Monday, August 28, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

விளையாடுபவர்களை வேட்டையாடு !

முன்பே எழுத நினைத்த ஒன்றை தலைப்பு பிரபலம் ஆகிவிட்டதால் அதே தலைப்பில் எழுதகிறேன். கிரிக்கெட் விளையாட்டு பற்றி கொஞ்சம் விளையாடலாம். சச்சின் டெண்டுல்கர் ரசிகர்கள், மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவேண்டும் என்பதே கட்டுரையின் நோக்கம்.

கிரிக்கெட் என்பது இந்திய விளையாட்டில் முதன்மைப் பெற்று 25 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதில் 1983 உலக கோப்பையை மட்டுமே உலககோப்பை வரலாற்றில் இந்தியா வென்றிருக்கிறது. சச்சின் டெண்டுலகர் 1992 உலக கோப்பை முதலாக 4 உலக கோப்பைப் போட்டியில் விளையாடியிருக்கிறார். அடுத்துவரும் உலக கோப்பை போட்டியிலும் விளையாடப் போவதாக சொல்கிறார்கள்.

சச்சின் ஒரு நட்சத்திர ஆட்டக்கரார் என்பதை அவ்வப்போது நிறுபித்துவருகிறார். அணி வெற்றிப் பெறுகிறதோ இல்லையோ, அவரது தனிப்பட்ட சாதனை தொடர்ந்தது ஏறுமுகத்தில் இருகிறது. அதாவது ஒரு நாள் போட்டியில் அதிக ரன் குவித்தவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர், அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர், அதிக டெஸ்போட்டிகளில் விளையாடியவர் என்று தனிப்பட்ட சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அவருக்கு வழங்கப்படும் தொடர்ந்த வாய்ப்புகளின் காரணமாக, ஒரு நாள் போட்டியில் சில வற்றில் சோபிக்காவிட்டாலும், வேறு போட்டிகளில் பவுலிங்கில் நன்றாக திறமையை நிறுபித்து தனக்கு ஏற்பட்ட சரிவை ஒருவாறு சரிசெய்கிறார். மற்ற வீரர்களுக்கு அவ்வாறு வாய்ப்புகள் வழங்கப்படுவதும் குறைவே.

அவருக்கு கொடுக்கப்பட்ட அணித் தலைவர் பதவி தனது தனிப்பட்ட சாதனைக்கு இடையூறாக இருக்கும் என்றே சில போட்டிகளில் விளையாடி முடிவு தெரிந்ததும் அணித் தலைவர் பதவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

ஆயிரக்கனக்கான இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வத்துடன் பயிற்ச்சி எடுத்துக் கொண்டு காத்திருக்கும் போது சச்சின் டெண்டுல்கருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது ஏன். கிரிக்கெட்டுக்கு தேவை புது ரத்தம். ஏற்கனவே தற்போதைய சச்சின் வயதில் முன்பு விளையான்ட வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்ட வரிசையில் கபில்தேவ், கவஸ்கர் மற்றும் பல முன்னனிவீரர்கள் அடங்குவர். அவர்களுக்கெல்லாம் இல்லாத சிறப்புத் தகுதியை ஏன் சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய கிரிக்கெட் வழங்க வேண்டும்.

அவரது சுண்டுவிரலில் அட்ப்பட்டதற்காக கோடிக்கணக்கில் செலவளித்து அவரை மீண்டும் அணியில் வைத்திருப்பதில் கிரிக்கெட் வாரியத்துக்கு என்ன லாபம் ? சச்சின் இல்லையென்றால் இந்திய கிரிக்கெட் அஸ்தமித்துவிடுமா என்ன ? சச்ச்சின் தான் இந்திய கிரிக்கெட்டின் நாயகன் என்றால் இந்தியா அவர் விளையாடிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் ஒரு உலககோப்பையிலாவது வென்றிருக்க வேண்டும். அவ்வாறு இதுவரை நடக்கவில்லையே!

அவரது வயதையும், வாய்ப்புக்காக காத்திருக்கும் பல்வேறு மானிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கனக்கான இளைஞர்களை மனதில் கொண்டும் சச்சினுக்கு ஓய்வு கொடுத்தால் என்ன ? சச்சின் தானாகவே வெளியேற வேண்டும் என்று ஒருமுறை கபில்தேவ் மறைமுகமாக குறிப்பிட்டதையும் இங்கு நினைவுகொள்ளலாம். இந்திய கிரிக்கெட் அடுத்த உலக கோப்பையை சந்திக்க இருக்கும் நேரத்தில் இதுபற்றி தெளிவுபடுத்தினால் நல்லது. கிரிக்கெட் ரசிகர்கள் இதுபற்றி என்ன கருத்துச் சொல்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக இருக்கிறேன். நானும் சச்சின் ரசிகனே என்பதையும் பெருமையாக கூறிக் கொள்கிறேன்.

18 : கருத்துக்கள்:

said...

என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க? அதாவதுங்க எல்லாரும் சச்சின் விளையாடுற எல்லா மேட்சும் சென்சுரி அடிக்கணும்ன்னு எதிர்பார்க்கிறாங்க அது தவறு. டிராவிட்(நான் தீவிர டிராவிட் ரசிகன்) 40 ரன் அடித்தால் சந்தோஷம் அடைகிற ரசிகர்கள் சச்சின் 40 ரன் அடித்தால் சந்தோஷம் அடைய மாட்டேன் என்கிறார்கள். மேலும் சச்சின் காயம் அடைந்த பொழுது வேறு ஆட்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டதே காயம் அடைந்த பொழுது எப்பொழுது டீமில் இருந்தார்? அவர் காயம் சரியான பின்னரே இப்பொழுது டீமுக்கு வந்துள்ளார். அவர் ஏற்கனவே கிரிக்கெட் உலகில் அழியாப் புகழ் பெற்று விட்டார். அவரை சும்மா தொந்தரவு செய்யாமல் அவர் போக்கில் விட்டு டீமில் உள்ள மற்றவர்கள் ஒழுங்காக விளையாடினால் இந்தியா உலகக் கோப்பையை கண்டிப்பாக வெல்லும். மேலும் கடந்த உலகக் கோப்பையில்(மேலும் 1996 உலகக் கோப்பையிலும் அதிக ரன்கள் சச்சின்தான் என்று நினைக்கிறேன்) அதிக ரன்களைக் குவித்தவர் சச்சின்தான் என்பதையும் நாம் நினைவில கொள்ள வேண்டும்.

said...

//குமரன் எண்ணம் said... அவர் ஏற்கனவே கிரிக்கெட் உலகில் அழியாப் புகழ் பெற்று விட்டார். //

குமரன் இதைத்தான் சொல்கிறேன். சச்சினுக்கு பணம் புகழ் எல்லாமே இருக்கிறது. இந்த வயதுக்கு மேல் அவர் சாதனை எதுவும் நிகழ்த்தப்போவது சந்தேகமே. வாய்ப்புக்காக ஏங்கு ஏராளமான துடிப்பான இளைஞர்களை மனதில் கொண்டு, தன் தற்போதைய நிலையை தக்கவைத்துக் கொண்டு சச்சின் விலகினால் அவருக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் நன்று.

said...

//Mouls said...
You are right Mr GK, I too accept your view and I too like Sachin's play, but there should be way for the new generation.
//

மவுல் அவர்களே...!
இந்திய கிரிக்கெட்டும் சச்சின் ஒருவரே இந்தியாவில் சிறந்தவர் என்று நினைக்காமல் முடங்கிக் கிடக்க்கும் மற்ற இளைய ரத்தங்களை அடையாளம் கண்டு வளர்க்கவேண்டும் என்பதே இப்பதிவின் மூலம் நான் கூறிக் கொள்ள விழைவதும்

Thanks for your Comments !

said...

இன்னொரு 4 வருஷம் ஆடட்டும். அப்புறம் கீச்சு குரலில் கமெண்டு குடுக்கட்டும்.அதுதான் என் ஆசை.

:)))))

said...

//செந்தழல் ரவி said...
இன்னொரு 4 வருஷம் ஆடட்டும். அப்புறம் கீச்சு குரலில் கமெண்டு குடுக்கட்டும்.அதுதான் என் ஆசை.

:)))))
//

ரவி ... அவரு நிறந்தர கிரிக்கெட்டர்னு சொல்றிங்க !
:))

said...

////ரவி ... அவரு நிறந்தர கிரிக்கெட்டர்னு சொல்றிங்க !////

ஆமாம் இல்லையா பின்ன...

கிரிக்கெட் உலகின் விடிவெள்ளி - விடிசனி, விடிஞாயிறு எல்லாம் அவர்தானுங்கோ...

said...

// செந்தழல் ரவி said...
ஆமாம் இல்லையா பின்ன...
கிரிக்கெட் உலகின் விடிவெள்ளி - விடிசனி, விடிஞாயிறு எல்லாம் அவர்தானுங்கோ... //

ரவி...!
மொத்தத்தில் அவரு ஒரு இந்திய கிரிக்கெட்டைப் பிடித்த கிரகம் என்று சொல்லுகிறீர்கள்
:))

said...

GK,

சச்சின், உலக கோப்பை வரை நிச்சயம் அணியில் இருக்க வேண்டும். அதற்கு பிறகு நீங்கள் சொல்வதுபோல் ஓய்வு அளிக்கலாம்..

said...

அதான் கோவியார் சொல்லிட்டாரு!
சிபாவும் வழி மொழிஞ்சிட்டாரு!
அப்புறம் என்னப்பா?
போர்டு இன்னும் தூங்குதா என்ன?
சச்சின்! இன்னும் நீ வீட்டுக்குப் போகலை?
ம்ம்ம்ம்... சீக்கிரம் மூட்டையைக் கட்டுப்பா!

:D)

said...

//Sivabalan said...
GK,
சச்சின், உலக கோப்பை வரை நிச்சயம் அணியில் இருக்க வேண்டும். அதற்கு பிறகு நீங்கள் சொல்வதுபோல் ஓய்வு அளிக்கலாம்..
//

சிபா...! உலக கோப்பையை இந்தியா ஜெயிக்கனும் அதுக்கு இள ரத்தங்கள் தேவை. ஆனால் கிரிக்கெட் அன்பிட் ஆகி அபீட் ஆன டெண்டுல்கரை பிடிச்சு தொங்கிகிட்டு இருக்கு. சச்சின் புதுசா சாதிக்க என்ன இருக்கு ? அடுத்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கச் சொல்லி ஒதுங்கிக் கொள்கிறேன் என்ற பெரும்தன்மை இல்லையே !

said...

//SK said...
அதான் கோவியார் சொல்லிட்டாரு!
சிபாவும் வழி மொழிஞ்சிட்டாரு!
அப்புறம் என்னப்பா?
போர்டு இன்னும் தூங்குதா என்ன?
சச்சின்! இன்னும் நீ வீட்டுக்குப் போகலை?
ம்ம்ம்ம்... சீக்கிரம் மூட்டையைக் கட்டுப்பா!
:D) //

சிபா எங்கே வழிமொழிஞ்சார்...? நான் தான் இங்கே கரடியாக கத்திக்கிட்டு இருக்கேன். நம்ப கிரிக்கெட்(ட) போர்ட் சச்சினுக்கு நகம் வெட்டக் கூட 100 கோடி செலுவு பண்ணுவாங்க ! :))

said...

சரியாக சொன்னீர்கள் கண்ணன்.

எதோ இந்திய கிரிக்கெட்டிற்கு டெண்டுல்கர் என்று இல்லாமல் நிறைய பேர் டெண்டுல்கருக்காக இந்திய டீம் என மாறிவிட்டார்கள்.

யெஸ்! அவர் சிறந்த வீரர் சந்தேகமேயில்லை. இந்தியாவிற்காக அற்புதமாக ஆடியுள்ளார். ஆனால் எல்லோருக்கும் ஒரு சரிவு வரும் ( ஏன் கபில்தேவிற்கும் வந்ததே ) அப்படி வரும் போது அதை ஏற்றுக்கொண்டு தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தேவையில்லாத ஹிரோயிஸ கலாச்சாரத்தில் ஊறிய நம் ஆட்கள் இன்னமும் அதன் தொடர்ச்சியாக நடப்பது போல தோன்றுகிறது.

அதைவிட்டு டெண்டுல்கரிடம் உள்ள அனுபவத்தை எப்படி இந்திய டீம் உபயோகப்படுத்தவேண்டும் என பார்க்க வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.

said...

கோவி சார்!

நீங்க அனானிகளுக்கு இடஒதுக்கீடு தரலைன்னு என் கிட்டே கம்ப்ளையண்ட் பண்ணுறாங்க.... என்னான்னு பாருங்க.....

said...

ஹிம் எப்படியாவது சச்சினை வெளியேத்திபுட்டா கல்கத்தா சிங்கம் கங்குலிய கொண்டுவரச்சொல்லி போராடலாம்னு அய்டியா பன்றீங்க ?.... டால்மியா சொன்னாருங்களா இந்த பதிவு போடச்சொல்லி? கங்குலி போனதுக்கே கல்கத்தாவுல கலவரம் பன்றாய்ங்க எதோ ரெண்டு ஆட்டமா தலைக்கு கை சரியில்லை அதுக்காக டீம உட்டு தூக்குன்னு சொல்றதெல்லாம் சரியில்லை ஆமா சொல்லிட்டேன். இதுவேற எவனாவது இதை படிச்சிபுட்டு போய் அங்கன ஜிகே ஒரு பதிவு போட்டு சச்சினை தொரத்துறார் இதான் சமயம் நம்ம கங்குலிய உள்ள கொண்டாரலாம்ன்னு சொன்னா அப்புரம் என்ன ஆகும் நல்லா யோசிங்க

said...

//luckylook said...
கோவி சார்!

நீங்க அனானிகளுக்கு இடஒதுக்கீடு தரலைன்னு என் கிட்டே கம்ப்ளையண்ட் பண்ணுறாங்க.... என்னான்னு பாருங்க.....
//
மகி மேலும், உங்கள் மேலும் அனானிகள் வைத்திருக்கும் பாசத்தை நினைக்கும் போது எனக்கு மூச்சடைபே வந்துடும் போல இருக்கு !

நானும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், அவர்கள் எத்தனை பேருக்குத்தான் பின்னூட்டுவார்கள்.
அவுங்க நிலமையை நெனச்சிதான் பின்னூட்டப் பொட்டியை கட்டிப் போட்டு வச்சிருக்கிறேன்.
:))

said...

// மகேந்திரன்.பெ said...
ஹிம் எப்படியாவது சச்சினை வெளியேத்திபுட்டா கல்கத்தா சிங்கம் கங்குலிய கொண்டுவரச்சொல்லி போராடலாம்னு அய்டியா பன்றீங்க ?.... டால்மியா சொன்னாருங்களா இந்த பதிவு போடச்சொல்லி? கங்குலி போனதுக்கே கல்கத்தாவுல கலவரம் பன்றாய்ங்க எதோ ரெண்டு ஆட்டமா தலைக்கு கை சரியில்லை அதுக்காக டீம உட்டு தூக்குன்னு சொல்றதெல்லாம் சரியில்லை ஆமா சொல்லிட்டேன். இதுவேற எவனாவது இதை படிச்சிபுட்டு போய் அங்கன ஜிகே ஒரு பதிவு போட்டு சச்சினை தொரத்துறார் இதான் சமயம் நம்ம கங்குலிய உள்ள கொண்டாரலாம்ன்னு சொன்னா அப்புரம் என்ன ஆகும் நல்லா யோசிங்க
//

மகி... !
கங்குலியா அவரு யாரு ? எஸ் எம் எஸ் ஜோக்குல கூட இப்பெல்லாம் அப்படி ஒரு பெயரைப் பார்க்க முடியவில்லையே !
:))

said...

m ennatha solla :(

said...

எங்க வீட்டில இருக்கிறவரு சச்சின் தான் பெறாத பிள்ளைனு நினைச்சு இருக்கார்;_(

கவாஸ்கர் லொட்டு லொட்னு அடிக்கறப்போ சும்மாஇல்லையா.
ஸ்ரீகாந்தைத் தூக்கிப் போடவில்லைய.
குண்டப்பா விஸ்வநாத்,சந்திரசேகர்,
வென்க்கட ராகவன் இவங்களை எல்லாம், ஏன் இப்ப நம்ம பாலாஜி
அலட்சியம் செய்வாங்க.
அப்புறம் ???