எஃகு கோட்டை போல் உறுதியான கூட்டணி என்று திமுகவால் சொல்லப்படும் திமுக கூட்டணி, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு உலுத்துப் போன கூட்டனியாகிவிடும் போல் இருக்கிறது.
முதல்வர் கருணாநிதி விஜயகாந்தின் வளர்சியை பாராட்டிப் பேச, அதிமுக தலைமையில் சீறிய அறிக்கை தேமுதிகவின் தலைமையை உசிப்பேற்றி அவதூறுகள் இருப்பக்கமும் அரங்கேறி அடங்கியிருக்கிறது. தேமுதிகவை போட்டியாக நினைக்கும் அளவுக்கு அது ஒரு கட்சியே இல்லை என்று சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை பேசிய பாமக. விஜயகாந்தின் விருதாசால வெற்றிக்கு பிறகு எதிரி கட்சியாக நினைக்க ஆரம்பித்து விட்டது எல்லோரும் அறிந்ததே.
கலைஞர் கூட்டணியுடன் உள்ளாட்சி தேர்தலை சந்தித்த பாமக, கலைஞரின் விஜயகாந்த் குறித்த பாராட்டு பேட்டியை சகித்துக் கொள்ள முடியவில்லை. நகராட்சி தேர்தலில் சில இடங்களில் தோற்றது பாமகவை முதலில் கவலை கொள்ள வைக்காவிட்டாலும், விஜயகாந்தை ஒரு பொருட்டாகவே நினைக்காத ஜெ-வே சீறி இருக்கும் போது விஜயகாந்தின் வளர்ச்சியை பாமகவால் ஊகிக்க முடிந்தது. a அது மட்டுமல்ல ஊடகங்கள் யாவும் விஜயகாந்தை நோக்கி திரும்ப, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக என்னும் செல்வாக்கு வரிசையில் அடுத்து இருக்கும் தங்கள் கட்சிக்கு சரிவாகிவிடும் என்ற கருதிய பாமக தலைமை திமுகவிற்கு எதிராக திடீர் அறிக்கை தாக்குதல் செய்து ஊடகங்களையும் திசைத் திருப்பி இருக்கிறது.
இந்த திடீர் அறிக்கை தாக்குதல் திமுகவிற்கு சங்கடமாக இருந்தாலும், விஜயகாந்தை பாராட்டி பேசியதற்காக பாமக கோபம் கொண்டுள்ளாத நினைத்து இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொள்ள விரும்புவதாக தெரிகிறது.
பாமக அவ்வளவு வேகமாக திமுக கூட்டணியில் இருந்து விலக முடியாது, அப்படி விலகினால் திமுக தலைமை காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்து சுகாதாரத்துறை மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியை கழட்டிவிடச் சொல்லும். ஐந்தாண்டுக்குள் பதிவையை துறக்க பாமக தலைமைக்கு விருப்பம் இருப்பது போல் தெரியவில்லை. பின்பு எதற்கு திமுகவிற்கு எதிரான அறிக்கை ?
1. தேமுதிகவில் மையம் கொண்டிருக்கும் ஊடகங்களை திசைத் திருப்ப, 2.திமுக கூட்டணியில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, 3. எதற்கும் எதிர்காலத்திற்காக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் மறைமுகமாக அதிமுக தலைமைக்கு சிக்னல்.

பாமக ஒரே ஒரு திடீர் அறிக்கையில் அடிக்க முயன்றது மூன்று மாங்கனிகள்.
18 : கருத்துக்கள்:
அப்படி போடுங்க :)
//அன்புடன்...ச.சங்கர் said...
அப்படி போடுங்க :)
//
வாருங்கள் சங்கர் !
அப்படியும் போடுவோம், எப்படியும் போடுவோம்ம் !
அரசியல் வாதிகளுக்கு இப்படியும் போடுவோம் !
:)
அப்பப்ப இப்படி உதார் விடுவது ஒன்றும் பா.ம.க.விற்கு புதிதல்லவே!
நானும் இருக்கேன் மனையில என்று காட்டிக் கொள்ளும் வழக்கமான உத்திதான்!!
கேப்டன் வளர்வது பிடிக்காத ஒரு கட்சி என்றால் அதில் பா.ம. க. வுக்குத்தான் முதலிடம்!
இதில் மட்டும் தான்!
மற்ற எல்லாவற்றிலும் மூன்றாவது இடம் போதும்!
அப்பதானே, தான் ஒண்ணும் பண்ண வேண்டாம்.
சமயத்துக்கு தகுந்தாற்போல் கூட்டணியை வெட்கமின்றி மாற்றி, ஆதாயம் அடையலாம்.
மூன்றவது இடமாக தே.மு. தி. க. ஆகி வருவது பொறுக்கவில்லை.
அதுவும் தனித்தே வளர்வது இன்னும் எரிச்சலைக் கிளப்பி விட்டிருக்கிறது ஐயாவுக்கு!
நல்ல கூத்து!
//SK said... சமயத்துக்கு தகுந்தாற்போல் கூட்டணியை வெட்கமின்றி மாற்றி, ஆதாயம் அடையலாம்.//
எஸ்கே ஐயா !
அப்போ பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் கட்சிகளுக்கு வெட்கம் தேவையில்லை என்கிறீர்களா ?
:)
உங்கள் நண்பர் குழலி என்ன சொல்வார் என்று பார்ப்போம் !
:)
குட்டையைக் குழப்பறீங்க, கோவியாரே!
சொன்னதை விட்டு, சொல்லாததைப் பிடித்துக் கொண்டு என்னமோ சொல்லுகிறீர்கள்.
நான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு!
:))
// SK said...

குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும் !
தினமலரை பாருங்கள் திடீரென்று தினமலருக்கு பாமக மேல் பாசம் வந்து திமுக, பாமகவிற்கு துரோகம் செய்துவிட்டதாக பத்தி பத்தியாக எழுதுகிறார்கள் !
:)
அடப்பாவமே, இந்த பிரச்சனையில கேப்டன் எப்படிங்க உள்ள வந்தார்??
Vicky
GK,
நீங்களும் SK அய்யா இருவரும் கொடுக்கும் கம்ன்டுகள் சூப்பர்..
//Vignesh said...
அடப்பாவமே, இந்த பிரச்சனையில கேப்டன் எப்படிங்க உள்ள வந்தார்??
//
விக்கி!
கேப்டன் (சட்டசபைக்குள்) உள்ளே வந்ததால் தான் பாமக அறிக்கை (எதிர்கட்சியாக) வெளியே வருது !
:)
// Sivabalan said...
GK,
நீங்களும் SK அய்யா இருவரும் கொடுக்கும் கம்ன்டுகள் சூப்பர்..
//
சிபா...!
அரசியல் அல்வா சாப்பிடுவது மாதிரி, அதை நாம் மட்டும் தின்றால் போதுமா ? அதுதான் எடுத்தும், நேராக தொடுத்தும் விடுகிறோம் !
:)
நல்லதொரு ஆய்வு.
கோவி.கண்ணன் கருத்தத வழி மொழிகிறேன். ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறி மாறி பாமகவைச் சுமந்தது தவறல்ல. பாமக மாறியதுதான் தவறு என்று சொல்லும் கருத்து ஏற்புடையதன்று. பேரம் எங்க படியுதோ...அங்கதான் கூட்டணி. இது திமுக அதிமுக ரெண்டுக்கும் பொருந்தும்.
இப்பொழுது பாமக விடும் அறிக்கைகளால் ஒன்றும் நேர்ந்து விடாது. குடுக்க வேண்டிய சூடான அறிக்கையைக் குடுத்து கவனத்தைத் திருப்பியாச்சு. இனிமே அமைதிதான் என்று நினைக்கிறேன். அதைத்தான் பாமகவும் திமுகவும் விரும்பும்.
//திமுக தலைமை காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்து சுகாதாரத்துறை மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியை கழட்டிவிடச் சொல்லும். //
இப்பொழுதிருக்கிற நிலையில் கலைஞரால் காங்கிரசிடம் எந்தவொரு தேவையையும் வலியுறுத்திப் பெற இயலாது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கும் செம அல்வா கொடுத்திருக்கின்றனர் திமுகவினர். கலைஞர் சாணக்கியத் தனமாக நினைத்து சில சாண நக்கித் தனமான செயல்களை செய்து வருகிறார். அது தான் சென்னை மாநகராட்சிக்கான துணைத் தலைவருக்கான தேர்தல் தலித் அரசியல். கலைஞரின் இந்த உத்தி எத்தனை நாளுக்கு என்று தெரியவில்லை.
உண்மையை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். விஜயகாந்தின் வளர்ச்சி அபரிதமானது!
பெரிய கட்சிகளின் பாதையில் விஜயகாந்த் தொடராமல், தனக்கு என்று ஒரு நல்ல பாதையை அமைத்தால்!! வெற்றியை சுவைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.
வடிகட்டும் நேரம் வந்துவிட்டது-விஜயகாந்த் ஜாக்கிரதையாக தன் கட்சிகாரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
//விடாதுகருப்பு said...
உண்மையை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். விஜயகாந்தின் வளர்ச்சி அபரிதமானது!
//
வி.க !
விஜயகாந்தின் வளர்ச்சி பாமகவிற்கு வயிற்றில் புளிய மரத்தையே கரைத்து இருப்பது போல் தெரிகிறது !
:)
//G.Ragavan said...
நல்லதொரு ஆய்வு.
இப்பொழுது பாமக விடும் அறிக்கைகளால் ஒன்றும் நேர்ந்து விடாது. குடுக்க வேண்டிய சூடான அறிக்கையைக் குடுத்து கவனத்தைத் திருப்பியாச்சு. இனிமே அமைதிதான் என்று நினைக்கிறேன். அதைத்தான் பாமகவும் திமுகவும் விரும்பும்.
//
இன்னும் கூட எனக்கு சந்தேகமாக இருக்கு இது திமுகவும், பாமகவும் சேர்ந்து நடத்தும் நாடகமோ ?
நீ அடிப்பது போல் அடி, நான் அழுவது போல் அழுகிறேன் என்பதாக !
:)
//Pot"tea" kadai said...
இப்பொழுதிருக்கிற நிலையில் கலைஞரால் காங்கிரசிடம் எந்தவொரு தேவையையும் வலியுறுத்திப் பெற இயலாது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கும் செம அல்வா கொடுத்திருக்கின்றனர் திமுகவினர். கலைஞர் சாணக்கியத் தனமாக நினைத்து சில சாண நக்கித் தனமான செயல்களை செய்து வருகிறார். அது தான் சென்னை மாநகராட்சிக்கான துணைத் தலைவருக்கான தேர்தல் தலித் அரசியல். கலைஞரின் இந்த உத்தி எத்தனை நாளுக்கு என்று தெரியவில்லை.
//
பொடீக்கடையாரே !
நெத்தியடி !
:)
// வடுவூர் குமார் said...
பெரிய கட்சிகளின் பாதையில் விஜயகாந்த் தொடராமல், தனக்கு என்று ஒரு நல்ல பாதையை அமைத்தால்!! வெற்றியை சுவைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.
வடிகட்டும் நேரம் வந்துவிட்டது-விஜயகாந்த் ஜாக்கிரதையாக தன் கட்சிகாரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
//
வடுவூராரே !
சட்டமன்ற ஆயுட் காலம் 5 வருசம் !
நீங்கள் விஜயகாந்த் வெற்றிக்கு நாள் கணக்கு கொடுக்கிறீர்களே ! இது ஞாயமா ?
:)
Post a Comment