நெருப்பு சுடும் என்றால் எத்தனை பேர் கைவைத்துப் பார்ப்பார்கள் ? அப்படி ஒரு நெருப்பை தொட்டுவிட்டேன். http://blogger.com நுழைந்தவுடன் ஒரு அதாவது http://beta.blogger.com க்கு முயற்சிக்கும் படி தூண்டில் இருந்தது. http://blogger.com விட நிறைய வசதிகள் இருப்பதாகவும் சொல்லிவிட்டிருந்தது. ஆசை யாரை விட்டது? சரி முயற்சிக்கலாமே என்று எனது காலம் ஐ http://blogger.com லிருந்து http://beta.blogger.com மாற்றினேன்.
போச்சு ... ! தமிழ் மணம் இணைப்பு துண்டிப்பாக ஆகிவிட்டது. வலைப்பதிவு தமிழ்மணம் திரட்டியில் ஏற்ற முடியவில்லை. தமிழ்மணம் நிரல் பட்டையும் பதிவில் தெரியவில்லை. பழைய பதிவுகளில் ஏற்கனவே பின்னூட்டம் இட்டவர் தமிழில் பெயர் வைத்திருந்தால் அது பூச்சி பூச்சியாக தெரிந்தது.
தேன் கூட்டில் பதிவின் புதிய இடுகை ஏற்கப்பட்டது. தமிழ் மணம் http://beta.blogger.com ஐ திரட்டுவதில் ஏதாவது குறை இருக்கும் என்று நினைக்கிறேன்.
நல்ல வேலை மற்றொரு ப்ளாக்கர் காலங்கள் அக்வண்ட் இருந்ததால் பெரிய மூச்சு வந்தது.
http://beta.blogger.com/ சாதகங்களை (advantages) அடுத்து எழுதுகிறேன்.
தமிழ் மணத்தில் பதிந்துள்ளவர்கள் அவசரப் பட்டு http://beta.blogger.com உடனடியாக மாறவேண்டாம்.
Subscribe to:
Post Comments (Atom)
24 : கருத்துக்கள்:
கோவி.கண்ணன்,
முதல் விட்டில் நாந்தான் என்று நினைக்கிறேன்.
பொழுது போகாமல்(என் ப்ளாகில்) தப்பு பண்ணுகிற கூட்ட்ம் ஒன்று இருந்தால்,
அது நாந்தான்.
எம். ஜீ.ஆர் ஸ்டைலில் எங்கே என் ப்ளாஆக் என்று அலைகிறேன்.
மனு,வல்லி
அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டீர்கள் சரி!
சிலருக்குப் பாடமாக அமையும்; அமையலாம்.
ஆனால் கடைசியில் சொன்னது அறிவுரையா, அக்கறையா? :)
வேறு யாராவது இப்படி பீடா.ப்லாக்கரில் ஏற்றி தமிழ்மணத்திலும் கொண்டுவந்திருக்கிறார்களா?
அதைக் கேட்டிருக்கலாமோ?
இல்லை, நீங்கள்தான் முதலா?
[ஏற்ற வரும் போது வல்லியின் புலம்பலையும் பார்த்தேன்! நீங்கள் முதல் இல்லை!]
கோவியார் கோவிக்க வேண்டாம்!
:))
//பொழுது போகாமல்(என் ப்ளாகில்) தப்பு பண்ணுகிற கூட்ட்ம் ஒன்று இருந்தால்,
அது நாந்தான்.//
வள்ளி...!
இப்பதான் உங்கள் பதிவைப்
பார்த்தேன்... ஆகா ஆகா ... பிடா பிளாக்கரைக் கட்டிக் கொண்டு சேர்ந்து அழ ஒருவர் கிடைத்துவிட்டார்.
நேற்றே போட்டு இருக்கிறீகள்... முந்திட்டிங்க... பாராட்டுக்கள்.
இது நடந்து ஒரு வாரம் ஆகுதுங்க...!
எழுதனும்னு நெனச்சி இன்னிக்குதான் எழுதினேன்.
இதுக்குக்தான் எல்லொரும் கிளிப்பேச்சு கேட்கனும் :)))
// SK said...
அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டீர்கள் சரி!
சிலருக்குப் பாடமாக அமையும்; அமையலாம்.
ஆனால் கடைசியில் சொன்னது அறிவுரையா, அக்கறையா? :)
வேறு யாராவது இப்படி பீடா.ப்லாக்கரில் ஏற்றி தமிழ்மணத்திலும் கொண்டுவந்திருக்கிறார்களா?
அதைக் கேட்டிருக்கலாமோ?
இல்லை, நீங்கள்தான் முதலா?
[ஏற்ற வரும் போது வல்லியின் புலம்பலையும் பார்த்தேன்! நீங்கள் முதல் இல்லை!]
கோவியார் கோவிக்க வேண்டாம்!
:))
//
எஸ்கே நானும் பிட ப்ளாக்கருக்கு முதல் (இன்வெஸ்ட்) தான் !!!
:)))
அறிவுரை, அக்கரை தாண்டிய அனுபவ பாடம் !
:))
பீட்டா பிலாக்கரில் என்ன சிறப்பு ? அனானி + அதர் ஆப்சனை பிரித்துவிட்டார்களா ?
:)))
//செந்தழல் ரவி said...
பீட்டா பிலாக்கரில் என்ன சிறப்பு ? அனானி + அதர் ஆப்சனை பிரித்துவிட்டார்களா ?
:)))
//
ரவி,
சோதித்துப் பார்க்காமல் *சும்மா சொல்ல முடியாது ... பார்த்துட்டு சொல்றேன் !
:))
//செந்தழல் ரவி said...
பீட்டா பிலாக்கரில் என்ன சிறப்பு ? அனானி + அதர் ஆப்சனை பிரித்துவிட்டார்களா ?
:)))
//
ரவி,
சோதித்துப் பார்க்காமல் *சும்மா சொல்ல முடியாது ... பார்த்துட்டு சொல்றேன் !
:))
beta விலேயே edit html பக்கம் போனால் பழைய டெம்ப்ளேட் வந்து விடுகிறதே அதை save செய்தால் எல்லாம் சுபம். (புதிய வசதிகள் கிடைக்காது)
நானும் கூட "பிடா பிளாக்கரைத்" தட்டினேன், இரண்டு ஸ்டெப் போனதும், திடீர்னு பயம் வந்துட்டது! நமக்கு எதுக்கு வம்பு யாராவது,
சாதனை செய்து பார்த்து வெற்றியடைந்ததும் நாமும் போகலாம் என்று இருந்துவிட்டேன்! அது பார்த்தால் கடைகியில்.. இல்லை இல்லை முதலில் நண்பர் கோவியாருக்கே சோதனையாய் ஆகியுள்ளது!
நல்ல வேளை தப்பினேன்!
தங்களின் பதிவை அனுபவித்து, ரசித்து, சிலாகித்து படித்தேன்
(இருக்காதா பின்னே...நாங்க தப்பிச்சிட்டோம்ல)
தான் மாட்டினாலும் வேறு யாரும் தவறு செய்துவிடவேண்டாம் என்று எண்ணிப் பதிவிட்டமைக்கு நன்றி!
அன்புடன்...
சரவணன்.
பீட்டா ப்ளாக்கர் அழைப்பைப் பார்த்ததும் எனக்கும் கை அரித்தது... கொஞ்ச நாள் சென்று யாராவது ஒரு புண்ணியவான் (இப்போதைக்கு வள்ளியும் கோவிகண்ணனும்) முயற்சி செய்து பார்த்தபின் நாம் எழுதலாம் என்று உள் மணம் சொல்லியதோ நான் தப்பித்தனோ....
தமிழ்மணம்காரர்கள் இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தம் பதிவுருக்கருவிப் பட்டையில் மாற்றம் கொணருவரென்றோ?
// தான் மாட்டினாலும் வேறு யாரும் தவறு செய்துவிடவேண்டாம் என்று எண்ணிப் பதிவிட்டமைக்கு நன்றி! //
for(i=1;i<=100;i++)
printf("நன்றி!");
GK,
நல்ல படியாக சொன்னீங்க..
நன்றி...நன்றி.. நன்றி..
// வலைஞன் said...
beta விலேயே edit html பக்கம் போனால் பழைய டெம்ப்ளேட் வந்து விடுகிறதே அதை save செய்தால் எல்லாம் சுபம். (புதிய வசதிகள் கிடைக்காது)
//
வலைஞன் அவர்களே !
டெம்ப்ளேட்டை முன்பே சேமித்து வைக்கவில்லை ! :((
//உங்கள் நண்பன் said...
தான் மாட்டினாலும் வேறு யாரும் தவறு செய்துவிடவேண்டாம் என்று எண்ணிப் பதிவிட்டமைக்கு நன்றி!
அன்புடன்...
சரவணன்.
//
சரா .... !
அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை !
இன்னிக்கு பதிவு எழுத ஒரு மேட்டரும் இல்லை ! உஷ் .... யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் !
:))))
//திருவடியான் said...
தமிழ்மணம்காரர்கள் இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தம் பதிவுருக்கருவிப் பட்டையில் மாற்றம் கொணருவரென்றோ? //
திருவடியான்,
புது xml validation - ல் பராப்ளம் இருக்கிறது. தமிழ்மணம் நிரல் துண்டும் தெரியவில்லை. pdf கருவிப்பட்டையும் தெரியவில்லை.
//சோம்பேறி பையன் said...
// தான் மாட்டினாலும் வேறு யாரும் தவறு செய்துவிடவேண்டாம் என்று எண்ணிப் பதிவிட்டமைக்கு நன்றி! //
for(i=1;i<=100;i++)
printf("நன்றி!");
//
சோம்பேறி அவர்களே... !
ஒரு தடவை நன்றி சொன்னா ... 100 தடவை சொன்ன மாதிரி புரியுது !
:))
//Sivabalan said...
GK,
நல்ல படியாக சொன்னீங்க..
நன்றி...நன்றி.. நன்றி..
//
சிபா...!
நான் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த பதிவுலகம் !
:)))
நன்றி !
புதியதாக தொடங்குபவர்களுக்கு நன்று
// ENNAR said...
புதியதாக தொடங்குபவர்களுக்கு நன்று
//
என்னார் அவர்களே, உங்கள் வருகையும், கருத்தும் நன்று !!!
:))))))))))))))))))
பீட்டா ப்ளாக்கர் (Beta blocker) சாப்பிடும் நான் (இரத்த அழுத்ததைக் குறைக்க) உங்கள் பதிவு உடல்நலன் தொடர்புடையது என வந்தால்....
வலைப்பதிவர் நலனைக் கருத்தில் வைத்து எழுதியதற்கு நன்றி.
கண்ணன் என் புலம்பல் தொடருகிறது.
புதுசாக எழுதினதும் காணோம்.
மலை முழுங்கி மஹாதேவனா இருக்கே.
தமிழ்மணம் என் ப்ளாகை அப்ப்ரூவ் பண்ணினாலும், ஆடம், எக்ஸ் எம் எல் என்று செய்தி ஓடை சொல்லி சாரி :-((
முகம் காட்டுகிறது.
"freeயா கிடைச்சா பினாயிலையும் குடிபாங்கபா நம்முர்காரங்கபா"
எப்படியோ blooger betaவை test பண்ணியதில் நீங்க மாட்டிகொண்டிர்கள் போல். வாழ்த்துக்கள்.
அது நன்றாக உள்ளது அது தனி கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும்
Post a Comment