Saturday, September 02, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

சன் டிவி - அரட்டை அசிங்கம்

நடிகர் திரு விசு அரசியல் நேரத்தில் செய்த காமடிக்கு பிறகு கலையிழந்து போனது சன் டிவியின் அரட்டை அரங்கம். முன்பு மட்டும் என்ன வாழ்ந்தது என்று கேட்பவர்களுடன் நானும் சேர்ந்தே சிரிப்பேன். ஆனால் விசு நடத்திய அரட்டை அரங்கம் பல்வேறு தரப்பினரின் பேச்சுத் திறமையை வெளிக் கொண்டுவர உதவியது என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை.

வாலு போயி கத்தி வந்தது கதையாக விசுவின் அந்த இடத்திற்கு திரு சாலமன் பாப்பையாவும் அவர் தம் ஆஸ்தான பேச்சாளர் ராஜா (நக்கல் சிங்கம்) வந்திருக்கின்றனர். அவர்கள் முதன் முதலில் அரட்டை அரங்கத்தில் வைத்த தலைப்பு,

சமூக சீரழிவுக்குக்கு காரணம்

1. வியாபர நோக்குடைய சினிமாக்கள்
2. தரமற்ற பத்திரிக்கைகள்
3. பொறுப்பற்ற பொதுமக்கள்

என்ற தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பைய்யா (நான் பெரிதும் மதிப்பவர்) தலைமையில், மற்றும் பட்டிமன்ற நாயகர் ராஜா வழிநடத்துதலில் நடந்தது. வழக்கம் போல் காமடியாகவும், ஒத்திகை செய்யப்பட்டது போலவும் தான் இருந்தது.

இதில் சன் டிவி 4 வதாக சேர்க்காமல் விட்ட தலைப்பு 'குடும்பப் பெண்களை குறிவைக்கும் மெகா தொடர்கள்' என்பதை சமயோஜிதமாக விட்டுவிட்டது. தன் முதுகு தனக்கு தெரியாது என்று பெரியவர்கள் சரியாக சொன்னார்கள். சமூக பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பது போல் நடத்தி ஒலி/ஒளிபரப்பிய சன் டிவியின் அந்த குறிப்பிட்ட அரட்டை அரங்கத்தை நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது.

சன் டிவியின் இந்த திசைத் திருப்பலுக்கு அல்லது செலக்டிவ் அம்னீசியாவுக்கு (வாழ்க அம்மா) புதிதாக அரட்டை அரங்கம் நடத்தும் இருவரும் தெரியாமலே முட்டுக் கொடுப்பதைப் பார்க்கும் போது அரட்டை அரங்கம் எனக்கு இந்த பதிவின் தலைப்பை கொடுத்தது.

இதில் சாலமன் பாப்பைய்யாவையோ, ராஜா அவர்களையோ ஒன்றும் குறைசொல்வதற்கில்லை. அவர்கள் வழியில் சரியாக நடத்தினார்கள். விசு அவர்கள் நடத்திய அளவுக்கு கலகலப்பு இல்லை என்பதை உணரலாம்.

36 : கருத்துக்கள்:

வெற்றி said...

:)

Unknown said...

விசு அரட்டையோ பாப்பையா அரட்டையோ சனங்க சன்டிவி பாத்து பொழுத போக்குனா சரிதான்... ஜெயா டிவிய பாக்காம:))

Unknown said...

அரட்டை அரஙம் நான் பார்த்து பல வருடமாகிவிட்டது.அப்போதே சுத்த போர் நிகழ்ச்சி அது.,

சரி..இப்ப விசு என்ன தான் செய்கிறார்?ஜெயாடீவியில் ஏதாவது புரொக்ராம் செய்கிறாரா இல்லை முழுநேர அரசியலில் குதித்துவிட்டாரா?

கோவி.கண்ணன் [GK] said...

//வெற்றி said...
:)
//

வெற்றிச் சிரிப்பா ?
:))

கோவி.கண்ணன் [GK] said...

//மகேந்திரன்.பெ said...
விசு அரட்டையோ பாப்பையா அரட்டையோ சனங்க சன்டிவி பாத்து பொழுத போக்குனா சரிதான்... ஜெயா டிவிய பாக்காம:))
//
மகி,
சன் டிவியின் ஒட்டுமொத்த கேபிள் சப்ளையர் நீங்க தானா ?
ரொம்பவுமே கவலைப்படுறிங்க !
:))

கோவி.கண்ணன் [GK] said...

// செல்வன் said...

சரி..இப்ப விசு என்ன தான் செய்கிறார்?ஜெயாடீவியில் ஏதாவது புரொக்ராம் செய்கிறாரா இல்லை முழுநேர அரசியலில் குதித்துவிட்டாரா?
//

செல்வன்...! அது எனக்கும் தெரியலை. வியட்நாம் விடு சுந்தரம் மாதிரி பழையபடி கதைவசனம் எழுத அவ்ருக்கென்று ஒரு மெகா சீரியல் கிடைக்காமலா போகும் !

ILA (a) இளா said...

//"சன் டிவி - அரட்டை அசிங்கம்" //

தலைப்பு நல்லா இருக்கு. இப்படி சொல்லிட்டா அந்த நிகழ்ச்சி நல்லா இல்லேன்னு தானே அர்த்தம்? இல்லே அசிங்கமா பண்றாங்கன்னுதானே அர்த்தம்?

Unknown said...

சன் டிவியின் ஒட்டுமொத்த கேபிள் சப்ளையர் நீங்க தானா ?
ரொம்பவுமே கவலைப்படுறிங்க !
:)) /////////

எல்லாம் நம்ம அம்மா மாதிரி குடும்பமில்லாம இருந்தா கவலை வேண்டாம் நான் கலைஞர் மாதிரி குடும்பஸ்தனாச்சே

குழலி / Kuzhali said...

//இதில் சன் டிவி 4 வதாக சேர்க்காமல் விட்ட தலைப்பு 'குடும்பப் பெண்களை குறிவைக்கும் மெகா தொடர்கள்' என்பதை சமயோஜிதமாக விட்டுவிட்டது
//
கோவி.கண்ணன் உங்களுடைய இந்த பதிவில் இந்த வரிகளுடன் உடன்படுகின்றேன், அரட்டை அரங்கம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டே இருக்கும் நான் அப்படியே கேட்டுக்கொண்டே மற்ற வேலைகளை செய்துகொண்டிருப்பேன், அப்படி தொடர்ந்து கொண்டிருந்த போது சாலமன் பாப்பையா, ராஜா நடத்திய அரட்டை அரங்கம் விசுவின் அரட்டை அரங்கத்தோடு இணைசெய்து பார்க்கும்போது perfection சற்று குறைவாக இருந்தது, ஆனால் சில catching அந்த அரட்டை அரங்கத்தில் இருந்தது, மேலும் சன் டிவியின் செலக்டிவ் அம்னீசியா பற்றியும் இன்னும் விசுவின் அரட்டை அரங்கத்திற்கும், சாலமன் பாப்பையா அரட்டை அரங்கத்திற்கும் மற்றும் சில விடயங்களையும் பதிவாக எழுத இருந்தேன், இங்கே பின்னூட்டத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் நான் என்ன ஆவது? அதான் பிறகு பதிவு போடுகின்றேன்.

கோவி.கண்ணன் [GK] said...

//குழலி / Kuzhali said...
சில விடயங்களையும் பதிவாக எழுத இருந்தேன், இங்கே பின்னூட்டத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் நான் என்ன ஆவது? அதான் பிறகு பதிவு போடுகின்றேன். //

குழலி...!
சிரித்துவிட்டேன்... !
திரு பதிவிலும் வேறு ஒன்றை நீங்கள் எழுத நினைத்ததாகவும், அதற்குள் திரு எழுதிவிட்டதால் கைவிடுவதாகவும் சொல்லியிருந்தீர்கள். இங்கேயும் அதே போல் நிகழ்வு நடந்துவிட்டது. சில எண்ண ஒற்றுமை தான்!

இனிமேல் எழுத நினைத்ததை எழுதி உடனே வலையேற்றுங்கள் !
:)))

குழலி / Kuzhali said...

//எல்லாம் நம்ம அம்மா மாதிரி குடும்பமில்லாம இருந்தா கவலை வேண்டாம் நான் கலைஞர் மாதிரி குடும்பஸ்தனாச்சே//
மகேந்திரன் கலக்குறார்பா... நீங்க ரொம்ப நல்லவருங்கோ....

கோவி.கண்ணன் [GK] said...

//மகேந்திரன்.பெ said...
எல்லாம் நம்ம அம்மா மாதிரி குடும்பமில்லாம இருந்தா கவலை வேண்டாம் நான் கலைஞர் மாதிரி குடும்பஸ்தனாச்சே //

மகி ...!
கண்டனம் ! கண்டனம்
6 கோடி மக்களைப் பெற்ற மகராசியை குடும்பம் இல்லாமல் இருப்பவர் என்று சொல்லிவிட்டீர்கள். இரத்தம் கொதிக்கிறது...! நா துடிதுடி துடிக்கிறது.! அடக்கு அடக்கு என்று நட்பு தடுக்கிறது.

:)))))))

கோவி.கண்ணன் [GK] said...

//ILA(a)இளா said...

தலைப்பு நல்லா இருக்கு. இப்படி சொல்லிட்டா அந்த நிகழ்ச்சி நல்லா இல்லேன்னு தானே அர்த்தம்? இல்லே அசிங்கமா பண்றாங்கன்னுதானே அர்த்தம்? //

இளா ...!
நான் சொன்னது நிகழ்ச்சியில் நடு நிலைமை இல்லை என்பதுதான் !
நடத்துபவர்கள் சாலமன் பாப்பைய்யா, ராஜா ஆகியவர்களின் ஆஸ்தான ரசிகர் நான்.

கோவி.கண்ணன் [GK] said...

//குழலி / Kuzhali said...
மகேந்திரன் கலக்குறார்பா... நீங்க ரொம்ப நல்லவருங்கோ.... //

ஆகா
கெளம்பிட்டாங்கைய்யா !கெளம்பிட்டாங்கா !
ஒரு குருப்பா
கெளம்பிட்டிங்கெ !
:))))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நான் அரட்டை அரங்கம் எல்லாம் பாக்கறதே இல்லீங்க. ஆமா நீங்க என்ன சன், ஜெயா டீவில எல்லாம் நடு நிலைமை எதிர்பார்க்கறீங்க? இப்படி அப்பாவியா இருக்கீங்களே.

கோவி.கண்ணன் [GK] said...

// குமரன் எண்ணம் said...
நான் அரட்டை அரங்கம் எல்லாம் பாக்கறதே இல்லீங்க. ஆமா நீங்க என்ன சன், ஜெயா டீவில எல்லாம் நடு நிலைமை எதிர்பார்க்கறீங்க? இப்படி அப்பாவியா இருக்கீங்களே.
//

குமரன் ...!
ஜெயா டிவியின் நடுநிலைமை நாடு அறிந்த ரகசியம். அதை நான் வேறு சொல்லவேண்டுமா ?
:)))

பழூர் கார்த்தி said...

ஆமாம், விசு நடத்திய அளவுக்கு இப்போது இல்லை, ஆனால் ஓரிரு மாதங்களில் கொஞ்சம் அனுபவம் வந்தவுடன் ராஜா கலக்கலாம் :-)

***

உங்களை யாருங்க இந்த புரோமிராமை பாக்க சொன்னது ?? சூப்பர் 10, டாப் 10, திரை விமர்சனம் போன்ற காமெடி நிகழ்ச்சிகளைப் பாருங்க :-))))

enRenRum-anbudan.BALA said...

//சன் டிவியின் இந்த திசைத் திருப்பலுக்கு அல்லது செலக்டிவ் அம்னீசியாவுக்கு (வாழ்க அம்மா) புதிதாக அரட்டை அரங்கம் நடத்தும் இருவரும் தெரியாமலே முட்டுக் கொடுப்பதைப் பார்க்கும் போது அரட்டை அரங்கம் எனக்கு இந்த பதிவின் தலைப்பை கொடுத்தது.
//
****************
கோவி,
ஒமக்கு குசும்பு அதிகம் யா (சாலமன் பாப்பையா போல் வாசிக்கவும்) ;-)
எ.அ.பாலா
***************

கோவி.கண்ணன் [GK] said...

// சோம்பேறி பையன்....ஆமாம், விசு நடத்திய அளவுக்கு இப்போது இல்லை, ஆனால் ஓரிரு மாதங்களில் கொஞ்சம் அனுபவம் வந்தவுடன் ராஜா கலக்கலாம் :-)//

சோம்பேறி பையன் அவர்களே ...!
முதல் நிகழ்ச்சி அவ்வளவாக சுவைக்கவில்லை..ராஜாவுக்கு டைமி சென்ஸ் குறைவு...!
அவர் ஒத்திகையுடன் பட்டிமன்ற மேடைக்கு வருபவர்... பார்ப்போம் எப்படி சமாளிக்கிறார் என்று.
:))

கோவி.கண்ணன் [GK] said...

//enRenRum-anbudan.BALA said... கோவி,
ஒமக்கு குசும்பு அதிகம் யா (சாலமன் பாப்பையா போல் வாசிக்கவும்) ;-)
எ.அ.பாலா//

பாலா ...!
நம்ம தமிழ் ஐயா.. அரசியலில் நுழைந்து விசு அளவுக்கு பேர் பெற்றுவிடுவாரா என்று ஆதாங்கம் தான்.
:))

G.Ragavan said...

// குழலி / Kuzhali said...
//எல்லாம் நம்ம அம்மா மாதிரி குடும்பமில்லாம இருந்தா கவலை வேண்டாம் நான் கலைஞர் மாதிரி குடும்பஸ்தனாச்சே//
மகேந்திரன் கலக்குறார்பா... நீங்க ரொம்ப நல்லவருங்கோ.... //

அதான...ஒரு குடும்பத்துக்கே அவனவன் விழி பிதுங்கிப் போறப்போ....

கதிர் said...

'குடும்பப் பெண்களை குறிவைக்கும் மெகா தொடர்கள்' என்பதை சமயோஜிதமாக விட்டுவிட்டது.

அதான் புத்திசாலித்தனம்னு சொல்றது. ஒருவேளை இப்படியும் வச்சி சொல்லிட்டா கூட மெகா தொடர் பாக்கறத விட்டுட போறாங்களா என்ன?

கோவி.கண்ணன் [GK] said...

// G.Ragavan said...
அதான...ஒரு குடும்பத்துக்கே அவனவன் விழி பிதுங்கிப் போறப்போ.... //

ஜிரா ... !

பலவும் அறிந்த தாங்களா இப்படி சொல்வது...!!! அப்பன் முருகனை கேளுங்கள் 2 மனைவிகளை எப்படி சமாளிக்கிறார் என்று ! இல்லையென்றால் அப்பனின் அப்பன் சொக்கனிடம் கேளுங்கள் !
அவுங்களெல்லாம் 2 வச்சிக்கிட்டே சமாளிக்கும் போது ...
:))

கோவி.கண்ணன் [GK] said...

//தம்பி said...
அதான் புத்திசாலித்தனம்னு சொல்றது. ஒருவேளை இப்படியும் வச்சி சொல்லிட்டா கூட மெகா தொடர் பாக்கறத விட்டுட போறாங்களா என்ன? //

தம்பி அவர்களே !
ஹி ஹி அதுக்கு ஒரு தனிப்பதிவு போட்டோவோடு போட்டிருக்கேன் !!
http://govikannan.blogspot.com/2006/08/blog-post_05.html
:)

நெல்லைக் கிறுக்கன் said...

சாலமன் பாப்பையா அய்யா, ராஜா ரெண்டு பேருக்குமே இது புதுத் துறை.
சாலமன் பாப்பையா அய்யா தினம் ஒரு திருக்குறள் நிகழ்ச்சி பண்ணிருந்தாலும் மக்களோட நேரடியா பேசுத மாரி நிகழ்ச்சி இப்பத் தான் பண்ணுதாருன்னு நெனக்கேன்.

தமிழ் சரியாத் தெரியாத அறிவிப்பாளினிகளே கொஞ்ச நாள் ஆனவுடனே நல்ல நிகழ்ச்சிகள் பண்ணும் போது, ராஜா அய்யாவும் சாலமன் அய்யாவும் இனி வரும் நிகழ்ச்சிகள நல்லா செய்வாங்கன்னு நம்புவோம்.

கோவி.கண்ணன் [GK] said...

//நெல்லைகிறுக்கன் said...
தமிழ் சரியாத் தெரியாத அறிவிப்பாளினிகளே கொஞ்ச நாள் ஆனவுடனே நல்ல நிகழ்ச்சிகள் பண்ணும் போது, ராஜா அய்யாவும் சாலமன் அய்யாவும் இனி வரும் நிகழ்ச்சிகள நல்லா செய்வாங்கன்னு நம்புவோம். //

நெ.கி.

நானும் அவர்கள் இருவரைப்பற்றிக் குறை சொல்லவில்லை. சன் டிவியின் ஒருதலைப் பட்சம் பற்றி கூரியதுதான் இந்த பதிவு.

கார்த்திக் பிரபு said...

aaanal visuvin arattai arangathil ellarum aluvadhai pol ingey ala villai thane..adhu varaikum sandhosam!!

கோவி.கண்ணன் [GK] said...

// கார்த்திக் பிரபு said...
aaanal visuvin arattai arangathil ellarum aluvadhai pol ingey ala villai thane..adhu varaikum sandhosam!!
//
கார்த்திக்...!
அது போகப் போக தெரியும் !
அழுவுறாங்களா ? அழவைப்பாங்களா ? என்று !

Sivabalan said...

GK,

விசு அளவுக்கு இல்லை என்கிறீர்களா?.. சரி விடுங்க..

கொஞ்ச நாளையில் பழகிவிடும்..

ENNAR said...

அரட்டை அரங்கம் ரசிக்கும் படியும் சிந்திக்கும் படிதான் இருந்தது

கோவி.கண்ணன் [GK] said...

//Sivabalan said...
GK,

விசு அளவுக்கு இல்லை என்கிறீர்களா?.. சரி விடுங்க..

கொஞ்ச நாளையில் பழகிவிடும்..
//

சிபா ... !
விசுவை கிண்டலடிச்சிட்டிங்களே ...!
அப்படித்தான் விசு அரட்டை அரங்கம் பழகிச்சா ! :))

கோவி.கண்ணன் [GK] said...

// ENNAR said...
அரட்டை அரங்கம் ரசிக்கும் படியும் சிந்திக்கும் படிதான் இருந்தது
//

என்னார் அவர்களே !
உங்களையாவது சன் டிவி திருப்திபடுத்தியிருக்கிறதே, சன் டிவிக்கு ஓரளவு வெற்றிதான் ! :))

Unknown said...

//இல்லையென்றால் அப்பனின் அப்பன் சொக்கனிடம் கேளுங்கள் !
அவுங்களெல்லாம் 2 வச்சிக்கிட்டே சமாளிக்கும் போது ...
:))
//

ஆகா ஜிகே என்னிய வச்சி இங்க காமெடியே பன்றீங்களா? நிஜமா வே நான் ரொம்ப நல்லவன்ங்க. நாணயம் மாதிரி ரெண்டுபக்கமுல்லாம் இல்லை நாயணம் மாதிரி ஒரு பக்கம்தான்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//'குடும்பப் பெண்களை குறிவைக்கும் மெகா தொடர்கள்' //

இந்த சீரியலை எதிர்த்து வலைப்பதிவர்கள் நாம் ஒரு போராட்டம் நடத்தலாமா?

கோவி.கண்ணன் [GK] said...

// மகேந்திரன்.பெ said...
ஆகா ஜிகே என்னிய வச்சி இங்க காமெடியே பன்றீங்களா? நிஜமா வே நான் ரொம்ப நல்லவன்ங்க. நாணயம் மாதிரி ரெண்டுபக்கமுல்லாம் இல்லை நாயணம் மாதிரி ஒரு பக்கம்தான் //

மகி... !
:)))

நாயணத்தில் ஓட்டை உண்டு ... உங்களை நீங்களே கவுத்துகிட்டிங்களே !
:))

கோவி.கண்ணன் [GK] said...

//நிலவு நண்பன் said...
இந்த சீரியலை எதிர்த்து வலைப்பதிவர்கள் நாம் ஒரு போராட்டம் நடத்தலாமா? //

நிலவு நண்பன் ...!

ம் ..புரிகிறது... நிலவுக்கு கல்யாணம் ஆகிடிச்சு :))
பொறுப்பு கூடிடுச்சி :))