Sunday, October 01, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மகாத்மா காந்தி மறக்கக் கூடியவரா ?


மகாத்மா காந்தி மறக்கக் கூடியவரா ?

அது எப்படி ?
ஒரு நாள் அரசாங்க விடுப்பு கிடைக்கிறதே !
மறப்போமா ?

கறுப்பு பணமானாலும்
வெள்ளையாகத் தானே சிரிக்கிறார்
மறப்போமா ?

இன்னும் நூறு ஆண்டு ஆனால் என்ன ?
ஒட்டு வாங்க அவர் படத்தைத் தானே
இன்னும் பயன் படுத்துகிறோம் !
மறப்போமா ?

என்னது அந்நிய மோகமா ?
அதெல்லாம் ஒன்றுமில்லை !
உலகமயமாக்கல் என்று இன்னொரு
பெயர் வைத்திருக்கிறோமே !
காந்தியை மறப்போமா ?

5 : கருத்துக்கள்:

said...

//ஒட்டு வாங்க அவர் படத்தைத் தானே
இன்னும் பயன் படுத்துகிறோம் !//

ஆகா, இது உண்மை என்றால், மிக்க சந்தோசம்! "காந்திய ஓட்டுக்குனாச்சும் பயன்படுத்தற கட்சியே...எந்த தைரியத்தில் அவர் பேர் எல்லாம் சொல்லி ஓட்டு கேக்கிற? அரசியலுக்குப் புதிதா?" :-)))

said...

யதார்த்தத்தினை எழுதி இருக்கிறீர்கள்.

நாடு, ஜாதி, மதங்களைக் கடந்த அற்புதமான மனிதர் அவர்.

said...

"Simple and Humble!
It was Gandi"
என் ஆங்கில ஆசிரியர்;சுமார் 40 வருடங்களுக்கு முன் சொன்ன வார்த்தை
காந்தியின் சாந்தி நிலவட்டும் உலகில்
யோகன் பாரிஸ்

said...

GK,

நன்று.. நன்று..

said...

நல்ல அடிகள் உள்ள கவிதை மட்டுமல்ல
நல்ல அடிகள் உள்ள கவிதையும் கூட଻଻