Thursday, October 12, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மெய் ஞானம் !

மெய் ஞானம் !

எல்லாவற்றிலும் எனக்கே
உரிமையுள்ளது,
நானே உயர்ந்தவன்,
என்று இறுமாப்பு
கொண்டு,
அடுத்தவரை
எள்ளி நகையாடி
எட்டி உதைக்கும் கால்களுக்கும்,
தள்ளிவிடும் கைகளுக்கும்,
சுட்டு உமிழும் நாவிற்கும்
ஏன் தெரியவில்லை ?
காலன் வந்து
கதைவை அடைத்துவிட்டால்,
தன் உடலை தான்
பயன்படுத்துவதற்கே
அடுத்து ஒருவிநாடி கூட
அவகாசம் கிடைக்காது
என்ற மெய்(உடல்) ஞானம் !

13 : கருத்துக்கள்:

said...

அருமை...!

said...

ஞானம் வயதுடன் தொடர்புடையதா? வயது ஏற ஏற இந்த சொரணை ஏறுகிறதா? எனக்கென்னவோ வயதிற்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்று தோன்றுகிறது. சிறு வயதில் உடல் நிலையற்றது என்ற எண்ணமே தோன்றுவதில்லை. வயது ஏற ஏற உடல் நிலையாமையைப் பற்றிய எண்ணம் வலுப்படுகிறது.

said...

உண்மைதாங்க மனிதனுக்கு இருக்கும் ஈகோ தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். மரணம் எந்தக் கணம் வேண்டுமானலும் வரலாம் என்றிருக்கும் பொழுது இந்த ஈகோ எல்லாம் இருக்கக் கூடாது.

கவிதை நல்லா இருக்குங்க.

said...

//செந்தழல் ரவி said...
அருமை...!
//

தகிக்கும் நெருப்பு அவர்களே !
நன்றி !

said...

//வைசா said...
மெய்யான ஞானம் தான். நன்றாக இருக்கிறது, கோவி கண்ணன்.

வைசா
//

வைசா அவர்களே...!
கருத்துக்கும் பாராட்டுக்கும் மற்ற மகிழ்ச்சி ! நன்றி !

said...

// குமரன் (Kumaran) said...
ஞானம் வயதுடன் தொடர்புடையதா? வயது ஏற ஏற இந்த சொரணை ஏறுகிறதா? எனக்கென்னவோ வயதிற்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்று தோன்றுகிறது. சிறு வயதில் உடல் நிலையற்றது என்ற எண்ணமே தோன்றுவதில்லை. வயது ஏற ஏற உடல் நிலையாமையைப் பற்றிய எண்ணம் வலுப்படுகிறது.
//

குமரன் !
வயதிற்கும் ஞானத்திற்கும் தொடர்பு இல்லை என்ற உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.

நான் வயதைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை.

காலன் வயது பார்த்தா வருகிறான்.
ஆறிலும் சாவு ...!

:)

கருத்துக்கு நன்றி !

said...

//குமரன் எண்ணம் said...
உண்மைதாங்க மனிதனுக்கு இருக்கும் ஈகோ தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். மரணம் எந்தக் கணம் வேண்டுமானலும் வரலாம் என்றிருக்கும் பொழுது இந்த ஈகோ எல்லாம் இருக்கக் கூடாது.

கவிதை நல்லா இருக்குங்க.
//

சின்ன குமரன் ...!

புரிஞ்சிக்க மாட்டேன் என்கிறார்களேப்பா ...!

யார் பெரியவன் என்ற கேள்வி எழத்தானே செய்கிறது !
:)

said...

நல்லா இருக்கு கண்ணன்,
காலன் வரும் வரை கூட இல்லாமல் பல சமயம் காலம் உணர்த்தி விடும் மெய் ஞானத்தை.

said...

கோவி.கண்ணன் அய்யா (உங்களை இப்படி அழைப்பதுதான் சரி என்று தோண்றுகிறது)

கலக்கிடீங்க.. என்ன அருமையான கவிதை..

நன்றி!! நன்றி!! நன்றி!!

said...

//நாகை சிவா said...
நல்லா இருக்கு கண்ணன்,
காலன் வரும் வரை கூட இல்லாமல் பல சமயம் காலம் உணர்த்தி விடும் மெய் ஞானத்தை.
//

சிவா ... !
காலம் அவ்வப்போது சுட்டு உணர்த்துவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது !

நன்றி சிவா !

said...

// Sivabalan said...
கோவி.கண்ணன் அய்யா (உங்களை இப்படி அழைப்பதுதான் சரி என்று தோண்றுகிறது)

கலக்கிடீங்க.. என்ன அருமையான கவிதை..

நன்றி!! நன்றி!! நன்றி!!
//

ஆகா சிபா...!

ஏற்கனவே நான் 'பெருசு' ன்னு வதந்தி உலாவிக் கொண்டு இருக்கிறது !

நீங்கள் உங்கள் பங்குக்கு ...!

:))

பாராட்டுக்கு நன்றி !

said...

ஒருவேளை அந்த மெய்யைப் பற்றிய ஞானம் இருப்பதால்தான் இருக்கும் போது ஆடி விட்டுப் போகலாம் என்று ஆடுகின்றனரோ என்னவோ, கோவியாரே!

:))
கவிதை நன்கு வந்திருக்கிறது.

said...

//SK said...
ஒருவேளை அந்த மெய்யைப் பற்றிய ஞானம் இருப்பதால்தான் இருக்கும் போது ஆடி விட்டுப் போகலாம் என்று ஆடுகின்றனரோ என்னவோ, கோவியாரே!

:))
கவிதை நன்கு வந்திருக்கிறது.
//

எஸ்கே ஐயா !

வழக்கமான பஞ்ச் ! இந்த முறையும் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் !

கவிஞர் கவிதையை பாராட்டுவதும் மகிழ்ச்சி ! கவிதை முழுமை பெற்றுவிட்டது !

நன்றி எஸ்கே ஐயா !