Tuesday, October 24, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஆடு நனைகிறதே !

தீபாவளிக்கு கேப்டன் கேப்பாகத் தான் இருப்பார் என்று நினைத்தால் 'யானை* வெடி வெடித்து கலகலக்க வைத்துவிட்டார். மதுரை இடைத்தேர்தலில் பட்டாசு கொழுத்தியது சிறுதாவூர் பங்களாவில் புகையை கிளப்பிவிட்டது. ஏற்கனவே ஆட்சியை இழந்து இடைத் தேர்தலில் எம்ஜிஆர் வாக்குகளையும் கனிசமாக இழந்ததால் அதிமுக தலைமை விஜயகாந்த் மீது அக்கினியை கக்கியுள்ளது.

விஜயகாந்த் தான் அரசியலில் 'எண்ட்ரி லெவல்' என்பதை மெய்பிக்கும் விதமாக பண்பாடற்ற முறையில் தனக்கு ஊத்திக் கொடுப்பவராக இருந்தால் விமர்சிக்கலாம் என்பது போல் பதில் அறிக்கை அனுப்பி அனைவரையும் பம்பர சாட்டையை வைத்துக் கொண்டு இப்படி விளாச முடியுமா ? என்று வியப்படைய வைத்துவிட்டார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ...!

அதுவா விசயம் ? இல்லை ! இதை திமுகவும் மற்றவர்களும் எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் விசயம். இடைத் தேர்தலுக்கு பின் இதமோடு முதல்வர் கருணாநிதி குளிர்வாக விஜயகாந்தை பாராட்டி பேட்டி அளித்தது ஜெ-வை மிகவும் எரிச்சலடைய வைத்தது. இதன் காரணமாக தோல்வியின் காரணங்களை ஆராய்ந்த ஜெ. கேப்டன் தன்னை தானே கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி பாமர மக்களை நம்ப வைத்தே வாக்குகளை அறுவடை செய்ததாக கொதித்து எழுந்து ஆவேச அறிக்கை வெளியிட்டார்.

முதல்வர் கருணாநிதி தன் ராஜா தந்திரத்தின் மூலன் இதை சாதித்து இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது அவருக்கு புதிதல்ல. சன் டீவியில் ஜெ - கேப்டன் மோதலை ஹைலைட் செய்து 3 முறை செய்தி வெளியிட்டதன் மூலம் திமுகவின் நோக்கம் தெரிகிறது. இனி பரபரப்பு நபராக விஜயகாந்தை ஆக்குவதின் மூலம் ஜெ வையும், அதிமுகவையும் பலமிழக்க செய்வதுதான் திமுகவின் திட்டம்.

ஜெ இதை எப்படி அணுகுவார் என்பது அடுத்த தேர்தலில் தான் தெரியும். தன்னை தூற்றியவர்களுடன் கூட்டனி அமைத்ததும அம்மையாருக்கு ஒன்றும் புதிதல்ல என்பது வைகோ விசயத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். எனவே வருங்காலத்தில் ஜெ - கேப்டன் கூட்டணி அமையாது என்று திமுக கணக்கு போடுமானால் அது சென்றகாலத்தில் வைகோ- ஜெவை வைத்து போட்ட கணக்கு போல தப்பாகத் தான் போகும். திருமா, பா.ம.க போன்ற தனித் தாக்குதல் நடத்திய கட்சிகளுடன் பல்வேறு காலகட்டங்களில் ஜெ கூட்டனி அமைத்து இருக்கிறார் என்பதை நினைவு கொள்ளலாம்.

இதையெல்லாம் புரிந்து கொண்டாரோ என்னவோ கேப்டன் ஒரே நாளில் பல்டி அடித்து 'பொது எதிரி திமுகவை வீழ்த்துவதுதான் லட்சியம், திமுக திசை திருப்புவதை தேமுதிக அலட்சியம் செய்யும்' என்று முழங்குகிறார். ஆனால் எதும் தெரியாத தொண்டர்கள் ஜெவின் உருவ பொம்மைக்கு தீவைத்து மகிழ்கின்றனர்.

இவையெல்லாம் புரிந்தும் புரியாதது போல் ஒரு கூட்டம் திராவிட அரசியலே சாக்கடை என்று சந்தடி சாக்கில் ஜல்லி அடிப்பது தொடர்வதையும் இடைப்பட்ட காலத்தில் எல்லோரும் கேட்டு மகிழலாம்.

8 : கருத்துக்கள்:

said...

//இவையெல்லாம் புரிந்தும் புரியாதது போல் ஒரு கூட்டம் திராவிட அரசியலே சாக்கடை என்று சந்தடி சாக்கில் ஜல்லி அடிப்பது தொடர்வதையும் இடைப்பட்ட காலத்தில் எல்லோரும் கேட்டு மகிழலாம்.
//
எப்புடி இப்புடி

said...

//குழலி / Kuzhali said...
//இவையெல்லாம் புரிந்தும் புரியாதது போல் ஒரு கூட்டம் திராவிட அரசியலே சாக்கடை என்று சந்தடி சாக்கில் ஜல்லி அடிப்பது தொடர்வதையும் இடைப்பட்ட காலத்தில் எல்லோரும் கேட்டு மகிழலாம்.
//
எப்புடி இப்புடி
//
:)

said...

//இவையெல்லாம் புரிந்தும் புரியாதது போல் ஒரு கூட்டம் திராவிட அரசியலே சாக்கடை என்று சந்தடி சாக்கில் ஜல்லி அடிப்பது தொடர்வதையும் இடைப்பட்ட காலத்தில் எல்லோரும் கேட்டு மகிழலாம்//

ஜி கே அய்யா,

அரசியலே சாக்கடை தான்..திராவிட அரசியல் தூய சாக்கடை(100%)
அவ்வளவு தான் வித்யாசம்..

பாலா

said...

//bala said... ஜி கே அய்யா,

அரசியலே சாக்கடை தான்..திராவிட அரசியல் தூய சாக்கடை(100%)
அவ்வளவு தான் வித்யாசம்..

பாலா //

வாங்க பாலா ... ! திராவிட அரசியல் சாக்கடைன்னு சொன்னது நீங்களா ?

ஐயோ தெரியாமல் சொல்லிவிட்டேனே ! கடைசி வரியை எடுத்துவிடவா ?
:))

said...

GK<

நல்லா எழுதியுள்ளீர்கள்..

கடைசியில் ஒரு பன்ஞ்...Hi Hi Hi

said...

//Sivabalan said...
GK<

நல்லா எழுதியுள்ளீர்கள்..

கடைசியில் ஒரு பன்ஞ்...Hi Hi Hi
//

சிபா...!
முந்தைய பதிவில் [ஜெ - கேப்டன்] கூட கடைசியில் இது போல் ஒரு பஞ்ச் வைத்தேன். அதை சமன் செய்யவே இந்த பஞ்ச் !
ஹி ஹி நடுநிலமை தவறிடக் கூடாதில்ல ?
:))

said...

வௌவால் ஏன் தலைகீழாத் தொங்கிகிட்டே இருக்காம் கதை தெரியுங்களா கோவியாரே!

கொஞ்சம் பார்த்து!

:))

said...

வௌவால் ஏன் தலைகீழாத் தொங்கிகிட்டே இருக்காம் கதை தெரியுங்களா கோவியாரே!

கொஞ்சம் பார்த்து!

)
சாரி உங்க பேட் கமெண்ட் புரியவில்லை !