இரண்டும் ஒன்றுபோல் பொருள் தந்தாலும். புரிந்துகொள்ளுதல் என்ற நிலையில் பொருள் மாறுபடுகிறது. அறிவுரை சொல்வது அல்வா சாப்பிடுவது போல் எல்லோருக்கும் எளிது. தம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கே அறிவுரையை பெரும்பாலோர் கையில் எடுக்கின்றனர். இரு காதுடன் யாராவது வாய் பேசாதவர்கள் எக்கு தப்பாக மாட்டிவிட்டால் போதும், 'இந்த பிடி அட்வைஸ்' என்று நம் முழுத்திறமையையும் கேட்பவர் காது இரத்தம் வழியும் வரை நாம் விடுவதில்லை.
சரி அறிவுரை எங்கு செல்லுபடியாகிறது. நம்மை யாராவது மதித்தால், அப்படி நம்மை மதிப்பவர் விரும்பிக் கேட்டுக் கொண்டால் மட்டுமே அறிவுரை அறிவுரையாக கேட்கப்படும். அப்படி இல்லாமல் வழியே சென்று அறிவுரை சொல்கிற பேர்வழியாக நம்மை நினைத்துக் கொண்டு 'இதை நீ செய்வதைக் காட்டிலும் உருப்படியாக வேறு ஏதாவது செய்' என்று சொன்னால் அது அறிவுரையாகப் பார்க்கப்படுமா ? இல்லவே இல்லை அது அகம்பாவ உரை என்று புறந்தள்ளிவிடுவர். நாம் பிறருக்கு அறிவுரை சொல்லும் முன் நாம்மை முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மற்றவர்கள் அறிவுறுத்தலை நாம் ஏற்றுக் கொள்கிறோமா, அறிவுரை சொல்வதற்கான சூழல் இருக்கிறதா, எல்லாவற்றையும் விட நமக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று. அப்படி சீர்தூக்கிப் பார்க்காதவர் ஏதோ பொது நல விரும்பி போல் அவதாரம் எடுக்க முயன்றால் அவருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் மட்டுமே மிஞ்சும். நாம் அறிவுரை சொல்லப் போக நமக்கு போகிற வருகிறவர் எல்லாம் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.
அறிவுரை சொல்பவர் ஆசானாக இருக்கவேண்டும், இல்லை என்றால் அனுபவப் பாடம் படித்தவரோ, உணர்ந்தவராக இருக்கவேண்டும், அத்தகையவரை யாராவது இனம் கண்டு 'இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு ?' என்று கேட்டால் மட்டுமே அறிவுரை சொல்லலாம். இல்லை என்றால் ஆபத்தில் இவர் சிக்கப் போகிறார், இதனால் இவருக்கு பெரும் துன்பமோ கேடோ நிகழப் போகிறது என்று முன் கூட்டியோ நாம் உணர்ந்திருந்தால் அந்த நபருக்கு அறிவுரை சொல்லலாம். அல்லது இதைச் செய்வதால் நீங்கள் போற்றப்படுவீர்கள் என்று அவரே உணராததை ஒரு வேளை நாம் நன்கு உணர்ந்திருந்தால் அறிவுறுத்தலாம். செல்லுபடியாகாது என்று தெரிந்தே அறிவுரை சொல்லப் போனால் பெரும்பாலும் அவமானமே மிஞ்சும்.
அக்கரைக்கும் அறிவுரைக்கும் நூலிழைதான் வேறுபாடு, இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் தான் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. நமக்கு வேண்டியவர்கள் நமக்கு அறிவுரை சொன்னால், உடனே என்ன சொல்லுகிறார் எனக் கவனியாமல், உடனே சொல்பவர் தகுதியை எடை போடக் கூடாது. மாறாக எதற்காக இவர் நமக்கு அறிவுரை சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் போது நம்மால் ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது நம் மீது இவர் வைத்துள்ள அன்பின் காரணத்தால் நமக்கு அறிவுரை சொல்கிறார் அது அறிவுரையின் பெயரில் செலுத்தும் அக்கரை. அங்கே அறிவுரை அக்கரையாக பார்க்கப் படாவிட்டால் ஈகோ (ஆணவம்,அகம்பாவம்) தலை தூக்க ஆரம்பித்து யார் அறிவாளி என்ற எதிர்க்கேள்வி ஏற்பட்டு உறவுகள் சீர்கெட ஆரம்பிக்கும்.
ஆகவே நண்பர்களோ, சொந்தங்களோ எதையாவது அறிவுறுத்தினால் நாம் அங்கு பார்க்க வேண்டியது அன்பின் வெளிப்பாட்டில் மறைமுகமாக சொல்லப்படுவது அறிவுரை மட்டின்றி அதையும் தாண்டிய நம் மீதான அக்கரை!
17/ஆகஸ்ட்/2006
பின்குறிப்பு : வழக்கமான பதிவை beta.blogger க்கு மாற்றலாம் என்ற முயற்சியில் கருவிபட்டை சொதப்பல் ஆகி தமிழ்மண இடுகையில் சேர்க்க முடியாமல் போய்விட்டது. இந்த பதிவு தேன் கூட்டில் வந்தது ஆனால் தமிழ்மணத்தில் வரவில்லை. அந்த காலம் சரியாகும்ரை இந்த காலங்களில் காலம் தள்ளுவேன்
Thursday, August 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)
20 : கருத்துக்கள்:
மகேந்திரன்.பெ said...
பார்த்துவிட்டீர்களா? (படித்துவிட்டீர்களா?)
ஜிராவில் போட்ட குலாப் ஜாமூனை எடுத்து 14 வருடம் காட்டுக்குள் இருந்தவருக்கு கோவி.கண்ணனின் கும்மாங்குத்து:)
எப்படித்தான் உசுப்பேத்தினாலும் ஜிகே மட்டும் தாங்க தமிழ்மணத்தில சூடேராம இருக்காரு....
நீங்க கோவி. கண்ணனா கோகூல் கண்ணனா?
ஜிகே அப்ப நான் போட்ட பின்னூட்டம் காலியா?
இங்கயும் எழுதி ஆரம்பிச்சி வக்கிறேன்.
காலத்தில் வராத கோலம் ஜிரா போட்ட குலோப்ஜாமூனுக்கு ஜிகேயின் கூடுதல் வலுசேர்க்கும் குத்து. 14 ஆண்டுகள் காட்டில் இருந்தவரை மீண்டும் காட்டுக்கே அனுப்ப ஜிகேயின் அதிரடி நடவடிக்கைகள் மேலும் சுவையான தகவல்களுக்கு தொடர்ந்து பின்னூட்டங்களை பார்த்து....
பதில் அளிப்பவர்களுக்கு சமஸ்க்கிருததில் தப்பாமல் எழுது வது எப்படி எனும்
முப்பது நாளில் தேவபாஷை புத்தகம் பரிசளிக்கப்படும், அத்துடன் ஜிகேயின் 10 ஐடியாக்களும் வழங்கப்படும்
கோச்சுக்காதீங்க ஜிகே இந்த பதிவ படிச்சா எனக்கு அந்த நினைப்பு வாரதை தடுக்க முடியல. ஏதோ என்னால முடிஞ்சவரைக்கும்
அக்கறையுடன் சொல்கிறேன்: அக்கரையா இக்கரையா என்று குழம்பாமல் தெளிவாக கரையேற்றுகிறீர்
மகேந்திரன் எதோ உ.கு என்று தெரிகிறது... ம் நீங்கள் அப்படிபட்ட ஆள்தான் :))
எல்லை என்றால் உங்கள் ரயிலு எப்படி ஓடும் :)
நல்லா எழுதியிருக்கீங்க ஆனா என்ன திடீருன்னு உங்க கவிதைப் பதிவுல இப்படி ஒரு பதிவு?
//Boston Bala said...
அக்கறையுடன் சொல்கிறேன்: அக்கரையா இக்கரையா என்று குழம்பாமல் தெளிவாக கரையேற்றுகிறீர் //
சிறிய 'ர' பெரிய 'ற' இதில் எப்பவுமே குழம்பினாலும் ... சிறிய என்ற இடத்தில் பெரிய 'ற' வும், பெரிய என்ற இடத்தில் சிறிய 'ர' வும்
மறக்காமல் போடுவிடுவேன்.
இப்பக் கூட தலைப்பில் 'ற,ர' குழப்பம் இருக்கு !
ரா ரா ... பாடல் தேன் கேட்கவேண்டும் !
:))
//குமரன் எண்ணம் said...
நல்லா எழுதியிருக்கீங்க ஆனா என்ன திடீருன்னு உங்க கவிதைப் பதிவுல இப்படி ஒரு பதிவு?
//குமரன் ...வழக்கமான பதிவை beta.blogger க்கு மாற்றலாம் என்ற முயற்சியில் கருவிபட்டை சொதப்பல் ஆகி தமிழ்மண இடுகையில் சேர்க்க முடியாமல் போய்விட்டது. இந்த பதிவு தேன் கூட்டில் வந்தது ஆனால் தமிழ்மணத்தில் வரவில்லை. அந்த காலம் சரியாகும்ரை இந்த கவி'தைக் காலங்களில் காலம் தள்ளுவேன்//
//மகேந்திரன் எதோ உ.கு என்று தெரிகிறது... //
அது உ.கு தான்.
//ம் நீங்கள் அப்படிபட்ட ஆள்தான் :))
//
அப்படிப் பட்ட ஆள்தான்
//எல்லை என்றால் உங்கள் ரயிலு எப்படி ஓடும் :) //
இதுக்கெல்லாம் காரணமே நீங்கதானே ஜிகே :)))
நீங்க காட்டின வழியில ஓடும் :))))
//அக்கரைக்கும் அறிவுரைக்கும் நூலிழைதான் வேறுபாடு//
அக்கறைக்கும் அக்கரைக்கும் கூட :)
அருமையான பதிவு கண்ணன்..
சாரிங்க நான் பின்குறிப்பு படிக்காம விட்டுட்டேன்
//மகேந்திரன்.பெ said...
இதுக்கெல்லாம் காரணமே நீங்கதானே ஜிகே :)))
நீங்க காட்டின வழியில ஓடும் :)))) //
மகி ... !
உங்கள் நோக்கம் புரிகிறது... !அப்படியே அங்க வந்து தாக்குறவங்களுக்கு இந்த ஆளுதான் 'கை' காட்டினாருன்னு
சொல்லி ரயிலை ஓட்டுறிங்க !
:)))
சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு கலக்குது பாரு ஸ்டையிலு ... :))
// கப்பி பய said...
அக்கறைக்கும் அக்கரைக்கும் கூட :)
அருமையான பதிவு கண்ணன்..
//
கப்பி 'பய' என்று எழுதுவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கு ... இனிமே
கப்பி பாய் (பாயி - சகோதரன்) என்று எழுதுகிறேன்...!
என் நண்பர் ஒருவர் எனக்கு அக்கறையுடன் சொன்ன ஒரு அறிவுரைதான் இது ... வலை நண்பர்கள் மீது இருந்த அக்கறையால் பகிர்ந்து கொண்டேன் :))
நான் சொல்வதை "கப்பி பய" சொன்னதால் நான் வேறு வார்த்தைக்கு மாறிவிடுகிறேன்...
GK,
நல்ல பதிவுங்க..
//Sivabalan said...
நான் சொல்வதை "கப்பி பய" சொன்னதால் நான் வேறு வார்த்தைக்கு மாறிவிடுகிறேன்...
GK,
நல்ல பதிவுங்க..
//
சிபா ... கப்பி பாயி உங்களை பின்பற்றுகிறார் ... !
:))
//சொந்தங்களோ எதையாவது அறிவுறுத்தினால் நாம் அங்கு பார்க்க வேண்டியது அன்பின் வெளிப்பாட்டில் மறைமுகமாக சொல்லப்படுவது அறிவுரை மட்டின்றி அதையும் தாண்டிய நம் மீதான அக்கரை//
நல்ல பதிவு திரு.கோவியாரே,
எங்களின் மேல் தாங்கள் கொண்டுள்ள அக்கரையை மதிக்கின்றேன்.
தாங்களின் அறிவுரைகளை என்றும் ஏற்பேன்,
ஆமா! என் கிராமத்திற்க்கு திரும்ப வருவதாக சொல்லிவிட்டு சென்றீர்கள் என்ன ஆயிற்று?
இப்படி அக்கரை இல்லாமல் இருக்கலாமா...?
வரவில்லையே!! என்று என்னை வருத்தப்படவைத்த உங்களுக்கு இக்"கரை" தேவையா?
விரைவில் "கரை"துடையுங்கள்!
அன்புடன்...
சரவணன்.
//அருமையான பதிவு கண்ணன்..
கப்பி 'பய' என்று எழுதுவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கு //
யப்பா நான் தப்பிச்சேன் ஆரம்பத்திலயே ஜிகேன்னு தமிழ்ல நான், சிபா ஆங்கிலத்தில , இல்லன்னா என்னயும் மகின்னு உங்கள சொல்ரது கஸ்டமா இருக்குன்னு ஒரு உகு போட்டுட்டு போயிடுவீங்க :))
//இனிமே
கப்பி பாய் (பாயி - சகோதரன்) என்று எழுதுகிறேன்...!
//
மகிழ்ச்சி :)
//நான் சொல்வதை "கப்பி பய" சொன்னதால் நான் வேறு வார்த்தைக்கு மாறிவிடுகிறேன்...//
சிவபாலன்,
நீங்க முதல்ல வந்திருந்தா இதையே நான் சொல்லி இருப்பேன் ;)
இக்கரையினின்று
அக்கரைக்குச் செல்ல
அக்கறையாய் வந்து
வக்கணையாய் வாய் திறந்து
அக்கறையாய் அறிவுரை சொல்லும்
துக்கிரியை நம்பாதே
இக்கரையும் நிலைக்காது
அக்கரையும் சேராது என
அக்கறை நம்மீது கொண்டு
சர்க்கரையாய்ச் சொன்ன
கோவியாருக்கு ஒரு 'ஓ'!
// SK said...
இக்கரையினின்று
அக்கரைக்குச் செல்ல
அக்கறையாய் வந்து
வக்கணையாய் வாய் திறந்து
அக்கறையாய் அறிவுரை சொல்லும்
துக்கிரியை நம்பாதே
இக்கரையும் நிலைக்காது
அக்கரையும் சேராது என
அக்கறை நம்மீது கொண்டு
சர்க்கரையாய்ச் சொன்ன
கோவியாருக்கு ஒரு 'ஓ'!
//
எஸ்கே,
கரை கண்டவர் சொன்னது இது
அரைகுறை அறிவுறையில் குறையிருக்கலாம் ! ஆனால்
அக்கறை அறிவுரையில் எல்லாம் நிறையே !
சரிதானே !
யெஸ் ! K !
:)
// கப்பி பய said...
மகிழ்ச்சி :)
சிவபாலன்,
நீங்க முதல்ல வந்திருந்தா இதையே நான் சொல்லி இருப்பேன் ;) //
கப்பி பாய், சிபா ... !
சபாஷ் இருவருக்கும் 'அருமையான' போட்டி
:)
Post a Comment