இதற்கு பதில் சொல்வது சிரமம். முதலில் இந்து மதம் ஒரே கொள்கை உடையதா ? என்று பார்க்கவேண்டும்.
இந்து மதம் ஒரே கொள்கை உடையது அல்ல. பாரதத்தில் வழங்கி வந்த பல சமயங்களை 18 நூற்றாண்டுவரை இந்துமதம் உள்வாங்கி வந்திருக்கிறது. அதற்கு முன்பு தனி மதமாக அடையாளம் காணப்படவில்லை. சனாதன தர்மம், சைவம், வைணவம், வேத மதம் போன்ற தனித் தனி சமயங்களாக இருந்து வந்தது அதுபோல் காலத்தின் கட்டாயத்தின் பேரில் புத்தமதக் கொள்கைகள் எதிர்க்கும் பலி இடுதல் போன்றவற்றையும் உள்வாங்கிக் கொண்டது. ஆங்கிலேயர்கள், மற்றும் முகலாயர் மன்னர்கள் மூலமாக பின்னாளில் இந்துமதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
எனவே ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பொதுவான வேத நூல்கள் இல்லை ! பகவத்கீதையை சைவர்கள் உயர்ந்த வேதமாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்துமதத்திற்கான வேதப் புத்தகம் கீதை என்று நீதிமன்றங்களில் பயன்படுத்தும் அளவுக்கு தான் பகவத் கீதை பொதுவானதாக இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட, பின் தங்கிய இந்துக்கள் பகவத் கீதையை வெறுக்கவே செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. புத்த மதத்திலும் ஹீனயானம் மகாயானம் என்ற இருபிரிவுகள் உண்டு.
எனவே இதுதான் பரிணாமத்தைப் பற்றி இந்து மதம் சொல்கிறது என்று எவரேனும் காட்டினால், இந்து மதத்தை சேர்ந்தவர்களே அதை மறுப்பார்கள். பிற்போக்கான மதப்பற்றாளர்கள் மட்டும் இந்து மதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று இந்துமதம் சொல்வதுதான் சரி என்று சொல்வார்கள். பெரும்பாலோனர் இந்து மதத்தில் பின்பற்றுவது குல தெய்வவழிபாடே. பகவத் கீதையையோ, சைவ சித்தாந்தங்களையோ, வேறு எதையோ யாரும் அளவுகோலாக எடுத்துக் கொண்டு மதத்தை பின்பற்றுவதில்லை.
பொதுவாக பெருவாரியான இந்துக்கள் சொல்வது கலியுக முடிவில் கல்கி அவதாரம் வரும். அத்துடன் உலகம் முடிவுக்கு வருவதில்லை. புதிய உலகம் பிறக்கும். அது சொர்க்கம் என்றெல்லாம் சொல்லப்படுவதில்லை. அது ஒரு பிரளையம் என்கிறார்கள் திரும்பவம் சத்திய (தங்கம்) யுகம், திரேத(வெள்ளி) யுகம், துவாபர (செம்பு) யுகம், கலி (இரும்பு)யுகம் என தொடங்கும், மறுபடியும் பிரளயம். உலகம் கெட்டுப் போகும் போது அதாவது கலியுகத்தில் கல்கி அவதாரம் வருமாம். அதைத் தான் சம்பவாமி யுகே யுகே ! யுகங்கள் தோறும் நான் பிறக்கிறேன் என்று கிருஷ்னர் பகவத் கீதையில் சொல்வதாக சொல்கிறார்கள். சிருஷ்டி இல்லை , படைப்பு இல்லை, பிரளயம் மட்டுமே நடக்கிறது என்பது தான் இதன் பொருள். இதில் பரிணாமம் இல்லை.
பரிணாமம் பற்றி சொல்லாமல் பிரபஞ்சம் பற்றி தமிழ் சித்தர்கள் சிலவற்றை சொல்லியிருக்கிறார்கள்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று அனுக்கொள்கை, வான சாஸ்திரம் போன்ற வற்றை அறிவியல் வளர்ச்சிக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள்.
திருவள்ளுவரும் சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்க்றார்.
எங்கும் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று சொல்லவில்லை. வேதங்களில் மட்டுமே பிரம்மனிடமிருந்து மனிதன் தோற்றுவிக்கப்பட்டதாக எழுதியிருக்கிறது.
நேரம் கிடைக்கும் போது சித்தர்கள் வாக்கிலிருந்து சிலவற்றை எடுத்து எழுதுகிறேன்.
25 : கருத்துக்கள்:
நான் இருவேறு கதைகளை படித்திருக்கிறேன்.
பதிவுக்கு நன்றி. இன்னும் எழுதுங்கள் இதுபற்றி.
//சிறில் அலெக்ஸ் said...
நான் இருவேறு கதைகளை படித்திருக்கிறேன்.
பதிவுக்கு நன்றி. இன்னும் எழுதுங்கள் இதுபற்றி.
//
சிறில்...!
எந்த கதையைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை !
இன்னும் எழுதுவோம் நிச்சயமாக !
:)
GK,
என்ன சொல்லவறீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியவில்லை.
பரிணாமம் இந்து மதம் ஏற்றுக் கொள்கிறதா?
நன்றி
கோவி. ஓரளவுக்குத் தெளிவாகவே சொல்ல முற்பட்டிருக்கின்றீர்கள் என்றே நம்புகிறேன். இங்கு பல நம்பிக்கைகள் உண்டு. ஆகவே இதுதான் என்று சொல்லிட முடியாது. அப்படிச் சொன்னாலும் அடுத்தவர் அதை ஏற்க வேண்டிய கட்டாயமில்லை.
பொதுவில் குலதெய்வ வழிபாடும் அடுத்து இஷ்ட தெய்வ வழிபாடும் அதைத் தொடர்ந்து பொது தெய்வ வழிபாடும் நடக்கிறது. அது தவறு என்று சொல்ல முடியாது. ஒரு விதத்தில் நல்லதுதான். மதச்சகிப்புத்தன்மை கொஞ்சமாவது மிச்சமிருக்கிறது. குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அது இந்தப் பதிவுக்கானவை அல்ல.
பதிவுக்கான கருத்துக்கு வருவோம். பிரம்மனிலிருந்து தோன்றினார்கள் என்று சொல்லப்படும் கருத்து பலருக்கே தெரியாது. அப்படியிருக்க ஆங்காங்கு இருக்கும் நல்ல மறைகளையும் தத்துவங்களையும் கொஞ்சமாவது எட்டிப் பார்த்தால் (நான் பார்த்தது சைவசித்தாந்தம்..அதுவும் கடற்கரை ஓரத்தில் நின்று கொண்டு கடலைப் பார்ப்பது போல)
தருமியின் பதிவிலும் சொல்லியிருந்தேன். இரண்டு இருந்தது. நாத விந்து தத்துவம். இரண்டுமே எதிரெதிர்கள். நாதத்தில் ஓசையுண்டு. விந்துவிற்கு அமைதிதான். விந்துவிற்கு உருவம் உண்டு. நாதத்திற்கு உருவம் கிடையாது. இப்படி எதையெடுத்தாலும் எதிரெதிர் பண்புகள். இந்த இரண்டும் சேர்ந்த பொழுது ஓங்காரம் பிறக்கும். ஒரு சின்ன பரிசோதனை. காதருகில் கையைக் குவித்து வைத்து மூடுங்கள். லேசான ஓங்காரம் கேட்கும். கைக்கு வெளியே ஓசை. உள்ளே அமைதி. ஆனால் முழுமையான ஓசையும் அமைதியும் இல்லாமையால் முறையான ஓங்காரம் கிடைக்கவில்லை.
இந்த ஓங்காரம்தான் அனைத்திற்கும் தொடக்கம். குடிலை என்று தமிழில் பெயர். இந்தக் குடிலைதான் இறைவனுக்கே அடித்தளம். அதனால்தான் சைவர்கள் சிவனும் முருகனும் கொற்றவையும் ஓங்காரத்தைப் பீடமாக (ஆதாரமாக) கொண்டவர்கள் என்று சொல்வார்கள்.
அப்படியே சிவனோ முருகனோ அம்பிகையோ ஒரே நாளில் உலகையோ உயிரையோ படைத்ததாகவும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. வாரியார் வழியே தெரிந்து கொண்டதிலும் அப்படித் தெரியவில்லை.
ஓங்காரம் பிறந்தது எனப் பார்த்தோம். இந்த ஓங்காரத்திலிருந்து சிறிது சிறிதாக பிரிந்து கொண்டேயிருந்ததாம். என்னவென்று எனக்கு விளக்கத் தெரியவில்லை. இப்படிப் பிரிந்து பிரிந்து பிரிந்து பிரிந்துதான் எல்லாம் வந்தது என்பது கருத்து. எனக்கு முழுமையாக விவரம் தெரியாது. எங்கேயோ படித்தேன். ஆனால் முழுமையாக விளக்கிக் கொள்ள முடியவில்லை.
இந்த நாதவிந்து கலைதான் இறைவனின் கலை என்பதால் நாத விந்து கலாதீ நமோ நம.
அணுவினுக்கணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்று தமிழ் எப்பொழுதோ சொல்லி விட்டது.
அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்கள் உள்ளும் புறமும் கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்
இவ்வளவுதான் எனக்குத் தெரிந்தவர். ஏற்பவர் ஏற்கலாம். ஏற்காதவர் ஏற்காமலும் போகலாம்.
ஜிரா...!
அருமையான பின்னூட்டம். தருமி ஐயா பதிவிலும், சிறில் அவர்கள் பதிவிலும் இந்த கருத்தை சொல்லியிருந்தீர்கள் பார்த்தேன்.
சைவ சிந்தாந்த கருத்துக்களை வைணவர்கள் ஏற்க மாட்டார்கள்.
மதமே தோன்றியவைகள் என்ற கருத்து இருக்கும் போது, பிராஞ்ச தோற்றத்தை அதிலிருந்து அறிந்து கொள்ளுதல் எந்த விதத்தில் ஏற்புடையது என்று தெரியவில்லை.
மதமே தோன்றாத காலத்தில்
சூரிய வழிபாடும், பாம்பு வணக்கமும் எகிப்திலிருந்தே, அதாவது ஆப்ரிக்காவும், இந்தியாவும் ஒன்றாக இணைந்திருந்த காலத்தில் (லெமுரியா) பழந் தமிழர்களுக்கு கிடைத்தது என்று ஒரு கருத்து கூட இருக்க்கிறது.
// கோவி.கண்ணன் [GK] said...
ஜிரா...!
அருமையான பின்னூட்டம். தருமி ஐயா பதிவிலும், சிறில் அவர்கள் பதிவிலும் இந்த கருத்தை சொல்லியிருந்தீர்கள் பார்த்தேன். //
ஆமாம் கோவி. அங்கு சொன்னதுதான். இன்னும் கொஞ்சம் விரித்து இங்கு சொல்லியிருக்கிறேன்.
இன்னும் கொஞ்சம் தெரியும். அவ்வளவு விளக்கம் தேவையில்லை என்று இங்கு நிறுத்தி விட்டேன்.
// சைவ சிந்தாந்த கருத்துக்களை வைணவர்கள் ஏற்க மாட்டார்கள். //
தேவையில்லை. அவரவர் கருத்து அவருக்கு. தன்னை வணங்காதவரை ஆண்டவன் தண்டிப்பான் என்று நான் கருதவில்லை.
// மதமே தோன்றியவைகள் என்ற கருத்து இருக்கும் போது, பிராஞ்ச தோற்றத்தை அதிலிருந்து அறிந்து கொள்ளுதல் எந்த விதத்தில் ஏற்புடையது என்று தெரியவில்லை. //
நானும் ஒத்துக் கொள்கிறேன். மதத்தை விட இறைவன் பெரிது. இறைவனை விட சகமனிதன் பெரிது. இறைவனோ தொண்டருள்ளத்து அடக்கம். தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே. thatz all.
// மதமே தோன்றாத காலத்தில்
சூரிய வழிபாடும், பாம்பு வணக்கமும் எகிப்திலிருந்தே, அதாவது ஆப்ரிக்காவும், இந்தியாவும் ஒன்றாக இணைந்திருந்த காலத்தில் (லெமுரியா) பழந் தமிழர்களுக்கு கிடைத்தது என்று ஒரு கருத்து கூட இருக்க்கிறது. //
சூரிய வழிபாடு ஆதியில் எல்லா ஊர்களிலும் உண்டு. பாம்பு வழிபாடு தெரியவில்லை.
//நானும் ஒத்துக் கொள்கிறேன். மதத்தை விட இறைவன் பெரிது. இறைவனை விட சகமனிதன் பெரிது. இறைவனோ தொண்டருள்ளத்து அடக்கம். தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே. thatz all.//
ஜிரா... !
மறுபடியும் வந்து சென்று வாகை சூடியதற்கு நன்றி ! (சகமனிதனே பெரியவன் என்று சொன்னதற்கு)
நிறைய விசயம் வைத்திருக்கிறீர்கள். பிறப்பு/ இறப்பு சித்தர் தத்துவங்களை வைத்து தனி பதிவு இட வேண்டும் என்று சிறிய வேண்டுகோள் வைக்கிறேன்.
:))
// ஜிரா... !
மறுபடியும் வந்து சென்று வாகை சூடியதற்கு நன்றி ! (சகமனிதனே பெரியவன் என்று சொன்னதற்கு) //
நன்றி கோவி. ஆனால் அது என்னுள் தோன்றிய கருத்து அல்ல. தமிழில் படித்து அனுபவத்தில் ஏற்றுக் கொண்ட கருத்து.
// விசயம் வைத்திருக்கிறீர்கள். பிறப்பு/ இறப்பு சித்தர் தத்துவங்களை வைத்து தனி பதிவு இட வேண்டும் என்று சிறிய வேண்டுகோள் வைக்கிறேன்.
:)) //
ஏங்க இப்பிடி? இதெல்லாம் விவரம் தெரிஞ்சவங்க கிட்ட கேக்கனும் நான் ஜூஊஊஊஊஊஊட்!
ஜி.ரா. வின் கருத்துடன் ஒன்றுகிறேன்.
படித்ததையும், நூல்களின் துணை கொண்டும் இது பற்றி எழுத எண்ணியே "ஆத்திகம்" பதிவைத் தொடங்கினேன்.
முருகனருள் முன்னிற்கின் முயல்கிறேன், விரைவில்.
ஜி.ரா. சொன்ன ஓம் பற்றி வேதங்களில் விரித்துக் கூறியிருக்கிறது.
நான் சொல்ல விழைவது சைவ சித்தாந்தக் கருத்துகள்.
"உண்மை நெறி விளக்கம்".
நன்றி.
//Sivabalan said...
GK,
என்ன சொல்லவறீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியவில்லை.
பரிணாமம் இந்து மதம் ஏற்றுக் கொள்கிறதா?
நன்றி
//
சிபா...!
பரிணாமத்தைப் பற்றி இந்துமதம் எங்கும் பேசவில்லை ! அதுதான் சொல்லியிருக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
// SK said...
ஜி.ரா. வின் கருத்துடன் ஒன்றுகிறேன்.
படித்ததையும், நூல்களின் துணை கொண்டும் இது பற்றி எழுத எண்ணியே "ஆத்திகம்" பதிவைத் தொடங்கினேன்.
//
எஸ்கே ஐயா...!
உங்கள் ஆத்திகம் என்ற அருவி நல்ல தொடக்கம் தான் ... கிளை ஆறுகளாக பிரிந்திருக்கிறது. எப்படியும் உங்கள் லட்சிய ஆறு பெருக்கெடுக்கும் நிச்சயம்.
உங்கள் அருவியில் பல ஆறுகள் உற்பத்தி ஆகிவிட்டன. அதில் உங்களுக்கு பிடித்த பாலாறும் விரைவில் உதயமாகும் என்று எதிர்பார்க்கிறேன்.
உங்கள் எல்லா ஆறுகளும் முடிவில் ஆன்மிக சமுத்திரத்தில் கலக்கும் !
வாழ்த்துக்கள் !
:)
//G.Ragavan said... ஏங்க இப்பிடி? இதெல்லாம் விவரம் தெரிஞ்சவங்க கிட்ட கேக்கனும் நான் ஜூஊஊஊஊஊஊட்!//
ஜிரா...!
கவலையை விடுங்க...! வெவ(கா)ரம் தெரிஞ்ச ஒருத்தர் வந்து இருக்கார். தூண்டில் போட்டு இருக்கேன் !
பார்ப்போம் !
:))
பரிணாமத்தைப்பற்றி இந்துமதத்தின் எந்த பிரிவாவது பேசியிருக்கிறதா என்றால் - அடியேன் படித்தவரை, அறிந்தவரை - இல்லை என்று தான் சொல்லவேண்டும். தசாவதாரத்தை பரிணாமத் தத்துவத்தை மறைமுகமாகச் சொல்லும் ஒன்று என்று அண்மைக்காலமாக சில சமய அறிஞர்கள் சொல்லத் தொடங்கினார்கள். அடியேனுக்கு அந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை.
மற்ற படி அண்ட சராசரங்கள் எப்படி தோன்றின என்பதற்குப் பல விதமான கருத்துகள் இந்து மத நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்று என்ற முறையில் மிக விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. சிறு விவரங்களைத் தவிர பெரும்பாலும் இவை ஒத்துப் போகின்றன - அவை சித்தர் பாடல்கள், வடமொழி வேதங்கள், வடமொழி நூல்கள், சைவ, வைணவ, அறுவகை சமய நூல்கள், மற்ற நம்பிக்கைகள் என்று எல்லாமுமே.
கோவி.கண்ணன் ஐயா. ஓரளவு தெளிவாகவே சொல்ல முற்பட்டிருக்கிறீர்கள் என்று இராகவன் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். அப்படி முயன்றதில் வெற்றியும் அடைந்திருக்கிறீர்கள். நீங்களும் நானும் படிக்க வேண்டியவைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. நீங்கள் எதிர்மறையான கருத்துகளையே அதிகமாகவும் நான் நேர்மறையான கருத்துகளையே அதிகமாகவும் படித்திருக்கிறோமோ என்று தோன்றுகிறது. நீங்கள் இன்னும் கொஞ்சம் நேர்மறையான கருத்துகளைப் படிக்க வேண்டும்; நான் எதிர்மறையான கருத்துகளைப் படிக்க வேண்டும்.
///
நீங்கள் எதிர்மறையான கருத்துகளையே அதிகமாகவும் நான் நேர்மறையான கருத்துகளையே அதிகமாகவும் படித்திருக்கிறோமோ என்று தோன்றுகிறது
///
ஒரு சின்ன விண்ணப்பம் குமரன் எது எதிர்மறை எது நேர்மறை இன்று தீர்மானிக்க முடியாத பொழுது அறிவியல் பூர்வமான கருத்துக்களை எதிர்மறையான கருத்துக்கள் என்று குறிப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
ஏன் என்றால் அறிவியல் சொல்வது சரி என்ற காலம் வரும் பொழுது, சமயம் சொல்வது எதிர்மறையாகி விடலாம் இல்லையா?
இல்லை நான் உண்மை அறியாததால் எதிர் மறையான கருத்துக்களை மட்டுமே அறிந்து வந்திருக்கிறோம் என்றும் இருக்கலாம் இல்லையா.
அதுவரை சமயம் சொல்லும் கருத்துக்கள், அறிவியல் சொல்லும் கருத்துக்கள் என்று சொல்லலாமே?
//கோவி.கண்ணன் ஐயா. ஓரளவு தெளிவாகவே சொல்ல முற்பட்டிருக்கிறீர்கள் என்று இராகவன் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். அப்படி முயன்றதில் வெற்றியும் அடைந்திருக்கிறீர்கள். நீங்களும் நானும் படிக்க வேண்டியவைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. நீங்கள் எதிர்மறையான கருத்துகளையே அதிகமாகவும் நான் நேர்மறையான கருத்துகளையே அதிகமாகவும் படித்திருக்கிறோமோ என்று தோன்றுகிறது. நீங்கள் இன்னும் கொஞ்சம் நேர்மறையான கருத்துகளைப் படிக்க வேண்டும்; நான் எதிர்மறையான கருத்துகளைப் படிக்க வேண்டும்.
//
நன்றி குமரன்...!
நீங்கள், ஜிரா மற்றும் எஸ்கே ஐயாவின் ஆகியோரின் வருகையாலும், கருத்துப் பரிமாற்றத்தினாலும் இந்த பதிவு மேலும் பயனுள்ளதாக எழுத்தியிருப்பதாக நினைத்து மகிழ்கிறேன்.
எதிர்மறையானது நேர்மறையானது என்று கருத்துக்களை நான் பார்பதில்லை. எந்த ஒரு கருத்தும் காலத்தை பொறுத்து மாறுபடலாம். கோட்பாடுகள் மாறிக் கொண்டே வருகின்றன. எந்த கருத்துகளாயினும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லித் தான் ஆகவேண்டும் என்று கருதுகிறேன். நாணயத்திற்கு இருபக்கம் இருப்பது போல் கருத்துக்களுக்கும் இருக்கும். படிப்பது நேர்கருத்தா, எதிர்கருத்தா என்று ஆராயமல் கருத்து என்ற அளவில் படித்தால் அதில் உள்ள கருத்துக்களை இடத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம் என்றும் கருதுகிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி குமரன்.
//ஒரு சின்ன விண்ணப்பம் குமரன் எது எதிர்மறை எது நேர்மறை இன்று தீர்மானிக்க முடியாத பொழுது அறிவியல் பூர்வமான கருத்துக்களை எதிர்மறையான கருத்துக்கள் என்று குறிப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
ஏன் என்றால் அறிவியல் சொல்வது சரி என்ற காலம் வரும் பொழுது, சமயம் சொல்வது எதிர்மறையாகி விடலாம் இல்லையா?//
செந்தில் குமரன்,
அறிவியல் சொல்வது எதிர்மறையானது என்றோ சமயம் சொல்வது நேர்மறையானதென்றோ நான் சொல்லவில்லை. ஒரு கருத்தாக்கத்தின் சார்பாக வைக்கப்படும் கருத்தை நேர்மறை கருத்து என்றும் அதனை எதிர்க்கும் முகமாக அதில் உள்ள குறைகளை மட்டுமே பெரிது படுத்துவது எதிர்மறை கருத்து என்றும் எடுத்துக் கொண்டேன். கோவி. கண்ணன் ஐயா இந்தப் பதிவில் சொல்லியிருப்பது நேர்மறை கருத்துகள்; என் பதிவில் சில பின்னூட்டங்கள் இட்டார் - அவை எதிர்மறை கருத்துகளாய் இருந்தன. அவற்றிற்கு என் பதிவில் பதில்கள் சொல்லியிருக்கிறேன். அதனால் நான் எதனை எதிர்மறை எதனை நேர்மறை என்று சொன்னேன் என்று கோவி.கண்ணன் ஐயாவிற்குப் புரிந்தது என்று நினைக்கிறேன். அப்படி சொன்னத் இந்தப் பதிவில் என்பதால் இங்கிருப்பது எதிர்மறை என்ற தொனி வந்திருக்கலாம். அப்படி இருந்தால் மன்னிக்கவும்; நான் அப்படி சொல்லவில்லை.
உங்கள் வாதத்திற்கு என் பதில்: அறிவியலுக்குச் சார்பாக அறிவியலைப் போற்றி வரும் கருத்துகள் நேர்மறை; அறிவியலைத் தாழ்த்தி அணுகுண்டு, வலையகக் குற்றங்கள் என்று அறிவியலால் விளைந்த குறைபாடுகளை மட்டுமே பெரிதுபடுத்தி வைக்கப்படும் கருத்துகள் எதிர்மறை. சமயத்திற்குச் சார்பாக சமயத்தைப் போற்றி வரும் கருத்துகள் நேர்மறை. சமயத்தாலோ இல்லை சமயத்தைப் பின்பற்றுபவர்களாலோ ஏற்படுத்தப் பட்டச் சமயக் குற்றங்களை மட்டுமே பெரிது படுத்திக் குறை கூறுவது எதிர்மறை. நான் மேலே சொன்னது போல் நான் நேர்மறைக் கருத்துகளை மட்டுமே அதிகம் படித்திருக்கிறேன் போலும்; அது அறிவியலுக்கான நேர்மறைக் கருத்துகளோ இல்லை சமயத்திற்கான நேர்மறைக் கருத்துகளோ அவை பெரும்பாலும் நேர்மறைக் கருத்துகளாய்த் தான் இருக்கின்றன. ஆனால் மறுபக்கத்தையும் அறிய நான் எதிர்மறைக்கருத்துகளைப் படிக்க வேண்டும் போல் தெரிகிறது என்று சொன்னேன். ஆனால் ஐயா அவர்களின் பின்னூட்டங்கள் பல அவர் பெரும்பாலும் சமயத்தைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகளை மட்டும் தான் படித்திருக்கிறாரோ என்று தோன்றும்படி உள்ளன.
என்னைப் பொறுத்தவரை சமயமும் அறிவியலும் எதிர் எதிர் கருத்துகள் இல்லை; இரண்டும் நேர் கோடுகள். இரண்டுமே அவை அவை வழியில் உண்மையை அறிய முயல்கின்றன. இரண்டிலும் குற்றங்கள் இருக்கின்றன.
//ஒரு சின்ன விண்ணப்பம் குமரன் எது எதிர்மறை எது நேர்மறை இன்று தீர்மானிக்க முடியாத பொழுது அறிவியல் பூர்வமான கருத்துக்களை எதிர்மறையான கருத்துக்கள் என்று குறிப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
//
செந்தில் குமரன். மீண்டும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. நான் எங்கும் அறிவியல் பூர்வமான கருத்துகளை எதிர்மறையான கருத்துகள் என்று சொல்லவில்லை. அப்படி சொன்னதாக உங்கள் மனத்திற்குப் பட்டிருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். எங்காவது உங்களுக்கு அப்படித் தோன்றும்படி நான் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
//நாணயத்திற்கு இருபக்கம் இருப்பது போல் கருத்துக்களுக்கும் இருக்கும். படிப்பது நேர்கருத்தா, எதிர்கருத்தா என்று ஆராயமல் கருத்து என்ற அளவில் படித்தால் அதில் உள்ள கருத்துக்களை இடத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம் என்றும் கருதுகிறேன்.
//
உண்மை கோவி கண்ணன் ஐயா. நான் செந்தில் குமரனுக்குச் சொன்ன பதிலையும் கொஞ்சம் பாருங்கள். எந்த வகையில் நான் எதிர்மறை, நேர்மறை என்ற சொற்களைப் பயன்படுத்தினேன் என்று அறியலாம். கருத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடே. ஒரு பக்கத்தை மட்டுமே நானும் மறு பக்கத்தை மட்டுமே நீங்களும் படித்திருக்கிறீர்களோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியதால் அதனைச் சொன்னேன். நான் சொன்னது போல் மறுபக்கத்தையும் நான் இனிமேல் அதிகம் படிக்க வேண்டும்.
//உண்மை கோவி கண்ணன் ஐயா. நான் செந்தில் குமரனுக்குச் சொன்ன பதிலையும் கொஞ்சம் பாருங்கள். //
குமரன் வாங்க வாங்க !
:)
சினன குமரன் (எண்ணம்) தவறாக அர்த்தப் படுத்திக் கொண்டார் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் அறிவியலையும் ஆன்மீகத்தையும் குறித்துச் சொல்லுவது தவறல்ல...!
குமரன் நீங்கள் நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். வேறு மாதிரி கூட சொல்லலாம் அதாவது நல்ல கருத்துக்கள், கெட்ட கருத்துக்கள் சிலர் அப்படித்தான் மட்டம்தட்டுவதற்கு சொல்வார்கள். நீங்கள் அவ்வாறு சொல்லாமல் நேர்கருத்து எதிர்கருத்து என்று அழகாக சொல்லியிருக்கிறார். சின்ன குமரன் நல்ல கருத்து கெட்ட கருத்து என்று நீங்கள் சொல்வது போல் தவறாக விளங்கிக் கொண்டு இருக்கலாம்.
இன்னும் நீங்கள் சிறப்பாக சொல்லவேண்டுமென்றால் மாறுபட்ட கருத்து என்ற பதம் பயன்படுத்தியிருந்தால் விளங்கி இருக்கும்.
எனக்கு உங்கள் பதிவு நடையும் பழக்கம், நீங்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை என்பதையும், உங்களை வசைபவர்களுக்கு கூட மென்மையாக பதில் சொல்லுவீர்கள் என்பதை சில குறுப்பிட்ட பதிவுகளில் அனானிகளுக்கு நீங்கள் சொல்லும் மறுமொழியில் புரிந்து கொண்டுள்ளேன்.
:))
சரி பதிவுக்கு வருவோம் !
எந்த ஒரு மதமும் 20,21 நூற்றாண்டின் கேள்விக்களுக்கு பதில் சொல்லவேண்டும் என்று தோன்றும் போது நினைத்துப் பார்த்திருக்காது !
மதங்களில் பரிணாமம் பற்றி உள்ளதா என்பதை விட்டு, மதங்கள் பரிணாமம் அடைந்து காலத்துக்கு ஏற்றவாறு மாறியிருக்கிறாதா என்பதே ஆராய்ச்சிக்கு உரியவிசயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
:))
//குமரன் எண்ணம் ... அதுவரை சமயம் சொல்லும் கருத்துக்கள், அறிவியல் சொல்லும் கருத்துக்கள் என்று சொல்லலாமே? //
சின்ன குமரன் ...!
நீங்கள் அறிவியலா ? ஆன்மிகமா ?
தெரியலையப்பா !
:)))
குமரன் நீங்கள் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பதில் சொல்ல வேண்டி இருக்க வேண்டியதில்லை. நீங்கள் சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் தவறாக சொல்லி விட்டதாகவே தெரிகிறது. என் புரிதல் கம்மியாக இருக்கிறது(கொஞ்சம் அறிவு கம்மி) அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள். உங்களுக்கு தெரிந்ததில் 1% கூட எனக்கு ஆன்மீகம் தெரியாது. நான் உயர்வாக மதிக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர். என் தவறான புரிதலுக்கு இவ்வளவு தூரம் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.
மீண்டும் படித்த பொழுது தான் புரிந்தது சமயம் சம்பந்தமான எதிர்மறை, நேர்மறை கருத்துக்களை மட்டுமே சொல்லி இருக்கிறீர்கள்.
தவறான புரிதலுக்கு மன்னிக்கவும்.
///
சின்ன குமரன் ...!
நீங்கள் அறிவியலா ? ஆன்மிகமா ?
///
தெரியலையேப்பா(நாயகன் கமல் மாதிரி படித்துக் கொள்ளுங்கள்.)
கடவுள் இல்லை என்றால் ஒத்துக் கொள்ள மாட்டேன்.
மதம் தவறு என்றால் ஒத்துக் கொள்வேன்.
மதில் மேல் பூனை. Middle road.
:-)))
கோவி.கண்ணன் ஐயா.
செந்தில் குமரனனின் (உங்கள் சொற்களில் சின்ன குமரனின்) அறிவியலும் ஆன்மிகமும் தொடர்பதிவுகளைப் படித்துப் பாருங்கள். பின்னர் நீங்களே சொல்வீர்கள் அவர் அறிவியலா, ஆன்மிகமா என்று. :-)
செந்தில் குமரன், நானும் விரைவில் அந்தத் தொடரைப் படிக்க வேண்டும். ஒவ்வொரு முறை அது தமிழ்மணத்தில் தோன்றும் போதும் நினைத்துக் கொள்வேன். பின்னர் மறந்துவிடுகிறேன்.
உண்மையைச் சொன்னால் அந்தப் பின்னூட்டத்தை இட்டது நீங்கள் என்பதால் தான் நான் அவ்வளவு தூரம் விளக்கம் சொன்னேன். இதுவே வழக்கம் போல் நான் சொல்வதில் தவறினைக் காணும் ஒருவர் என்றால் லேசாகத் தொட்டு விட்டிருப்பேன். என் நீண்ட பின்னூட்டம் உங்களின் மேல் உள்ள மரியாதையின் வெளிப்பாடு. :-)
//குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா.
செந்தில் குமரனனின் (உங்கள் சொற்களில் சின்ன குமரனின்) அறிவியலும் ஆன்மிகமும் தொடர்பதிவுகளைப் படித்துப் பாருங்கள். பின்னர் நீங்களே சொல்வீர்கள் அவர் அறிவியலா, ஆன்மிகமா என்று. :-)
//
குமரன் ...!
நான் சின்ன குமரன் அ/ஆ பதிவு தொடரை படிப்பேன்... பெறும்பாலும் முதல் பின்னூட்டம் என்னுடையது தான் !
:)))
//உங்களை வசைபவர்களுக்கு கூட மென்மையாக பதில் சொல்லுவீர்கள் என்பதை சில குறுப்பிட்ட பதிவுகளில் அனானிகளுக்கு நீங்கள் சொல்லும் மறுமொழியில் புரிந்து கொண்டுள்ளேன்.
//
சில நேரம் கனியிருப்பக் காய் கவர்ந்ததும் உண்டு.
//குமரன் (Kumaran) said...
சில நேரம் கனியிருப்பக் காய் கவர்ந்ததும் உண்டு. //
குமரன்...!
எல்லோரும் படிப்பார்கள் என்று தெரிந்தும், கவலைப்படாமல்
இதெல்லாம் சொல்வதற்கே பெரியமனசு வேண்டும் !
Post a Comment