Wednesday, August 30, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

இடப்பெயற்சி [கவிதை] !



களித்து இன்புற்று இனப்பெருக்க
கண்டம் விட்டு கண்டம் செல்லும்
பறவைகள் !

கடல்கடந்து காசு தேடி அலைந்து
கட்டியவளையும், குடும்பத்தையும் மகிழ்வுடன் காணவரும்
ஆண்கள் !

காடு மேடுகளில் மேய்ந்துவிட்டு மகிழ்வுடன்
சாயுங்கால நேரம் கொட்டில் தேடிவரும்
ஆடுமாடுகள் !

கர்பமுற்றதும் ஈன்றெடுக்க, மனக்
களிப்புடன் ஈன்ற தாய்வீடு செல்லும்
பெண்கள் !

இடப் பெயற்சியினால்
இவர்களுக்கெல்லாம் கிடைக்கும் அதே மகிழ்ச்சி,
ஈழத்திலிருந்து தாயகம் நோக்கி தளர்வுடன் வரும் நம்
ஈழ சகோதரர்களுக்கும் கிடைக்க இருகரம் நீட்டுவோம் !

9 : கருத்துக்கள்:

கார்த்திக் பிரபு said...

nalla kavidhai ..kaneer varavalaiku kavdhai valthukkal..

SP.VR. SUBBIAH said...

இடம் பெயரும்போது
எதை விடுவது
எதைக் கொள்வது?
பிறந்த மண்ணையே
பிரியும்போது
வளர்ந்த மண்ணையே
விட்டு வரும்போது
எது உடன் வந்தாலெனன
எது விட்டுப் போனாலென்ன?
பின்
தலைச்சுமை தானெதற்கு?
மனச்சுமைக்கு
எதிர்ச்சுமை வேண்டாமா?
அதற்குத்தான் அது!

கோவி.கண்ணன் [GK] said...

//கார்த்திக் பிரபு said...
nalla kavidhai ..kaneer varavalaiku kavdhai valthukkal..
//

கார்த்திக் ...! மிகவும் நன்றி நன்றாக பாராட்டிச் சொல்லியிருக்கிறீர்கள்

கோவி.கண்ணன் [GK] said...

//SP.VR.SUBBIAH said...
இடம் பெயரும்போது
எதை விடுவது
எதைக் கொள்வது?
பிறந்த மண்ணையே
பிரியும்போது
வளர்ந்த மண்ணையே
விட்டு வரும்போது
எது உடன் வந்தாலெனன
எது விட்டுப் போனாலென்ன?
பின்
தலைச்சுமை தானெதற்கு?
மனச்சுமைக்கு
எதிர்ச்சுமை வேண்டாமா?
அதற்குத்தான் அது!
//
சுப்பைய்யா ஐயா !
சுமை பேலன்ஸ் பற்றி,
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
ஐயாவுக்கு கவிதையும் வரும் என்பது தெரியும்
இவ்வளவு சிறப்பாக வரும் என்பது
இப்போதுதான் தெரிகிறது !
நன்றி ஐயா

Sivabalan said...

உணர்வு பூர்வமான கவிதை...

கோவி.கண்ணன் [GK] said...

//Sivabalan said...
உணர்வு பூர்வமான கவிதை... !
//

சிபா...!
நேற்று கூட அகதிகளாக ராமேஸ்வரம் மண்டபம் முகாமுக்கு 100 கண்கானவர் வந்திருக்கின்றனர். அதனால் தான் இதை எழுதினேன்.

கப்பி | Kappi said...

:(
உணர்வுப்பூர்வமான கவிதை ஜிகே!!

கோவி.கண்ணன் [GK] said...

// கப்பி பய said...
:(
உணர்வுப்பூர்வமான கவிதை ஜிகே!!
//

கப்பி பாய்...!
எல்லோருமே அதையே சொல்லியிருக்கிறார்கள். எல்லோருக்கும் இதுபற்றிய ஒரே உணர்வுகள் இருப்பது தெரிகிறது.
:(

சேதுக்கரசி said...

(பிரசுரித்தல் கட்டாயமல்ல :)) தலைப்பு "இடப்பெயர்ச்சி" என்றிருக்கவேண்டும்.