Tuesday, October 17, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

இருள் !



ஏதுமற்ற இருண்ட வானத்தை
ஒரு நாள் அண்ணாந்து பார்த்து,
இவ்வளவு பெரிய வானமாக இருந்தும்,
எல்லாம் சூனியமே என்று நினைத்தபோது
என் நீண்ட நினைவை கலைப்பது போல்
தோன்றியது அங்கே பிறைநிலவு !

நம்பிக்கை இன்மைக்கு என்ற கார்
இருளுக்குப் பின் எப்போதும்
இரவில் ஒரு அமாவாசை நிலவு போல
நம்பிக்கை மறைந்துதான் இருக்கிறது.

நம்மை சூழ்ந்த இருள் என்பது
ஒரு தற்காலிகம் என்று நம்பிக்கை வைத்து
உணர்ந்து கொள்ளும் போது
பிறை நிலாவாய் நம்பிக்கை
துளிர்விட்டு நம்பிக்கை
ஒளி வளர்ந்து பரவுகிறது !

10 : கருத்துக்கள்:

said...

பிறை நிலவெனும் நம்பிக்கையை வாழ்த்துவோம்.

தன்னம்பிக்கையே தகை சார்ந்தது.

தன்னம்பிக்கையே தெய்வ நம்பிக்கை.

said...

GK,

அருமை அருமை..

மூட நம்பிக்கை எனும் காரிருள் விலகி பகுத்தறிவு எனும் வெளிச்சம் பரவட்டும்..

நல்ல கவிதை.

நன்றி

said...

//நம்பிக்கை இன்மைக்கு // இன்மை ?

இருளில் நின்று நம்பிக்கை என்னும் நிலவுக்காக காத்திருக்காமல்,

வெளிச்சத்தை நோக்கி இன்றே பயணத்தை தொடங்குவோம்...!!!

said...

//நம்மை சூழ்ந்த இருள் என்பது
ஒரு தற்காலிகம் //
நல்ல நம்பிக்கை ஊட்டும் வாசகம்.

said...

///
பிறை நிலாவாய் நம்பிக்கை
துளிர்விட்டு நம்பிக்கை
ஒளி வளர்ந்து பரவுகிறது
///

நல்ல இருக்குங்க கவிதை.

இரண்ட - இருண்ட?
அந்நார்ந்து - அண்ணாந்து?

said...

//குமரன் (Kumaran) said...
பிறை நிலவெனும் நம்பிக்கையை வாழ்த்துவோம்.
தன்னம்பிக்கையே தகை சார்ந்தது.
தன்னம்பிக்கையே தெய்வ நம்பிக்கை.
//

குமரன் !
மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் !
தன்னம்பிக்கை இல்லாதோர்க்கு எந்த நம்பிக்கையும் கை கொடுக்காதுதான் !

said...

//Sivabalan said...
GK,
அருமை அருமை..
மூட நம்பிக்கை எனும் காரிருள் விலகி பகுத்தறிவு எனும் வெளிச்சம் பரவட்டும்..
நல்ல கவிதை.
நன்றி
//

சிபா...!
தீபாவளி நேரத்தில் அறிவு வெளிச்சம் கிடைக்க வாழ்த்துகிறீர்கள் !
நன்றி !

said...

// செந்தழல் ரவி said...
//நம்பிக்கை இன்மைக்கு // இன்மை ?

இருளில் நின்று நம்பிக்கை என்னும் நிலவுக்காக காத்திருக்காமல்,

வெளிச்சத்தை நோக்கி இன்றே பயணத்தை தொடங்குவோம்...!!!
//

ரவி !
கருத்துக்கு நன்றி !
இருண்ட வானத்தில் பிறைநிலவு (துளிராய் நம்பிக்கை) தானே வெளிச்சம் !

said...

//ILA(a)இளா said...
நல்ல நம்பிக்கை ஊட்டும் வாசகம்.
//

இளா !
பாராட்டுக்கு நன்றி !

said...

//குமரன் எண்ணம் said...
நல்ல இருக்குங்க கவிதை.

இரண்ட - இருண்ட?
அந்நார்ந்து - அண்ணாந்து? //

சின்ன குமரன்..!

பாராட்டுக்கும்...கூடவே பிழை சுட்டியதற்கும் நன்றி !
சரிசெய்துவிட்டேன் !