Wednesday, August 30, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஓ.பன்னீர் செல்வத்துக்கு 'ஓ' போட்ட முதல்வர் !!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சூது, வாது தெரியாத சாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில், இன்று (நேற்று) நடந்த காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு கருணாநிதி பதில் அளித்துப் பேசுகையில், அதிமுக ஆட்சியில் தான் காவல்துறை உன்னத நிலையை அடைந்ததாக எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பனனீர் செல்வம் பேசினார்.

அதில் நான் குறுக்கிட்டுப் பேச விரும்பவில்லை. அப்படி பேசினால் அவர் நோகக்கூடும் என்பதால் அப்போது பேசவில்லை. எனக்கு சிறு வயதிலிருந்தே பன்னீர்செல்வம் என்ற பெயர் பிடித்தமானதாகும்.
மூதறிஞர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது கட்டாய இந்தியைக் கொண்டுவந்தார்.

அப்போது இதே அவையில் ஏ.டி.பன்னீர் செல்வம் அதை எதிர்ததார். நீங்களும், சோம சுந்தர பாரதியும் தான் இதை எதிர்க்கிறீர்கள் என்றார் ராஜாஜி. அதற்கு பன்னீர்செல்வம் பதிலளிக்கையில், நீங்கள் ஒருவர் மட்டும் தான் இந்தியை கொண்டு வருகிறீர்கள். எதிர்ப்பு இருவராக இருப்பதால் நாங்கள் தான் மெஜாரிட்டி என்று சாதுரியமாக கூறினார்.

ஏ.டி.பன்னீர் செல்வம் அளவுக்கு ஓ.பன்னீர் செல்வம் சாதுர்யமானவர் என்று சொல்ல மாட்டேன். அவர் சாது, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். ஆனால் இவரோ, சூது வாது தெரியாத சாது என்றார் முதல்வர்.

செய்தி தட்ஸ்தமிழ் - இணையப்பக்கம் நன்றி

14 : கருத்துக்கள்:

said...

பன்னீருக்கு அம்மா கிட்டே வெச்சுட்டாரு வேட்டு!

said...

//ப்ரியன் said...
பன்னீருக்கு அம்மா கிட்டே வெச்சுட்டாரு வேட்டு!
//
ப்ரியன்...!
நம்ப பன்னீரு கும்பிடு போட்டே சமாளித்துவிடுவார் கவலையே இல்லை !
:))

said...

karunanaidhaiyai adikka yarumillai pechil

said...

//கார்த்திக் பிரபு said...
karunanaidhaiyai adikka yarumillai pechil
//

கார்த்திக் ...!
ஏன் இல்லை ? அந்த தாத்தாவை நெஞ்சில் எட்டி உதைக்கவே ஏகப்பட்ட பேரப் புள்ளைங்க இருக்கு !!!

:))

said...

அவர் பெயரிலேயே 'ஓ' இருக்கிறதே ஸ்வாமி

அது அவரைப் படைத்தவனே போட்டு அனுப்பிய ஓ
பிர்ச்சினை இல்லாத - பிரச்சினைகள் செய்யாத வித்தியாசமான் அரசியல்வாதி அவர்

சால மஞ்சி மனுஷுடு அய்னா - செப்தானிக்கு வேறு ஏமி உன்னதி பாபு?

said...

"ஓஹோ, அப்படியா, இருக்கட்டும், இருக்கட்டும்.

நீங்க பன்னீர்செல்வத்திற்கு பாராட்டு கொடுத்தா, நாங்க டி ஆர் பாலுவை பாராட்டிட்டு போறோம். அதான் ஏற்கனவே ஒரு தடவை செஞ்சிருக்கோமுல்ல"

மேலே சொல்லப்பட்டது போயஸ் கார்டனில் நாம் வைத்திருந்த ஒட்டுக்கேட்கும் மெஷினில் ரெக்கார்டானது.

said...

"கருணாநிதி சொன்னது உண்மைதான். சாதுவானவர்களுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து, வாழவைக்கும் கட்ஷி என் தலைமையில் சிறப்பாக செயல்பட்டுவரும் அ.இ.தி.மு.க மட்டுமே. ஏனெனில் கொடியவர்கள், அப்பாவி மக்களை ஏமாற்றும் ஸாமர்த்தியஸாலிகள் அனைவரும் தி.மு.கவில் தானே இருக்கின்றனர்"

ஹ்ம்ம்ம்ம். இப்படியெல்லாம் அய்யாவுக்கு பதில் சொல்லலாம்னு அம்மாக்கு சொல்லித்தரேன். எனக்கு அந்த குட்டி கதை எழுதற வேலை கிடைக்குமா?

said...

yar andha perapullainga??????

said...

எங்க தலை எதோ முடிவோடதான் ஓ.போட்டு வச்சிருக்கார் ... ரொம்ப நாளாவே ஓ.மேல க வுக்கு ஒரு சாப்ட் கார்னர் ....

said...

//SP.VR.SUBBIAH said...
அவர் பெயரிலேயே 'ஓ' இருக்கிறதே ஸ்வாமி

அது அவரைப் படைத்தவனே போட்டு அனுப்பிய ஓ
பிர்ச்சினை இல்லாத - பிரச்சினைகள் செய்யாத வித்தியாசமான் அரசியல்வாதி அவர்

சால மஞ்சி மனுஷுடு அய்னா - செப்தானிக்கு வேறு ஏமி உன்னதி பாபு?
//
ஐயா !
ஆய்னா உடம்பை 'ஓ' மாதிரி வளைச்சு கும்பிடு போடுவதிலும் வல்லவரு !

ஐயா, மீரு திருப்பதி போய்டு வந்து செப்தாரா ?
நாக்கு தெலுகு தெளியது. கன்னடம் சென்னாகி கொத்து !
:))

said...

// Muse (# 5279076) said...
"ஓஹோ, அப்படியா, இருக்கட்டும், இருக்கட்டும்.

நீங்க பன்னீர்செல்வத்திற்கு பாராட்டு கொடுத்தா, நாங்க டி ஆர் பாலுவை பாராட்டிட்டு போறோம். அதான் ஏற்கனவே ஒரு தடவை செஞ்சிருக்கோமுல்ல"

மேலே சொல்லப்பட்டது போயஸ் கார்டனில் நாம் வைத்திருந்த ஒட்டுக்கேட்கும் மெஷினில் ரெக்கார்டானது. //

மியூஸ்,
போயாஸ் கார்டனுக்கே அல்வா கொடுத்து ஒட்டு கேட்டாச்சா ! ஓட்டுக் கேட்டவங்க நெலமையை நெனச்சாதான் பரிதாபமாக இருக்கு !
:)))

said...

//Muse (# 5279076) said...
"கருணாநிதி சொன்னது உண்மைதான். சாதுவானவர்களுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து, வாழவைக்கும் கட்ஷி என் தலைமையில் சிறப்பாக செயல்பட்டுவரும் அ.இ.தி.மு.க மட்டுமே. ஏனெனில் கொடியவர்கள், அப்பாவி மக்களை ஏமாற்றும் ஸாமர்த்தியஸாலிகள் அனைவரும் தி.மு.கவில் தானே இருக்கின்றனர்"

ஹ்ம்ம்ம்ம். இப்படியெல்லாம் அய்யாவுக்கு பதில் சொல்லலாம்னு அம்மாக்கு சொல்லித்தரேன். எனக்கு அந்த குட்டி கதை எழுதற வேலை கிடைக்குமா?
//

அது எப்படி கொடியவர்கள், ஸாமார்த்திய சாலிகள் எல்லாம் அம்மா பக்கம் வந்த ஒடெனே நல்லவங்களாக ஆகிவிடுகிற மந்திரத்தையும் கொஞ்சம் சொல்லுங்களேன். அம்மாவுக்கு குட்டிக் கதை சொல்ல ஆள் தேவையில்லை. யாராவது தலையில் குட்டி கதை சொன்னால் போதும்
:))

said...

//கார்த்திக் பிரபு said...
yar andha perapullainga?????? //
கார்த்திக் இப்படி கேட்டுவச்சிட்டிங்களே !
உடன்பிறப்புக்கள் அத்தனை பேரின் பேரப் புள்ளைங்களும் அவருக்கு பேரப் புள்ளைங்க தான் ஆனால் பதிவி மட்டும் சொந்தப் புள்ளைங்களுக்கும், பேரப்புள்ளைங்களுக்கும் தான். நான் இங்கு தயாநிதியை ஞாபகப்படுத்தவில்லை :))

said...

//மகேந்திரன்.பெ said...
எங்க தலை எதோ முடிவோடதான் ஓ.போட்டு வச்சிருக்கார் ... ரொம்ப நாளாவே ஓ.மேல க வுக்கு ஒரு சாப்ட் கார்னர் .... //
இருக்காதா பின்னே... 'ஓ' முதல்வராக இருந்தப்ப மேம்பால வழக்கில் ஒடனே கைது நடவடிக்கை எடுக்காமல் கொஞ்சம் அடக்கி வாசிச்சாரே :))