Wednesday, August 23, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தமிழ்மண நிர்வாகத்தின் பார்வைக்கு !

முதலில் சில நடைமுறைகள் மூலம் தமிழ்மணம் திரட்டியில் பதிவர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளை அகற்றுவதற்காக ஏற்பாடு செய்திருக்கும் தமிழ்மணத்திற்கு பாராட்டுகள். இது ஒரு புதிய நிர்வாகத்தின் நல்லதொரு ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

எனக்கு தெரிந்த சில யோசனைகளை முன் வைக்கிறேன்.

1. தனிமனித தாக்குதல் என்றால் அது ஒவ்வாத ஆபாச வார்த்தைகள், குடும்பத்தை இழுத்து கேவலப்படுத்துவது என்ற அளவில் இருப்பதை தனிமனித தாக்குதலாக எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி திராவிட - ஆரிய அரசியல், கட்சி அரசியல் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இருபக்கமும் சளைத்தவர்கள் இல்லை.

2. மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாட்டைக் கவனிக்க - என்பது போல் 'தனிமனித தாக்குதல்களை தெரிவிக்க' என்று ஒரு பக்கத்தை ஆரம்பித்து புகார்களை வாங்கலாம். அதை எல்லோருடைய பார்வைக்கும் வைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பதிவர்கள் அடிக்கடி சென்று தன் பதிவு பற்றிய புகார் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு தமிழ்மணம் எச்சரிக்கை செய்யும் முன், அவர்களாகவே தங்கள் குறிப்பிட்ட பதிவையோ, பதிவின் ஒரு பகுதியையோ, குறிப்பிட்ட பின்னூட்டத்தையோ நீக்கிக் கொள்ள ஏதுவாக அமையும். புகார் சரி என்று தெரியும் பட்சத்தில் தமிழ்மணம் குறிப்பிட்ட பதிவருக்கு எச்சரிக்கை அனுப்பலாம்.

3. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பதிவர் விடுப்பில் சென்றிருக்கலாம், ஒரு நாள் அவகாசமோ, குறிப்பிட்ட கால அவகாசமோ அந்த பதிவர்களுக்கு தெரியாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய சமயத்தில், அந்த குறிப்பிட்ட பதிவரின் பதிவு பின்னூட்ட இடுகையில் மறுபடி தெரியும் போது அவர் விடுமுறையில் இருந்து வந்துவிட்டார் என்று கருதி அவருக்கு மறு எச்சரிக்கை அனுப்பினால் அது நல்லது. இது மட்டுறுத்தல் ஏற்பாடு செய்த பதிவர்களுக்கு மட்டுமே. மட்டுறுத்தல் செய்யாத பதிவர்களை குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீக்கலாம்.

4. ஏற்கனவே எழுதப்பட்டு பின்னூட்ட இடுகையில் மட்டும் மீண்டும் வரும் அத்தகைய பதிவுகளுக்கும் இந்த விதி பொருந்த வேண்டும். அதாவது அங்கே புதிய ஆபாச பின்னூட்டங்கள் வரும்போது மட்டும் விதியை கவனத்தில் வைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே இருக்கும் பின்னூட்டங்கள் எல்லோருக்கும் தெரிந்தது என்பதால் விட்டுவிடலாம்.

'தனிமனித தாக்குதல்களை தெரிவிக்க' என்ற ஏற்பாட்டில் புகார் செய்யும் போது பதிவர்களும் பள்ளிக் கூட பையன் போன்று சிறு சிறு விசயங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பது நலம். அவ்வாறு செய்தால் அந்தப் பதிவர்களின் செயல் சிறுபிள்ளைத் தனமாக பார்க்கப்படும். பொறுப்பு உணர்ந்து நடக்கவேண்டும்

மேலும் சில நல்ல யோசனைகளை சக பதிவர்கள் தெரிவிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

29 : கருத்துக்கள்:

said...

பெரிய ஐடியா ஐயாசாமியா இருப்பீங்க போல கொஞ்ச நாளுக்கு முன்னாடி குமுதம் ஆனந்த விகடனுக்கு ஐடியா குடுத்தீங்க இப்போ இங்க கலக்கறீங்க.

உங்க ஐடியா எல்லாம் நல்லா இருக்கு.ஆனா எதை எப்படி செயல் படுத்தினாலும் controversy வரத்தான் செய்யும் அதைத் தடுக்கவே முடியாது.

said...

அரசியல் களத்தில் தனிமனித தாக்குதல் இருக்குமே? உதாரணமாக கருணாநிதி பற்றியோ, அல்லது செயலலிதா பற்றியோ ராமதாஸ் ப்ற்றியோ எழுதும்போது விமர்சணம் செய்கையில் அது தனிமனித தாக்குதலாக பார்க்கப் படும் அப்போது என்ன செய்ய? பதிவர்கள் கருத்தோடு முட்டி மோதிக்கொள்ளும் வரை எந்த கவலையும் இல்லை நடக்கட்டும் நடக்கட்டும்

said...

//மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாட்டைக் கவனிக்க - என்பது போல் 'தனிமனித தாக்குதல்களை தெரிவிக்க' என்று ஒரு பக்கத்தை ஆரம்பித்து புகார்களை வாங்கலாம்.//

நடைமுறைப்படுத்தக் கூடிய நல்ல கருத்து!தாங்கள் கூறிய அனைத்துக் கருத்துக்களிலும் நானும் ஒத்துப் போகின்றேன்!

புதுப் பட்டம் " ஐடியா ஐய்யாச்சாமி"(நன்றி குமரனின் எண்ணங்கலுக்கு)



அன்புடன்...
சரவணன்.

said...

கோவியாரே!
இது அறிவுரையா இல்லை அக்கறையா?

யாரும் கேட்கப் போவதில்லை.

மனமாற்றம் என்பதிலேயே விடையும் இருக்கிறது.

அவரவர் தம் "மனதில்" நினைக்க வேண்டும், முறையாக நடக்க!

அது இல்லாதவரை, இதெல்லாம்......தொடர்கதைதான்!

வாழ்த்துகள்!

said...

// குமரன் எண்ணம் said...
பெரிய ஐடியா ஐயாசாமியா இருப்பீங்க போல கொஞ்ச நாளுக்கு முன்னாடி குமுதம் ஆனந்த விகடனுக்கு ஐடியா குடுத்தீங்க இப்போ இங்க கலக்கறீங்க.
\\

குமரன்... ! பெர்ர்ர்ர்ய ஐடியா இல்லை... சின்ன ஐடியா !

ஊதுற சங்கை ஊதுவோம் ! கேட்கிற காது கேட்கட்டும் !

said...

//மகேந்திரன்.பெ said...
அரசியல் களத்தில் தனிமனித தாக்குதல் இருக்குமே? உதாரணமாக கருணாநிதி பற்றியோ, அல்லது செயலலிதா பற்றியோ ராமதாஸ் ப்ற்றியோ எழுதும்போது விமர்சணம் செய்கையில் அது தனிமனித தாக்குதலாக பார்க்கப் படும் அப்போது என்ன செய்ய? பதிவர்கள் கருத்தோடு முட்டி மோதிக்கொள்ளும் வரை எந்த கவலையும் இல்லை நடக்கட்டும் நடக்கட்டும்
//
மகி,
அரசியல் வாதிகளே அசிங்கமாக மேடையில் பேசும் போது அதை ஒன்றும் சொல்வதற்கில்லை... ஆபாசம் இல்லாமல் எழுதலாம்

said...

SK said...
கோவியாரே!
இது அறிவுரையா இல்லை அக்கறையா?
யாரும் கேட்கப் போவதில்லை.
மனமாற்றம் என்பதிலேயே விடையும் இருக்கிறது.
அவரவர் தம் "மனதில்" நினைக்க வேண்டும், முறையாக நடக்க!
அது இல்லாதவரை, இதெல்லாம்......தொடர்கதைதான்!
வாழ்த்துகள்!
//

எஸ்கே,

அறிவுரை இல்லை.. எனக்கு தகுதியும் இல்லை !

எண்ணங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

said...

ந்ண்பரே - பட்டுக்கோட்டை சொல்லிவிட்டுப்போயிருக்கிறார் - திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது - அதற்காக் போலீஸ் ஸ்டேசன் களையெல்லாம் மூடிவிடலாமா - கூடாது
இரண்டும் வேண்டும் - மனமாற்றமும் வேண்டும் - கட்டுப்பாடுகளும் வேண்டும்
பதிவிற்குப் பாராட்டுக்கள்!

said...

இனிமே ஆள்வச்சி அடிப்பாய்ங்களோ.....:0

said...

உங்க முயற்சி செயல்பட வாழ்த்துக்கள்

said...

Mr.ஐடியா அய்யாசாமி,

உங்களின் இந்த யோசனைகள் எல்லாமே ஏற்றுக்கொள்ள தக்கதவே உள்ளன.

நன்றி கண்ணன்

said...

//SP.VR.SUBBIAH said...
ந்ண்பரே - பட்டுக்கோட்டை சொல்லிவிட்டுப்போயிருக்கிறார் - திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது - அதற்காக் போலீஸ் ஸ்டேசன் களையெல்லாம் மூடிவிடலாமா - கூடாது
இரண்டும் வேண்டும் - மனமாற்றமும் வேண்டும் - கட்டுப்பாடுகளும் வேண்டும்
பதிவிற்குப் பாராட்டுக்கள்!
//

சுப்பையா சார்...!
திருடன் போலிஸ் உதாரணத்துடன் பெரியவங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் ! மனமாற்றம் வேண்டும் என்று எஸ்கே கருத்தையே வழியுருத்தி சொல்லியிருக்கிறீர்கள் ! நன்றி

said...

//மகேந்திரன்.பெ said...
இனிமே ஆள்வச்சி அடிப்பாய்ங்களோ.....:0
//

மகி,

அநானி வச்சு அடித்தால் பரவாயில்லையின்னு சொல்லுவிங்க போல !

:))

said...

// நாகை சிவா said...
உங்க முயற்சி செயல்பட வாழ்த்துக்கள்
//

நம்ப முயற்ச்சின்னு சொல்லுங்க ... தேரை எல்லோரும் இழுத்தால் தானே ஒரு நிலைக்கு வரும் !

said...

// ராம் said...
Mr.ஐடியா அய்யாசாமி,

உங்களின் இந்த யோசனைகள் எல்லாமே ஏற்றுக்கொள்ள தக்கதவே உள்ளன.

நன்றி கண்ணன் //
திரு ராம் !

ஐடியாவை வரிசைப்படுத்தி போட்டிருப்பதால் எல்லோரும் ஐடியா அய்யாசாமி என்று சொல்லுகிறீர்கள்...!

யோசனையை பரிந்துரைத்ததற்கு நன்றி !

said...

இங்கன என்ன கவுருமென்டா வைச்சி நடந்திராய்ங்க போலிஸ் டேசன் வைச்சி கங்கானிக்க....

அப்புறம் தீவிரவாதிகள புடிக்கன்னு சொல்லி ஒரு ராணுவ கமிட்டி வைக்க ஆலொசன கொடுப்பாரு நம்ம கோவி.....

பிடிக்காதவிய்ங்கள கெட்ட வார்த்தை பேசறான், கெட்டவன்னு பல முத்திரை குத்தி ஒழிக்கறதுதானே உங்க திட்டம்....?

இதே வேலையத்தானா அந்த அம்மா உஷா வேற வார்த்தகள்ள செய்ய முயற்சி பன்னாங்க... விடாது கறுப்ப டார்கெட் பண்ணி....அத கண்டிச்சு ஒரு பதிவ போட்டேன்.

அத்த திரும்பவும் இங்க கொடுக்கறேன்:
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post.html


*********
சாதரண வார்த்தைகளுக்குக் கூட அர்த்தம் தெரியாம ஒவ்வொருத்தரும் ஒரு அர்த்தத்தில பதிவு போட்டுகிட்டுறுக்கோம், இதுல இது வேற... ஏற்கனவே செல்வாக்குல இருக்குறவய்ங்களுக்கு சாதகமா போகும். இந்த மாதிரி வலைப் பூ ஜனநாயகத்த புடுங்கிற மாதிரியான சதி வேலை செய்றவங்கள கங்கானிக்கறதுக்கு வலைப்பூ மக்களே ஒரு குரூப்ப ஆரம்பிக்கனும்.

********


//அது ஒவ்வாத ஆபாச வார்த்தைகள், குடும்பத்தை இழுத்து கேவலப்படுத்துவது என்ற அளவில் இருப்பதை தனிமனித தாக்குதலாக எடுத்துக் கொள்ளலாம்.//

போன்ஸ் கூட ஒரு தடவ பன்னி(பன்றி) ங்கிற வார்த்தை உபயோகப்படுத்தனத அன்போட கண்டிச்சாங்க.... அவிங்களுக்கு என்மேல நல்ல அபிப்ராயம் இருந்தனால அன்போட சொன்னாங்க.... நமக்கு பிடிக்காதவங்க இங்க அதிகப்படியா உலாவுர நேரத்துல 'ஒவ்வாத'ங்கற இந்த உருப்படாத அர்த்தமில்லா உள்ளீடற்ற வார்த்தைய எவன் வேணும்னாலும் சாதகமா பயன்படுத்திக்குவான்.

போட்ட பதிவுகள படிச்சு ரிப்ளெ பன்னவே நேரமில்ல இதுல ஒரு பொட்டிய போட்டு அத பார்த்து எல்ல சனங்களும் திருந்திக்கனுமா.....

நடைமுறைக்கு ஒவ்வாத அதிகாரத்துவமான ஐடியாக்கள்....

அய்யா எந்த பண்பாட்டையும் மேலிருந்து திணீக்காதிங்க....

கொஞ்சம் வலைப்பூ வசகர்கள் மேல நம்பிக்க வையுங்க.....


//மேலும் சில நல்ல யோசனைகளை //

ஒரே ரோசனைதான்.... அவிங்க அவிங்க சொந்த வேலகள, வெட்டி ஞாயங்கள, சண்டைகள அவனவன பாத்துக்க விடுங்க..... அத போயிட்டு மையப்படுத்துற வேலை செய்யாதீங்க....

வலைப்பூவலயாச்சும் கொஞ்சம் மொதலாளித்துவ வளர்ச்சிக்கு இடம் கொடுங்க சாமி.....

இந்திய பொருளாதராத்துலதான் இடங்கொடுக்கல....

**************

போங்கய்யா நீங்களும் உங்க ஐடியாவும்....


அசுரன்

said...

இங்கே தனிமனித தாக்குதல் அனுமதிக்கப் படுமா?

said...

//அசுரன் said... இங்கன என்ன கவுருமென்டா வைச்சி நடந்திராய்ங்க போலிஸ் டேசன் வைச்சி கங்கானிக்க....//
அசுரன் அவர்களே !
தமிழ்மணம் வலைத்திரட்டி என்ற பெயரில் ஒரு சேவையாக செய்துவருகிறார்கள். அந்த சேவையில் யாரும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். புகார்கள் வந்திருப்பதால் சில வழிமுறைகளை கையாளுகிறார்கள். நாமெல்லாம் ஆபாசத்தைப் பேசுவதற்காக வந்திருக்கிறோம்.

//
சாதரண வார்த்தைகளுக்குக் கூட அர்த்தம் தெரியாம ஒவ்வொருத்தரும் ஒரு அர்த்தத்தில பதிவு போட்டுகிட்டுறுக்கோம், இதுல இது வேற... ஏற்கனவே செல்வாக்குல இருக்குறவய்ங்களுக்கு சாதகமா போகும். இந்த மாதிரி வலைப் பூ ஜனநாயகத்த புடுங்கிற மாதிரியான சதி வேலை செய்றவங்கள கங்கானிக்கறதுக்கு வலைப்பூ மக்களே ஒரு குரூப்ப ஆரம்பிக்கனும்.
//
மற்ற விசயங்களில் கட்டுப்பாடு விதிக்கும் போது அதாவது எதைப்பற்றி எழுதலாம், எழுதக்கூடாது என்று கட்டுப்பாடு வந்தால் எல்லோருமே சேர்ந்து ராணுவமா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு விலகலாம். இப்போது இந்த கேள்வி பொருத்தமற்றதாக தெரிகிறது.

//போன்ஸ் கூட ஒரு தடவ பன்னி(பன்றி) ங்கிற வார்த்தை உபயோகப்படுத்தனத அன்போட கண்டிச்சாங்க.... அவிங்களுக்கு என்மேல நல்ல அபிப்ராயம் இருந்தனால அன்போட சொன்னாங்க.... நமக்கு பிடிக்காதவங்க இங்க அதிகப்படியா உலாவுர நேரத்துல 'ஒவ்வாத'ங்கற இந்த உருப்படாத அர்த்தமில்லா உள்ளீடற்ற வார்த்தைய எவன் வேணும்னாலும் சாதகமா பயன்படுத்திக்குவான்.//

பெரும்தன்மை உள்ளவர்கள் யாரும் புகார் செய்யமாட்டார்கள். ஓவ்வாத வார்த்தைகள் என்பதை தனிப்பட்டவர்கள் அதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள் எனபதைப்பற்றி பொருள் மாறுபடலாம். அத்தகையவர்களை தங்களை நேரிடையாக குறிப்பிட்டு இருப்பதாக சொன்னால் என்ன செய்வது. புகார்களுக்கு மதிப்பு அளித்து, அடுத்த முறை அவர்களே வந்து சீண்டினாலும் இனம் கண்டு ஒதுங்கலாமே அல்லது இவர்களே காரணம் என்று அடையாளம் காட்டலாமே.

//ஒரே ரோசனைதான்.... அவிங்க அவிங்க சொந்த வேலகள, வெட்டி ஞாயங்கள, சண்டைகள அவனவன பாத்துக்க விடுங்க..... அத போயிட்டு மையப்படுத்துற வேலை செய்யாதீங்க....
வலைப்பூவலயாச்சும் கொஞ்சம் மொதலாளித்துவ வளர்ச்சிக்கு இடம் கொடுங்க சாமி.....
இந்திய பொருளாதராத்துலதான் இடங்கொடுக்கல....
போங்கய்யா நீங்களும் உங்க ஐடியாவும்....
அசுரன் //

அசுரன் அவர்களே...! இந்த புதிய நடைமுறையை தமிழ்மணம் தான் தீர்மானித்திருக்கிறது. இது நடைமுறைக்கு வந்துவிட்ட பிறகு தான் நான் ஒரு பதிவர் என்பதால் சக பதிவர்கள் யாரும் இந்த திடீர் ஏற்பாட்டால் பாதித்து விடக்கூடாது என்பதால் சில வழிமுறைகள் பற்றி கோடிட்டு காட்டினேன். சிலர் சரி என்கிறார்கள், நீங்கள் தவறு என்கிறீர்கள். எந்தக் கருத்தானாலும் சகபதிவர்களும், தமிழ்மணமுமே தீர்மாணித்துக் கொள்ளட்டும். எனக்கு லாபமோ நஷ்டமோ எதுவும் இல்லை.

said...

//மகேந்திரன்.பெ said...
இங்கே தனிமனித தாக்குதல் அனுமதிக்கப் படுமா?
//

மகி,
என்னை எப்படி வேண்டுமானாலும் தாக்குங்க நான் புகார் செய்ய மாட்டேன்.
:))

said...

கோவி கண்ணன்,

எனது கருத்துக்களை தங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலாக எண்ணவில்லையே?

மற்றபடி தங்களைப் பற்றி நான் தவறாக எண்ணவில்லை....

அதே போல என்னையும் தவறாக நீங்கள் கருதவில்லை என்று நம்புகிறேன்.

எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து பதில் சொன்னமைக்கு நன்றீ

அசுரன்

said...

//என்னை எப்படி வேண்டுமானாலும் தாக்குங்க நான் புகார் செய்ய மாட்டேன்.
//

ஜிகே நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (ஏப்பம்) இந்த மாதிரி இருந்தா உங்கள சாப்புட்டு ஏப்பம் வராம வேற என்ன வரும் ஹக்காங்,,,,, :))

said...

//அசுரன் said...
கோவி கண்ணன்,
எனது கருத்துக்களை தங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலாக எண்ணவில்லையே?
மற்றபடி தங்களைப் பற்றி நான் தவறாக எண்ணவில்லை....
அதே போல என்னையும் தவறாக நீங்கள் கருதவில்லை என்று நம்புகிறேன்.
எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து பதில் சொன்னமைக்கு நன்றீ
அசுரன் //

உங்கள் கருத்துக்களைப் பற்றிய புரிந்துணர்வு இருக்கிறது. இதை எப்படி நான் தனிமனித தாக்குதலாக எடுத்துக் கொள்ளமுடியும் ?

அப்படி செய்தீர்களா என்ன ?
:)))

said...

//ஜிகே நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (ஏப்பம்) இந்த மாதிரி இருந்தா உங்கள சாப்புட்டு ஏப்பம் வராம வேற என்ன வரும் ஹக்காங்,,,,, :)) //

மகி,
ஏப்பம் வர்றது போலவே அவ்வப்போது பின்னூட்டமும் வந்த போதும்.

said...

GK,

நல்ல யோசனைகளைத்தான் கூறியுள்ளீர்கள்..

ம்ம்ம்.. நல்லது நடந்தா சரி...

said...

இதே போல் நமக்கு வரும் பின்னூட்டங்களுக்கும் கண்டிப்பாக பதிலிட வேண்டும்.
கவனிக்க : எனது முதல் பின்னூட்டத்திற்க்கு இன்னும் ஒரு பதிலுமில்லை:(((((((

கேட்டால் குடும்பஸ்த்தன், மறதிஅதிகம் என்ற சப்பைக்கட்டு வேறு!
அப்படி என்ன இப்"போதை"க்கு வேலை?:))))))))))

யோவ் ரயிலு வந்து என்னனு கேளு!


அன்புடன்...
சரவணன்.

said...

//
உங்கள் நண்பன் said...
நடைமுறைப்படுத்தக் கூடிய நல்ல கருத்து!தாங்கள் கூறிய அனைத்துக் கருத்துக்களிலும் நானும் ஒத்துப் போகின்றேன்!
புதுப் பட்டம் " ஐடியா ஐய்யாச்சாமி"(நன்றி குமரனின் எண்ணங்கலுக்கு)

அன்புடன்...
சரவணன். //

சரா...!
நீங்க சொன்னால் நான் சொன்ன மாதிரி ... !
ஐய்யா சாமி ஐடியா ஐய்யாசாமி பட்டம் ரொம்ப பொதுவாக இருக்கிறதே இன்னும் கொஞ்சம் சிறப்பாக யோசிக்கக் கூடாதா ?
:))

said...

//உங்கள் நண்பன் said...
இதே போல் நமக்கு வரும் பின்னூட்டங்களுக்கும் கண்டிப்பாக பதிலிட வேண்டும்.
கவனிக்க : எனது முதல் பின்னூட்டத்திற்க்கு இன்னும் ஒரு பதிலுமில்லை:(((((((
கேட்டால் குடும்பஸ்த்தன், மறதிஅதிகம் என்ற சப்பைக்கட்டு வேறு!
அப்படி என்ன இப்"போதை"க்கு வேலை?:))))))))))
யோவ் ரயிலு வந்து என்னனு கேளு!
அன்புடன்...
சரவணன்.
//

சரா...!
இருங்கப்பா... ! மறுமொழி இடுகையில் இருந்து கீழே மறையும் போது மேலே ஏற்ற ஒரு பின்னூட்டம் கைவசம் இருக்க வேண்டாமா ! முதல் பின்னூட்டத்துக்கு பதில் போட்டாச்சு ...! இந்த விசயங்களை சில பெருசுங்ககிட்டேர்ந்துதான் கத்துகிட்டேன்.
நாளைக்கு வீக் என்ட் அப்'போதைக்கு' இடையில் மறதி இருக்காது. அதனால் போடலாம் என்றும் இருந்தேன் :))))
ரயிலுக்கு நேற்று தண்ணீர் காட்டாமல் கூகுள் லாண்டஸில் ரயில் பாதியில் நின்று விட்டது, ரயிலு ஏற்கனவே என் மீது கோபமாக இருக்கிறது. அனானியை ஒப்பன் பண்ணிவிட்டால் தான் காமென்ட் போடுவேன் என்று அடம் பிடிக்கிறார் :)))

பின்குறிப்பு : சீரியஸ் ஆக ஒரு பதிவு எழுதிபோட்டுவிட்டேன் ... படிக்கிறவங்க இதெல்லாம் பாத்து பின்னூட்டம் சின்னப்புள்ளத் தனமாக இருக்கிறது என்று எழுந்து ஓடாமல், பதிவுக் கட்டுரைக்கு கருத்துச் சொல்ல வேண்டுகிறேன். !!

said...

//சீரியஸ் ஆக ஒரு பதிவு எழுதிபோட்டுவிட்டேன் ... படிக்கிறவங்க இதெல்லாம் பாத்து பின்னூட்டம் சின்னப்புள்ளத் தனமாக இருக்கிறது என்று எழுந்து ஓடாமல், பதிவுக் கட்டுரைக்கு கருத்துச் சொல்ல வேண்டுகிறேன். !! //

கோவியாரின் பின்குறிப்பை நானும் வழிமொழிகின்றேன்!

இது ஒரு சீரியசான அனைவரும் கருத்து சொல்லக் கூடிய, ஒரு முக்கியமான பதிவு!
கோவியாரின் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா இல்லையா? ,மற்றும் அதற்கான காரணத்தையும் கூறவும்!

பி.கு:இந்தப் பதிவிற்க்கு பதில் நாளை(வீக் என்ட்) கொடுத்தால் போதும்.


அன்புடன்...
சரவணன்.

said...

தமிழ்மணம் திரட்டி வேலை நிறுத்தம் செய்கிறது. புதிய பதிவுகளை உள்ளிட முடியவில்லை !
:((