Thursday, October 19, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தமிழக கட்சித் தலைவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி !

முதல்வர் கருணாநிதி : என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே. நாசக்காரார்கள் ஒடுங்கிவிட்டார்கள். நாடு காப்பற்றப்பட்டு விட்டது. நகராட்சித் தேர்தலிலும், இடைத் தேரிதலிலும் தோல்வியைத் தந்து ஏமாற்று வித்தைக் காரார்களை புறமுதுகுடன் ஓடவைத்து விட்டீர்கள். அண்ணாவும், பெரியாரும் காட்டிய வழியில் கழகத்தின் நல்லாட்ட்சி நடக்கிறது. ஏழைகள் தீபாவளிக்கும் பொங்கல் செய்வதற்காக இரண்டு ரூபாய் அரிசி திட்டம். பட்டாசு மட்டும் வெடித்தால் போதுமா ? படக் காட்சி காண வேண்டாமா ? இலவச வண்ணத் தொலைக் காட்சியில் ஏழைகளின் கண்கள் சிரிக்கின்றது. ஊக்க போனஸ் உயர்ந்ததில் அரசு ஊழியர்கள் தூக்கத்தை மறந்து உற்சாக மடைகின்றனர். காவல் துறை மீண்டும் கண்ணியத் துறை ஆகிவிட்டது. தமிழில் பெயர்வைத்தால் வரி இல்லை என்பதால் திரைத்துரையின் மறைவு காப்பாற்றப் பட்டுவிட்டது. கேடுகெட்ட நாசக்கார கும்பலை வதைத்த இந்த தீபாவளி உண்மையில் நல்ல தீபாவளி. கழக கண்மணிகளின் கண்களில் ஒளி, தமிழக மக்களின் முகத்தில் தீப ஒளி இது அத்தனையும் கழக ஆட்சியில் என்றுமே இருக்கும் என்பதை கூறிக் கொண்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா : ரத்தத்தின் ரத்தமான கழகத்தினரே, அன்பு தமிழக மக்களே. புரட்சித்தலைவரின் புனித ஆட்சியை புரட்டுக் காரட்கள் சூழ்ச்சியால் வீழ்த்திவிட்டார்கள். நரகாசூரர்கள் ஆட்சி நடத்தும் கலிகாலம் ஆகிவிட்டது தமிழகம். கருணாநிதியின் சிறுபாண்மை அரசு கூடிய விரைவில் கவிழ்வது என்பது நிஜமே. புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமையும் என்பதை அண்ணாவின் மீது ஆணையிட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது துரோகிகள் நம்மிடம் இல்லை, அன்பு அண்ணன் உள்ளார். சென்ற தீபாவளிக்கு நான் இனிப்பான செய்தி தந்தது போல் இந்த கருணாநிதியால் தரமுடியுமா ? காவல் துறையை ஏவல் துறையாக்கி தமிழகத்தை பீகார் ஆக்கிவிட்டார்கள்.
தேர்தல் வரும் போகும், வெற்றி என்பது கருணாநிதி குடும்பத்தினருக்கு நிறந்தரமல்ல. அனைத்து தமிழக மக்களுக்கும் அம்மாவின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.விஜயகாந்த் : தருமம் ஜெயக்கனும், அதர்மம் அளீயனும். காஷ்மிர் முதல் கன்யாகுமரி வரை உள்ள ஒவ்வெரு தமிளனும் தலை நிமிரனும். இன்னிக்கு 8 % ஓட்டிலிருந்து 18 % வந்திருக்கோம் என்றால் அது தமிள், தமிளன் நம் கட்சி மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. முடியாது என்று நம்மை பார்த்து இளித்தவர்கள் இன்று மோத பயப்படுகிறார்கள். குடிதாங்கிகளளை தாக்கும் இந்த மின்னலை சமாளிக்க அவர்களிடம் இடிதாங்கி இல்லை. தேமுதிக தமிள் நாட்டை ஆள்வது உறுதி என்றாலும் அது நம் லட்சியமல்ல. தமிளன் இந்தியாவை ஆளவேண்டும். அதற்கு சென்னை முதல் கன்னியாகுமரிவரை உள்ள அனைத்து தமிளர்களும் ஒத்துளைத்து உறுது பூண்ட வேண்டும். தீவிரவாதம் என்னும் சொல்லே தமிளில் ஏன் இந்தியாவில் உள்ள எந்த மொளியிலும் இருக்கக் கூடாது. இப்பெல்லாம் தமிளில் எனக்கு பிடிக்காத வார்த்தை கருணாநிதி. தமிளர் அனைவருக்கும் தீபாவளி வாள்த்துக்கள்.

பி.கு : எல்லாம் கற்பனை தாங்க ! கட்சிக்காரங்க யாரும் வூடு கட்ட வந்திடாதிங்க !

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

23 : கருத்துக்கள்:

said...

GK,

கலைஞர் தீபாவளி வாழ்த்தா..HA HA`HA ...

கலக்கிடீங்க..

நல்ல நகைச் சுவை.

said...

சிபா ..!
சிரிப்பு மத்தாப்பு பற்றவைத்ததற்கு
நன்றி !
:))

said...

சங்கராச்சாரியாரிக்கு இனிக்கும் தீபாவளியை பற்றி கலைஞரும் ஜேவும் குறிப்பிடாத்தை நான் மெ(வ)ன்மையாக கண்டிக்கிறேன்.

said...

//Sivabalan said...
சங்கராச்சாரியாரிக்கு இனிக்கும் தீபாவளியை பற்றி கலைஞரும் ஜேவும் குறிப்பிடாத்தை நான் மெ(வ)ன்மையாக கண்டிக்கிறேன்.
//

சிபா...!
சாமிகளுக்கு தீபவளி உண்டா ? அவர்களுக்கு எல்லா நாளும் பொன்னாளே !
பக்தர்களுக்கு மட்டுமே அந்நாளில் வாழ்த்துச் சொல்வார்கள் என நினைகிறேன் !

said...

நல்ல அப்ஷர்வேசனோடதான் வாழ்த்தறிக்கை தயாரிச்சு இருக்கீங்க. கூடிய சீக்கிரம் தமிழக அரசு சார்பா ஏதாவது பாராட்டு விழா(?) வைக்காம இருந்தா சரிதான்.

said...

மிக அருமையான, உண்மையான வாழ்த்துச் செய்திகளைத் தந்திருக்கிறீர்கள், கோவியாரே!

இதற்குள்ளும் புகுந்து குளிர் காய நினைத்தவர்களுக்கும் சரியான சவுக்கடி தந்திருக்கிறீர்கள்.

ரசித்த பதிவு!

என்ன, எங்க கேப்டனை நல்லா தமிழ் பேச விட்டிருக்கலாம்.
ஆனாலும் வருத்தமில்லை.

said...

கற்பனையான வாழ்த்துச் செய்திகளை விடுங்கள்
மூன்று பேர்களின் படமும் சூப்பராக உள்ளது!
எங்கே பிடித்தீர்கள்?

said...

//SK said...

9:57 PM
//

எஸ்கே ஐயா !

நான் சவுக்கடியும் கொடுக்கவில்லை ! சிக்கன்குனியா கொசுக்கடியும் கொடுக்கவில்லை !
பதிவே வெறும் கடிதான் !

கேப்டன் நல்ல தமிழ் பேசவேண்டும் என்று உங்களைப் போலவே நானும் ஆசைப் படுகிறேன் !

நீங்களே ரசித்தீர்கள் என்று சொன்னதற்கு மகிழ்ச்சி ! :)))

said...

//SP.VR.SUBBIAH said...
கற்பனையான வாழ்த்துச் செய்திகளை விடுங்கள்
மூன்று பேர்களின் படமும் சூப்பராக உள்ளது!
எங்கே பிடித்தீர்கள்?
//

ஐயா!
படங்கள் கூகுள் ஆண்டவர் உபயம் !
:))

said...

// வேந்தன் said...
நல்ல அப்ஷர்வேசனோடதான் வாழ்த்தறிக்கை தயாரிச்சு இருக்கீங்க. கூடிய சீக்கிரம் தமிழக அரசு சார்பா ஏதாவது பாராட்டு விழா(?) வைக்காம இருந்தா சரிதான்.
//

வேந்தன் ...!

நீங்கள் வேறு, தமிழக அரசுக்கு வேற வேலை நிறையா இருக்கு, தேர்தலில் புண்பட்டவங்களுக்கு மறந்து தடவனும், அடிச்சவங்களை தேடிப் பிடிக்கனும். போலிஸிடம் சொல்லி எப்.ஐ.ஆர் தயார் பண்ண சொல்லவேண்டும். இன்னும் எத்தனையோ இருக்கே !

:))

said...

தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை.....

இருந்தாலும் உங்களது வாழ்த்தினை படிக்கும்போது என் தலைவரே எனக்கு வாழ்த்து சொன்னமாதிரி இருந்தது....

தமிழ் வலைப்பூக்களின் கலைஞர் அண்ணன் கோவியார் வாழ்க!!! வாழ்க!!!

said...

//luckylook said...

அதிர்ஷ்ட பார்வையாரே !
கட்சித்தலைவர் என்ற முறையில் அவர் சொல்வதில்லை. ஆனால் தமிழக முதல்வர் என்ற முறையில் சொல்வது மரபு. முதல்வர் மரபை மீறமாட்டார் !

அப்பறம் luckylook said...
தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை.....

இருந்தாலும் உங்களது வாழ்த்தினை படிக்கும்போது என் தலைவரே எனக்கு வாழ்த்து சொன்னமாதிரி இருந்தது....

தமிழ் வலைப்பூக்களின் கலைஞர் அண்ணன் கோவியார் வாழ்க!!! வாழ்க!!!
ஹி ஹி எனக்கு பட்டம் பதவியெல்லாம் வேணாங்க லக்கியாரே ! அன்பு ஒன்றே போதும் !
:)))

said...

//முதல்வர் மரபை மீறமாட்டார் !//

அதனாலே தான் அவரு 60 வருஷமா குப்பை கொட்ட முடியுது :-)))

said...

// luckylook said...
//முதல்வர் மரபை மீறமாட்டார் !//

அதனாலே தான் அவரு 60 வருஷமா குப்பை கொட்ட முடியுது :-)))
//

லக்கி !
அவரு போட்ட குப்பையையும் சேர்த்துதானே சொல்கிறீர்கள் !
:))))

ஹி ஹி வேறு யாரும் வந்து உங்களை கவுக்கறுத்துக்குள்ள ... சான்ஸ் நான் பயன்படுத்திக் கொள்கிறேன்
:))

said...

தமிழக அரசியல் அறிக்கைகளை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !

said...

கேப்டன் சரவெடி சூப்பர்!! :))

G.K கலக்கல் வாழ்த்து சொல்லியிருக்கிங்க!

said...

sooper sir ..rasichu padichane..valthukal

said...

இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

said...

நல்ல காலம்; மும்மூர்த்திகள் வாழ்த்தோடு நிறுத்திக் கொண்டீர்கள்!

மற்ற தமிழக கட்சி/கோஷ்டித் தலைவர்களின் வாழ்த்து அறிக்கை எல்லாம் சொல்லியிருந்தீங்கன்னா...படித்துச் சிரிப்பதிலேயே தீபாவளி போய்விடுமே; அப்புறம் பட்டாசு எல்லாம் எப்ப வெடிக்கிறதாம்? :-))

GK, உங்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்!

said...

//மணியன் said...
தமிழக அரசியல் அறிக்கைகளை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !
//

வாங்க மணியன் !

உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!
:)

said...

// தம்பி said...
கேப்டன் சரவெடி சூப்பர்!! :))

G.K கலக்கல் வாழ்த்து சொல்லியிருக்கிங்க!
//

தம்பி அவர்களே!

அரசியல் வெடி கொளுத்தி போடுவதில் எப்போதும் ஆர்வம் உண்டு !

பாராட்டுக்கு நன்றி !
:)

said...

//கார்த்திக் பிரபு said...
sooper sir ..rasichu padichane..valthukal
//

கார்த்திக் பிரபு !
பாராட்டுக்கு நன்றி !
உங்களுக்கும் வாழ்த்துக்கள் !
:)

said...

//Boston Bala said...
இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
//

பா பா ...!
பா பா வாழ்த்தியல் பல மடங்கு ஆகியது
தீபாவளியின் மகிழ்ச்சி !

நன்றி !
:))