தீபாவளியின் புராணங்கள் எதுவாக இருந்தால் என்ன ?
ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது
ஆரவார தீபாவளி !
புத்தாடை மத்தாப்பு மட்டுமின்றி
மகிழ்வைக்கிறது தீபாவளி !
எந்த ஆண்டாக இருந்தாலும்
ஏதோ ஒருவிதத்தில் கொண்டாட்டம் !
சிலருக்கு சிறப்பாக இருவருக்கும்
ஒன்றாக ஆகிவிடும் தலைதீபாவளி !
புதிதாய் பெற்றோரானவர்களுக்கு புதிய
உறவுடன் பிறந்திடும் தீபாவளி !
வளரும் குழந்தைகளுக்கும் தம் புதிய
உடன்பிறப்புடன் பிறந்திடும் தீபாவளி !
புதிதாய் நண்பர்கள் கிடைத்திட்ட அனைவரின்
நட்பை மலரவைக்கும் புது தீபாவளி !
தீபாவளி ஒரு தத்துவம் என்கிறர் சிலர் !
தீபாவளி ஒரு பக்தி வரலாறு என்கிறர் சிலர் !
தீபாவளி தமிழரருக்கு தேவையில்லை என்கிறர் சிலர் !
தீபாவளியின் புராணங்கள் எதுவாக
இருந்தால் என்ன ?
கொண்டாடுபவரை வாழ்த்தவும்,
கொண்டாடுபவர்கள் மகிழவும்,
மற்றொமொரு ஆங்கில புத்தாண்டு போல்
அனைவரும் சேர்ந்து மகிழ ஒரு
இந்திய பண்டிகை நம் தீபாவளி !
ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது
ஆரவார தீபாவளி !
புத்தாடை மத்தாப்பு மட்டுமின்றி
மகிழ்வைக்கிறது தீபாவளி !
எந்த ஆண்டாக இருந்தாலும்
ஏதோ ஒருவிதத்தில் கொண்டாட்டம் !
சிலருக்கு சிறப்பாக இருவருக்கும்
ஒன்றாக ஆகிவிடும் தலைதீபாவளி !
புதிதாய் பெற்றோரானவர்களுக்கு புதிய
உறவுடன் பிறந்திடும் தீபாவளி !
வளரும் குழந்தைகளுக்கும் தம் புதிய
உடன்பிறப்புடன் பிறந்திடும் தீபாவளி !
புதிதாய் நண்பர்கள் கிடைத்திட்ட அனைவரின்
நட்பை மலரவைக்கும் புது தீபாவளி !
தீபாவளி ஒரு தத்துவம் என்கிறர் சிலர் !
தீபாவளி ஒரு பக்தி வரலாறு என்கிறர் சிலர் !
தீபாவளி தமிழரருக்கு தேவையில்லை என்கிறர் சிலர் !
தீபாவளியின் புராணங்கள் எதுவாக
இருந்தால் என்ன ?
கொண்டாடுபவரை வாழ்த்தவும்,
கொண்டாடுபவர்கள் மகிழவும்,
மற்றொமொரு ஆங்கில புத்தாண்டு போல்
அனைவரும் சேர்ந்து மகிழ ஒரு
இந்திய பண்டிகை நம் தீபாவளி !
9 : கருத்துக்கள்:
பண்டிகைகள் என்பதே நம்முடைய நட்பையும், மகிழ்ச்சியையும் அடுத்தவரோடு ஒன்றாகப் பகிர்ந்து கொண்டாடத்தான் என்பதை ஒரு சில வரிகளின் மூலம் அழகுறப் படைத்திட்ட கோவியரே!
சமீபத்தில் எனக்குக் கிடைத்த அற்புதமான நண்பரோடும் உங்கள் குடும்பத்தோடும் என் மகிச்சியையும் பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி வாழ்த்துகிறேன்!
எப்போதும் உங்கள் இல்லத்தில் ஒளி வீசிக்கொண்டே இருக்கட்டும்!
மகிழ்வு பொங்கட்டும்!!
//SK said... எப்போதும் உங்கள் இல்லத்தில் ஒளி வீசிக்கொண்டே இருக்கட்டும்!
மகிழ்வு பொங்கட்டும்!! //
வாங்க எஸ்கே ஐயா !
உங்களைப் போன்ற இனிய நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லவும், வாழ்த்துப் பெறவும் வாய்ப்பாக அமைந்தது இந்த தீபாவளி என்றால் அது மற்றற்ற மகிழ்வே !
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், மற்றும் தங்கள் இனிய நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !
GK,
கொண்டாட்டங்கள் சந்தோசமே!! ஆனால் அது எதற்கு ஏன் என்று அறிந்து கொண்டாடினால் நன்றாக இருக்கும்!!
நல்ல கவிதை
நன்றி
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், மற்றும் தங்கள் இனிய நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !
நன்றி கோவி அவர்களே....அடிக்கடி நம்ம சைட் பக்கம் வாங்க...
நாம் கொண்டாடும் தீபாவளி நிச்சயமாக வட இந்தியர் கொண்டாடும் தீபாவளியை விட வேறுபட இருக்கிறது. பெரும்பாலோர் மகிழ்வுறும் பண்டிகைகளை நமதாக்கிக் கொள்வதே புதுக் கருத்துக்களை பரப்பும் வழியாகும். சந்திரவதனா பதிவில் காண்பதுபோல இதனை ஈழப்போரின் மாவீரர் நினைவாக கொள்தலே சிறப்பு.
தீபாவளி கொண்டுவரும் ஆனந்தமும் வளமையும் எல்லோரையும் சூரியனின் ஒளி போல அடைவதாக !!இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!
மற்றொமொரு ஆங்கில புத்தாண்டு போல்
அனைவரும் சேர்ந்து மகிழ ஒரு
இந்திய பண்டிகை நம் தீபாவளி !//
கரெக்டா சொன்னீங்க கண்ணன்.
ஜாதி, மத, மொழி பேதமின்றி இந்தியர்கள் அனைவரும் கொண்டாடத்தக்க திருவிழா இத்தீபத் திருவிழா..
ஆனா.. என்ன, இப்பல்லாம் இது தீபத்திருநாளா இல்ல ஒலித் திருநாளாங்கறா மாதிரி சத்தம் காத பிளக்குது..
thanks thalaivarae..... i hope that ur festive day was great! ur thenkoodu story is superb.... i hav voted you already.
all the best!
நல்ல கவிதை. வாழ்த்துக்கள். அது சரிங்க இதெல்லாம் அந்த காலம். இந்த காலம் தீபாவளியன்று செய்தித்தாள் பிரித்தோமென்றால் எங்கே செய்தி வருது. மக்களின் போனஸ் மீது குறி வைத்து வரும் விளம்பரங்களைப் பார்த்தாலே நம்ம பர்சுக்கு வேட்டு வந்துவிடுகிறது. என்னங்க நான் சொல்றது சரிதானே?
Post a Comment