

//மகேந்திரன்.பெ said...
//அடிக்கடி இப்படி இட்டாலியில்(?) எழுதி லொள்ளு பண்ணுறிங்க //

அது ஷ்பானிஷ்ங்க இது கூடவா தெரியலை விளையாட்டு புள்ளையா இருக்கீங்களே
//
மகி... ! ஹி ஹி ... எல்லாம் இட்டாலி அன்னை பாசம் தான் :)

said...

//மகேந்திரன்.பெ said...

சரி சரி இன்னிக்கே செந்தமிழ் ரவிக்கு அனுப்ப வேன்டிய பின்னூட்டமெல்லாம் டைப்படிக்க ஆரம்பிக்கலாம் அவரு பதிவுக்கு பின்னூடம் பின்ன என்னா இபடித்தான் இருக்கு..... நீ உறுப்புடவே மாட்ட , நீயும் தாண்டா, யாருங்க அனானி, etc etc.....
//
மகி ... ஆகா !

பின்னூட்ட கயமைத் தனம் என்று பெரியவங்க (?) சொல்றாங்களே அத்து இத்தானா ?
:)

said...

//மகேந்திரன்.பெ said...
start countdown from today tik, tik, tik,
//

மகி...!
பாபா கவுன்டிங் ?
:)

said...

// செந்தழல் ரவி said...
பொரியலை நன்றாக வறுக்க தேவை ஓவனா - கேஸ் அடுப்பா என்ற போட்டியில் இப்போது தான் ஒரு முடிவுக்கு வந்து

விறகு அடுப்பே சிறந்த்து என்று தெளிந்தேன்...

:)))
//
செந்தழல் ரவி ... !
ஏற்கனவே கடலை வறுக்கிரவரு அடுப்பை முடிவு பண்ணுவதற்கு இவ்வளவு நேரமானதா ?
:)

சம்பந்தப் பட்டவர்கள் மண்ணிக்க...
இந்த படுபாதகத்துக்கு நான் துணை போகவில்லை !

said...

GK,

என்ன தூங்கி எழுந்து வருவதற்குள்.. நிறைய பின்னூடங்கள் உள்ள பதிவு போட்டு கலக்கீடீங்க..

கவிதை நல்லாயிருந்ததுங்க...

(பி.கு. இது கவிதைக்கு மட்டும்)

said...

//Sivabalan said...
GK,

என்ன தூங்கி எழுந்து வருவதற்குள்.. நிறைய பின்னூடங்கள் உள்ள பதிவு போட்டு கலக்கீடீங்க..
//

சிபா ... !
ஒரு எக்ஸ்ப்ரஸ் இந்த பக்கமா ஓடுச்சி ...! :)

said...

Usted dijo que "vendré después de tres horas pero ahora?" ¿Adónde Usted Fue?

said...

கிழுமத்தூரில் "கிழக்கே போகும்ரயிலு" படம் ஓடுதாம்ல எப்படி இருக்கு?


அன்புடன்...
சரவணன்.

said...

// மகேந்திரன்.பெ said...
Usted dijo que "vendré después de tres horas pero ahora?" ¿Adónde Usted Fue?
//
இப்படி இந்தியில் திட்டினால் நான் என்ன செய்யறது !
:)

said...

//உங்கள் நண்பன் said...
கிழுமத்தூரில் "கிழக்கே போகும்ரயிலு" படம் ஓடுதாம்ல எப்படி இருக்கு?

அன்புடன்...
சரவணன். //

சரா,

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு அது கலக்குது பாரு ஸ்டைலு ...!

said...

அது இந்தி யில்லை ஸ்பானிஷ் வேனும்னா நாகை சிவாட்ட கேளுங்க என்னான்னு சொல்லுவரு :))

said...

//அது இந்தி யில்லை ஸ்பானிஷ் வேனும்னா நாகை சிவாட்ட கேளுங்க என்னான்னு சொல்லுவரு :)) //
என்ன மகி! எங்க ஊருக்காரர் கிட்ட உன் வேலைய காமிக்குறீயா நீ.
நாங்க எல்லாம் என்னிக்குமே ஒன்னுக்குள்ள ஒன்னு. வருவார் பாரு அண்ணாத்த சூப்பரா

said...

சரி சரி வேலைல இருந்தா போனா போகுது இப்ப வீடுக்கு வந்தாச்சில்ல என்னோட பாக்ஸ் தொறந்தே வச்சிருக்கேன் சும்மா அடிச்சு விடுஙக் ஷ்பானிஷ் வேனும்னா ஸ்காட்ச் இல்லாமலே நான் சொல்லி த்ரவா? ஆனா பின்னூட்டம் மட்டும் போடனும்

said...

சார் நீங்கள்தான் அந்தக்கண்ணனோ???
wow! super kavithai.

said...

//சார் நீங்கள்தான் அந்தக்கண்ணனோ???//


ஜிகே இது கேள்வி உங்களுக்கு வந்த பின்னூட்டத்திலயே இதுதான் டாப்பு டாக்டரம்மா சொன்னாலும் சொன்னாங்க சுருக்கமா சொனாங்க :))))))))))))))

said...

//aaradhana said...
சார் நீங்கள்தான் அந்தக்கண்ணனோ???
wow! super kavithai.
//
நானும் ஒரு கண்ணன் ... நீங்கள் எந்தக் கண்ணனை சொல்கிறீர்கள் ... அவரா ... போலிஸ் கஷ்ட அடியில் :)

said...

//மகேந்திரன்.பெ said...
சரி சரி வேலைல இருந்தா போனா போகுது இப்ப வீடுக்கு வந்தாச்சில்ல என்னோட பாக்ஸ் தொறந்தே வச்சிருக்கேன் சும்மா அடிச்சு விடுஙக் ஷ்பானிஷ் வேனும்னா ஸ்காட்ச் இல்லாமலே நான் சொல்லி த்ரவா? ஆனா பின்னூட்டம் மட்டும் போடனும்
//

மகி,
தூக்கம் வருது ... முடியலை .... அப்பறம் அழுதுடுவேன் :)

said...

// நாகை சிவா said...
என்ன மகி! எங்க ஊருக்காரர் கிட்ட உன் வேலைய காமிக்குறீயா நீ.
நாங்க எல்லாம் என்னிக்குமே ஒன்னுக்குள்ள ஒன்னு. வருவார் பாரு அண்ணாத்த சூப்பரா //

மகி ... ஜாக்கிரதை !

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் :)

said...

//தம்பி உடையான் படைக்கு அஞ்சான் //

நான் நீங்க வந்தா இப்ப கப்பி புலி இருக்க சேந்து அடிச்சி ஆடுனா உங்கள ஒரு 500 கொண்டிவிட முடியாது ? (ம,சா: பொறில எலி மாட்டுமா?)

said...

http://aaththigam.blogspot.com/2006/07/blog-post_29.html

வாழும் புன்னகை பற்றிய உங்கள் கவிதை மிக அருமையாக வந்திருக்கிறது!

விரும்பத்தகாத, வருந்தத்தக்க அளவுகளை இந்நிகழ்வு அடைந்த பின்னர் அதிகம் சொல்ல ஒன்றுமில்லை.

நான் முன்னமிட்ட பதிவு ஒன்றினை இங்கும் அளித்து வாழ்த்துகிறேன்.

http://aaththigam.blogspot.com/2006/07/blog-post_29.html


அவரும் ஒரு சக ஜீவன் தான்.

ஒன்றும் செய்ய முடியவில்லையெனின், நிம்மதியாகவாவது இருக்க விடலாம்.... நம்மால் முடிந்தால்!

நன்றி, கோவியாரே!

said...

கோவியாரே..

75க்கு வந்தபின் பார்க்கத் தோன்றியது..

என்னைப் பத்தி எழுதிருக்கீங்க போலிருக்கு..

ஆனா..

என்னங்க இது?!!..

..

..

மனசே ஆகலைங்க.. :(

..

..

எத்தனை எழுத்துப் பிழை..?!!!

நீங்களாவது "மன்னிக்க"ன்னு சரியா எழுதி இருக்கலாம் இல்லை?!! :)

said...

என்னாச்சு யாரையும் காணோம்?

said...

ரொம்ப காமெடி பன்றனோ?

said...

//அவரும் ஒரு சக ஜீவன் தான்.

ஒன்றும் செய்ய முடியவில்லையெனின், நிம்மதியாகவாவது இருக்க விடலாம்.... நம்மால் முடிந்தால்!//


அண்பர் SK அவர்களுக்கு!

லிவிங்ஸ்மைல் பற்றி பதிவிட்ட திரு.கோவியாரும் சரி மற்ற பதிவாளர்களும் சரி, சகோதரி வித்யாவின் நிம்மதியை குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் பதிவிடவில்லை.,

பாலா.பாரதியில் ஆரம்பித்து இன்று ஒரு 4 அல்லது 5 பதிவுகளாவது இது விசயமாக பதிவிடப்பட்டது,

சகோதரி வித்யாவே பால.பாரதியின் பதிவில் ஒரு ஸ்மைலி போட்டு நடக்கும் கூத்தை ரசித்தார்,(அது போலி இல்லைனு நினைக்கின்றேன்)

வாரத்தின் கடைசி நாள்,ஒரே அனானிகளின் ஆட்டம் வேறு, சந்தோசமாகத்தான் போனது இந்த நாள்.

ஆனால் தங்களின் பின்னூட்டம் கண்டதும் எனக்கு வருத்தமாகிவிட்டது, எனக்கே வருத்தம் என்றால் உங்களின் மேல் அளவிடமுடியாத மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் பதிவின் உரிமையாளர் திரு.கோவி.கண்ணன் அவர்களும் வருத்தப் பட்டிருப்பார்,

என் இந்தப் பின்னூட்டம் உங்களின் பின்னூட்டதிற்க்கு "எதிர்"பின்னூட்டம் போட வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை,
காலையிலிருந்து இந்தப் பதிவுகளை ரசித்தவன் என்ற முறையில் விளக்கம் கொடுத்தேன், எதேனும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.



அன்புடன்...
சரவணன்.

said...

// SK said... அவரும் ஒரு சக ஜீவன் தான்.

ஒன்றும் செய்ய முடியவில்லையெனின், நிம்மதியாகவாவது இருக்க விடலாம்.... நம்மால் முடிந்தால்!

நன்றி, கோவியாரே! //

எஸ்கே ஐயா !
நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்... இங்கு நான் லிவிங் ஸ்மைலுக்கு போட்டது 'டிஸ்கி' மட்டுமே...!

said...

// பொன்ஸ் said...
கோவியாரே..

75க்கு வந்தபின் பார்க்கத் தோன்றியது..

என்னைப் பத்தி எழுதிருக்கீங்க போலிருக்கு..

ஆனா..

என்னங்க இது?!!..

..

..

மனசே ஆகலைங்க.. :(

..

..

எத்தனை எழுத்துப் பிழை..?!!!

நீங்களாவது "மன்னிக்க"ன்னு சரியா எழுதி இருக்கலாம் இல்லை?!! :)

//

பொன்ஸ் அவர்களே ! அது உங்களைப் பற்றி என்று சரா போட்ட பின்னூட்டத்திற்கு பிறகுதான் தெரியும் :)

said...

//மகேந்திரன்.பெ said...
என்னாச்சு யாரையும் காணோம்?
//
மகி,
இன்னிக்கு அவ்வளவுதான் போல :)

said...

//மகேந்திரன்.பெ said...
ரொம்ப காமெடி பன்றனோ?
//
மகி ... !
கலகம் பண்ணிறீகன்னு நீங்களே ஒரு பதிவைப் போட்டுவிட்டு ... காமடி பண்றேனான்னு ஒரு கேள்வியா ?

:)

said...

//உங்கள் நண்பன் said... உங்களின் மேல் அளவிடமுடியாத மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் பதிவின் உரிமையாளர் திரு.கோவி.கண்ணன் அவர்களும் வருத்தப் பட்டிருப்பார்,//

சரா ... !
எங்கள் இருவர் மீதான உங்கள் அக்கறை புரிகிறது...! நன்றி கூற கடமை பட்டிருக்கி(றேன்)றோம் !

அவர் தவறாக எதும் இங்கே சொன்னது போல் தெரியவில்லை.
அப்படி அவர் எப்போதாவது சொன்னாலும் நான் அவரை தவறாக நினைக்க மாட்டேன் :)

said...

//சரா ... !
எங்கள் இருவர் மீதான உங்கள் அக்கறை புரிகிறது...! நன்றி கூற கடமை பட்டிருக்கி(றேன்)றோம் !
//

புரிதலுக்கு நன்றி!,:)

நான் புரிந்துகொள்ளாமல் பதிவிட்டதற்க்கு வருத்தம்.:(


மகி உங்களுக்காக கப் ரெடி பண்ணி இருக்கின்றார். வந்து வாங்கிச் செல்லவும்,

அன்புடன்...
சரவணன்.

said...

//தவறாக எதும் இங்கே சொன்னது போல் தெரியவில்லை.
அப்படி அவர் எப்போதாவது சொன்னாலும் நான் அவரை தவறாக நினைக்க மாட்டேன் //

எனக்கென்னமோ டவுட்டாகீது 1+1=1?

said...

//எனக்கென்னமோ டவுட்டாகீது 1+1=1? //

மகி ஆரம்பிச்சுடாத!
யாருங்க அது கலகக்காரன்,கலகக்காரன்னு கத்துரது?

ஓ! மனசாட்சியா...?

அன்புடன்...
சரவணன்.

said...

//புரிதலுக்கு நன்றி!,:)

நான் புரிந்துகொள்ளாமல் பதிவிட்டதற்க்கு வருத்தம்.:(


மகி உங்களுக்காக கப் ரெடி பண்ணி இருக்கின்றார். வந்து வாங்கிச் செல்லவும்,

அன்புடன்...
சரவணன். //

சரா... !
யாரும் யாருக்கும் வருத்தம் தெரிவிக்க வேண்டியதில்லை ... நன்றி மட்டுமே சொல்லவேண்டும் ... நாமெல்லாம் ரொம்ப நல்லவங்க !
:)

said...

//மகேந்திரன்.பெ said...

எனக்கென்னமோ டவுட்டாகீது 1+1=1?
//

மகி ... !

1 * 1 = 1
:))

said...

//நாமெல்லாம் ரொம்ப நல்லவங்க !
:)
//


ஹா...ஹா..... முடியலையேப்பா(கமலஹாசன் ஸ்டலில் படிக்கவும்).


இல்லை... பெஸ் மாட்டேன் , இனி நான் பெஸ் மாட்டேன்(இது யாரு?)

என் பின்னூடம் தான் பெஸும்.


அன்புடன்...
சரவணன்.

said...

//உங்கள் நண்பன் said...
மகி ஆரம்பிச்சுடாத!
யாருங்க அது கலகக்காரன்,கலகக்காரன்னு கத்துரது?

ஓ! மனசாட்சியா...?

அன்புடன்...
சரவணன்.//

சரா ...! அதை அவுரே ... சொல்லிக்கினு ... அதைவச்சு ஒரு பதிவும் போட்டார்
அப்பறம் வி.க பதிவில் வந்து
என்னிய பாத்து என்னிய பாத்து
பின்னூட்ட நாரதர்னு சொன்னார் :))

said...

// உங்கள் நண்பன் said...
ஹா...ஹா..... முடியலையேப்பா(கமலஹாசன் ஸ்டலில் படிக்கவும்).

இல்லை... பெஸ் மாட்டேன் , இனி நான் பெஸ் மாட்டேன்(இது யாரு?)

என் பின்னூடம் தான் பெஸும்.

அன்புடன்...
சரவணன். //

என்ன அன்பு !
"அன்புடன் சரவணன்" பின்னூட்டம் யாருக்கு வேணும் .. ? அன்புடன் சரவணன் என்று போடுறிங்களே அது போததா ?

:)

said...

சரி நான் தூங்க போகனும்

நேரம் 11:07

அன்புடன்...
சரவணன்.

said...

இன்னும் என் கணக்குப்ப்படி 13 போட்டா நீங்க 100
187 போட்டா 200

said...

மணி இப்போவே 11:08pm ஆச்சு!

கெளம்பனும்

அன்புடன்...
சரவணன்.

said...

//உங்கள் நண்பன் said...
சரி நான் தூங்க போகனும்

நேரம் 11:07

அன்புடன்...
சரவணன்.
//

சரா ... குட் நைட்... இன்னும் 3 தான் போட்டுவிடுவாங்க ... நிம்மதியா தூங்குங்க ... எல்லோருக்கும் நாளைக்குத்தான் நன்றி சொல்லுவேன் !
:))

said...

கோவி! நீங்களும் அப்படியே கொஞ்சம் கை கொடுங்க 100 அடிச்சிடலாம்!


இடையில் அந்த ரயில் வேற வருமே1! இன்னும் காணோம்!


அன்புடன்...
சரவணன்.

said...

//இன்னும் 3 தான் போட்டுவிடுவாங்க ... நிம்மதியா தூங்குங்க ... எல்லோருக்கும் //

கண்டிப்பா இது கூட ப்ண்ணலைனா எப்படி!



அன்புடன்...
சரவணன்.

said...

டீமுல்லாம் வந்தாச்சா?
என்ன இவ்வளவு லேட்டு!
சுத்த சிறுபுள்ளத்தனமால்லே இருக்கு?

வந்தோமா, பதில் போட்டோமான்னு இல்லாம.....!

said...

100 கண்டிப்பா என்னொடது தான் இருக்கனும்



அன்புடன்...
சரவணன்.

said...

அட இன்னும் 8 தான் வேனுமா?

said...

//மகேந்திரன்.பெ said...
இன்னும் என் கணக்குப்ப்படி 13 போட்டா நீங்க 100
187 போட்டா 200

10:43 AM
//
மகி,
அது என்ன 187 கணக்கு ? புரியவில்லை !

said...

ரயில் பெட்டிய உள்ள கொஞ்ச நேரத்துக்கு விட வேண்டாம்!


அன்புடன்...
சரவணன்.

said...

இது தான் 100- ஆ?


அன்புடன்...
சரவணன்.

said...

உங்கள் நண்பன் said...
கோவி! நீங்களும் அப்படியே கொஞ்சம் கை கொடுங்க 100 அடிச்சிடலாம்!


இடையில் அந்த ரயில் வேற வருமே1! இன்னும் காணோம்!


அன்புடன்...
சரவணன்.
//

100 ஐ தாண்டியது .. நாளைக்கு ரயிலையும், மயிலையும் கூட்டுவிட்டு உங்க 'கிராமத்தில்' தான் டென்ட் :)

said...

சரி கோவி! 103 ஆச்சு!
இங்கே மணியும் 11:15pm ஆச்சு!

இன்னைக்கி இது போதும் ஆனால் நாளைக்கு காலைலயும் வருவேன்.
மீண்டும் சந்திப்போம்!

நாளைக்கு உங்களுக்கும் ஒரு "குட் மார்னிங்"பின்னூடம் கண்டிப்பாக உண்டு!


இப்போதைக்கு "குட் நைட்"


அன்புடன்...
சரவணன்.

said...

கோவி! வேகமா குட் நைட்டு சொல்லுங்க.

அன்புடன்...
சரவணன்.

said...

GK,

சென்சுரிக்கு வாழ்த்துக்கள்..

said...

GK,

சென்சுரிக்கு வாழ்த்துக்கள்..

said...

//நாளைக்கு ரயிலையும், மயிலையும் கூட்டுவிட்டு உங்க 'கிராமத்தில்' தான் டென்ட்//



கண்டிப்பா வாங்க! நான் காத்திருப்பேன்!

அன்புடன்...
சரவணன்.

said...

இந்த மாபெரும் பி.க தனத்துக்கு,

உதவிய இளைய பதிவர்கள் தளபதி மகி என்ற மகேந்திரன் என்கிற கிழுமத்தூராருக்கும் , எங்கள் நன்பன் ஆகிய உங்கள் நண்பன் அன்பு சரவணன் சரா, கடைசியில் வந்து இனிதே முடித்து வைத்த எஸ்கே, மற்றும் கப்பி பாய் .,, ஏனைய பின்னூட்டச் சொந்தக் காரர்களுக்கும்

நன்றி !
நன்றி !!
நன்றி !!!
நன்றி !!!!

said...

கோவி... குட்நைட் எங்கேயா?
பழிவாங்குற நேரமா இது..?



அன்புடன்...
சரவணன்.

said...

சிபா ... !
வாழ்த்துக்களுக்கு நன்றி

said...

//உங்கள் நண்பன் said...
கோவி! வேகமா குட் நைட்டு சொல்லுங்க.

அன்புடன்...
சரவணன்.
//
குட் நைட் சரா !

said...

யப்பா என்னா கூட்டம் என்னா கூட்டம் எல்லாருக்கும் பதில் சொல்லி வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது பா ஜிகெ அந்த பேன கொஞ்சம் போடுங்களேன்

said...

//குட் நைட் சரா !//



பில்டிங் வாட்ச்மேன் எல்லாம் வந்து திட்டீட்டு போய்ட்டான்.
ஸ்ஸ்..... ஒரு குட்நைட் வாங்குறதுக்குள்ள என்ன பாடு பட வேண்டி இருக்கு!

நன்றி நண்பர்களே நாளை சந்திப்போம்!


அன்புடன்...
சரவணன்.

said...

//மகி,
அது என்ன 187 கணக்கு ? புரியவில்லை ! //

அதுல 100 தான் எனக்கு பதில் போடுவீங்கள்ல?

said...

///மகேந்திரன்.பெ said...
யப்பா என்னா கூட்டம் என்னா கூட்டம் எல்லாருக்கும் பதில் சொல்லி வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது பா ஜிகெ அந்த பேன கொஞ்சம் போடுங்களேன்
//

மகி ... !

போதும் ... இன்னிக்கு நிறுத்திடலாம் !

சரவணனுக்கு உங்களைக் கேட்காமல் வாக்கு கொடுத்துவிட்டேன் ... நீங்கள் , நான், எஸ்கே ... நாளைக்கு சரவணன் கிராமத்துக்கு போய் கொஞ்சம் பின்னூட்ட ஏரை பூட்டி 100 ரவுண்ட் ஓட்டனும்... ! மறந்துடாதிங்க !
:)

said...

//நீங்கள் , நான், எஸ்கே ... நாளைக்கு சரவணன் கிராமத்துக்கு போய் கொஞ்சம் பின்னூட்ட ஏரை பூட்டி 100 ரவுண்ட் ஓட்டனும்... ! மறந்துடாதிங்க !//

அட 100 என்னங்க ஆளுக்கு 100 போட்டு 300 ஆக்குவோம் (வேற வேலை?)

said...

// மகேந்திரன்.பெ said...
//நீங்கள் , நான், எஸ்கே ... நாளைக்கு சரவணன் கிராமத்துக்கு போய் கொஞ்சம் பின்னூட்ட ஏரை பூட்டி 100 ரவுண்ட் ஓட்டனும்... ! மறந்துடாதிங்க !//

அட 100 என்னங்க ஆளுக்கு 100 போட்டு 300 ஆக்குவோம் (வேற வேலை?)
//

மகி ..அடடே !
ஏர் என்றதும் மாடோட வந்து நிக்கிறிங்க சபாஸ் ... ! நாளை சந்திப்போம் ! :)

said...

"லிவிங் ஸ்மைல்ஸ் !" தலைப்பை பாத்ததும் உள்ள வரல

பின்னுட்ட எண்ணிக்கையை பாத்ததும்
எட்டி பாத்தா கவிதை!!!!!

நல்ல கவிதை படங்களும்...

said...

நல்ல கவிதை.

said...

// மின்னுது மின்னல் said...
"லிவிங் ஸ்மைல்ஸ் !" தலைப்பை பாத்ததும் உள்ள வரல

பின்னுட்ட எண்ணிக்கையை பாத்ததும்
எட்டி பாத்தா கவிதை!!!!!

நல்ல கவிதை படங்களும்... //

மின்னுது மின்னல் அவர்களே ... !
பாராட்டுக்கு நன்றி !

said...

//கலை அரசன் said...
நல்ல கவிதை.
//

கலை அரசன் ... !
நல்ல ரசனை ... நன்றி :)

said...

"லிவிங் ஸ்மைல்ஸ் !" தலைப்பை பாத்ததும் உள்ள வரல
/./

அடுத்தவங்க விசயத்தில்
மூக்கை நுழைபதை நான் விரும்ப வில்லை என அர்த்தம் கொள்க.

said...

கவிதை நன்றாக இருக்கிறது.

மற்றபடி லிவிங் பற்றி என் பதிவில் எழுதுவேன்.

said...

//மின்னுது மின்னல் said...

அடுத்தவங்க விசயத்தில்
மூக்கை நுழைபதை நான் விரும்ப வில்லை என அர்த்தம் கொள்க. //

மின்னல்,
ஆக போற போக்குல ... நாங்கள் மூக்கை நுழைக்கிறோம் என்று ஒரு உ.கு மறைமுகமாக போட்டுவிட்டீர்களா ?
:))

said...

// விடாதுகருப்பு said...
கவிதை நன்றாக இருக்கிறது.

மற்றபடி லிவிங் பற்றி என் பதிவில் எழுதுவேன்.
//

கருப்பு,
லிவிங் ஸ்மைல் பற்றி ....!
ஆக அடுத்து கருப்பு ஆட்டமா ?

யாருய்யா ... யோவ் ரவி ...!
இப்படி சூட்டைக் கெளப்பிட்டீரே ...!

பெண்பாவம் பொல்லாதது !!!

said...

குட் மார்னிங்!
கொஞ்சம் வேளை இருப்பதால் கிராமத்திற்க்கு இப்போழுது வேண்டாம்,
நான் அழைக்கும் போது வரவும்,



அன்புடன்...
சரவணன்.

said...

குட் மார்னிங்!
கொஞ்சம் வேலை இருப்பதால் கிராமத்திற்க்கு இப்போழுது வேண்டாம்,
நான் அழைக்கும் போது வரவும்,



அன்புடன்...
சரவணன்.

said...

ஜிகே வந்தாச்சிங்க
உள்ளேன் அய்யா
வணக்கம் அய்யா
வணக்கம்பா
குட் மார்னிங்
சுப்ஹா சவேரி

said...

// உங்கள் நண்பன் said...
குட் மார்னிங்!
கொஞ்சம் வேலை இருப்பதால் கிராமத்திற்க்கு இப்போழுது வேண்டாம்,
நான் அழைக்கும் போது வரவும்,

அன்புடன்...
சரவணன். //

சரா...!
ஆகா வர்ரோம் வர்ரோம்னு சொல்லியும் வரவேணான்னு சொல்றாரே இவர்ரு ரொம்ப நல்லவரு ....! அவ்வ்வ்வ்வ்

said...

//மகேந்திரன்.பெ said...
ஜிகே வந்தாச்சிங்க
உள்ளேன் அய்யா
வணக்கம் அய்யா
வணக்கம்பா
குட் மார்னிங்
சுப்ஹா சவேரி
//
மகி ... !
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து ... இது பின்னூட்டத்துக்கும் பொருந்தும் !
:)

said...

//ஆகா வர்ரோம் வர்ரோம்னு சொல்லியும் வரவேணான்னு சொல்றாரே இவர்ரு ரொம்ப நல்லவரு//

இப்போ நீங்க கொஞ்சம் பிஸி,அந்த ரயிலும் பிஸி, நானும் தான், ஈவினிங் free யா இருக்கும் போது போகலாம்,
"எஸ்கே"ப் ஆயிடாமா மயிலையும் அழைத்து வரவும்,

அன்புடன்...
சரவணன்.

said...

//இப்போ நீங்க கொஞ்சம் பிஸி,அந்த ரயிலும் பிஸி, நானும் தான், ஈவினிங் free யா இருக்கும் போது போகலாம்,
"எஸ்கே"ப் ஆயிடாமா மயிலையும் அழைத்து வரவும்,

அன்புடன்...
சரவணன். //

சரா... அதெல்லாம் சொல்லவே வேண்டாம் ஆனால் இப்ப 1.00 மணி ஆவுது ... அதாவது இன்னும் 8 மணி நேரத்தில் ஆஜராகிவிடுவோம்...

:)

பி.கு கிழே உள்ள டைம் ஸ்டாம் மேட்சி பண்ணி நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

said...

//அதாவது இன்னும் 8 மணி நேரத்தில் ஆஜராகிவிடுவோம்...//


இப்போ இங்கே மணி 10:41 இன்னும் 8 மணி நேரம்னா மாலை 6:41க்கு மீட் பண்ணுவோம்!


அன்புடன்...
சரவணன்.

said...

/பிறவிப் பயனடைவதில், வலியென்பதும் வாழ்த்தும் வரம் தான்!/

அருமையான வரிகள்.நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் கோவியாரே!.

said...

//துபாய்) ராஜா said...

அருமையான வரிகள்.நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் கோவியாரே!.
//

ராஜா ... !

பாராட்டுகளுக்கு நன்றி !

said...

கவிதைக்கு இந்த அளவுக்கு ஊட்டச்சத்தா ? அல்லது தலைப்பினால் வந்த வினையா ?