ஆம்... ! பாலியல் அறிவு பற்றிய ஒரு தொடர் கட்டுரை எழுதப் போவதாக நம் அருமை நண்பர் டாக்டர் எஸ்கே ஐயா அவர்கள் என்னிடம் தெறிவித்தார்.
'நல்ல விசயம்' என்று கூறிவிட்டு,
நான் அவரிடம் கேட்டேன்,
'கட்டுரை ஆக்கம்...டாக்டர் நாராயண ரெட்டி மற்றும் டாக்டர் மாத்துரு பூதம் ரேஞ்சிக்கு இருக்குமா?' என்று
சிரித்துக் கொண்டே ...!
'ஆம் அதே போன்றுதான் கொஞ்சம் கிளு கிளு, சுட சுட சமாச்சாரங்களுடன் இருக்கும், இன்றோ நாளையோ எழுதுவேன்' என்றார்.
அருமை பதிவர் சகோதர சகோதரிகளே ... ! படித்து தெளிந்து கொள்ள தயாராகுங்கள் !
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நாகரீகமாக அவரிடம் அந்த தொடரின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

அவர் எழுதும் இந்த தொடரிலும் அவருக்கு வழக்கம் போல் முருகன் அருள் முன்நிற்கும் !
வாழ்த்துகிறேன் !!
தொடர் வந்துவிட்டது :
பாலியல் கல்வி -- பெற்றோருக்கு! [1]
21 : கருத்துக்கள்:
வாழ்த்துக்கள் SK அய்யா அவர்களே..
தெரியபடுத்திய GKக்கு நன்றி.
எழதலாமா என்று ஆலோசனை கேட்டதற்கு இப்படி மாட்டி விட்டு விட்டீர்கள்!
ஒரு சிறு திருத்தம்!
இது பாலியல் தொடர் அல்ல!!!
பாலியல் அறிவு பற்றிய நமது ஒரு சில கண்ணோட்டங்கள்-- அவை சரியா, தவறா என்பது பற்றியே!
மு.மு.!!
[முழுசா முழிக்கிறேன் அல்ல!
முருகனருள் முன்னிற்கும்!!]
ஆஹா,
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ;)
// Sivabalan said...
வாழ்த்துக்கள் SK அய்யா அவர்களே..
தெரியபடுத்திய GKக்கு நன்றி.
//
சிபா ... இது போல சூடேற்றும் செய்தியெல்லாம் உடனே பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் எப்படி ?
:))
//SK said...
எழதலாமா என்று ஆலோசனை கேட்டதற்கு இப்படி மாட்டி விட்டு விட்டீர்கள்!//
எஸ்கே ஐயா ... !
நல்ல விசயம் என்றால் ஆலோசனை என்ன ? ஆலோசனை ஆராதனையே செய்துவிடுவேன்!
//ஒரு சிறு திருத்தம்!
இது பாலியல் தொடர் அல்ல!!! //
தலைப்பை திருத்தியாச்சு ... இனி கலங்காமல் 'தவற்றை' சுட்டிக் காட்டி சரி செய்யலாம்.
//பாலியல் அறிவு பற்றிய நமது ஒரு சில கண்ணோட்டங்கள்-- அவை சரியா, தவறா என்பது பற்றியே!
//
இந்த விசயத்தில் தப்பை தப்பில்லாமல் செஞ்சா தப்பில்லை என்று சொல்லுவார்கள்... ! :))
எழுதுங்க எழுதுங்க !
:))
//வெட்டிப்பயல் said...
ஆஹா,
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ;)
//
வெட்டிப்பயல்,
படிச்சுட்டு வெட்டிப்பயல் சுட்டிப்பயல் ஆகிடுவாரோ ?
:))
இங்கே எனக்கு ஒரு சந்தேகம் GK யும் SK யும் ஒருவர் தானா என்று. அவர் நினைப்பதை இவர் எழுதுவது எப்படி ஐயா இது சாத்தியம்
//கால்கரி சிவா said...
இங்கே எனக்கு ஒரு சந்தேகம் GK யும் SK யும் ஒருவர் தானா என்று. அவர் நினைப்பதை இவர் எழுதுவது எப்படி ஐயா இது சாத்தியம்
//
சிவா ... !
நான் என்ன நினைத்தேன்? அவர் என்ன எழுதினார் ஒன்றும் புரியவில்லை...!
என்ன சொல்கிறீர்கள் நீங்கள்.
அவர் இதை தொடராகா எழுதப் போவதைப் பற்றித் அவர் தெரிவித்தார் நான் இங்கு சொன்னேன் அவ்வளவு தான் !
சந்தித்திக் கொள்ளும் எந்த இருவர் ஆனாலும் சிந்தனைகள் ஒன்றுபடுவதால் நட்பு மலர்கிறது என்பதில் உடன்பாடு உண்டு.
வாழ்த்துக்கள் SK, எடுத்துகிட்ட தலைப்பு ஒரு கம்பி மேல நடக்கிற மாதிரி, கொஞ்சம் பிசகினாலும், அதோகதிதான்.
//ILA(a)இளா said...
வாழ்த்துக்கள் SK, எடுத்துகிட்ட தலைப்பு ஒரு கம்பி மேல நடக்கிற மாதிரி, கொஞ்சம் பிசகினாலும், அதோகதிதான்.
//
இளா வட்டங்கள் தெரிந்து கொள்ளு வேண்டிய விசயம்தான்... அவரிடம்(SK) கம்பிமேல் நடந்த பயிற்சி நிச்சயம் இருக்கும்
:))
சந்தித்திக் கொள்ளும் எந்த இருவர் ஆனாலும் சிந்தனைகள் ஒன்றுபடுவதால் நட்பு மலர்கிறது என்பதில் உடன்பாடு உண்டு.//
GK லயும் SK லயும் K இருக்கே.. அதான் சிந்தனைகளும் ஒன்றுபடுகின்றன..
ரெண்டு பேரும் சேர்ந்து எழுதினீங்கனா ரெண்டு பேர்லயும் K இருக்கறதால தொடரும் KAலக்கலாத்தான் இருக்கும்:)
நல்ல முயற்சிதான் எஸ்.கே அவர்களே!
//பாலியல் அறிவு பற்றிய நமது ஒரு சில கண்ணோட்டங்கள்-- அவை சரியா, தவறா என்பது பற்றியே!//
நல்லதொரு தொடரை எதிர்பார்க்கிறோம்.
படிச்சவிங்க சொன்னா சரியாத்தானிருக்கும்.
//tbr.joseph said...
GK லயும் SK லயும் K இருக்கே.. அதான் சிந்தனைகளும் ஒன்றுபடுகின்றன..
ரெண்டு பேரும் சேர்ந்து எழுதினீங்கனா ரெண்டு பேர்லயும் K இருக்கறதால தொடரும் KAலக்கலாத்தான் இருக்கும்:)//
ஜோசப் ஐயா !
நீங்க சொன்ன கருத்து ஓ... K
GK - General Knowledge
SK - Spritual Knowledge
'அந்த' விசயத்தில் எனக்கு எழுதும் அளவுக்கு புலமை இல்லை.
ஆன்மிக புலவருக்கு இருக்கு ... !
:))
//நாமக்கல் சிபி @15516963 said...
நல்ல முயற்சிதான் எஸ்.கே அவர்களே!
நல்லதொரு தொடரை எதிர்பார்க்கிறோம்.
படிச்சவிங்க சொன்னா சரியாத்தானிருக்கும். //
சிபி,
சரியாகத்தான் இருக்கும் !
சரி அவருக்கு என்ன பட்டம் கொடுக்கலாம். ம் கட்டுரை வரட்டும் !
வலை உலக வாத்யாயனர் ?
ஆகா....எஸ்.கே அவர்களின் அடுத்த படைப்பு விரைவிலா..அதுவும் பாலியல் பற்றியா...எல்லாரும் படிப்பார்கள். பாலியல் வெறியர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களிலிருந்து பண்பட்டவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் வரை. தொடரட்டும் தொடர். காத்திருக்கிறோம். வழக்கம் போல் முருகன் அருள் முன்னிற்கும்.
//G.Ragavan said...
ஆகா....எஸ்.கே அவர்களின் அடுத்த படைப்பு விரைவிலா..அதுவும் பாலியல் பற்றியா...எல்லாரும் படிப்பார்கள். பாலியல் வெறியர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களிலிருந்து பண்பட்டவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் வரை. தொடரட்டும் தொடர். காத்திருக்கிறோம். வழக்கம் போல் முருகன் அருள் முன்னிற்கும். //
ஜிரா...! மாறுபட்ட படைப்பாக எழுதலாம் என்று நினைத்திருப்பார். அவரின் தொழில் சார்ந்த விசயமாக இருப்பதால் கைவந்த கலையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
nan paaliyal parri oru padhvu poda porane..adhiyum padiyungal
சுந்தர காண்டத்துக்கு விளக்கம் சொன்னவரை இப்படி..... வேண்டாம் நல்லது நடக்க வாழ்த்துக்கள்
விளம்பரத்தக் கட் பண்ணிட்டு படத்தப் போடுங்கையா..
:)
// சிறில் Alex said...
விளம்பரத்தக் கட் பண்ணிட்டு படத்தப் போடுங்கையா..
:)
//
சிறில்,
போட்டாச்சு போட்டாச்சு, படம் பிச்சுக்கிட்டு போவுது ! முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
:))
// மகேந்திரன்.பெ said...
சுந்தர காண்டத்துக்கு விளக்கம் சொன்னவரை இப்படி..... வேண்டாம் நல்லது நடக்க வாழ்த்துக்கள் //
மகி,
பால காண்டம், மற்றும் எத்தனையோ காண்டம் இருக்கையில் சுந்தர காண்டத்துக்கு மட்டும் விளக்கம் சொன்னால் விட்டுவிடுவோமா !
:)))
Post a Comment