Thursday, August 03, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

உப்பும் நட்பும் !

நட்பு வாரம் என்று நண்பர்கள் பலரும் அன்பை வெளிப்படுத்தவது நெகிழ்ச்சியாக இருக்கிறது. நட்பில் நினைந்தவன், அதில் கரைந்தவன், அதன் சுவைத் தெரிந்தவன் என்கிற நினைப்பு எல்லோரையும் போல் எனக்கும் இருக்கிறது. நட்புடன் எதையாவது தொடர்புபடுத்தி ஒப்பிட வேண்டுமென்றால் எனக்கு தெரிந்த சிறந்த பொருள் அது உப்பு ஒன்று தான்.

உப்பும் நட்பும் !




கடல்நீரில், அழுக்குகள் ஒதுங்க மிஞ்சுவது உப்பு - தத்தளிக்கும்
வாழ்க்கைக் கடலில் உறவினர்கள் பதுங்க எஞ்சுவது நட்பு !

உப்பு குறைந்தால் உணவு சுவைக்காது - அன்பற்ற வெறும்
நட்பும் நம்வாழ்வில் இன்சுவை அளித்திடாது !

உப்பு அதிகமாக உணவு கரித்து விடும் - அதுபோன்ற
அளவற்ற (கூடா)நட்பு அதிகரிக்க வாழ்வு கெட்டுவிடும் !

உப்பு அளவுடன் இருக்க உணவுசுவை கூடும் - அருமை
நட்பு அளவுடன் சேர்ந்தவர் வாழ்வு அளவற்ற சுவைபெறும் !

உப்பில் தூய வெள்ளை இருந்தால் நல்லுப்பு ! - நம்
நட்பில் தூய வெள்ளை உள்ளம் இருந்தால் அது நல்நட்பு !

உப்பு தண்ணீரில் தான் கரைந்தாலும் சுவைதரும் - அன்பு
நட்புத் தோழரை நாம் தூக்கி எறிந்தாலும், அவர்தம் தோள்தருவர் !

உப்பு துக்கஆனந்த கண்ணீரில் என்றும் நம்மோடு - ஆழ
நட்பு துன்பஇன்ப துணையென என்றும் நம்மோடு !

உப்பில்லா பண்டம் குப்பையிலே - அதுபோல்
நட்பில்லா மனிதன் தனிமையிலே !

உப்பிட்டவரை உள்ளவரை நினைப்போம் ! - நல்
நட்பளித்தவரை உள்ளத்தால் அணைப்போம் !

இந்த கவிதையை அன்பு வலை நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் உறவு-உணர்வுகளை போற்றுவோர்களுக்கும், தமிழ்மணம், தேன்கூடு குழுமத்தினருக்கும் பரிசளித்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

அளவான உப்புடன்,
கோவி.கண்ணன்


27 : கருத்துக்கள்:

said...

///உப்பில்லா பண்டம் குப்பையிலே - அதுபோல்
நட்பில்லா மனிதன் தனிமையிலே !

...உண்மை..

உப்பிட்டவரை உள்ளவரை நினைப்போம் ! - நல்
நட்பளித்தவரை உள்ளத்தால் அணைப்போம் !///

....அருமை..

said...

அருமை கண்ணன், நட்புக்கு தனி உவமை.. உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.. நண்பர்கள் தின வாழ்த்துக்குள் (ஆகஸ்டு 6 ந்தேதி)

said...

உப்பின்றி அமையாது உணவு, நல்ல
நட்பின்றி அமையாது உயர்வு!

நண்பர்தின வாழ்த்துக்கள்!

said...

//உப்பில்லா பண்டம் குப்பையிலே - அதுபோல்
நட்பில்லா மனிதன் தனிமையிலே !

உப்பிட்டவரை உள்ளவரை நினைப்போம் ! - நல்
நட்பளித்தவரை உள்ளத்தால் அணைப்போம் !//
நட்புக்கு மரியாதை செலுத்தி விட்டீர் நண்பரே.
நண்பர் தின வாழ்த்துக்கள்.

said...

//மங்கை said...
...உண்மை..
....அருமை.. //

மங்கை அவர்களே !
உண்மை, அருமை என்று கருத்துக்களை கூறி (நட்பு) பாராட்டியதற்கு நன்றி !

said...

//கவிதா said...
அருமை கண்ணன், நட்புக்கு தனி உவமை.. உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.. நண்பர்கள் தின வாழ்த்துக்குள் (ஆகஸ்டு 6 ந்தேதி)
//
கவிதா அவர்களே ! தேதியை தெரியப்படுத்தியதற்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி ! :)))

said...

//மணியன் said...
உப்பின்றி அமையாது உணவு, நல்ல
நட்பின்றி அமையாது உயர்வு!

நண்பர்தின வாழ்த்துக்கள்!
//
மணியன் ! அவர்களே, மிக எளிமையாகவும், நன்றாகவும் கருத்துச் சொல்லி பாராட்டியதற்கு நன்றி ! :))

said...

///
உப்பு அதிகமாக உணவு கரித்து விடும் - அதுபோன்ற
அளவற்ற (கூடா)நட்பு அதிகரிக்க வாழ்வு கெட்டுவிடும் !
///

அன்பிற்கு உண்டா அடைக்கும் தாழ்

அளவில்லா நட்புடன் நட்பு வார வாழ்த்துக்கள் கோவி.

said...

//நாகை சிவா said...
நட்புக்கு மரியாதை செலுத்தி விட்டீர் நண்பரே.
நண்பர் தின வாழ்த்துக்கள்//

பின்னூட்ட சுனாமி சிவா அவர்களே !
நீங்களெல்லாம் நண்பர்களாக இருக்கும் போது உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது. வந்து வாழ்தியதற்கு நன்றி

said...

//அளவற்ற (கூடா)நட்பு அதிகரிக்க வாழ்வு கெட்டுவிடும் //


கோவியாரே... நீங்க யாரை சொல்லுரீங்கன்னு புரியுது ::)
(அப்பாடி வந்த வேலை முடிஞ்சிடுச்சு)


//உப்பு தண்ணீரில் தான் கரைந்தாலும் சுவைதரும் - அன்பு
நட்புத் தோழரை நாம் தூக்கி எறிந்தாலும், அவர்தம் தோள்தருவர் !//

நட்புக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள்!

நண்பர் தின வாழ்த்துக்கள்.


அன்புடன்..
சரவணன்.

said...

//உங்கள் நண்பன் said...
கோவியாரே... நீங்க யாரை சொல்லுரீங்கன்னு புரியுது ::)
(அப்பாடி வந்த வேலை முடிஞ்சிடுச்சு)
//
சரவணன் இங்கு தனிப்பட்ட முறையில் யாரையும் குறிக்கவில்லை. அப்படி எழுதியிருந்தால் அது நட்பை நான் கேவலப்படுத்துவது மட்டுமின்றி, என் கருத்துக்களையும் நானே கேவலப் படுத்துவது போல் ஆகும். உடனே ... 'கோவி'ச்சிக்கிட்டிங்களான கேட்காதிங்க... இது ஒரு சின்ன விளக்கம் உங்களுக்கு என்னுடைய நண்பர் என்ற முறையில் :))))

நீங்களெல்லாம் நண்பர்களாக இருக்கும் போது உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது. வந்து வாழ்தியதற்கு நன்றி !

சிவாவுக்கு போட்ட பின்னூட்டம் இது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்க தட்டச்சி கை வலிக்குது :))

said...

//குமரன் எண்ணம் said...

அன்பிற்கு உண்டா அடைக்கும் தாழ்

அளவில்லா நட்புடன் நட்பு வார வாழ்த்துக்கள் கோவி.
//
திருக்குரளுடன் வந்து ஒரு உங்கள் குரல் சேர்த்துப் பதிவு செய்து வாழ்த்தியதற்கு நன்றி அன்பு குமரன் அவர்களே !

said...

அருமையான கவிதை...

said...

உப்பென்றும், சீனியென்றும்
உள்நாட்டுப் பண்டமென்றும்
ஓராயிரம் இங்கிருக்க
சீனியைத் தவிர்த்து
கரிக்கின்ற உப்பினைத்
தேர்ந்தெடுத்து ஏன் சொன்னார்
என் நண்பர் என்றே நான்
ஓரிரு கணம் நினைந்திட்டேன்!

மருத்துவம் சொன்னது
உப்புதான் சரியென்று.
இனிக்கும் சுவை தவிர
சீனியிலே வேறில்லை.

நாக்கு சுவைத்தாலும்
இன்னுமொன்று வேண்டுமென
இசைவுடனே கேட்டாலும்
உள்ளே போனபின்னர்
சீனியால் தொல்லையே!

நீரிழிவு உள்ளவரும்
ஒதுக்கிடுவார் சீனியதை!

பலராலும் எப்போதும்
சீனி சேர்க்க முடிவதில்லை.

இதுபோன்ற காரணங்கள்
இருப்பதினால்தானோ
எம் நண்பர் உப்பையிங்கு
நட்புடன் சேர்த்திங்கு
நலமான கவி சொன்னார்!

நட்பைப் போற்றுவோம்!
உறவை வளர்ப்போம்!

நன்றி!

said...

//மருத்துவம் சொன்னது
உப்புதான் சரியென்று.
இனிக்கும் சுவை தவிர
சீனியிலே வேறில்லை.//

உப்பு நட்பென்றால் தப்பாமால்
சர்க்கரையும் அக்கரைகொள்(ளும்) உறவென்போம் !

இரண்டுமே கரிக்காதவரை இன்சுவை தந்திடுமே !

'நலம்' நாடுவர்
நட்பு நாடி தொடுத்திட்ட
புதுக்கவிதையில் இருப்பது
உவர்ப்பு உப்பன்று !
இனிப்புச் சர்க்கரையே !

குறும்பில் இளங் குமரனே !
நவில்கின்றேன் நானும்
நன்றி அருமை சங்கரரே !

said...

GK,
//உப்பு குறைந்தால் உணவு சுவைக்காது - அன்பற்ற வெறும்
நட்பும் நம்வாழ்வில் இன்சுவை அளித்திடாது ! //

நல்ல வரிகள்..

உப்பையும் நட்பயையும் ஒப்பிட்டு ஒரு "அருமை"யான கவிதையை கொடுத்திட்டீங்க... நன்றி.

said...

//Sivabalan said... நல்ல வரிகள்..

உப்பையும் நட்பயையும் ஒப்பிட்டு ஒரு "அருமை"யான கவிதையை கொடுத்திட்டீங்க... நன்றி. //

கவிதையை 'ஒப்பிட்டு' வாழ்த்தி ஒரு பிட்டு போட்ட சிபா அவர்களே ! இது பிட்டு அல்ல குழா புட்டு :))

said...

Azhaghiya pathivu!

-suvanappiriyan

said...

நட்புக்கு

நல்ல

கவிதை

நன்று.

said...

கோவி.
உப்பு சொன்ன நட்பு சர்க்கரையாய் இனிக்குதே..

நட்பு வார வாழ்த்துக்கள்

said...

கண்ணன், சர்க்கரை
கசக்கும் காலமதில் உப்பைச் சொன்ன உமக்கு
ஓராயிரம் நன்றி.
அளவில்லா அருகாமையும் நட்பைக் கெடுக்கும்

உப்பும் அஃதே.

நட்பும் உண்மை யெனில்
கைகொடுத்துக் காப்பாற்றும்.
அந்த நட்பை
எமக்கு அறிமுகப்படுத்திய உமக்கும்
தமிழ்மணத்துக்கும்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நன்றி நல்லதொரு பதிவுக்கு.

said...

//செந்தழல் ரவி said...
அருமையான கவிதை...
//
ரவி,
இந்த கவிதையும் உங்களுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை :)))

said...

//சுவனப்பிரியன் said...
Azhaghiya pathivu!

-suvanappiriyan

9:35 AM
//
சுவனப்பிரியன் உங்கள் ... பாராட்டுகளுக்கு நன்றி ... :)

said...

//மின்னுது மின்னல் said...
நட்புக்கு நல்ல கவிதை நன்று. //

மின்னல் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து 'பளிச்சிட்டதற்கு' நன்றி !
:))))

said...

//சிறில் Alex said...
கோவி.
உப்பு சொன்ன நட்பு சர்க்கரையாய் இனிக்குதே..

நட்பு வார வாழ்த்துக்கள் //

சிறில்.... நன்றி ... !
எறும்பு (எனக்கு) சின்ன அக்கரை ! :)

said...

// valli said...
கண்ணன், சர்க்கரை
கசக்கும் காலமதில் உப்பைச் சொன்ன உமக்கு
ஓராயிரம் நன்றி.
அளவில்லா அருகாமையும் நட்பைக் கெடுக்கும்

உப்பும் அஃதே.

நட்பும் உண்மை யெனில்
கைகொடுத்துக் காப்பாற்றும்.
அந்த நட்பை
எமக்கு அறிமுகப்படுத்திய உமக்கும்
தமிழ்மணத்துக்கும்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நன்றி நல்லதொரு பதிவுக்கு. //

வள்ளி ... பெரிய வார்த்தைகளில் (நீண்ட பின்னூட்டத்தில்) நட்பை போற்றியதற்கு நன்றி !

said...

நல்ல கவிதை கண்ணன்

உப்ப கையில வாங்கினா நட்பு போயிடும்னு இங்க என் நண்பர்கள் குண்டு போடுவாங்க... உப்ப வச்சே நட்ப ஒசத்திட்டிங்களே!