Monday, August 21, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பெருச்சாளிகள் ...! [கவிதை]


இரவின் நிசப்பத்தத்தில் இரையெடுக்க
வருவது ஆந்தைகள் மட்டுமல்ல, இருட்டில்
பூனைகள் கண்ணிலும் மண்ணைத் தூவும்
பெருச்சாளிகளும் தான் !

நாய்களைப் போல் கூட்டமாக இருந்தாலும்
பெருச்சாளிகள் அடித்துக் கொள்வதில்லை
கொள்ளை அடிப்பதில்,அதுவும் எவருக்கும்
தெரியாமல் கொள்ளையடிப்பதில்
பெருச்சாளிகளுக்கு நிகர் பெருச்சாளிகளே !

பெருச்சாளிகளைப் பார்த்து நான்
ஆச்சரியப்படுவது ஒன்றுதான் !
எந்த நல்ல குணமே இல்லாத இந்த
பெருச்சாளிகள் எப்படி
பிள்ளையாருக்கு வாகனம் ஆனாது ?

பிள்ளையாருக்கு அருகிலோ, எலிக் கோவிலிலோ
இருந்தாலும் புனிதம் அறியாமல், பெரும்பாலும்
இந்த பெருச்சாளிகள் எப்போதும்
சாக்கடை பொந்தில் மறைவாக
இருந்து கொண்டு ஏமாற்றி உண்பதையும்,
தன் இனத்தை பெருக்குவதை மட்டுமே
தெரிந்து வைத்துக் கொண்டுள்ளன !

6 : கருத்துக்கள்:

said...

//பிள்ளையாருக்கு அருகிலோ, எலிக் கோவிலிலோ
இருந்தாலும் புனிதம் அறியாமல், பெரும்பாலும்
இந்த பெருச்சாளிகள் எப்போதும்
சாக்கடை பொந்தில் மறைவாக
இருந்து கொண்டு ஏமாற்றி உண்பதையும்,
தன் இனத்தை பெருக்குவதை மட்டுமே
தெரிந்து வைத்துக் கொண்டுள்ளன !//

ஜிகே இதில் எதுவும் யாருக்கும் உகு, இல்லையே?
எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இந்த எலி.....ச்சே கவிதைகளை, ரொம்ப நேரம் சிந்திப்பிங்களோ?
கவிதை கலக்கல்

said...

//மகேந்திரன்.பெ said...
ஜிகே இதில் எதுவும் யாருக்கும் உகு, இல்லையே?
எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இந்த எலி.....ச்சே கவிதைகளை, ரொம்ப நேரம் சிந்திப்பிங்களோ?
கவிதை கலக்கல் //

மகி,
உகு இல்லை வெகு இல்லை ... !
அனிமல் பிளானட் எழுதுறது எனக்கு பிடிக்கும் !

கழுதை, நாய், தவளை, வண்ணத்துப்பூச்சி கூட எழுதிய இருக்கிறேன் !

said...

பெருச்சாளி எல்லாம் விடுங்க தல...

பேப்பர் ல கோவி.கண்ணன் பேர் செமயா அடிபடுது ;)

நீங்களா? சிபி கிட்ட கேட்ட ஆமான்னு சொல்றாரு . :)

said...

கோவி சார்,
விலங்குகள் மேல் அதிக அக்கரை என்று நினைக்கின்றேன்.

said...

//உகு இல்லை வெகு இல்லை ... !
அனிமல் பிளானட் எழுதுறது எனக்கு பிடிக்கும் !

கழுதை, நாய், தவளை, வண்ணத்துப்பூச்சி கூட எழுதிய இருக்கிறேன் !//


இதுதான் உள்குத்து என்பதோ?!!

:)

said...

GK,

கவிதை நல்லாயிருக்கு..