Sunday, October 08, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

உடல் உறுப்புகள் புனிதம் அடையுமா ?

வயிற்கு உணவில்லை என்றால்
ஜெகத்தினை அழித்திட
துணியாமல்,
உதிரத்தை விற்ற உழவன்
ஒருவனின் உதிரம் புனிதம்
அடைந்தது !

ம்...
உதிரம் சென்றது உயர்ந்தவர்
உடலுக்குள் ஆயிற்றே !

மாநகர தொழிலாளி
மானத்துடன் வாழ்வதற்கு
அவனிடம் இருந்த
மற்றொரு கிட்னியை
மகிழ்வுடன் விற்றான் !
அதே கிட்னி, சேர்ந்த இடம்
உயர்ந்தவரிடம்,
உயர்ந்தவர் சிறுநீரையும்
நன்றாகவே சுத்தம் செய்கிறதாம் !

பி.கு : நண்பர் சிவபாலன்
எலும்புக் கூட்டை வைத்து நல்ல செய்தி சொல்லியிருந்தார். அதன் பாதிப்பில் ஏற்பட்டது இது !

ஒரு டிஸ்கி :
உயர்ந்தவர் : உழைப்பால் உயர்ந்தவர் என்று எடுத்துக் கொள்க !

24 : கருத்துக்கள்:

said...

GK,

//உயர்ந்தவர் சிறுநீரையும்
நன்றாகவே சுத்தம் செய்கிறதாம் ! //

மிக அருமையாக சொன்னீங்க..

Excellent!!

நல்ல சிந்தனை...

நன்றி

said...

கோ.க,
நல்ல கவிதை.
கவிதையின் பொருளைப் புரிந்துகொண்டு இனியாவது மனிதனை மனிதனாகப் பார்க்கும் பண்பினை வளர்ப்போம்.

said...

நன்றாகச் சொன்னீர்கள்!

said...

அருமையாயன கவிதை...

said...

//தொழிலாளி மானத்துடன் வாழ்வதற்கு அவனிடம் இருந்த
மற்றொரு கிட்னியை மகிழ்வுடன் விற்றான்//

தெழிலாளியின் தன்மானத்தை வெளிச்சத்திற்கு கொண்டு செல்லும் ஆழம் நிறைந்த வரிகள் அழகு..

அதை சொன்ன விதமும் அருமை...

வாழ்த்துக்கள் GK

said...

கண்ணன்,

மனித ரத்தத்துக்கு மட்டும் ஜாதிக்கேத்தாப்பல வர்ணங்களை குடுத்திருந்தா நல்லாருந்திருக்கும்..

அப்புறம் பொதுவில ஜாதிய பத்தி பேசிட்டு ரத்தத்த வில குடுத்து வாங்கறப்போ ஜாதி பாக்காம இருக்கறது புடிச்சிரலாம் இல்லே..

கடவுள் ஜாதி பாக்காம விட்டதுதான் தப்புன்னு நினைக்கேன்.

நீங்க லிங்க் குடுத்த பதிவும் நல்லாருந்தது.. நன்றி.

said...

நல்லா இருக்கு சாமியாரே..!

said...

சிறப்பான செய்தி சொல்லும் நல்ல கவிதை. வாழ்த்துக்கள்

said...

//Sivabalan said...
மிக அருமையாக சொன்னீங்க..

Excellent!!

நல்ல சிந்தனை...

நன்றி //

சிபா...!
இந்த கவிதைக்கு கர்த்தா நீங்கள் தான் !
நன்றி !

said...

//வெற்றி said...
கோ.க,
நல்ல கவிதை.
கவிதையின் பொருளைப் புரிந்துகொண்டு இனியாவது மனிதனை மனிதனாகப் பார்க்கும் பண்பினை வளர்ப்போம்.
//

வெற்றி ...!
ஊதுகிற சங்கை எல்லோரும் சேர்ந்த்ஜு ஊதி வைப்போமே !
கருத்துக்களுக்கு நன்றி !

said...

//மணியன் said...
நன்றாகச் சொன்னீர்கள்!
//

மணியாக சொன்ன மணியன் அவர்களுக்கு நன்றி !

said...

//செந்தழல் ரவி said...
அருமையாயன கவிதை...
//

வாங்க ரவி...!
வாழ்த்துக்களுக்கு நன்றி!

said...

//கில்ட்டன் said...

தெழிலாளியின் தன்மானத்தை வெளிச்சத்திற்கு கொண்டு செல்லும் ஆழம் நிறைந்த வரிகள் அழகு..

அதை சொன்ன விதமும் அருமை...

வாழ்த்துக்கள் GK //

கில்ட்டன் அவர்களே ...!
தங்கள் பதிவுகளை இன்னும் படிக்கவில்லை !

அருமையாக கருத்துச் சொன்ன கில்ட்டன் அவர்களுக்கு நன்றி !

:)

said...

//tbr.joseph said...
கண்ணன்,

மனித ரத்தத்துக்கு மட்டும் ஜாதிக்கேத்தாப்பல வர்ணங்களை குடுத்திருந்தா நல்லாருந்திருக்கும்..

அப்புறம் பொதுவில ஜாதிய பத்தி பேசிட்டு ரத்தத்த வில குடுத்து வாங்கறப்போ ஜாதி பாக்காம இருக்கறது புடிச்சிரலாம் இல்லே..

கடவுள் ஜாதி பாக்காம விட்டதுதான் தப்புன்னு நினைக்கேன்.

நீங்க லிங்க் குடுத்த பதிவும் நல்லாருந்தது.. நன்றி.
//

ஜோசப் அய்யா...!

மிக மிக நன்றாக கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி !

உங்க ஜாதிக்கேத்தாப்பல வர்ணங்கள் நல்ல யோசனை ஒரு ஆபத்தும் இருக்கிறது- யார் யாரு சாதி மாறி பிறந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துவிட முடியும் !
:)

said...

//பூக்குட்டி said...
நல்லா இருக்கு சாமியாரே..!
//

வாங்க பூனைக்குட்டி !

அது என்ன சாமியாரே !
மனுசனுக்கு மனசில் 'ஆசை'யை கிளப்பி விட்டுவிடுவீர்கள் போல இருக்கே !
:))

said...

//சுல்தான் said...
சிறப்பான செய்தி சொல்லும் நல்ல கவிதை. வாழ்த்துக்கள்
//
சுல்தான் அய்யா !
நெகிழ்ச்சியான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
:)

said...

சங்கே முழங்கு.

கோவி.கண்ணன் ஐயா. யாருக்காக இந்த சங்கு முழங்குகிறது என்று அறிய ஆவல். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொன்னார்களே. அது இந்த சாதி என்பதற்கும் பொருந்தும்.

said...

இதெல்லாம் தெரியாத மூடர்களா மக்கள்.

தனக்கு வேண்டுமென்றால் எவ்வளவு பணம் கொடுத்தும் இதைப்பெற வெட்கப் படமாட்டார்.

ஆனால், தீட்டு, காசை அலம்பி வையி என்று சொல்லவும் கூச மாட்டார்கள்.

தொடர்ந்து சொல்லி வருவோம்.

குமரன் சொன்ன மாதிரி திருடர்கள் அனைவரும் திருந்தினால் தான் உண்டு.

நல்ல கவிதையும், சிந்தனையும், கோவியாரே.... இரவல் என்றாலும்!!

said...

//குமரன் (Kumaran) said...
சங்கே முழங்கு.

கோவி.கண்ணன் ஐயா. யாருக்காக இந்த சங்கு முழங்குகிறது என்று அறிய ஆவல். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொன்னார்களே. அது இந்த சாதி என்பதற்கும் பொருந்தும்.
//

குமரன்....!
குமரன் அவர்களே ! சங்கு ஊதவேண்டும் பேதங்களுக்கு !

சாதி ஒழியும், நிச்சயம் ஒழியும் சென்ற நூற்றாண்டைவிட சாதி ஒழிந்தே இருக்கிறது. சாதி பற்று மட்டுமே எஞ்சியிருக்கிறது. முன்பு அது மாற்று சாதியின் மீது வெறியாக இருந்தது.

வந்து கருத்து கூறியமைக்கு நன்றி !

said...

கண்ணன்,

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...

வாழ்த்துக்கள்

said...

//SK said...
இதெல்லாம் தெரியாத மூடர்களா மக்கள்.

தனக்கு வேண்டுமென்றால் எவ்வளவு பணம் கொடுத்தும் இதைப்பெற வெட்கப் படமாட்டார்.

ஆனால், தீட்டு, காசை அலம்பி வையி என்று சொல்லவும் கூச மாட்டார்கள்.

தொடர்ந்து சொல்லி வருவோம்.

குமரன் சொன்ன மாதிரி திருடர்கள் அனைவரும் திருந்தினால் தான் உண்டு.

நல்ல கவிதையும், சிந்தனையும், கோவியாரே.... இரவல் என்றாலும்!!
//

எஸ்கே அய்யா...!
நன்றாக உரைக்கும் படி, நச்சின்னு சொல்லியிருக்கிறீர்கள். உங்களைப் போல் நல்லெண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும்.

திருடர்களுக்கு தேள் கொட்டும் போது ஒருவேளை திருந்தலாம் !

பளிச் கருத்துக்கு நன்றி ! மற்றும் பாராட்டுக்கள் !

said...

//திருடர்களுக்கு தேள் கொட்டும் போது ஒருவேளை திருந்தலாம் !//

:))

said...

//SK said...
//திருடர்களுக்கு தேள் கொட்டும் போது ஒருவேளை திருந்தலாம் !//

:))
//
எஸ்கே ஐயா !

சீரியஸ் ஆக சொன்ன்னேன் என்று நினைத்தால் காமடி ஆக்கிட்டிங்களே !
சரி சேர்ந்து சிரிக்கிறேன் !
:)

said...

//ராம் said...
கண்ணன்,

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...

வாழ்த்துக்கள்
//

ராம்...!
பாராட்டுக்கு நன்றி !