
பாரத தேசம் நீ, பாரதியின் நேசம் நீ !
பாரினில் இதயமென நட்டனடுவில் வீற்றிருப்பளும் நீ !
புத்தர் தோன்றிய புண்ணிய பூமி நீ ! கலை
வித்தகர்கள் விளைவித்த விளைநிலம் நீ !
மகாத்மா காந்தியின் தேசம் நீ ! தத்தெடுத்த,
மாதரசி அன்னை தெரேசாவின் தவப்புதல்வியும் நீ !
மாதர் வழிநடத்தும் பெருமைமிகு தேசம் நீ, இன்று
சேது மாகடல் கரை திறந்தவளும் நீ !
உழவிற் கால்பதித்த நீ, பாரதி கன(¡)வென,
நிலவிற் கால்பதிக்க போகிறவளும் நீ !
அன்று அந்நியர் ட்சியில் அடங்கியிருந்த நீ,
இன்று அந்நியரை அடக்க அணுவாயுதம் ஏந்துபளும் நீ !
செந்தமிழை செம்மொழி க்கினாய் நீ,
வந்தொரெல்லாம் வாழ்த்தி, வாழ்ந்திட வழிவகுத்தவளும் நீ !
மண்கலம், மரக்கலம் படைத்த நீ, இன்று விண்முட்டும்,
விண்கலம் படைப்பவளும் நீ !
அந்நிய படையெடுப்பில் அலங்கோலமானாலும் நீ, என்றும்
இந்திய பண்பாடு மாறாதவள் நீ !
ஏற்றுமதி செய்யவந்து ஏமாற்றிய வெள்ளையரை, உன்
ஏற்ற மதியால், மென்பொருள் இறக்குமதி செய்விப்பளும் நீ !
பன்மொழி வித்தகி நீ, மதநல் இணக்கத்தின்,
உண்மையை உலகிற்கு உரைப்பவளும் நீ !
சதிப்பேய்களை உன்னிடமிருந்து விரட்டிய நாம், இன்னாளில்
சாதிப்பேய்களையும் வீழ்த்துவோம் என உறுதியேற்போம் !
ஜெய்ஹிந்த் ! ஜெய்ஹிந்த் ! ஜெய்ஹிந்த் !
4 : கருத்துக்கள்:
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
GK,
// இன்னாளில்
சாதிப்பேய்களையும் வீழ்த்துவோம் என உறுதியேற்போம் //
இந்த நம்பிக்கையே போய்விடு போல் உள்ளது..
அதும் இன்றைய பு.பி.கள் ஊடகம் மற்றும் நீதுத்துறையில் அமர்ந்து கொண்டு செய்யும் அவலங்களை நினைத்தால்..
திரு.கோவி.கண்ணன் அவர்களுக்கும், மற்றைய அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்...
சரவணன்.
க.க.போ....
அருமையான கவிதை...உக்காந்து யோசிச்சீங்களோ...!!
Post a Comment