Saturday, August 26, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மகா கணபதி !

ஆண்டுக்கு ஆண்டு சூடாகி அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது ஐஸ் துருவ பிரதேசங்கள் மட்டுமல்ல, நம்ம சென்னை ஐஸ் ஹவுஸ் ஏரியாவும் தான். விநாயகர் சதுர்த்தீயைத் தொடர்ந்து நடக்கும் விநாய ஊர்வலங்கள் அந்தப் பகுதி மக்களின் இரத்த அழுத்தத்தை எகிற வைப்பதும், ஆட்சியாளர்கள் கையை பிசைந்து கொண்டு, அந்த பக்கமாக செல்லும் அப்பாவி பொதுமக்களுக்கு தடியடியால் கொழுக்கட்டைப் படைப்பதும் நடந்து வரும் அவலங்கள்.

விநாயகரை விக்ன விநாயகர் என்று சொல்வது உண்டு. அதாவது தடைகளை நீக்குபவர் என்று சொல்கிறார்கள். ஆனால் விநாயக் ஊர்வலங்களில் பாதுகாப்பு தடுப்பு தடைகள் இல்லையென்றால் ஊர்வலத்தால் வரிசையாக வரும் பல்வேறு வடிவ விநாயகர்களின் தீவிர பக்த கண்மணிகளால் அமைத்திக்கே அது தடையாவதும் உண்டு.

யானை முகத்தவரை சரியாகவே மத' வெறிக்கு பயன்படுத்துகிறார்கள் மதவெறியாளர்கள். ஆணடவன் பெயரில் நடக்கும் இத்தகைய ஊர்வலங்களினால் பக்தி வளர்ந்து விடுமா என்ன ? மாறாக மத துவேசங்கள் வளர்ந்து, மத நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்பட, யானை முக விநாயகர் வரும் முன்னே மணி அடித்துவிடும் ஊர்வலம் தான் விநாயக ஊர்வலம்.

அவரவர் நம்பிக்கை அவரவர்கே. உண்மையான விநாயக பக்திமான்கள் எலோருமே விநாயகரை கடலில் கிரேனில் தூக்கி தூக்கு தண்டனை நிறைவேற்றி கடலில் கரைப்பதை கண்டு மனம் வருந்துகிறார்கள, அபசகுனமாக கருதுகிறார்கள். அதை மெய்பிக்கும் விதமாக சுனாமி சீரழிவுகள் அதே கடற்கரையில் நட்ந்தேறுகிறது. மெய்ஞானக் காரணத்தைத் தவிர கடலில் கரைபடும் அந்த சிலைகளில் உள்ள வண்ணங்கள், மற்றும் வேதிப் பொருள்கள் சுற்றுச் சூழலை ஆச்சுறுத்துவதாக சுற்றுப் புர ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

இவற்றை எல்லாம் காதில் வாங்கமால் நடத்தியே தீருவேன் என்று கூறும் அமைப்புகள் தங்களின் நோக்கமாக ஊர்வலத்தை மட்டும் நடத்தினால் நல்லது என்று எலோரும் கருதுகிறார்கள். அதே போல் இத்தகைய ஊர்வலங்கள் தங்களை சீண்டுவதாக மாற்றுமத அன்பர்கள் நினைக்காமல் அவரவர் வேலையை அவரவர் பார்த்தால் பொதுமக்களுக்கு எந்த பங்கமும் வந்துவிடப் போவதில்லை.

கடைசியாக விநாயகர் பற்றி ஒரு தகவல். தென் இந்தியாவில் மட்டும் தான் விநாயகர் பிரம்மச்சாரி, வட இந்தியாவில் திருமணம் ஆனவர். இதற்கு மாறாக முருகன் வட இந்தியாவில் சரவண, சுப்ரமண்ய என்று அழைக்கப்பட்டு பிரம்மச்சாரியாக காட்டப்படுகிறார், முருகன் தென் இந்தியாவில் இரு மனைவிகளை உடையவர். பிற்காலச் சோழர்கள் காலத்தில் தான் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் விநாயகர் வழிபாடு பரவ ஆரம்பித்தது.


அன்பர்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !!!

34 : கருத்துக்கள்:

said...

சூப்பர் பதிவு...

said...

சிபா...!

வழக்கம் போல் சுருங்கச் சொல்லி பாராட்டியதற்கு நன்றி !

said...

அருமையான பதிவு கண்ணன் . எப்ப நம்மவர்கள் விநாயகர் சிலையை கடலில் கரைப்பதை நிறுத்த்வார்களோ அன்றுதான் உண்மையாண சதுர்த்தி. இந்தியாவில் மட்டுதான் இந்த வழக்கம் ஈழத்தில் இல்லை.

said...

//வணக்கத்துடன் said...
(பி.கு:ஆமா, ஜாமின் கெடைச்சுடுச்சா?) //

உள்ளே வெளியே ஆடுவதில் இதெல்லாம் சகஜம் !
:)))

said...

//வணக்கத்துடன் said...
ஓ, உள்ளே இந்த ஆட்டமும் உண்டா? வெளியே இதெல்லாம் தெரியறதில்ல பாருங்க...எப்படியோ நல்லாருங்க. :-) //

வணக்கத்துடன் அவர்களே... !
என்ன செய்வது என் பெயர் ராசி அப்படி!

:))

said...

//வணக்கத்துடன் said...
அட இதுக்கேன் அலுத்துக்கிறீங்க?
ஒரு மட அதிபர், பிஷப், முல்லா/இமாம் (இவங்க டர்ன் தான் இன்னும் வர்ல)யாராவது கில்மா மேடர்ல மாட்டுனா போதும், கரோலினை எல்லாம் நம்மாலுங்க மறந்துடுவாங்க..:-)

ஆமா, சிங்கப்பூர்லயா இருக்கீங்க? இன்னும் தூங்கலியா? இங்க நேரம் இப்பொ 2:50 AM. அங்கே? //

வணக்கத்துடன் அவர்களே !

முல்லா/இமாம் (இவங்க டர்ன் தான் இன்னும் வர்ல) - இவுங்க டர்ன் எப்பவுமே வராது ... அங்க தான் பிரம்ச்சார்யம் இல்லையே எப்படி வரும் ? அப்படியே இருந்தாலும் யாரும் ஆச்சிரியப் படமாட்டார்கள் 10 தோடு 11 என்று விட்டுவிடுவார்கள்.

சிங்கைதான் .. வார இறுதி விடுமுறையில் படுக்க போவது இரவு 3 மணிக்கு மேல். காலையில் 11 மணிக்கு மேல் எழுவேன் !!!

விசாரிப்புக்கு மகிழ்ச்சி

said...

//வணக்கத்துடன் said... ஹிஹி, சில சமயம் வார நாட்களிலேயும் இங்கே அப்படித்தான். ஆமா, இங்கே இப்போ மணி மூணூ. அங்கே? //

வணக்கத்துடன் அவர்களே ...!

அதே மூனு தான்... கண்களில் பொறி வர ஆரம்பித்துவிட்டது...

குட் மார்னிங்க் (அதான் அதிகாலை ஆகிவிட்டதே)

தூங்கப் போறேன் :)

said...

பின்னூட்டப் பெட்டியைக் கூட 'சாட் பாக்சாக'[Chat box] மாற்றும் கலையின் வல்லுனரே!, கோவியாரே!

விநாயகரின் அருள் நல்லபடி கிடைக்க வாழ்த்துகள்!

said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். கடவுளுக்கு இவ்வளவு முகமா? தெற்கே ஒன்று, வடக்கே ஒன்றா?

said...

//SK said...
பின்னூட்டப் பெட்டியைக் கூட 'சாட் பாக்சாக'[Chat box] மாற்றும் கலையின் வல்லுனரே!, கோவியாரே!

விநாயகரின் அருள் நல்லபடி கிடைக்க வாழ்த்துகள்! //

எஸ்கே ஐயா ...! நம் பதிவுகளை நேரம் செலவழித்துப் படித்து பாராட்டுபவர்களை நாமும் நன்றி பாராட்டுகிறோம்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கனேஷ் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !!

said...

//ILA(a)இளா said...
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். //

நன்றி இளா ...!

//கடவுளுக்கு இவ்வளவு முகமா? தெற்கே ஒன்று, வடக்கே ஒன்றா?//

அப்படித்தான் சொல்கிறார்கள்!!!

said...

அடிச்சி கலக்குங்க புள்ளையார் தண்ணீல நல்லா கரைய வேண்டாமா :)
ஆமா எதுக்காக தண்ணீல போடுறாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா ஜிகே?

said...

அன்பர்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !!!


அன்புடன்...
சரவணன்.

said...

// மகேந்திரன்.பெ said...
போடுறாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா ஜிகே? //

மகி,
பிள்ளையார் என்பது பஞ்சபூத தத்துவம்!அதனால் தான் பிள்ளையாரை பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்(க்கு)கிறார்கள்
:)

said...

//உங்கள் நண்பன் said...
அன்பர்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !!!

அன்புடன்...
சரவணன்.
//

சரா .. !
நன்றி, கொழுக்கட்டை சாப்பிட கூப்பிட மாட்டீர்களா ?
:)

said...

பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்!
ஆற்றங்காரை ஓரத்திலே அரசமரத்தின் நிழலிலே!
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்!
அவல் பொறி கடலை சுண்டல் "அனைத்தும்" உண்ட பிள்ளையார்!
(பாடல் நான் சிறு வயதில் படித்தது. தவறு இருக்கும் பட்சத்தில் "அண்பர்"கள் மன்னிக்கவும் )

பிள்ளையார் கொழுக்கட்டை தவிர மற்ற "அனைத்தையும்" உண்டுவிட்டதால், முன் பதிவு செய்து மீதம் இருக்கும் கொழுக்கட்டைகளைப் பெற்றுக் கொள்ளவும்!


அன்புடன்...
சரவணன்.

said...

'ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே'

(நன்றி-திரு.பரஞ்சோதி யின் சிறுவர் பாடல்கள்)

அன்புடன்...
சரவணன்.

said...

//யானை முகத்தவரை சரியாகவே மத' வெறிக்கு பயன்படுத்துகிறார்கள் மதவெறியாளர்கள். ஆணடவன் பெயரில் நடக்கும் இத்தகைய ஊர்வலங்களினால் பக்தி வளர்ந்து விடுமா என்ன ? மாறாக மத துவேசங்கள் வளர்ந்து, மத நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்பட, யானை முக விநாயகர் வரும் முன்னே மணி அடித்துவிடும் ஊர்வலம் தான் விநாயக ஊர்வலம்.//

உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளும்படிக்கு இல்லை. இந்த விழா பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப் படுகிறது. மிகப் பெரிய வினாயகர்களைச் செய்து கடலில் கரைக்கும் வழக்கம் சில ஆண்டுகளாக நடக்கிறது. இது மும்பையின் வழக்கத்தினால் கவரப் பட்டு இங்குள்ள பிள்ளையார் அன்பர்கள் செய்வது. விழாக்கள் பலதரப்பானவை. பல தரப்பான மக்களின் ஆசாபாசங்களை உள்ளடக்கியவை. அவர்களுக்கு இதனால் ஏற்படும் உற்சாகத்தை அவர்களுடன் கலந்திருந்து பார்த்தால்தான் உணர முடியும். உங்களுக்குத் தேவையில்லையென்றாலும் இது போன்ற விழாக்கள் இருக்கும் வாழ்க்கையே பலருக்கு விருப்பம். உண்மையில் பண்டிகைகளின் அடிப்படை நோக்கம் வாழ்க்கையை வண்ணமயமாக்குவதே. இவை நிறுத்தப்பட வேண்டுமென்பதை விட அவற்றால் நிகழும் இடைஞல்களுக்கு மாற்று தேடுவதே சரியானதாகும். ஆண்டுக்கு ஒரு முறை இந்தப் பிள்ளையார்கள் செய்ய்ப்படுவதற்கு உபயோகிக்கப்படும் பொருட்கள் ஆண்டு முழுவதும் கட்டடங்கள் கட்ட உபயோகப்படுத்தப்படும் பொருட்கள்தாம்.


//கடலில் கரைப்பதை கண்டு மனம் வருந்துகிறார்கள, அபசகுனமாக கருதுகிறார்கள். அதை மெய்பிக்கும் விதமாக சுனாமி சீரழிவுகள் அதே கடற்கரையில் நட்ந்தேறுகிறது.//

வினாயகர் சிலைகளை கடலில் கரைப்பதால்தான் சுனாமி வந்தது என்று பொருள் தரும் இந்த வாசகங்கள் பகுத்தறிவுக்கு முற்றிலும் புறம்பானது. மேலும் இதில் ஒரு பிரச்சாரநெடி வீசுகிறது.

said...

//ஓகை said...
தேவையில்லையென்றாலும் இது போன்ற விழாக்கள் இருக்கும் வாழ்க்கையே பலருக்கு விருப்பம். உண்மையில் பண்டிகைகளின் அடிப்படை நோக்கம் வாழ்க்கையை வண்ணமயமாக்குவதே. இவை நிறுத்தப்பட வேண்டுமென்பதை விட அவற்றால் நிகழும் இடைஞல்களுக்கு மாற்று தேடுவதே சரியானதாகும். ஆண்டுக்கு ஒரு முறை இந்தப் பிள்ளையார்கள் செய்ய்ப்படுவதற்கு உபயோகிக்கப்படும் பொருட்கள் ஆண்டு முழுவதும் கட்டடங்கள் கட்ட உபயோகப்படுத்தப்படும் பொருட்கள்தாம்.//

ஓகை அவர்களே !
பக்தி நெறியில் தமிழர்களைவிட சிறந்தவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. மேலே நீங்கள் சொன்ன புதிய வருகையான பிள்ளையார் ஊர்வலம், தமிழர் பக்திநெறியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக மதவெறியர்கள் குளிர்காய்வதற்கு தூபமாகவே அமைந்திருக்கிறது. இதனால் யாருக்க்கும் யாதொரு பயனும் இல்லை. அந்த விநாயகருக்கும் கூட.

//வினாயகர் சிலைகளை கடலில் கரைப்பதால்தான் சுனாமி வந்தது என்று பொருள் தரும் இந்த வாசகங்கள் பகுத்தறிவுக்கு முற்றிலும் புறம்பானது. மேலும் இதில் ஒரு பிரச்சாரநெடி வீசுகிறது//

சாமிகளை கைது பண்ணியதால் சுனாமி வந்தது என்ற அளவிற்கு அபத்தமாக இல்லை என்று சொல்லியிருந்தால் மகிழ்ந்திருப்பேன்.
:)

said...

//சரவணன் said... பிள்ளையார் கொழுக்கட்டை தவிர மற்ற "அனைத்தையும்" உண்டுவிட்டதால், முன் பதிவு செய்து மீதம் இருக்கும் கொழுக்கட்டைகளைப் பெற்றுக் கொள்ளவும்!
அன்புடன்...
சரவணன். //

சரா ..!
பாட்டெல்லாம் பலமாயிருக்கு, கொழுக்கட்டை இல்லையென்றால் பரவாயில்லை. நம்ப வீட்டில் இருக்கு!!
இப்பதான் ஆச்சு!
:))

said...

// உங்கள் நண்பன் said...
'ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே'
(நன்றி-திரு.பரஞ்சோதி யின் சிறுவர் பாடல்கள்)
அன்புடன்...
சரவணன்.
//

சரா... !

நல்ல பாடல் எனக்கும் பிடித்தப் பாடலை சொல்லியிருக்கிறீர்கள் நன்றி!

ஆற்றங்கரை பிள்ளையார் உங்களுக்கு அனைத்தையும் கொடுப்பாராக !
:))

said...

கண்ணன் ஐயா,

தங்கள் பதிவு மிகுந்த மனவருத்தத்தை எனக்கு தருகிறது.

////உண்மையான விநாயக பக்திமான்கள் எலோருமே விநாயகரை கடலில் கிரேனில் தூக்கி தூக்கு தண்டனை நிறைவேற்றி கடலில் கரைப்பதை கண்டு மனம் வருந்துகிறார்கள, அபசகுனமாக கருதுகிறார்கள். ////

இது தவறு. பிள்ளையாரை களிமன்னில் பிடித்து பூசை செய்து பிறகு அதை ஆற்றிலோ, கடலிலோ கரைப்பதே சரியான பூசை விரத முறை. இதை நீங்கள் கொச்சையாக்குவது வருத்தம். பிடித்துவைத்தால் பிள்ளையார் என்ற சொல் வழக்கு இதையே குறிக்கிறது. பூசை ஆரம்பிக்கும்போது இந்த பிம்பத்தில் அந்த இறைவனை எழுந்தருள செய்து பின்னர் பூசை முடிந்ததும் அவரை மீண்டும் விடையனுப்பி அந்த பிம்பத்தை கடலிலோ, ஆற்றிலோ கரைப்பதே சாத்திரங்கள் சொல்லும் முறை. இல்லாவிட்டால் கிணற்றில் போடலாம். இதில் உன்மையாக ஆத்திகர்கள் மனவருத்தம் எங்கிருந்து வருகிறது என்பது புரியவில்லை. தங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொள்ளலாம். தங்களுக்கு பிடிக்காததின் காரணம், தங்களுக்கு இந்த சாத்திரத்தில் நம்பிக்கை இல்லை என்பதால் என்றும் சொல்லிக்கொள்ளலாம். உன்மையான ஆத்திகர்களுக்கும் பிடிக்காது என்று சொல்வது உன்மையான ஆத்திகர்கள் இந்த சாத்திரத்தில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று தாங்கள் நம்புவது போல் இருக்கிறது.

////அதை மெய்பிக்கும் விதமாக சுனாமி சீரழிவுகள் அதே கடற்கரையில் நட்ந்தேறுகிறது. ///

பூசை மட சடங்குகளை கேலி செய்யும் தாங்கள் இரு பெரிய மூட நம்பிக்கையை எடுத்து வைப்பது மிகவும் ஆச்சரியம்

இன்று பூசையில் இந்த தமிழ்மண நாற்றத்திலிருந்து எனக்கு விடுதலை வேண்டினேன்.

நன்றி

பிகு: விநாயகர் சாத்திரத்தில் தடைகளை உண்டாக்குபவரும் அவரே, தடைகளை கலைபவரும் அவரே. நன்றி

said...

// ஜயராமன் said...
கண்ணன் ஐயா,

தங்கள் பதிவு மிகுந்த மனவருத்தத்தை எனக்கு தருகிறது. //

எந்த ஒரு மதநம்பிக்கையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்பது தங்களுக்கு தெரியும். இதில் மனவருத்தம் கொள்வதற்கு எதுவும் இல்லை. அடுத்தவர் புன்படுவர் என்று எண்ணி யாரும் எழுதுவதில்லை. அதை தங்களின் எழுத்துக்கள் மூலமும் நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள்.

//இது தவறு. பிள்ளையாரை களிமன்னில் பிடித்து பூசை செய்து பிறகு அதை ஆற்றிலோ, கடலிலோ கரைப்பதே சரியான பூசை விரத முறை. //

களிமண்ணில் செய்தபிள்ளையாரைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. படத்தைப்பார்க்க.

//அவரை மீண்டும் விடையனுப்பி அந்த பிம்பத்தை கடலிலோ, ஆற்றிலோ கரைப்பதே சாத்திரங்கள் சொல்லும் முறை.//

எந்த சாஸ்திரமும் வானளவுக்கு விநாயகரை சிலையாக செய்து கிரேன் வைத்து, கட்டையால் அடித்து தூக்கி(கு) போடுங்கள் என்று சொல்லவில்லையே !

//உன்மையான ஆத்திகர்களுக்கும் பிடிக்காது என்று சொல்வது உன்மையான ஆத்திகர்கள் இந்த சாத்திரத்தில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று தாங்கள் //

உண்மையான ஆத்திகர்கள் சாஸ்திரம் சொல்லும் மூடநம்பிக்கைகெளெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்பது போல் நீங்கள் சொல்வது ஆத்திகர்களையும் அவர்கள் தம் ஆராயும் அறிவையும் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது.

//பூசை மட சடங்குகளை கேலி செய்யும் தாங்கள் இரு பெரிய மூட நம்பிக்கையை எடுத்து வைப்பது மிகவும் ஆச்சரியம்//

இதற்கு ஓகைக்கு பதில் சொல்லிவிட்டேன். அதே இங்கும்!!!

//பிகு: விநாயகர் சாத்திரத்தில் தடைகளை உண்டாக்குபவரும் அவரே, தடைகளை கலைபவரும் அவரே. நன்றி //

எல்லாம் அவரே என்று நீங்களே சொன்னபின், என் கட்டுரையின் பொருளும் அப்படியே தெரிந்திருக்க வேண்டும்!

மறுமொழி இட்ட ஜெயராமன் அவர்களே...! இது என் கட்டுரைக்கான மறுமொழி மட்டுமே. தனிப்பட்ட முறையில் நீங்கள் என் மரியாதைக்கு உரியவரே என்பதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை.

:)))

said...

//இவை நிறுத்தப்பட வேண்டுமென்பதை விட அவற்றால் நிகழும் இடைஞல்களுக்கு மாற்று தேடுவதே சரியானதாகும். ஆண்டுக்கு ஒரு முறை இந்தப் பிள்ளையார்கள் செய்ய்ப்படுவதற்கு உபயோகிக்கப்படும் பொருட்கள் ஆண்டு முழுவதும் கட்டடங்கள் கட்ட உபயோகப்படுத்தப்படும் பொருட்கள்தாம்//

ஓகை அவர்களே !

தொழிலாளர்கள் வேலை நிருத்தம் செய்ய தடை போட்டால் வரவேற்கிறோம், வீதியில் இறங்கி போராட அனுமதி மறுக்கிறோம், ஊர்வலம் தடை, ஆனால் பல பேரின் வயிற்றில் புளியைக்கரைக்கும் இந்த புள்ளையாரைக் கரைக்க தடை வேண்டாம் மாற்று வழி தேடுவோம் என்பது என்ன வகையில் நியாயம் அய்யா? அதுவும் இது போல பெரிய அளவில் செய்யும் எல்லா பழக்கமும் மனிதன் செல்வங்கள் மீதும் ஆடம்பரம் மீதும் கண்மூடித் தனமான பற்றுகொள்ள ஆரம்பித்த பிறகே அதிகமாயின. எனும் போதும், அதே போல் கடலில்லா ஊர்கள் குடிக்க தண்ணீர் இல்லா ஊர்களில் இப் பழக்கம் இல்லை என்பதையும் சிந்தியுங்கள்.

கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் பொருள்கள் கடலில் கரைப்பது எத்தனை இயற்கை கேடுகளை தரும் என்பதை சுற்றுச்சூழல் பதிவுகள் அல்லது இயற்கை ஆர்வலர்களிடம் கேளுங்கள் ஆண்டுதோரும் பயன்படுத்துவது தரையில் கடலில் இல்லை

said...

இது நல்ல விசயத்திற்காக.--1

said...

இது நல்ல விசயத்திற்காக.---2

said...

இது நல்ல விசயத்திற்காக.---3

said...

//Sivabalan said...
இது நல்ல விசயத்திற்காக.---3
//

சிபா ...!
நல்ல விசயம் 1,2,3 !!! பின்னூட்டத்திற்கு நன்றி !

said...

சின்ன வயசுல பிள்ளையார் சதுர்த்திக்காக பிள்ளையார் செய்ய கொசவன் வீட்டுல வரிசைல நின்னு, காத்திருந்து வாங்கிப்போய் வீட்டுல வச்சி கும்பிட்டு மூன்றாவது நாள் அணையில் கரைக்கும்போது இனம்புரியாத பிரிவு வரும்.

இப்ப எல்லாம் பிள்ளையார் வேற வேற வடிவங்களில் வருது டைனோசர் விநாயகர், ஸ்பைடர்மேன் விநாயகர்னு கேலிக்கு ஆக்கிட்டாங்க. ஆர்ப்பாட்டம் அதிகமானதினால இந்த பண்டிகைக்கு என்னோட மனசு முக்கியத்துவம் தர மறுக்கிறது.

இந்த மாதிரியான பண்டிகைகளின் போது மட்டுமே ஊடகத்தில் தலைகாட்டி இளைஞர்களை உற்சாகமூட்டுவதாக நினைத்துக்கொள்ளும் ராமகோபாலன் போன்றவர்களாலேயே இதில் நாட்டம் குறைந்து போய்விட்டது எனக்கு.

அன்புடன்
தம்பி

said...

கண்ணன்,
//விழாக்கள் பலதரப்பானவை. பல தரப்பான மக்களின் ஆசாபாசங்களை உள்ளடக்கியவை. அவர்களுக்கு இதனால் ஏற்படும் உற்சாகத்தை அவர்களுடன் கலந்திருந்து பார்த்தால்தான் உணர முடியும். //

என்று நான் கூறிதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நான் அறிந்த வரையில் இந்த விழாவின் நோக்கம் மதவெறிக்கானது அல்ல. நீங்கள் மீண்டும் மீண்டும் கூறுவது போல இதைக் கொண்டாடும் அன்பர்களுக்கு அம்மாதிரி நோக்கங்கள் கொஞ்சம் கூட இல்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். நீங்கள் எந்த ஆதாரத்துடன் அப்படிக் கூறுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. உண்மை அறிந்து கொள்ள ஏதாவது ஒரு விழாவில் அடிமட்ட ஆட்களோடு கொஞ்சம் பழகிப் பாருங்கள்.

//புதிய வருகையான பிள்ளையார் ஊர்வலம், தமிழர் பக்திநெறியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. //

வீடுகளிலும் ஆலயங்களிலுமே கொண்டாடப்பட்டு வந்த இந்த விழா வீதிக்கு வந்த பிறகுதான், இம்மாதிரி விழாக்களில் வீடுகளிலும் ஆலயங்களிலும் பங்கெடுக்காத பலர் பங்கேற்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. 'சுக்லாம் பரதரம்... மட்டுமே பக்தி இல்லை. 'முந்தி முந்தி வினாயகனே.... ' என்றபடிக்கு பக்தி மார்க்கம் பரவுவதற்கு வழி செய்கிறது. இந்த விழா.

//சாமிகளை கைது பண்ணியதால் சுனாமி வந்தது என்ற அளவிற்கு அபத்தமாக இல்லை என்று சொல்லியிருந்தால் மகிழ்ந்திருப்பேன்.
:) //

உங்கள் கூற்று அந்த அளவுக்கு அபத்தம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். உங்களுக்கு மகிழ்ச்சிதானே! ஆனால் ஒரு மகா அபத்தத்துடன் ஒப்பிட்டு திருப்தி அடைவது சரியா என்று பாருங்கள்!!

மகேந்திரன்,

ஆயிரம் பாதுகாப்புப் பிரச்சனைகள் இருப்பதால் நமது சுதந்திரதினக் கொண்டாட்டக்களை
நிறுத்திவிடலாமென்று யாரவது யோசனை சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை. வினாயக சதுர்த்தி விழாவோடு மற்றவற்றை ஒப்பிட்டுப் பேசினால் அதற்கு வேறு விதமாகவும் ஒப்பீடுகள் கூற முடியும்.

//கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் பொருள்கள் கடலில் கரைப்பது எத்தனை இயற்கை கேடுகளை தரும் என்பதை சுற்றுச்சூழல் பதிவுகள் அல்லது இயற்கை ஆர்வலர்களிடம் கேளுங்கள் ஆண்டுதோரும் பயன்படுத்துவது தரையில் கடலில் இல்லை //

அந்தப் பொருட்களைக் கொண்டு கட்டிய கட்டடங்களில் நாம் குடியிருக்கலாம் ஆனால் அவற்றைக் கடலில் கரைப்பது சரியல்ல என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். இது பற்றிய கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். 'எறும்பும் தன் கையால் எண்சான்' என்பது போல நமக்கே அச்சிலைகள் பிரமாண்டமானவை. கடலில் எல்லா பிள்ளையார்களையும் சேர்த்தாலும் வரும் அளவில் ஒற்றைத் திமிங்கிலங்கள் இருக்கின்றன.

said...

தூங்கலியா இன்னும் ;)

said...

திரு. ஜயராமன் அவர்களின் அடிப்படைக் கருத்தோடு ஒத்துப் போகும் அதே நேரத்தில், கோவியாரின் கவலையிலும் பொருளில்லாமல் போகவில்லை!

நம் முன்னோர்கள் எதையும் ஒரு பொருளோடுதான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சொன்ன விஷயத்தையும், காலகட்டத்தையும் நினைவில் கொள்ளுதல் மிக முக்கியம்.

வினாயக சதுர்த்தி ஆவணி மாதம் வரும்.
அதை அடுத்து வருவது மழைக்காலம்.

கோடைக்காலத்தில் வறண்டு போன ஆறு, குளம், குட்டைகள் எல்லாம் பாளம் வெடித்து காய்ந்திருக்கும்.

பின்னர் கோடை மழையில் கொஞ்சம் இளகியிருக்கும்.

"களிமண்ணில் மட்டுமே" பிள்ளையார் பிடித்து ஒவ்வொரு வீட்டாரும், மூன்றாம் நாள் கொண்டு போய் இந்தக் குளம் குட்டைகளில் போடுவதன் மூலம், இவைகளின் அடிப்பகுதி நீரோடு கலந்து, பூசின மாதிரி ஆகி, வரும் மழைக்காலத்தில், நீர் வீணாகாமல், தேங்குவதற்கு உதவும்.

இதுதான் இதன் அடிப்படைத் தத்துவம். பொதுநலச் சேவை! நகரங்கள் அதிகம் இல்லாத இந்நாளைய கிராமத்து வாழ்க்கை!


இப்போது குளங்களும் இல்லை, ஏரிகளும் இல்லை!

எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வளைத்துப் போட்டாயிற்று!

ஆனால், இந்த வழக்கத்தை மட்டும் விடவில்லை இன்னும்!

இது போன்ற வண்ணங்கள் அடிக்கப்பட்ட, ரசாயனக் கலவைகளைக் கொண்டு போய் கடலில் கொட்டினால், கடலன்னை ஒருநாள் அதை வெளியே தள்ளும் முயற்சியில் ஈடுபடக் கூடும் என்பது விஞ்ஞான உண்மையே!

என்ன, நம்ம கோவியார் அதை கொஞ்சம் மிகைப்படுத்தி பயமுறுத்தினார்!
தடாலடியாகச் சொல்லியிருக்கிறார்!

இதைப் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது எனச் சொல்வது சற்று மிகையே!

ஆர்வ மிகுதியால், இப்படி இயற்கையைச் சீரழிக்கும் இது போன்ற பழக்க வழக்கங்களுக்கு ஒரு முடிவு வரப்பாடுபடுதலைக் கொள்வோம் என்பதே இப்பதிவின் நோக்கம் என நான் கருதுகிறேன்.

said...

// SK said...
திரு. ஜயராமன் அவர்களின் அடிப்படைக் கருத்தோடு ஒத்துப் போகும் அதே நேரத்தில், கோவியாரின் கவலையிலும் பொருளில்லாமல் போகவில்லை!

நம் முன்னோர்கள் எதையும் ஒரு பொருளோடுதான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சொன்ன விஷயத்தையும், காலகட்டத்தையும் நினைவில் கொள்ளுதல் மிக முக்கியம்.

வினாயக சதுர்த்தி ஆவணி மாதம் வரும்.
அதை அடுத்து வருவது மழைக்காலம்.

கோடைக்காலத்தில் வறண்டு போன ஆறு, குளம், குட்டைகள் எல்லாம் பாளம் வெடித்து காய்ந்திருக்கும்.

பின்னர் கோடை மழையில் கொஞ்சம் இளகியிருக்கும்.

"களிமண்ணில் மட்டுமே" பிள்ளையார் பிடித்து ஒவ்வொரு வீட்டாரும், மூன்றாம் நாள் கொண்டு போய் இந்தக் குளம் குட்டைகளில் போடுவதன் மூலம், இவைகளின் அடிப்பகுதி நீரோடு கலந்து, பூசின மாதிரி ஆகி, வரும் மழைக்காலத்தில், நீர் வீணாகாமல், தேங்குவதற்கு உதவும்.

இதுதான் இதன் அடிப்படைத் தத்துவம். பொதுநலச் சேவை! நகரங்கள் அதிகம் இல்லாத இந்நாளைய கிராமத்து வாழ்க்கை!


இப்போது குளங்களும் இல்லை, ஏரிகளும் இல்லை!

எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வளைத்துப் போட்டாயிற்று!

ஆனால், இந்த வழக்கத்தை மட்டும் விடவில்லை இன்னும்!

இது போன்ற வண்ணங்கள் அடிக்கப்பட்ட, ரசாயனக் கலவைகளைக் கொண்டு போய் கடலில் கொட்டினால், கடலன்னை ஒருநாள் அதை வெளியே தள்ளும் முயற்சியில் ஈடுபடக் கூடும் என்பது விஞ்ஞான உண்மையே!

என்ன, நம்ம கோவியார் அதை கொஞ்சம் மிகைப்படுத்தி பயமுறுத்தினார்!
தடாலடியாகச் சொல்லியிருக்கிறார்!

இதைப் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது எனச் சொல்வது சற்று மிகையே!

ஆர்வ மிகுதியால், இப்படி இயற்கையைச் சீரழிக்கும் இது போன்ற பழக்க வழக்கங்களுக்கு ஒரு முடிவு வரப்பாடுபடுதலைக் கொள்வோம் என்பதே இப்பதிவின் நோக்கம் என நான் கருதுகிறேன்.
//
எஸ்கே ஐயா... !
நீண்ட விளக்கம் கண்டு பிரமித்தேன். காலத்திற்கேற்ப மாறிக் கொள்வது சரி என்ற கருத்தை வலியுறுத்தி கட்டுரைக்கு வலு சேர்த்திருக்கிறீர்கள். அதை தாண்டி நான் இந்த கட்டுரை மூலம் சொல்ல முயன்ற விடயம் மதநல்லிணக்கம் தான். இங்கு இயற்கைச் சீற்றம் பற்றி நான் குறிப்பிட்டது எதற்கென்றால் பகுத்தறிவுக்கு ஓவ்வாத விசயங்களை படிப்பவரே அடையாளம் கண்டுகொள்வதற்காகத்தான் ... அது ஓரளவிற்கு நிறைவேறியிருக்கிறது. பண்பாடுகளையோ, பழக்கவழக்கங்களையோ யாரும் மாற்றிக் கொள்ளச் சொல்லவில்லை. அவற்றை மிகைப்படுத்தாமல் இருப்பதுதான் நலம் இதைத்தன் திரு.ஜெயராமன் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சொல்லவிரும்பியது. உங்கள் கருத்துக்கள் வளமை. நன்றி

said...

வெறும் வாழ்த்துக்கள்தானா?
கொழுக்கட்டை - சுண்டல் கிடையாதா?
வகுப்பிற்கு வரும்போது கொண்டுவரவும்.
- வாத்தியார்