Wednesday, October 04, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

விடுதலையா வாழ்க்கை ? (சிறுகதை) ! (தேன்கூடு அக். போட்டி)



இந்த மேனேஜர் சனியன் ஒழிஞ்சாதான் நமக்கெல்லாம் நிம்மதி, வெளிநாட்டில் போய் மகனோட செட்டில் ஆகப் போகுதாம் இந்தாங்க ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள் சார்.

"அவரு நல்ல மனுசன் தானே"

"என்ன நல்ல மனுசன் ?"

"காலையில் 5 நிமிசம் லேட்டாகவந்தால் அரை மணிநேரம் ப்ளேடு போட்டு அட்வைஸ் பண்ணும்"

"லேட்டா வர்றது தப்புதானே"

"நாம என்ன வேணும்னா லேட்டா வர்ரோம், டிராபிக் ஜாம் அது இதுன்னு சமயத்துல ஆயிடுதே"

"ஹூம்"

"அப்பறம் அதோட விடுமா ? தப்பித் தவறி அவுட் கோயிங் கால் ஐந்து நிமிடம் பேசினால், அங்க உட்கார்ந்து கொண்டே முறைக்கும்"

"நம்ம ஆபிஸில் நீங்கதான் பாக்கறிங்களே, போன் எப்பவுமே எங்கேஜ் ஆக இருக்குன்னு, வெளியிலிருந்து தொடர்பு கொள்கிறவர்கள் அலுத்துக் கொள்கிறார்களே"

"அதுக்காக ஒரு ஆத்திர அவசரத்துக்கு அஞ்சு நிமிசத்துக்கு அதிகமா பேசினா தப்பா ?"

"ஹூம்"

"உங்களுக்கு எங்கே புரியப் போவது, அவரு உங்களுக்கு பாஸாக இருந்தால் தெரியும், அப்பறம் கொஞ்ச நிதானமாக சாப்பிடலாம்னு என்னைக்காவது ரசிச்சி சாப்பிடும் போதுதான், சீக்கிரமாக வாங்க, வேலை இருக்குன்னு சொல்லும் !"

"அது தப்புதான், இருந்தாலும் அலுவலகத்தில் அவசர வேலை இருக்கும் போது, செய்யணும்னு எல்லோரும் எதிர்பார்க்கிறது தானே !"

"போங்க, நீங்க அவருக்கு ஜால்ரா போட போங்க, ஆபிஸ் கண்றாவி டீயை குடிக்க வேண்டமுன்னு, வெளியில் டீ ப்ரேக் அப்போ போனால், 10 நிமிசம் டைம் கொடுத்து அனுப்பும். ஸ்கூல் டீச்சர் மாதிரி நடந்துக்கும்"

"நான் எதையும் சொல்லவில்லைப்பா ..."

"இரண்டு நாள் லீவு சேர்த்துக் கேட்டால், எதோ அதோட லீவைக் கேட்பது போல் ஆயிரம் கேள்வி கேட்டு அழுதுகிட்டே கொடுக்கும்"

"ஹூம்"

"ஒரு வழியா இன்னையோட ஒழியுது, நாளைக்கு ஸ்மார்டாக ஒருவர் வரப் போகிறாராம், நமக்கெல்லாம் குறிப்பாக எனக்கெல்லாம் இந்த சனியனிடமிருந்து விடுதலை...விட்டது தொல்லை"

மறுநாள் எல்லோரும், மீட்டிங் ரூமுக்கு அழைக்கப்பட்டார்கள்.

'குட் மார்னிங் எவரிபடி' என்று ஆரம்பித்தார் புது மேனேஜர்

"எனக்கு டிசிப்ளின் தான் முக்கியம், அலுவலக நேரத்தில் அலுவலக வேலையைத்தான் பார்கணும்"

"அலுவலகம் ஆரம்பிக்க 10 நிமிசத்துக் முன்பே எல்லோரும் உள்ளே இருக்கணும்"

"லேட்டா வருவதும் காரணம் சொல்வதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது"

"அப்படி வந்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்"

"இது மாதத்துக்கு இரண்டு தடவைக்கு மேல் நடந்தால் வார்னிங் மெமோ கொடுக்கப்படும்"

"அலுவலகத் தொலைபேசியை அலுவலக வேலைக்கு மட்டும் தான் பயன்படுத்தனும்"

"எமெர்ஜென்சி போன் எதாவது பண்ணவேண்டுமானால், அதுக்கு பர்மிசன் வாங்கிக் கொண்டுதான் பண்ணவேண்டும்"

"அலுவலகத்துக்குள் இருக்கும் போது, மதிய சாப்பாட்டு நேரமாக இருந்தாலும் அவசர வேலை இருந்தால் அப்படியே விட்டு வரவேண்டும்"

"நமக்கு பிசினஸ் தான் முக்கியம், அது நல்லா நடந்தால் தான் நமக்கு சம்பளமே கிடைக்கும்"

"டீ ப்ரேக் டைம் 10 நிமிசத்துக் மேல் யாருக்கும் கிடையாது, அலுவல நேரத்தில் வெளியில் செல்ல அனுமதி இல்லை"

"லீவு கிராண்ட் ஆகி இருந்தாலும் அவசர வேலை இருக்கும் போது கேன்சல் பண்ணப் படும்"

கேட்க கேட்க தலை சுற்றியது எனக்கு, நேற்று விடை பெற்றபோது சிரித்தபடி கண்கலங்கி விடைபெற்ற பழைய மேனஜரின் முகம் கண்முன் தெரிந்தது.

21 : கருத்துக்கள்:

said...

GK,

எதார்த்தமான கதை.. நல்லாயிருக்குங்க..

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

நன்றி

said...

சிபா...!

வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும்
நன்றி !

said...

Known devil is better than unknown angel

said...

//SP.VR.SUBBIAH said...
Known devil is better than unknown angel
//

ஐயா...!

மொத்த கதையையும், ஒற்றை வரி ஆங்கில பழமொழிக்குள் அடக்கி சொல்லிடிங்க !

:))

நன்றி !

said...

ஆப்பு அவர்களே !

நன்றி...!

said...

கண்ணன்,

ரொம்பவே அவஸ்தை பட்டிருக்கீங்க போல..

ஆனாலும் இந்த மாதிரி ஆளுங்கள நானும் பாத்துருக்கேன்.. ஏன் அனுபவிச்சே இருக்கேன்..

ஆனா ஒன்னுங்க.. நான் அந்த இடத்துல இருக்கறப்ப அப்படி நடந்துக்கிட்டதே இல்லை.. இத என் கீழ வேலை செய்யறவங்கதான் சொல்லணும்னாலும் இதுதான் உண்மை..

கண்டிப்பானவந்தான் ஆனால் கட்டுப்பாடுகளை திணிக்காதவன்..

said...

கண்ணன்,

இந்த டேமேஜர் தொல்லை தாங்க முடியாதுங்க....

என்னா செய்ய சொந்தகதை சோகக்கதை எனக்கு... :-(

+ போட்டாச்சு

said...

எளிமையான கதையை இயல்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

இப்படி கடைசி வரியில் ஒரு பஞ்ச் திருப்பம் வைக்கிறதுதான் இப்போ தமிழ்மணம் ட்ரெண்ட் போல!
வெற்றி பெற வாழ்த்துகள்!
நான் போட்டுடறேன்!
:)

said...

சொல்ல மறந்துட்டேன்!
ஆசிரியர் ஐயா மாதிரி இதோ என் பங்குக்கு!

இருக்கறதை விட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டா இதுதான் நடக்கும்!

said...

//tbr.joseph said...
கண்ணன்,

கண்ணன்,

ரொம்பவே அவஸ்தை பட்டிருக்கீங்க போல..

கண்டிப்பானவந்தான் ஆனால் கட்டுப்பாடுகளை திணிக்காதவன்.. //

கண்டிப்பு அவசியம் இல்லையென்றால் ஏய்த்துவிடுவார்கள் ! ஒருவேலையும் நடக்காது ஆனால் நடவடிக்கை எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை பிரச்சனை.

எனக்கு பாஸாக இருந்தவங்க எல்லாம் இப்போ நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்வான விசயம். நான் மோசமாக நடத்தப்படவில்லை. ஆனால் நிகழ்வுகளைப் பார்த்து இருக்கிறேன் !

said...

கண்ணன்,

எல்லோருக்கும் உண்டான தொந்தரவு தான்.
வழிவழியாக மாமியார் மருமகள்,
மேனேஜர் மேனேஜிக்கப் படுபவர்

ஏதோ கெடுபிடியில் மாட்டிக்கொள்வதும் ,பிரிவதும் வருந்துவதும் வழமைதான். நடைமுறைக்கேற்ற தற்கால விடுதலை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

said...

கோ.க,
எம்மிடம் ஒன்று இருக்கும் போது அதன் அருமை தெரியாது. அது தொலைக்கப்படும் தருணத்தில் அல்லது தொலைந்த பின்னர்தான் எமக்கு அதின் அருமை தெரியும். இக் கருத்தை நல்ல அழகாகவும் சுருக்கமாகவும் சொல்லியுள்ளீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

//SK said...
எளிமையான கதையை இயல்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

இப்படி கடைசி வரியில் ஒரு பஞ்ச் திருப்பம் வைக்கிறதுதான் இப்போ தமிழ்மணம் ட்ரெண்ட் போல!
வெற்றி பெற வாழ்த்துகள்!
நான் போட்டுடறேன்!
:)
//
எஸ்கே ஐயா !
அன்றாடம் நடக்கும் எளிமையான கதை தான் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது.

வெற்றி வாழ்த்துக்களுக்கு நன்றி !
உங்கள் வாழ்த்தும் வெற்றி பெறட்டும் !

:))

said...

எங்கேயோ கேட்ட கதைமாதிரி இருக்கு. காலத்துக்கு தகுந்த மாதிரி மாத்தி கலக்கி இருக்கீங்க கோவி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

said...

//ராம் said...
கண்ணன்,

இந்த டேமேஜர் தொல்லை தாங்க முடியாதுங்க....

என்னா செய்ய சொந்தகதை சோகக்கதை எனக்கு... :-(

+ போட்டாச்சு
//

ராம் ..!
நன்றி + போட்டதற்கும், ப்ளாஸ்திரி போடாததற்கும் ...!

:)

said...

//வல்லிசிம்ஹன் said...
கண்ணன்,

எல்லோருக்கும் உண்டான தொந்தரவு தான்.
வழிவழியாக மாமியார் மருமகள்,
மேனேஜர் மேனேஜிக்கப் படுபவர்

ஏதோ கெடுபிடியில் மாட்டிக்கொள்வதும் ,பிரிவதும் வருந்துவதும் வழமைதான். நடைமுறைக்கேற்ற தற்கால விடுதலை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
//

வல்லிநரசிம்மன் !
பாராட்டுக்கும் கருத்துகளுக்கு நன்றி !
:)

said...

கதை யதார்த்தமாக இயல்பாக வந்திருக்கிறது. IT இண்டஸ்டிரியில் இருப்பதால் இது போன்ற கெடுபிடிகளை எல்லாம் சந்தித்ததில்லை இருப்பினும் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறது.

said...

வெற்றி said...
//வெற்றி said ... கோ.க,
எம்மிடம் ஒன்று இருக்கும் போது அதன் அருமை தெரியாது. அது தொலைக்கப்படும் தருணத்தில் அல்லது தொலைந்த பின்னர்தான் எமக்கு அதின் அருமை தெரியும். இக் கருத்தை நல்ல அழகாகவும் சுருக்கமாகவும் சொல்லியுள்ளீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//

வெற்றி அவர்களே !

பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி !
நன்றி !

said...

// ILA(a)இளா said...
எங்கேயோ கேட்ட கதைமாதிரி இருக்கு. காலத்துக்கு தகுந்த மாதிரி மாத்தி கலக்கி இருக்கீங்க கோவி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
//

இளா..!
எந்த கதையும் புதுசு அல்ல ! எல்லாம் எங்கேயே கேட்டது, பார்த்தது படித்தது அவற்றை நம் வசனத்திற்குள் வைக்கிறோம் !

:)

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

said...

கதை நல்லா இருக்கு!
முதல்ல சொல்ற விதத்தை வச்சே,

2nd Half ஐ யூகிச்சிடலாம்.

கலக்குங்க !
வாழ்த்துக்கள்

said...

எந்த கதையும் புதுசு அல்ல ! எல்லாம் எங்கேயே கேட்டது, பார்த்தது படித்தது அவற்றை நம் வசனத்திற்குள் வைக்கிறோம் !

முதல்ல சொல்ற விதத்தை வச்சே,
2nd Half ஐ யூகிச்சிடலாம்.

Known devil is better than unknown angel

கதை நல்லா இருக்கு!