Wednesday, October 04, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஆகாயத் தீர்த்தம்!

சிறில் அலெக்ஸசை தொடர்ந்து வெட்டிப்பயல் கொடுத்த மழை பற்றிய தலைப்புக்காக ஒரு மீள் பதிவு !



காலை நேரத்தில் நான் பார்த்த
ரோஜா இதழ்மேல் துளிகளாக
உன் எச்சில் ! அது
பனித்துளி வடிவில், நீ ரோஜாவின்
அழகை ரசித்து பதித்த
உன் இச்சை !

நெஞ்சில் ஈரமில்லா எரிச்சல் என்ற
பூமியின் வேண்டுதல் தானோ
நீ கிடைத்த வரம் ! அல்லது
பசிப்பிணி நோய்த் தீர்க்க வேண்டிய
உயிர்நிலை வாழுதலுக்கு நீர்நிலைதரும்
அட்சய பாத்திரம் நீயா ?

முகில் முகம் இருண்டு, மண்டை இடியில்
துன்ப பிரசவமாக வெளிவந்தாலும், ஒளியோடு
பிறந்த நீ ஒரு தெயவீகம் !
மானம்காத்து மார்பை மறைக்க வேண்டிய
பூமிக்கு, ஈர நூல்ச்சேலையை தொடர்ந்து
வாரி வழங்கும் கண்ணனா நீ !

மாரி உன் தூரிகையால் மகிழ்வாய்
படைக்கும் ஒவியம் வண்ணம்
இச்சைமிகு பச்சை வண்ணமோ,
உனக்கும் கோபம் வந்து, உன்
பால்முகம் பாராமுகம் காட்டிய
இடம்தான் பாலை வனமா ?

எல்லோரும் ஓர் குலம்,
எங்கும் வேண்டும் பொது நலம்,
பண்பாடு காக்க ! என்று
பேரூண்மையை உணர்த்தியே, அனைவரையும்
அன்பொழுக சிரத்தையுடன், எல்லோர் சிரங்களை
ஆசிர்வதிக்கும் ஆகாயத் தீர்தம் நீ !!!

13 : கருத்துக்கள்:

said...

கவிதை அருமை, திரு கோவி. கண்ணன்...

எனக்கு பிடித்த வரிகள்
//பனித்துளி வடிவில், நீ ரோஜாவின்
அழகை ரசித்து பதித்த
உன் இச்சை !//

//பால்முகம் பாராமுகம் காட்டிய
இடம்தான் பாலை வனமா ?//

சூப்பர்!

said...

பதிவுக்குச் சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்.

ஆமாம், உங்க பேரை ஜிகேன்னு வச்சுக்கிட்டீங்களா? அப்ப நமக்கு ரொம்ப நெருங்கிட்டீங்க.

இங்கே பாருங்க ஒரு விஷயம் இருக்கு.

said...

//தமிழ்ப்பிரியன் said...
கவிதை அருமை, திரு கோவி. கண்ணன்...

சூப்பர்! //
தமிழ் ப்ரியன்... உங்கள் பாராட்டு ஊக்கம் அளிக்கிறது ... நன்றி !

said...

//
துளசி கோபால் said... பதிவுக்குச் சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்.

ஆமாம், உங்க பேரை ஜிகேன்னு வச்சுக்கிட்டீங்களா? அப்ப நமக்கு ரொம்ப நெருங்கிட்டீங்க.

இங்கே பாருங்க ஒரு விஷயம் இருக்கு. //

துளசியக்கா ... உங்கள் ஜிகேவும் என்னிய மாதிரி நல்ல சிவப்பா இருக்கு :))

said...

kavithil super

said...

// வீரமணி said...
kavithil super
//

வீரமணி அவர்களே நன்றி !!!

said...

GK,

கவிதை நல்லாயிருக்குங்க..

நன்றி

said...

படிச்சதும் மழைஅடிச்சு ஓஞ்சமாதிரி இருந்துச்சு எடுத்து போட்டுட்டேன் என் லிஸ்ட்ல.

:)

said...

// Sivabalan said...
GK,

கவிதை நல்லாயிருக்குங்க..

நன்றி
//

சிபா...!
வழக்கம் போல் நன்றி !
:))

said...

//சிறில் அலெக்ஸ் said...
படிச்சதும் மழைஅடிச்சு ஓஞ்சமாதிரி இருந்துச்சு எடுத்து போட்டுட்டேன் என் லிஸ்ட்ல.

:)
//
சிறில் ...!

நீங்கள் தான் எழுத தூண்டுகிறீர்கள் !

நன்றி !

:))

said...

அன்பின் கோவி.கண்ணன்,
உங்கள் பதிவின் தேதி ஏன் Saturday, November 04, 2006 என்று காட்டுகிறது. அதனை சரி செய்யவும்.

அன்புடன்,
முகுந்தராஜ்

said...

கண்ணன்,

அன்பொழுக சிரத்தையுடன், எல்லோர் சிரங்களை
ஆசிர்வதிக்கும் ஆகாயத் தீர்தம் நீ //

இந்த தீர்தம்.. தீர்த்தம்தானே..

ஆனாலும் கவிதை ரொம்ப நல்லாவே இருந்தது..

said...

GK,

எங்க இந்தப் படத்தை பிடித்தீர்கள்..நல்லாயிருக்கு..