Friday, August 11, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மூவர்ணக் கொடி ?



பட்டொளி வீசிப் பறந்த
மூவர்ணக் கொடியில்
பாட்டாளி வர்கத்தின்
உழைப்பின் சின்னமாக
அசோகச் சக்கரம் தன்
நீல வர்ணத்துடன்
மூன்று வர்ணத்திற்கும் இடையில்
சுழன்றபடி தேசியக் கொடியில் !

தேசியக் கொடியின் மூலம்
தேசத்தின் தேசிய(?)
பாகுபாட்டு உணர்வைப்
பிரதி
'பழித்துத் சுழன்றது
நீலநிறத்தில் அசோகச் சக்கரம் !
ஆம் ! ... நம் தேசியக் கொடியில்
இருப்பது நான்கு வருணங்கள் !

10 : கருத்துக்கள்:

said...

GK,

நிறைய இடத்தில் பிரித்து எழுதியுள்ளீர்கள்..
உண்மையில் குழப்பமாகவே உள்ளது..

சரி எனக்கு புரிந்த்தை இங்கே சொல்லிவிடுகிறேன்.

மதங்களால் பிரிந்தும் கிடக்கும் நாடு உழைப்பாளியால் தான் உயிருடன் இருக்கிறது என பொருள்படுகிறது என நான் நினைக்கிறேன்..

said...

தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

said...

அத்தனை வருணங்களும் சேர்ந்தே
ஒரு கொடியாய்ப் பறக்கிறது!

அவற்றுக்குப் பெருமிதமே!
நாம் சேர்ந்தே இக்கொடி என!

பேதம் காண்பவரைக் கண்டு
பரிதாபப் படலன்றி
வேறென்ன செய்வது?

வாழ்க சுதந்திரம்!

ஜெய் ஹிந்த்!

said...

//பாகுபாட்டு உணர்வைப்
பிரதி'பழித்துத் சுழன்றது//
கவிதை சரியா புரியுதுங்க கண்ணன். ஆனா அந்த சிறப்பா இருக்கிற ஒரு மாநிலம் எதுங்க?

said...

சுதந்திரதின வாழ்த்துக்கள்

said...

அவலங்கள் இருக்க தான் செய்கின்றன. காலப்போக்கில் சரியாகிவிடும்.

said...

செல்வன் said ...

வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

said...

முப்பது கோடி முகமுடையாள் - உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனில்
சிந்தனை ஒன்றுடையாள்

said...

ரொம்பநாளா தேடிக்கிட்டு இருந்த பாரதியார் பாட்டு கிடைச்சிடுச்சி...

உங்க கவிதையை பத்தி கருத்தா..,.

நல்லாத்தாம்யா இருக்கு...<<< ஆனா கொஞ்சம் பிரியல >>>>

said...

எல்லாருக்கும் இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள்