Friday, October 06, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மரண தண்டனை, கோட்சே, இஸ்லாம், ஒரிசா பாதிரியார்!

டெல்லி பாராளுன்ற குண்டு வீச்சு தீவிரவாதம் தொடர்ந்து நடந்த விசாரணையில் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய குற்றவியல் சட்டத்தின் நடைமுறை. இதை வைத்து கும்மி அடிப்பது எப்படி ?

இருக்கவே இருக்கு பழசு ! கிளறுவோம் என்று கிளம்பி தூள்பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்று இந்த தூக்குதண்டனையை வைத்து எதோ சாதனை புரிந்ததாக, நீதி நிலைநாட்டப்பட்டதாக பக்கம் பக்கமாக எழுதி தள்ளுபவர்கள், முன்பு கோட்சேவையும், ஒரிசா பாதிரியை எரித்தவர்களை உயர்வாக சொல்லியவர்கள் தான். ஏன் இந்த நிலைப்பாடு ?

தீர்ப்பு தண்டனை என்றால் அங்கு குற்றவாளியும் அவன் கேடுகெட்ட செயலும் தானே தெரியவேண்டும் ! ஆனால் அப்படி தெரிகிறதா ?

எவர் மதத்தை துற்றலாம், இதில் எந்த அளவுக்கு குளிர்காயலாம் என்பற்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது வாடிக்கை ஆகிவிட்டது. இத்தகைய ஜல்லியடிப்புகள் இது போல் சூழல்களில் தொடர்ந்து நடந்தேறுகிறது. இதில் இவர்கள் சொல்வதை மாற்று மதத்தினர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா ? இவர்கள் ஞாயமாக நடந்து கொள்கிறார்களா ? என்பதைப் பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படுவதில்லை.

குற்றவாளி குற்றவாளியே ! அவன் குல்லா போட்டிருந்தானா, நாமம் போட்டிருந்தானா, சிலுவை போட்டிருந்தானா என்று ஆராய்ந்து மதங்களை தூற்றத் துணிவது இந்திய இறையாண்மையையோ, நீதித்துறையையோ தூக்கிப் பிடிக்கப் போகிறதா என்றால் அது நிச்சயம் இல்லை.

பெரும்பாலான மரண தண்டனை குறித்தப் பதிவுகள் மன அரிப்பை தீர்த்துக் கொள்வதாக இருக்கிறது.

குற்றவாளி எந்த மதம் / இனம் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்கு கிடைக்கும் மரண தண்டனையால் அவன் திருந்தப்போவதில்லை. அவனுக்கு அது முற்றுப் புள்ளியாக இருக்கும், அவன் விதைத்த வித்துகளால் இழி செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். கொடுமை செய்ய துணிபவர்கள் மரண தண்டனைக்கு துணிபவர்கள் அல்ல. அப்பாவிகளை கொன்றோம் என்ற சிறு உறுத்தல் கூட இல்லாமல், மாவீரர்கள் போல தூக்கு தண்டனைக்கு சிரித்துக் கொண்டே செல்கிறார்கள்.

அரசாங்கம் கொடுக்கும் தண்டனையும் அவனுடைய கொலையில் சேர்ந்த மற்றொமொரு கொலைதான். இதற்கு பதில் சாகும் வரை அந்தமான் சிறை போன்று எதோ சிறையில் ஆயுள் முடியும் வரை அடைத்து சாகும் வரை ஏன் இப்படி செய்தோம் என்று வருந்த வைத்தாலாவது அவனைப் பார்த்து மற்றவர்கள் திருந்தலாம்.

கொலைக்கு கொலை என்பது (மரண தண்டனை) தீவிரவாதிகளின் செயல் போன்றது.

31 : கருத்துக்கள்:

said...

தண்டனை என்று வந்து விட்ட போது, குற்றவாளி செய்தது குற்றம்தான் என நிரூபிக்கப் பட்டு விட்ட போது, அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களை மதிப்பவனே அந்நாட்டின் மகன்.

அவன் புனிதன் ஆக விரும்பினால் பதிவெழுதிக் கொண்டு இருக்கக் கூடாது.

அதை மாற்ற இயலும் அரசியலில் புகுந்து, அல்லது அதற்கான விழிப்புணர்ச்சி இயக்கத்தை ஆரம்பித்து, சட்டத்தை எதிர் கொள்ளவேண்டும்.

மாற்ற முயல வேண்டும்.

அதற்கான துணிவு இல்லையா, பேசாமல் எந்த நாட்டில் மரணதண்டனை இல்லையோ அங்கு போய் குடியேற வேண்டும்.

மாறாக இது போன்ற பதிவுகள் மூலம் தன் கருத்தைத் தெரிவிப்பது, அதுவும் ஒரு ஜல்லியடிப்பே.

ஒரு நாட்டின் சட்ட திட்டத்தை மதிப்பவனே அதன் உண்மையான பிரஜை.

மற்றவர்கள் கூறாமல் சந்நியாசம் கொள்ளலாம்.

யாரும், அந்த அரசும் கூட, தடுக்க மாட்டார்!

இது என் கருத்து.

தவறாக நினைக்க வேண்டாம்.

//பெரும்பாலான மரண தண்டனை குறித்தப் பதிவுகா மன அரிப்பை தீர்த்துக் கொள்வதாக இருக்கிறது.//

இதுவும் அப்படித்தான் இருக்கிறது.

//தீர்ப்பு தண்டனை என்றால் அங்கு குற்றவாளியும் அவன் கேடுகெட்ட செயலும் தானே தெரியவேண்டும்//

சட்டம் அதை மட்டும்தான் பார்க்கிறது.
மற்றவர்கள் தான் வேறு விதமாய்த் திரிக்கிறார்கள்.


//குற்றவாளி எந்த மதம் / இனம் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்கு கிடைக்கும் மரண தண்டனையால் அவன் திருந்தப்போவதில்லை.//

ஒன்றை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
குற்றத்திற்குத்தான் தண்டனை. குற்றவாளி அதைச் செய்ததினால், சட்டதால்பிடிபட்டதால் அதை அனுபவிக்கிறான்.

மரண தண்டனையாலேயே திருந்தப் போவதில்லை, தூக்கு மேடைக்கும் அவன் சிரித்தே செல்கிறான் என்று சொல்லிவிட்டு, அவன் வருந்துவான் ஆயுள் சிறையில் என்று எதிர்பார்ப்பது பேதைமை.

said...

எஸ்கே ஐயா !

நடப்புகளைப் பார்த்து என் கருத்தை நான் சொன்னேன்.

உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள்.

பின்னூட்டத்திற்கு நன்றி !

said...

மங்களூரில் மதக் கலவரம், மேலும் கர்நாடகாவில் ஒரு இடத்தில் 1975க்குப் அப்புறமாக ஒரு மசூதி/கோயில் பிரச்சனை இருக்கும் இடத்தில் ஒரு விழா நடத்த கூட்டணி ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தீவிரம். பா.ஜ.க தலைவர் இதனை எதிர்பார்த்துதான் மக்கள் எங்களை தேர்தெடுத்திருக்கிறார் என்று பேட்டி. எதை எதிர்பார்த்து கலவரங்களை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தா?

இவர்கள் இது போல என்றால் அறிவியல் பூர்வமாக தங்கள் மார்கங்களை தேடல்களை நெறிபடுத்திக் கொள்ள மாட்டோம் எங்கள் மார்க்கம் சொல்லும் படி தான் எல்லாமே இருக்கிறது இருக்க வேண்டும் என்று சிலர்.

கலி முத்திப் போச்சு பூமியில் மனித குலம் அழியும் காலம் இதோ வந்திடுச்சு.

said...

//குமரன் எண்ணம் said... கலி முத்திப் போச்சு பூமியில் மனித குலம் அழியும் காலம் இதோ வந்திடுச்சு.//

குமரன் அவர்களே...!
மனித குலம் அழியும் காலம் அல்ல !
மதங்கள் அழியும் காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன் !

said...

"குமரன் அவர்களே...!
மனித குலம் அழியும் காலம் அல்ல !
மதங்கள் அழியும் காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன் "

நம்பிக்கையுடன் இருப்போம்.

பாலா

said...

இந்த பெரும்பாலும் நான் எஸ்கே அவர்களது கருத்துடன் ஒத்த கருத்தே கோண்டுள்ளேன்...

//அரசாங்கம் கொடுக்கும் தண்டனையும் அவனுடைய கொலையில் சேர்ந்த மற்றொமொரு கொலைதான். இதற்கு பதில் சாகும் வரை அந்தமான் சிறை போன்று எதோ சிறையில் ஆயுள் முடியும் வரை அடைத்து சாகும் வரை ஏன் இப்படி செய்தோம் என்று வருந்த வைத்தாலாவது அவனைப் பார்த்து மற்றவர்கள் திருந்தலாம்.//

இன்றைய உலகில் இந்த ஆயுள் சிறை என்பதெல்லாம் சரி இல்லை....சுப்ரிம் கோர்ட் வரையில் சென்று குற்றம் ருசு ஆகிவிட்டதென்றால் அது உடனடியாக நிறைவேற்ற படவேண்டும்....அல்லாவிடில் பயம் போகும்....தண்டனையாளர் உள்ளிருந்து தனக்கு குழு அமைத்து அவனது குற்றத்தினை அதிக அளவில் செய்ய துண்டுவது நடக்கும், நடக்கிறது.

said...

//தண்டனை என்று வந்து விட்ட போது, குற்றவாளி செய்தது குற்றம்தான் என நிரூபிக்கப் பட்டு விட்ட போது, அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களை மதிப்பவனே அந்நாட்டின் மகன்//

குற்றவாளிக்கு அவன் தன் வழக்கைச் சொல்ல சரியான வாய்ப்பளிக்கப் படவில்லையென்றாலும் அந்த தீர்ப்பு சரிதானா எஸ்.கே.?

தடாவே சரியில்லை என நீக்கப்பட்ட பிறகு அதனடிப்படையிலுள்ள தீர்ப்பு சரியானதாகுமா?

said...

நம்ம நீதி மன்றங்கள் கோவில் என்றும் அங்கே கடவுள்கள் நீதி வழங்குகிறார்கள் என்றும் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம் ஆனால் காசு வாங்கிக்கொண்டு கலாமுக்கே வாரண்ட் பிறப்பிக்கும் லட்சணத்தில்தான் நீதி ஓடிக்கொண்டிருக்கிறது.

மரணதண்டனைன்னா ஒரு ஆளைக் கொல்கிற விஷயம். அதுவும் ஒரு சமூகமாகச் சேர்ந்து ஒரு ஆளைக் கொல்கிற விஷயம். அந்த ஆள் முற்றிலும் அந்த தண்டனைக்குரியவராயிருக்கணும் மட்டுமல்லாமல் அவரைப் பொல குற்றம்புரிந்தவர்களும் அப்படியே தண்டிக்கப்பட்டிருக்கணும்.

நீதிமன்றங்களிலும் இரத்தமும் (இரத்த அழுத்தமும்) சதையுமுள்ள மனிதர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை நிருபிக்கின்றது இந்த வழக்கு.

நல்ல பதிவு GK.

said...

GK,

மிக அருமையான பதிவு.

நீங்கள் சொல்வதுபோல் பாதிரியார் கொலை செய்தவனை கிட்டதட்ட புனித பிம்பமே ஆக்கிவிட்டார்கள் பிற புனித பிம்பங்கள்..

இப்பதிவு சம்பந்தமாக பிரபு ராஜ துரை நன்றாக எழுதியுள்ளார். அவர் கருத்து ஏற்புடையதாக இருக்கிறது.

நன்றி

said...

//bala said...
நம்பிக்கையுடன் இருப்போம்.

பாலா //

பாலா,
நன்றி !

said...

//இன்றைய உலகில் இந்த ஆயுள் சிறை என்பதெல்லாம் சரி இல்லை....சுப்ரிம் கோர்ட் வரையில் சென்று குற்றம் ருசு ஆகிவிட்டதென்றால் அது உடனடியாக நிறைவேற்ற படவேண்டும்....அல்லாவிடில் பயம் போகும்....தண்டனையாளர் உள்ளிருந்து தனக்கு குழு அமைத்து அவனது குற்றத்தினை அதிக அளவில் செய்ய துண்டுவது நடக்கும், நடக்கிறது.

11:58 PM
//

மெளஸ் !
படைப்பே இறைவன் சித்தம் என்கிற நம்பிக்கையில், இறப்பை மனிதன் தீர்மாணிபது மட்டும் என்ன ஞாயாம் ?

பின்னூட்டத்திற்கு நன்றி !

said...

//சுல்தான் said...
குற்றவாளிக்கு அவன் தன் வழக்கைச் சொல்ல சரியான வாய்ப்பளிக்கப் படவில்லையென்றாலும் அந்த தீர்ப்பு சரிதானா எஸ்.கே.?

தடாவே சரியில்லை என நீக்கப்பட்ட பிறகு அதனடிப்படையிலுள்ள தீர்ப்பு சரியானதாகுமா? //

சுல்தான் ஐயா...!
நன்றி !

said...

//சிறில் அலெக்ஸ் said...
நம்ம நீதி மன்றங்கள் கோவில் என்றும் அங்கே கடவுள்கள் நீதி வழங்குகிறார்கள் என்றும் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம் ஆனால் காசு வாங்கிக்கொண்டு கலாமுக்கே வாரண்ட் பிறப்பிக்கும் லட்சணத்தில்தான் நீதி ஓடிக்கொண்டிருக்கிறது.
//

சிறில் ...!
நீதி மன்றம் வளைந்து கொடுத்து நிதி மன்றம் ஆகிவிட்டது !
:)))

said...

// Sivabalan said...
GK,

மிக அருமையான பதிவு.

நீங்கள் சொல்வதுபோல் பாதிரியார் கொலை செய்தவனை கிட்டதட்ட புனித பிம்பமே ஆக்கிவிட்டார்கள் பிற புனித பிம்பங்கள்..

இப்பதிவு சம்பந்தமாக பிரபு ராஜ துரை நன்றாக எழுதியுள்ளார். அவர் கருத்து ஏற்புடையதாக இருக்கிறது.

நன்றி
//

சிபா..!
பாராட்டுக்கு முதலில் நன்றி. நிங்கள் சுட்டிய பதிவை இன்னும் படிக்கவில்லை. படிக்கிறேன். மீண்டும் நன்றி !

said...

சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என நினைக்கிறேன், திரு. சுல்தான்.

தடா நீக்கப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் தண்டனை அனுபவித்தவர்களும் வெளியில் வந்தது தெரியுமில்லையா?

அதேதான் பொடாவுக்கும் நிகழ்ந்தது.

ஒரு சட்டம் அமலில் இருக்கும் வரை அது சட்டமே.

வாய்ப்பு கொடுக்கவில்லை, துன்புறுத்தி வாக்குமூலம் வாங்கப் பட்டது என்பதெல்லாம் ஒரு வாதம்தான்.

நீங்களோ, நானோ நேரில் இருந்து பார்க்கவில்லை.
இந்தியா, பாக். போன்ற நடுகளில் விசாரணைக் கைதிகள் எப்படி நடத்தப் படுவார்கள் என்பது நாம் எல்லாரும் அறிந்த ஒன்றே.

எனவே, அதில் குறை கண்டு பயனில்லை.

உடனடி நியாயம் என தீவிரவாதிகள் செய்வதற்கு இது எவ்வளவோ மேல்.

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், இதுவேதான் மோடி, அப்பாவி ரயில் பயணிகளை எரித்தவர், கோவை குண்டு வைத்தவர் போன்றோரின் விஷயத்திலும் என் நிலைப்பாடு.

அப்பாவி உயிர்களை வேறொரு காரணம் காட்டிக் கொல்பவர்கள் அனைவரும் தேசத் துரோகிகளே!

அழைத்ததற்கு நன்றி.

said...

//கொலைக்கு கொலை என்பது (மரண தண்டனை) தீவிரவாதிகளின் செயல் போன்றது.
//
Debatable !!! Good post, nevertheless !

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html

said...

//SK said... மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், இதுவேதான் மோடி, அப்பாவி ரயில் பயணிகளை எரித்தவர், கோவை குண்டு வைத்தவர் போன்றோரின் விஷயத்திலும் என் நிலைப்பாடு.//

எஸ்கே ஐயா...!
சுல்தான் ஐயாவுக்காக வந்து மீண்டும் மறுமொழி யிட்டதற்கு நன்றி !

மேற் கூறிய கருத்தும் நடுநிலமையுடன் சொல்லப்பட்டு இருக்கிறது பாராட்டுக்கள்.

பிறப்பு / இறப்பு இவற்றை இறைவன் தீர்மாணிக்கிறான் என்று நம்புபவர்கள் கூட மனித சட்டத்தின் வழி செயல்படும் மரண தண்டனையை ஏற்றுக் கொள்வது எனக்கு புரியாத புதிர் !

said...

// enRenRum-anbudan.BALA said...
//கொலைக்கு கொலை என்பது (மரண தண்டனை) தீவிரவாதிகளின் செயல் போன்றது.
//
Debatable !!! Good post, nevertheless !

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html
//

பாலா...!

சுட்டிக்கும், கருத்துக்கும் நன்றி !

said...

பொடாவிலும் தடாவிலும் தண்டணை அனுபவிப்பவர்கள் சிலர் வெளியில் வந்திருக்கலாம்.
அந்த அடிப்படையில் உள்ளே வைக்கப்பட்டவர்கள் இன்னும் விசாரணைக் கைதிகளாய் நீடித்துக் கொண்டிருக்கிற அவலமும் இங்குண்டு எஸ்கே ஐயா.

மற்ற சட்டங்களினடிப்படையில் போலீஸில் அவர்களது வன்முறைக்கு பயந்து சொல்லும் வாக்குமூலங்கள் குற்றவாளிக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது. பொடா, தடா போன்ற ஆள் தூக்கி சட்டங்களில் அப்படியில்லை.

சட்டமே தவறென்று ஒழிக்கப்பட்ட பின் அச்சட்டத்தின் அடிப்படையிலான நீதி சரியா? தவறா?

//பிறப்பு/ இறப்பு இவற்றை இறைவன் தீர்மாணிக்கிறான் என்று நம்புபவர்கள் கூட மனித சட்டத்தின் வழி செயல்படும் மரண தண்டனையை ஏற்றுக் கொள்வது எனக்கு புரியாத புதிர்//

விதி இறைவன் கையிலென்றாலும் அதை நடைமுறைப்படுத்துவது உலகிலுள்ளவர்களைக் கொண்டுதானே.

விதியை நம்பவேண்டும். ஆனால் அதை நினைத்துக் கொண்டு செயல்படாமல் இருக்கக் கூடாது என்பது இஸ்லாமிய கோட்பாடு. விதி மிகச் சிக்கலான subject.

said...

//சுல்தான் said... விதி இறைவன் கையிலென்றாலும் அதை நடைமுறைப்படுத்துவது உலகிலுள்ளவர்களைக் கொண்டுதானே.//

சுல்தான் ஐயா...!
தண்டனைகள் நாட்டின் அடிப்படை சட்டத்தில் அல்லவா இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒரே குற்றங்களுக்கு வேறு மாதிரியான தண்டனைகள். உலகிலுள்ளவர்கள் ஒன்று போல் இல்லையே. கொடியவர்கள் கையில் எடுதுக்கொள்ளும் கொலையை அரசாங்கமும் செய்தால் கொலைதான். நான் இராணுவ நடவடிக்கையையோ, பாதுகாப்பு அச்சுறத்தலில் நடைபெறும் கொலையையோ தவறு என்று சொல்லவில்லை.

நீதிமன்றம் எனப்படும் மக்கள் மன்ற நடவடிக்கை மூலம் மரணதண்டனை என்பது உறுத்தலாகவே இருக்கிறது.

மனம் வருந்தி, நல்லதை ஏற்றுக் கொள்வோர்களுக்கு இறைவேதத்தில் பாவ மண்ணிப்பு இருக்கும் போது, மனிதன் மரணதண்டனையை செயல் படுத்தல் எங்ஙனம் ஞாயம் ?

said...

கொலைக்கு கொலையே தண்டணை என்பதன் மூலம் மனித சமூகம் நல் வழியில் வாழ வழியிருக்கிறது. ஒரு கொலைக்குற்றவாளியை விட்டுக் கொடுப்பதால் முழு மனித சமுதாயத்துக்கு நன்மையென்றால் - இனி பல கொலைகள் தவிர்க்கப் படுமென்றால்- அது சிறந்ததுதான் என நான் ஏற்கிறேன்.

//மனம் வருந்தி, நல்லதை ஏற்றுக் கொள்வோர்களுக்கு இறைவேதத்தில் பாவ மண்ணிப்பு இருக்கும் போது,//
'நாம் இறைவனுக்கு மற்றும் தெரியாமல் நமக்கு நாமே செய்து கொண்ட தவறுகளுக்கு இறைவனிடம் வருந்தி பாவ மன்னிப்பு பெற முடியும். ஆனால் மற்ற மனிதர்களுக்கு நாம் செய்த அநீதியை அம்மனிதர்கள் மன்னிக்காத வரை இறையும் மன்னிப்பதில்லை' என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாய் எனக்குத் தெரிகிறது.

said...

அப்சலுக்கு வக்கில் வைத்துகொள்ள விருப்பமில்லை என்றால் அதற்க்கு யார் என்ன செய்ய முடியும்?

நீங்களாகவே வக்கீல் வைத்துகொள்ள மாட்டீர்கள், பின்னர் வக்கீல் இல்லாமல் விசாரித்து தீர்ப்பி சொல்லிவிட்டீர்கள் என்று ஜல்லியடிப்பது முட்டாள்தனமான ஒரு தமாஷ்.

//பெரும்பாலான மரண தண்டனை குறித்தப் பதிவுகள் மன அரிப்பை தீர்த்துக் கொள்வதாக இருக்கிறது.//

எதற்க்கு இந்த பன்னையார்த்தனம்?

யார் யார் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ளகூடிய அளவு சக்திபெற்றவர்களாக இருப்பீர்கள் என்றால் மகிழ்ச்சி.

//அவனுக்கு கிடைக்கும் மரண தண்டனையால் அவன் திருந்தப்போவதில்லை. //

அய்யா சாமி செத்த பிறகு எப்படி திருந்துவார்களாம். யோசித்து பாருங்கள்.
இது ஒரு deterrant மட்டுமே.

தண்டனை குற்றவாளி திருந்த அளிக்கபடும் வாய்ப்பு என்று நீங்கள் நினைத்து கொண்டு இருந்தால் அந்த என்னத்தை மாற்றிகொள்ளுங்கள்.

//கொலைக்கு கொலை என்பது (மரண தண்டனை) தீவிரவாதிகளின் செயல் போன்றது. //

சுத்தமாக யோசிக்காமல் எழுதியுள்ளீர்கள் என்று தான் சொல்லவேண்டும்.

தீவிரவாதிகள் நீதிமன்றம் அமைத்து விசாரனை நடத்தி, கருனை மனு போட அனுமதியளித்து எல்லா வாய்ப்புகளும் வழங்கபட்ட பின்னர் தான் கொலை செய்கிறார்களா என்ன?

எனது மனிப்பூர் தோழியின் தந்தையை அப்படியெல்லாம் செய்த மாதிரி தெரியவில்லை. ஐ.சி.814 விமான கடத்தலின் போது செத்த ரூபின் கத்தியாலுக்கு நீதிமன்றம் அமைத்து விசாரனை நடத்தி தண்டனை கொடுத்தார்களா என்ன?

ஒருத்தனை கொலை செய்யவில்லையென்றால் இன்னும் பத்து அப்பாவி மக்களை கொன்றுவிடுவான் என்றால் அந்த கொலையை செய்ய நான் தயார்.

கடுமையாக விமர்சித்து இருந்தால் மன்னிக்கவும்.

திட்டமிட்ட சதி செய்து நாட்டையே அழிக்க துடிக்கும் ஒரு கூட்டத்தினருக்கு வக்காலத்து வாங்கிகொண்டு, மரன தண்டனையயும் தீவிரவாதிகளின் கொலைகளையும் ஒப்பிடுவது தீவிரவாதிகளால் நேரடியாக பாதிக்கபட்டவர்களுக்கு எத்தனை வலி ஏற்படுத்தும் என்பது என்றுமே உங்களை போன்ற utopian "சிந்தனையாளர்களுக்கு" புரிந்ததுகிடையாது.

அவன் அவனுக்கு வந்தால் தான் தெரியும் என்பார்களே...அது மாதிரி.

கொஞ்சம் வேளியே சென்று உலகை பாருங்கள்.

said...

//அவன் அவனுக்கு வந்தால் தான் தெரியும் என்பார்களே...அது மாதிரி.

கொஞ்சம் வேளியே சென்று உலகை பாருங்கள். //

சமுத்திரா அவர்களே...!
வெளியில் சென்று பார்த்து வந்தேன். விருமாண்டி சொன்னதைத் தான் பிடித்து இருந்ததால் நானும் சொன்னேன் ! சண்டியராக சொல்லவில்லை !

கருத்துக்கு நன்றி...!

said...

//நான் இராணுவ நடவடிக்கையையோ, பாதுகாப்பு அச்சுறத்தலில் நடைபெறும் கொலையையோ தவறு என்று சொல்லவில்லை.//
ராணுவத்தினர் செய்யும் கொலையை ஒத்துக்கொள்ளும் நீங்கள், நீதிமன்றங்கள் கொடுக்கும் தண்டனையை எதிர்ப்பது முரண்பாடாக உள்ளது. இதுவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நிகழும் கொலைதான்.

தற்காப்புக்காக கொலை செய்வது எப்படி சரியோ, இதுவும் அது போலதான். அப்சலை வெளியில் விடும்போது இப்போது தவறிய அவனது ஆப்ரேஷன் அடுத்தமுறை சக்ஸசாகலாம். அல்லது இதைப்பார்த்து தீவிரவாதிகளுக்கு உதவ முன்வருபவர்களுக்கு இனி பயமே இருக்காது. எப்படியானாலும் அப்சல் தண்டனைக்குறைப்பு, இன்னும் நிகழவிருக்கும் தீவிரவாதிகளின் கொலைகளின் எண்ணிக்கையை கூட்டவே உதவும்.

said...

ரியோ !

ரியோ தவறோ ... உங்கள் கருத்துக்கு நன்றி !

said...

தண்டனை மீதான பயமே சமூகத்தில் குற்றங்களை குறைக்கும்...

சரியாக விசாரிக்கவில்லையா... ஆமாம் அய்யா, உங்களுக்கு எதிரான தீர்ப்பு வந்தாம் நீதி விசாரணை ஒழுங்காக நடக்கவில்லை என்று கூசாமல் சொல்லிவிடுவீர்கள்...

// பாதிரியார் கொலை செய்தவனை கிட்டதட்ட புனித பிம்பமே ஆக்கிவிட்டார்கள் பிற புனித பிம்பங்கள்..//

யாரய்ய செய்தது.. எனக்கு தெரிந்து ஒரு பதிவு கூட வரவில்லை.. இப்போது தேச துராகிகளால் கஷ்மீரில் நடத்தப்படுவது போல் போராட்டம் நடக்கவில்லை.. எந்த முதல்வரும் அவனை விடுதலை செய்ய கோரவில்லை...

GK... கொஞ்சம் யோசியுங்கள்... அடுத்தது 150 பேரை கொன்ற பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கு வரும், அதிலும் யாரவது ஒரு அப்சலுக்கு தூக்கு வரும்.. அதற்கும் இதே போல் பதிவு போட்டு வக்காலத்து வாங்கவும்..

தனக்கு இழப்பு ஏற்படாத வரையில் இது போல் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம்.. இதெல்லாம் இந்தியாவின் தலைவிதி...

said...

என்னுடைய கடைசி பின்னூட்டத்தில் 'கொலைக்குற்றவாளியை விட்டுக் கொடுப்பதால்' என்பதை புரிவதிலே பிழை ஏற்படும் என்பதால் 'கொலை செய்து பழி தீர்ப்பதால்' என்று திருத்தி வாசிக்கவும்.

said...

ஒரு ஊர்ல ஒருத்தன் தன் மருமகள கற்பழிச்சுட்டான்.
அவனுக்கு ஸரியத் குடுத்த தண்டனை என்னனு உலகத்துக்கே தெரியும்.

பாக்கிஸ்தானுல ஒரு பொண்ணு M.A பாடிச்சதுக்கா கொடுக்கபட்ட தண்டனை என்னனு தெரியுமா?..

ஸரியத்தவிட பொடா தாடா கீழ்தரமானது இல்ல.

said...

//Nakkiran said... தனக்கு இழப்பு ஏற்படாத வரையில் இது போல் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம்.. இதெல்லாம் இந்தியாவின் தலைவிதி... //

நக்கீரன் ஐயா ...!

தானே பாதிப்பு அடைந்திருந்தாலும் யாரும் அதையே நினைத்துக் கொண்டிருப்பதில்லை !

கோட்சேவை இன்னும் வாழ்த்திக் கொண்டிருப்பதும் இந்தியாவின் தலையழுத்து தானே !

said...

// சுல்தான் said... 'கொலை செய்து பழி தீர்ப்பதால்' என்று திருத்தி வாசிக்கவும். //

இரண்டாம் முறையும் வந்து கருத்து தெரிவித்த அருமை சுல்தான் ஐயாவிற்கு நன்றி !

said...

//மணியன்.பே.க.சு said...
ஒரு ஊர்ல ஒருத்தன் தன் மருமகள கற்பழிச்சுட்டான்.
அவனுக்கு ஸரியத் குடுத்த தண்டனை என்னனு உலகத்துக்கே தெரியும்.

பாக்கிஸ்தானுல ஒரு பொண்ணு M.A பாடிச்சதுக்கா கொடுக்கபட்ட தண்டனை என்னனு தெரியுமா?..

ஸரியத்தவிட பொடா தாடா கீழ்தரமானது இல்ல.
//

மணியன்.பே.க.சு அவர்களே ...!
கருத்துக்கு நன்றி !