Saturday, October 14, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நகராட்சித் தேர்தல் - நரகாசூரன் அவதாரம் !


பச்சை அம்மா நரகாசூரன் வதம் செய்வேன் என்றதை
மஞ்சள் துண்டு அய்யா ஏற்றுக்
கொண்டு அவதாரம் எடுத்து இருக்கிறார்
நகராட்சித் தேர்தலில் நரகாசூரனாக !

அன்றும் இன்றும் காவல் பூனைகளின்
கைதடிகளில் நசுங்குகிறது, நடுங்குகிறது
ஜனநாயகம் !

காராத்தே கைகளின் வழி அன்றும் இன்றும்
அதே தேர்தல் காட்சி !

கட்சிகளின் பெயரில் வெட்டிக் கொண்டாலும்
சிந்துவது தமிழன் இரத்தம் தானே !
பலிவாங்குவதற்கு என்றே தோற்றவருக்கு
அடுத்த தேர்தலில் வாய்பை
நாம் கொடுக்காமல் போய்விடுமோ என்ன ?

கருப்பாய் தோல் இருப்பதால் தமிழனுக்கு
சிறுமை இல்லை என்றும் !

தோல் தடித்துக் கொண்டே போவதல்,
சுரணையற்று போவதால் இழுக்கும்,
இழப்பும் உண்டு !

சிந்தீப்பீர் தமிழர்களே !
தேர்தல் காலம் தவிர்த்தும் !

6 : கருத்துக்கள்:

Sivabalan said...

கண்டிக்க தக்கது...கலைஞர் அரசு நல்ல முறையில் நடத்த தவறிவிட்டது

G.Ragavan said...

ஜெயலலிதா மேல் நம்பிக்கை இருந்ததேயில்லை. கருணாநிதி மேல் நம்பிக்கை போயே போச்சு. இப்ப இல்ல. சட்டமன்றத் தேர்தல்லையே. தேர்தல் முடிவுகளை விமர்சிக்கும் பொழுதே நான் சொன்னது அதுதான். அடப்போங்கய்யா.......

VSK said...

//கட்சிகளின் பெயரில் வெட்டிக் கொண்டாலும்
சிந்துவது தமிழன் இரத்தம் தானே !
பலிவாங்குவதற்கு என்றே தோற்றவருக்கு
அடுத்த தேர்தலில் வாய்பை
நாம் கொடுக்காமல் போய்விடுமோ என்ன ?//


பிச்சு உதறிட்டீங்க கோவியாரே!

அருமையான வரிகள்!

நீங்காத் தலைக்குனிவை ஏற்படுத்திய இவர்களை மன்னிக்கக்கூட மனம் வர மாட்டேன் என்கிறது!

மஞ்சள் துண்டையும், கராத்தேயையும் ஒருங்கே அரங்கேற்றி, இவர்கள் தோலை நன்கு உரித்துக் காட்டி இருக்கிறீர்கள்.

கோவி.கண்ணன் [GK] said...

//Sivabalan said...
கண்டிக்க தக்கது...கலைஞர் அரசு நல்ல முறையில் நடத்த தவறிவிட்டது
//

சிபா...!
குட்டும் போது குட்டவேண்டும்,
என்று என்னுடன் சேர்ந்து கருத்துக்களை பகிர்வதற்கு நன்றி !

கோவி.கண்ணன் [GK] said...

//G.Ragavan said...
ஜெயலலிதா மேல் நம்பிக்கை இருந்ததேயில்லை. கருணாநிதி மேல் நம்பிக்கை போயே போச்சு. இப்ப இல்ல. சட்டமன்றத் தேர்தல்லையே. தேர்தல் முடிவுகளை விமர்சிக்கும் பொழுதே நான் சொன்னது அதுதான். அடப்போங்கய்யா.......
//

ஜிரா...!

நாம் நேரிடியாக பாதிக்கப் படாதவரை இப்படித்தான் சொல்லுவோம், என்று சிலர் எனது முந்தைய பதிவுகளில் முன்பு அறிவுரை(?) கூறியுள்ளனர். ! உங்கள் கருத்துக்கு இதுபோல் விமர்சனங்களும் வரும் !
உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடே !

கோவி.கண்ணன் [GK] said...

//SK said... மஞ்சள் துண்டையும், கராத்தேயையும் ஒருங்கே அரங்கேற்றி, இவர்கள் தோலை நன்கு உரித்துக் காட்டி இருக்கிறீர்கள். //

எஸ்கே ஐயா ...!
அல்லது அகற்றுவதில் அரண்டது இல்லை !
:)