Tuesday, October 24, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஜெ - கேப்டன் !

ஒருவர் பெரிய ஆள் ஆகவேண்டுமா ? அல்லது பொதுமக்களிடம் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமா ? எல்லோருடைய கவனத்தையும் கவர வேண்டுமா ? அரசியல் வாதிகள் நமக்கு சொல்லித் தருவது மாற்றுக் கருத்து உடையவரை தூற்றுவது.

தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகாலமாக நடந்துவருவது இது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் காமராஜர் தூற்றப்பட்டார். ஆனால் விமர்சனங்கள் கீழான நிலையில் இல்லை. ஆனால் இன்றைய அரசியலில் நடப்பதோ கேடுகெட்ட செயல்கள்.

தான் வளர மாற்றுக் கருத்துடையவரை மட்டமாக விமர்சிப்பது என்ற ஒரு வழியையே தமிழக அரசியல் வாதிகள் பயன்படுத்துகிறார்கள், உதிர்ந்த ரோமம், வைப்பாட்டி , கூவத்தில் தூக்கி எறிவேன் என்ற ரீதியில் பண்பாடற்ற வசை மொழிகளால் விளம்பரம் தேடிக் கொள்கின்றனர்.

புதிதாக கட்சி ஆரம்பித்த கேப்டன் விஜயகாந்த் அதற்கு தானும் விதிவிலக்கு அல்ல என்பது போல் தன்னை குடிகாரன் என்று மறைமுகமாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதாவை ஒரு மூத்த அரசியல் வாதி, மும்முறை முதல்வராக இருந்தவர் என்றும் பாராமல் 'எனக்கு பக்கத்தில் இருந்து ஊற்றி கொடுத்தாரா ?' என்று எதிர் கேள்வி எழுப்பியிருக்கிறார். தான் தமிழகத்தின் விடிவெள்ளி என்று கூறி வாக்கு அறுவடை செய்யும் இவர் மாற்று அரசியல் கட்சித் தலைவர்களை பண்பாடற்ற முறையில் விமர்சிப்பது இவருக்கு வீழ்ச்சியைத் தரும். முன்பு போல் மக்கள் கண்ணை மூடிக் கொண்டு ஓட்டு போடுவதில்லை. பேச்சின் தராதரம் பார்கின்றனர். வைகோ விசயத்தில் மக்கள் அவரை புறக்கணித்ததையும் கவனத்தில் வைத்துப் பார்க்கும் போது புதிதாக அரசியலில் நுழைந்த விஜயகாந்த் அடக்கி வாசிப்பது அவருக்கும் அவர் கட்சிக்கும் நல்லது.

மிடாஸ் போன்ற சரக்கு கம்பெனிகளை நடத்துபவர் என சொல்லப்படும் சசிக்கு தோழியாகவும், தொழில் முறை பார்ட்னராகவும் இருக்கும் ஜெயலலிதா குடிப்பழக்கத்தை அரசியலில் பயன்படுத்துவதும் வெட்கக் கேடு!


அண்ணாவின் திராவிடக் கட்சி வாரிசுகள் என தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் கட்சிகளுக்கு பொறுப்புணர்வான கடமையோ, நடத்தையில் கண்ணியமோ, வாக்கில் கட்டுப் பாடோ எதுவும் இல்லை ! ஆனால் இவர்கள் யாவரும் வெட்கமில்லாமல் மேடையில் மட்டும் முழங்குகின்றனர்.

13 : கருத்துக்கள்:

said...

GK,

என்ன சாட்டையை கையில் எடுத்துட்டீங்க..

ஆனாலும் விஜயகாந்த் கேட்டது எனக்கும் தவறு என்றே பட்டது. மூத்த தலைவி(தலைவர்)யிடம் எவ்வாறு பேசுவது என்பதை கொஞ்சம் யோசித்திருக்கலாம்..

எனினும் அவரும் கட்சி நடத்த வேண்டுமே!!

ஜேவும் ஒரு புதிய தலைவரை விமர்சிக்கும் போது நிதானமாக இருந்திருக்கலாம்.

நன்றி

said...

சிபா...!
நெஞ்சு பொருப்பதில்லையே இந்த நிலைகெட்ட அரசியல் வியாதிகளை நினைத்துவிட்டால்...
:))

said...

தரமிழந்த பேச்சு!
தட்டிக் கேட்கும் பதிவு!

சரி விடுங்க!
இதுவும் மட்டைதான் போல!
:))

said...

//சரி விடுங்க!
இதுவும் மட்டைதான் போல!
:))
//
என்ன எஸ்.கே, விஜயகாந்த் கிண்டிய அல்வா கலைஞருக்குனு நெனச்சிங்க போல, அது ஜெயாவுக்குனு புரிஞ்சவுடனே உங்கள் தலை விஜயகாந்த இப்போ மட்டையாயிட்டாரோ?

said...

//SK said...
தரமிழந்த பேச்சு!
தட்டிக் கேட்கும் பதிவு!

சரி விடுங்க!
இதுவும் மட்டைதான் போல!
:))
//

எஸ்கே ஐயா !
நடுநிலையான கருத்து !!!
நன்றி !

said...

//குழலி / Kuzhali said...
//சரி விடுங்க!
இதுவும் மட்டைதான் போல!
:))
//
என்ன எஸ்.கே, விஜயகாந்த் கிண்டிய அல்வா கலைஞருக்குனு நெனச்சிங்க போல, அது ஜெயாவுக்குனு புரிஞ்சவுடனே உங்கள் தலை விஜயகாந்த இப்போ மட்டையாயிட்டாரோ?

9:14 PM
//

வாங்க குழலி !
யாரு கண்டா ? மருத்துவர் குடிதாங்கியும் விஜயகாந்துடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்கலாம் !
:))

said...

உம்மைப் போல கண்மூடித்தனமக ஒருவரை ஆதரிப்பவன் நான் இல்லை குழலியாரே!

நல்லன சொல்வதில் நடுக்கமில்லை!
அல்லன அகற்றிடத் தயக்கமில்லை!

ஜோ பதிவில் நான் இட்ட பின்னுட்டத்தைப் போய் படித்து விட்டு பிறகு வந்து ஹிஹியுங்கள்!

மட்டை என்று சொல்ல வில்லை.
மட்டைதான் போல என ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறேன்.
அவ்வளவே

யாரெல்லாம் மட்டை அடிக்கிறார்கள் என்பது தெரிந்ததுதானே!

தவறை உணர இங்கு வாய்ப்பாவது இருக்கிறது!

மற்ற மட்டைகளுக்கு?

ஊரே சிரிக்கிறது!

said...

சரியாகச் சொன்னீர்கள் கோவியாரே!

மக்களுக்கு சேவை செய்ய கிடைக்கும் வாய்ப்பு பதவியில் இருந்தால்தானே நடக்கும்!:)))

அதனால் எவருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வதுதானே தமிழ்க்குடிதாங்கியின் கொள்கை.
அம்மா வேறு இவரை குடிகாரன் என்று சொல்லி விட்டார்.
ஐயா போய் தாங்க இன்னும் அதிக நாட்கள் இல்லை!

said...

// SK said...
சரியாகச் சொன்னீர்கள் கோவியாரே!

மக்களுக்கு சேவை செய்ய கிடைக்கும் வாய்ப்பு பதவியில் இருந்தால்தானே நடக்கும்!:)))

அதனால் எவருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வதுதானே தமிழ்க்குடிதாங்கியின் கொள்கை.
அம்மா வேறு இவரை குடிகாரன் என்று சொல்லி விட்டார்.
ஐயா போய் தாங்க இன்னும் அதிக நாட்கள் இல்லை!
//

எஸ்கே ஐயா !
நான் சரியாகவும் சொல்லவில்லை ! தப்பாகவும் சொல்லவில்லை ! நாட்டு நடப்பை சொன்னேன் ! ஹி ஹி அரசியலில் இதெல்லாம் ...
:)))

said...

அம்மாவின் ஆத்திரம் கேப்டனின் எள்ளல்....அசிங்கப்பட்டது வழக்கம் போல அம்மா!

said...

அடேடே எஸ்.கே. அய்யா ரொம்ப சூடா இருக்கிங்க போல :-)

said...

//சதயம் said...
அம்மாவின் ஆத்திரம் கேப்டனின் எள்ளல்....அசிங்கப்பட்டது வழக்கம் போல அம்மா!
//

சதயம் சார் !

அம்மா அசிங்கப்பட்டார் ! கேப்டனும் தன் தோலை தானே தோலுறித்துக் கொண்டார் !

3 முறை செய்திகளில் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட சன் டிவியும், திமுகவும் ஆதாயம் அடைந்தது !

said...

:ஆனாலும் விஜயகாந்த் கேட்டது எனக்கும் தவறு என்றே பட்டது. மூத்த தலைவி(தலைவர்)யிடம் எவ்வாறு பேசுவது என்பதை கொஞ்சம் யோசித்திருக்கலாம்..

எனினும் அவரும் கட்சி நடத்த வேண்டுமே!!//


குழலி அய்யா,

நம்ம மருத்துவர் அய்யா இதைப் பத்தி ஏதாவது அறிக்கை விட்டாரா அல்லது தி மு க , அ தி மு க வுக்கு எதிரா கேப்டனோடு சேர்ந்து ஒரு மூன்றாவது அணி உருவாக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறாரா?
அரசியலில் எல்லாம் சாத்யமே..

பாலா