Friday, August 04, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஒளி !

ஒளியின் சிறப்பு என்ன ?
பிம்பங்களின் மேல் பட்டு
அவற்றின் வடிவத்தை
பிரதிபளிப்பது !

ஒளியின் சிறப்பு
அது மட்டுமல்ல
சுட்டு உணர்த்துவதும் தன் !

அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, அகர்பத்தி
இவற்றில் தோன்றும்
ஒளிகளைப் பார்த்திருக்கிறேன் !

இவற்றில் எந்த ஒளி சிறந்தது ?
என்ற கேள்வியில்
என் வீட்டில் இருக்கும்
அகல் விளக்கின் ஒளியே சிறந்தது
என்று மட்டுமே
நினைத்துக் கொண்டிருந்தேன் !

அன்று
ஒரு நாள் எண்ணைத் தீர்ந்து
என் வீடு இருண்ட போது,
பக்கத்துவீட்டு மெழுகுவர்த்தியின் ஒளியும்,
அடுத்தவீட்டு அகர்பத்தி மணமும்,
என் முகத்தை தொடும் வரை !

அந்த வெளிச்சத்தில், நான்
வெளிச்சமும் மணமும் பெற்றபோது,
என் வீட்டில் இருந்து கொண்டே
நான் தெரிந்து கொண்டேன்,
எல்லா ஒளிகளிலும்,
ஒளியின்மை என்று
ஒன்று இல்லவே இல்லை !
ஒளிமட்டுமே இருக்கிறது !

8 : கருத்துக்கள்:

said...

nalla irukkunga
ella oliyume sirappudhan..ana enakku ennamo onnuonnum ovvuru edatthula adiga sirappai tharumnu thonudu
for eg
deepavali appa veedellam agal vilakku etthi magizharadu
ade samayam namakku pidittavarduan oru candel light dinner
bakthi manam kamazhch cheium agarbatthi veliccham..
ippadi..ovvonum pottti pottu nammala sandhoshapaduttum

said...

//அனிதா பவன்குமார் said...
nalla irukkunga
ella oliyume sirappudhan..ana enakku ennamo onnuonnum ovvuru edatthula adiga sirappai tharumnu thonudu
for eg
deepavali appa veedellam agal vilakku etthi magizharadu
ade samayam namakku pidittavarduan oru candel light dinner
bakthi manam kamazhch cheium agarbatthi veliccham..
ippadi..ovvonum pottti pottu nammala sandhoshapaduttum //

அனிதா ... ! சரியாக சொல்லியிருக்கிங்க.... ஒவ்வொரு ஒளியிலும் ஒரு சிறப்பு இருக்கு அதை யாரும் மறுக்க முடியாது ... ஆனால் இங்கு ஒளி உருவகம் மட்டுமே .. கொஞ்சம் பின்நவீனத்தும் இருக்கு இதில் ! உங்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி !

said...

GK,

// எல்லா ஒளிகளிலும்,
ஓளியின்மை என்று
ஒன்று இல்லவே இல்லை ! //

இது எனக்கு புரியவில்லை..

said...

எல்லாருக்குள்ளும் ஒரு ஜீவ ஒளி உண்டு. நம்மிடம் உள்ளது போன்றே!
அதைப் புரிந்து, இசைந்து இசைபட வாழ்ந்தால் நலமே விளையும்

said...

நல்ல கவிதை கண்ணன். வாழ்த்துகிறேன்.

said...

// SK said...
எல்லாருக்குள்ளும் ஒரு ஜீவ ஒளி உண்டு. நம்மிடம் உள்ளது போன்றே!
அதைப் புரிந்து, இசைந்து இசைபட வாழ்ந்தால் நலமே விளையும்
//
எஸ்கே அவர்களே ... நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள் நன்றி

said...

//விடாதுகருப்பு said...
நல்ல கவிதை கண்ணன். வாழ்த்துகிறேன்.
//

கறுப்பு அவர்களே ... ! வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி ... !

said...

அருமையானப் புகைப்படம் பதிவிற்கு மேலும் அழகு சேர்க்கிறது.