Friday, August 11, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

சுதந்திர ... நாடே !


சுதந்திர காற்றில் ஆக்சிஜன்
பற்றாக் குறை ... !
சுவாசிக்கும் போது மூச்சு
தடுமாறுகிறது .... !

இன்னும் பேருந்து செல்லாத
சிற்றூர்கள் !
மின்சாரம் காணாத
கிராமங்கள் !
பள்ளிக் கூடம்
காணாத பேருராட்சி !
படித்து நாமும் முன்னேற
வேண்டும் என்ற
விழிப்புணர்வு அற்று,
வசதியில்லாது,
கூன்முதுகு காட்டி வயலில்
ஒரு வேளை சோற்றுக்காக
நாற்று நடும் பெண்டிர் ...!

ஏழைகள் ஏழையாக இருக்க,

அவர்கள் தம்
அல்லல்ப்படும் அன்றாட
வாழ்க்கையில்,
சுருக்குப்பை காசையும்
சுரண்டிவிட்டு
சுதந்திரம் கொண்டாடி
மகிழ்வோம் என்று,
வருகிறது சுதந்திர தினத்தன்று
புத்தம் புதிதாக திரைப்படங்கள் !

18 : கருத்துக்கள்:

said...

GK,

//வருகிறது சுதந்திர தினத்தன்று
புத்தம் புதிதாக திரைப்படங்கள் ! //

கூடவே.. உலக தொலைக் காட்சிகளில் முதன் முறையாக ..திறைக்கு வந்து சில மாதங்கலே ஆன... இந்த வசன்ங்களும் சுதந்திர தினத்தில்...


என்னமோ போங்க.. கவிதையை படித்ததும் வருத்தமாகிவிட்டது...

said...

//Sivabalan said...
GK,

//வருகிறது சுதந்திர தினத்தன்று
புத்தம் புதிதாக திரைப்படங்கள் ! //

கூடவே.. உலக தொலைக் காட்சிகளில் முதன் முறையாக ..திறைக்கு வந்து சில மாதங்கலே ஆன... இந்த வசன்ங்களும் சுதந்திர தினத்தில்...
//
சிபா ... !

நன்றாக சொன்னீர்கள் ... சீப்பாக கிடைக்கும் புதுப்படங்களை வைத்து தொலைக்காட்சிகளூம் .. குறிப்பாக மாறன் சகோதர்களின் தொலைக்காட்சி சுதந்திர தினத்தை ... ஆடைக்கு சுதந்திரம் கொடுத்த நடிகைகளின் பேட்டியுடன் சிறப்பாகவே கொண்டாடுவார்கள் :)

said...

போட்டுத் தாக்குங்க தல..இதுக்க்குக் கூட சுதந்திரம் இல்லைன்ன எப்டி..

சடி அந்த பட்டிமன்றம்னு நாலுபேர் திண்ணைலேந்து பேசுவாங்களே அதெல்லாம் சொல்லவேயில்ல?

:)

said...

//சிறில் Alex said...
போட்டுத் தாக்குங்க தல..இதுக்க்குக் கூட சுதந்திரம் இல்லைன்ன எப்டி..

சடி அந்த பட்டிமன்றம்னு நாலுபேர் திண்ணைலேந்து பேசுவாங்களே அதெல்லாம் சொல்லவேயில்ல?

:) //

அந்த பட்டிமன்றம்னு நாலுபேர் திண்ணைலேந்து பேசுவாங்களே -

இதைப் பற்றி ஒரு சிறப்புப் பதிவு போடும்படி சிறில் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :)

said...

சன்னிலும் செயாவிலும்,
"உலகத் தொலைக்காட்ட்சிகளில் முதன் முறையாக காலை முதல் மாலை வரை புத்தம் புதிய திரைப்படங்கள் நேயர்களே பார்த்து மகிழுங்கள் பரிசுகளை வெல்லுங்கள், சுதந்திரத்தை போற்றுங்கள் "

said...

// மகேந்திரன்.பெ said...
சன்னிலும் செயாவிலும்,
"உலகத் தொலைக்காட்ட்சிகளில் முதன் முறையாக காலை முதல் மாலை வரை புத்தம் புதிய திரைப்படங்கள் நேயர்களே பார்த்து மகிழுங்கள் பரிசுகளை வெல்லுங்கள், சுதந்திரத்தை போற்றுங்கள் "
//

அம்மா டிவியும், ஐயா டிவியும் மட்டும் இல்லை என்றால் ஜெனங்க இந்தியாவுக்கு சொதந்திரம் கிடைத்ததையே மறந்து போய் இருப்பார்களோ ?

said...

சுதந்திர தின நிகழ்ச்சிகள் முழுவதும் வழங்குவோர் பெப்சி மற்றும் கோகோ கோலா...

said...

//Sivabalan said...
சுதந்திர தின நிகழ்ச்சிகள் முழுவதும் வழங்குவோர் பெப்சி மற்றும் கோகோ கோலா...
//

சிபா ... பெப்ஸி .. கோக் இல்லாட்டி சுதந்திர தினம் டிவியில் வருவதற்கு சான்ஸே இல்லை :)

said...

11.30 -க்கு எனது சுதந்திரம் -நடிகை நமீதாவின் பார்வையில..

said...

//ஜோ / Joe said...
11.30 -க்கு எனது சுதந்திரம் -நடிகை நமீதாவின் பார்வையில.. //

நமீதாவின் பார்வையில் மட்டும் தான் என்று சொல்லி வீட்டில் தப்பித்தீர்கள் :)

said...

எல்லாம் சரிதான் சுதந்திரப் போராட்ட தியாகி அர்ஜூன் பேட்டிய விட்டாச்சே :))

said...

காலத்துக்கேத்த நல்ல கவிதைங்க கண்ணன். உண்மைகளை தோலுரித்துக் காட்டி இருக்கீங்க. அதுவும் அந்த கடைசி வரி மனசைத்தெச்சுருச்சு. கருத்து செரிவுடன் கவிதை அரிதாக வருகிறது .இப்படி நல்ல கவிதை நிறைய எழுதுங்க கண்ணன்

said...

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!

இன்றும் அதன் பயன் 'அடியவர்' அடையவில்லை!

தின்றும் கொழுத்தும் வாழுகிறர் அரசியலில்!

நன்று செய்ய மனமின்றி நாளைக் கடத்துகிறார்!

இனிப்பை வழங்கியே இந்நாளைப் போக்குகிறார்!

இனிமையே காணாத மக்களை மறக்கிறார்!

"தை"க்குமாறு சொல்லி என்ன பயன் கோவியாரே!

தைப்பவருக்குத் தான் தைக்கும்!

கழுதைகட்குத் தைக்குமோ?

உதைக்கும்! அவ்வளவே!

said...

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!

இன்றும் அதன் பயன் 'அடியவர்' அடையவில்லை!

தின்றும் கொழுத்தும் வாழுகிறார் அரசியலில்

நன்று செய்ய மனமின்றி நாளைக் கடத்துகிறார்!

இனிப்பை வழங்கியே இந்நாளைப் போக்குகிறார்!

இனிமையே காணாத மக்களை மறக்கிறார்!

தைக்குமாறு சொல்லி என்ன பயன் கோவியாரே!

தைப்பவருக்குத் தான் தைக்கும்!

கழுதைகட்குத் தைக்குமோ?

உதைக்கும்! அவ்வளவே!

said...

நாமக்கல் சிபி said ...

//வருகிறது சுதந்திர தினத்தன்று
புத்தம் புதிதாக திரைப்படங்கள் //

கலக்குறீங்க கோவியரே!

said...

என்னவோ போங்க....

said...

நல்ல கவிதை...

said...

//வருகிறது சுதந்திர தினத்தன்று
புத்தம் புதிதாக திரைப்படங்கள் ! //
செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு.
வேற யாருக்கு நமக்கு தான்....