Tuesday, October 17, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஆத்திகமும் நாத்திகமும் !


ஆடையின்றி பிறந்தது போல்
ஆத்திகராக பிறக்கவில்லை எவரும் !
பெயர் வைப்பதில் காதில்
ஓதி துடங்கிய மதபோதனையை
அறிவற்று இருந்த அந்த வயதில்
கேட்டவுடன் தொடங்குகிறது
ஒருவரிடம் ஆத்திகம் !

தேடலின்றி திருப்திப் பட்டு,
முடங்கி விடுகிறது
ஆத்திகம் !

தேடி அறிய துடித்து,
கேள்வியில் நிற்கிறது
நாத்திகம் !

நம்பிக்கை மீது கட்டப்பட்டுள்ள
எந்த கொள்கையும்,
கேள்விக்கும் உரியது
கேலிக்கும் உரியது !

உண்மையான ஆத்திகன் என்பவன்
நாத்திகனே !
அவனே மெய்யையும் (உடல்)
மெய்யையும் (உண்மை) உணர்ந்தவன் !

உண்மையான நாத்திகன் என்பவன்
ஆத்திகனே !
அவனே தன்னையும், தன்னைப் போல்
பிறரையும் உணர்ந்தவன் !

19 : கருத்துக்கள்:

said...

GK,

//அறிவற்று இருந்த அந்த வயதில்
கேட்டவுடன் தொடங்குகிறது
ஒருவரிடம் ஆத்திகம் //

இரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்.

நன்றி

said...

உங்களுக்கு நன்கு தெரிந்த நிகழ்வுகளைப் பற்றி எழுதும் போது அற்புதமாக எழுதுகிறிர்கல், கோவியாரே!

இது அப்படி இல்லை.

அன்பின் மேல் சொல்லுகிறேன்.

தவறாக எண்ண வேண்டாம்.

:))

said...

Good One!

said...

// Sivabalan said...
GK,

//அறிவற்று இருந்த அந்த வயதில்
கேட்டவுடன் தொடங்குகிறது
ஒருவரிடம் ஆத்திகம் //

இரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்.

நன்றி
//

சிபா !
நன்றி ...! எந்த கருத்தானாலும் அடுத்தவர் நம்பிக்கையில் நுழையும் முன் நன்கு யோசிக்க வேண்டும் அதைதான் இந்த பதிவின் மூலம் சொல்லிக் கொள்ள விழைகிறேன் !

புரிதலுக்கு மேலும் நன்றி !

said...

//SK said...
உங்களுக்கு நன்கு தெரிந்த நிகழ்வுகளைப் பற்றி எழுதும் போது அற்புதமாக எழுதுகிறிர்கல், கோவியாரே!
//

எஸ்கே ஐயா !

No Commments !

மற்றபடி கருத்துக்கு நன்றி !

said...

// ILA(a)இளா said...
Good One!
//

இளா ...!
பாராட்டுக்கு நன்றி !

said...

///
தேடலின்றி திருப்திப் பட்டு,
முடங்கி விடுகிறது
ஆத்திகம் !

தேடி அறிய துடித்து,
கேள்வியில் நிற்கிறது
நாத்திகம் !
///

பொதுமைப் படுத்திச் சொல்வது சரியல்ல என்று படுகிறது. ஆனால் புத்தர் என்ற நாத்திகர் இறைவனாக கருதப்பட்டது

தன்னையும், தன்னைப் போல்
பிறரையும் உணர்ந்தவன்

ஆனதால் தான். நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

ஆமா கடவுள் இருக்கிறார் ஆனால் மதம் கூடாது சொல்றவங்க ஆத்திகரா? நாத்திகரா?

said...

சக்திக்கு மீறிய சிலவற்றை உண்மையாக இருக்கலாம் என்று நம்புவன் ஆத்திகன்

சான்று இன்றி எதையும் உண்மையென்று ஒப்புக்கொள்ளாதவன் ஆத்திகள்

said...

Please make the small correction - (it ia typing mistake)
சக்திக்கு மீறிய சிலவற்றை உண்மையாக இருக்கலாம் என்று நம்புவன் ஆத்திகன்

சான்று இன்றி எதையும் உண்மையென்று (ஒப்புக்கொள்ளாதவன் ஆத்திகள்)
ஒப்புக்கொள்ளாதவன் நாத்திகன்

10:22 PM

said...

கோவி, ஆத்திகமும் நாத்திகமும் நீங்கள் வரையறுத்திருப்பது போல அத்தனை எளிது என்று சொல்ல முடியாது. உங்கள் வரையறைப்படி ஆத்திகம் என்பது கடவுளை நம்புவது. நாத்திகம் என்பது கடவுளை நம்பாமல் இருப்பது.

செல்வன் சொன்ன எடுத்துக்காட்டும் சிந்திக்கத் தக்கதே. நேற்று உண்மை என்று அறிவு நம்பியது இன்று உண்மையல்ல. முதல்முதலில் அணுவின் அமைப்பு என்று அறிவியல் நிரூபித்தது சரியென்றுதானே நம்பப்பட்டது. ஆனால் இன்றைய நிலை. நடுவில் அணுவின் அமைப்பு மாறுபட்டது என்று எத்தனை முறை நிரூபிக்கப்பட்டு விட்டது.

ஆக ஒரு மனிதனால் முழுமையான பகுத்தறிவாளனாகவோ இறைநம்பிக்கையாளனாகவோ இருத்தல் இயலாது. அப்படி ஆகும் நாளில் அவன் பகுத்தவாளனாகும் இறைநம்பிக்கையாளனாகவும் இருப்பான்.

பகுத்தறிவு மதமாகுமா? உண்மையான இறைநம்பிக்கை எப்படி தீதற்றதோ அப்படியே உண்மையான பகுத்தறிவு மதமாகாது. ஆனால்....இன்றைக்கு மதங்களால் தீமைகளும் உண்டாகிறது போல பகுத்தறிவுப் பாசறை என்று சொல்லிக்கொள்கின்றவர்கள் மதமாகத்ட்தான் செயல்படுகிறார்கள் என்றே நாம் நம்புகிறேன். ஒரு எதிர்ப்பைக் கூட நாகரீகமாகக் காட்டத் தெரியாத நிலையில் மதங்களும் பகுத்தறிவுகளும் அவைகளின் தேவைகளிலிருந்து விலகி விலகிப் போய்க் கொண்டேயிருக்கின்றன. குறிப்பிட்ட கட்சிக்காரர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்வது என்னைப் பொறுத்த வரையில் நகைப்பிற்குரியது. மதச்சார்புள்ள சர்வமதக் கட்சிகளுக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கும் வேறுபாடு ஒன்றும் கிடையாது என்பது என் கருத்து.

கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டாரும் இறைநம்பிக்கையற்றவராக இருந்தார். ஆனால் அவர் கொஞ்சமேனும் பகுத்தறிவோடு இருந்தார். அதாவது உலகாதயம். ஒரு நூலே எழுதியிருக்கிறார். பெயர் மறந்து போய் விட்டது.

மொத்தத்தில் அடுத்தவரை மதித்து, அடுத்தவரை இழிவாக நினைக்காமல் கருத்து வேறுபாடு இருந்தாலும் நட்பு வேறுபாடு பாராட்டாமல் இருக்க வேண்டும். அது இல்லையென்றால் எந்த மதமானாலும் எந்தக் கொள்கையானாலும் வீண்தான்.

said...

///பொதுமைப் படுத்திச் சொல்வது சரியல்ல என்று படுகிறது. ஆனால் புத்தர் என்ற நாத்திகர் இறைவனாக கருதப்பட்டது

தன்னையும், தன்னைப் போல்
பிறரையும் உணர்ந்தவன்

ஆனதால் தான். நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

ஆமா கடவுள் இருக்கிறார் ஆனால் மதம் கூடாது சொல்றவங்க ஆத்திகரா? நாத்திகரா? //

புத்தர் ஆத்திகராக ஆக்கப்பட்டது அந்த காலம். இந்த காலத்தில் இராமசாமி பெரியார் ஒருவேளை ஒரு மனைவியோடு வாழ்ந்திருந்தால் அவரை இராம அவதாரம் என்று கூட பின்னாளில் சொல்வார்கள்.
:)

மதத்திற்குள் இல்லாத ஒரு கடவுளை குறிப்பிடுங்கள் உங்கள் கேள்விக்கு விடைகிடைக்கும் !
:))

said...

புத்தர், கடவுள் இல்லை என்றும் சொல்லவில்லை இருக்கு என்றும் சொல்லவில்லை. அவர் நாத்திகரும் அல்ல ஆத்திகரும் அல்ல. அவர் புத்தர் அவ்வளவுதான்.

புத்தரிடம் கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் ஏன் சொல்லமாட்டேன் என்கிறீர்கள் எனக் கேட்டதற்கு ஏற்கனவே இருப்பத்தை திரும்பவும் இருக்கிறது என சொல்வதில் என்ன அர்த்தம் என்றார். பிறகு இல்லாததை ஏன் திரும்பவும் இல்லை என சொல்ல வேண்டும் எனவும் கேட்டார்

ஆடையின்றி பிறக்கும் குழந்தை புத்தர் அது ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை.

தேட ஆரம்பித்த பிறகு தான் நாத்திகனோ ஆத்திகனோ ஆகிறார்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் ஆத்திகன் தேடுவதே இல்லை என்பது போல் இருக்கிறது.

ஆத்திகன் இருப்பதை தேடுகிறான் நாத்திகன் இல்லாததை தேடுகிறான் .
தேடுபவன் மனிதன்.
தேடாதவன் புத்தன்

said...

//சக்திக்கு மீறிய சிலவற்றை உண்மையாக இருக்கலாம் என்று நம்புவன் ஆத்திகன்

சான்று இன்றி எதையும் உண்மையென்று (ஒப்புக்கொள்ளாதவன் ஆத்திகள்)
ஒப்புக்கொள்ளாதவன் நாத்திகன்//

சுப்பைய்யா ஐயா !
கண்ணதாசன் நினைவுக்கு வருகிறார் !
:)

said...

ஜிரா...!
அருமையான நீண்ட பின்னூட்டத்திற்கு முதற்கண் நன்றி மற்றும் பாராட்டுக்கள் !

ஆத்திகர்கள் நாத்திகம் என்பது எதோ ஆபாசம் போல் பேசுகிறார்கள் !

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற கருத்தை முன் வைத்தே கடவுள் பெயரில் நடந்த மூடநம்பிக்கை கேலிக் கூத்துகளை நாத்திகர்கள் கி.மு காலத்தில் தொடங்கி தகர்த்து வந்திருக்கிறார்கள். நாத்திக மதமான பவுத்தம், மற்றும் சமணத்திலிருந்தே புலால் உண்ணாமை, நரபலி கொடுமை எதிர்ப்பு போன்ற கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஆத்திகம் இந்தியாவில் வளர்ந்துவந்திருக்கிறது என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்கள்.

ஆத்திகம் அறிவிழக்கும் போதெல்லாம் நாத்திகர்கள் தோன்றிதான் திருத்தி இருக்கிறார்கள். இல்லையென்றால் நீங்களும் நானும் கோவிலுக்கு வெளியில் தான் நின்று கொண்டிருக்க வேண்டும். கைம்பெண் மறுமணம் செய்ய மறுப்பு, உடன்கட்டை ஏறுதல் போன்ற அடிப்படை வாதத்தை ஒழித்தது நாத்திகர்களே !

நாத்திகம் என்றால் பெரியார்தான் புதிதாக அதை கொண்டுவந்தது போல கழக கண்மணிகளும், ஆத்திகர்களும் பேசிவருவது வரட்டு அரசியல்.

உண்மையான ஆத்திகர் அனைவரையும் இறைவனின் பிள்ளைகளாக பார்க்கவேண்டும் அப்படிப் பார்க்கும் ஆத்திகர்களுக்கு நானும் தலைவணங்குகிறேன்.

அதுபோல் நாத்திகம் என்ற பெயரில் அடுத்தவரின் நல்லவிதமான நம்பிக்கையை கேலி செய்பவர்களையும் வெறுக்கவே செய்கிறேன் !

ஆத்திகமும், நாத்திகமும் நாதனின் (இறைவனின்) வடிவங்கள் என்று நினைப்பவரே உண்மையான ஆத்திகர்.
மற்றவெறெல்லாம் ஆண்டவன் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்துபவர்கள் !

said...

மிக நல்ல பதிவு கோவி.கண்ணன் ஐயா. இரண்டு நாட்கள் பதிவுகளைப் பார்க்க முடியாது. அதனால் வெள்ளிக்கிழமை மீண்டும் வந்து பின்னூட்டம் இடுகிறேன். மேலோட்டமாகப் படித்ததில் இன்று தான் நான் புரிந்து கொள்ளும்படி எளிதாகவும் முழுமையாகவும் உங்கள் கருத்துகளைச் சொல்கிறீர்களோ என்று தோன்றுகிறது. உங்களின் எல்லாக் கருத்துகளையும் படித்ததில்லை தான். ஆனாலும் படித்த அளவில் (பெரும்பாலும் எனக்கு நீங்கள் இட்ட பின்னூட்டங்களில்) சிலவற்றைப் படிக்கும் போது 'என்ன பேசறார் இவர்?' என்பது தான் என் முதல் எதிர்வினையாக இருந்தது. பெரும்பாலும் அவை அரைகுறையாக நீங்கள் உங்கள் கருத்துகளைச் சொன்னதாலோ இல்லை அரைகுறையாக நான் புரிந்து கொண்டதாலோ எழுந்தது என்று இப்போது தோன்றுகிறது. மீண்டும் வந்து மெதுவாகப் படித்து அப்போது தோன்றும் கருத்தினையும் சொல்கிறேன். நன்றி.

said...

//கால்கரி சிவா said...
புத்தர், கடவுள் இல்லை என்றும் சொல்லவில்லை இருக்கு என்றும் சொல்லவில்லை. அவர் நாத்திகரும் அல்ல ஆத்திகரும் அல்ல. அவர் புத்தர் அவ்வளவுதான்.

புத்தரிடம் கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் ஏன் சொல்லமாட்டேன் என்கிறீர்கள் எனக் கேட்டதற்கு ஏற்கனவே இருப்பத்தை திரும்பவும் இருக்கிறது என சொல்வதில் என்ன அர்த்தம் என்றார். பிறகு இல்லாததை ஏன் திரும்பவும் இல்லை என சொல்ல வேண்டும் எனவும் கேட்டார்

ஆடையின்றி பிறக்கும் குழந்தை புத்தர் அது ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை.

தேட ஆரம்பித்த பிறகு தான் நாத்திகனோ ஆத்திகனோ ஆகிறார்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் ஆத்திகன் தேடுவதே இல்லை என்பது போல் இருக்கிறது.

ஆத்திகன் இருப்பதை தேடுகிறான் நாத்திகன் இல்லாததை தேடுகிறான் .
தேடுபவன் மனிதன்.
தேடாதவன் புத்தன்
//

சிவா !
புத்தபெருமானின் அருள் மொழிகளை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். பவுத்தம் சொல்வது சூனிய வாதம், இதனை வேறு வழியில் பின்னால் வந்த ஆதிசங்கரர் பிரம்மம் என்று சொன்னார். நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு என்று சுருக்கிவிட்டால், ஆத்திகத்தை மதநம்பிக்கை என்று சுருக்கிவிடலாம். நாத்திகத்தின் கொள்கை கடவுள் மறுப்பு என்று சொல்லப்பட்டாலும் அதன் மூலம் நிலைநிறுத்தப்படுவது மூட நம்பிக்கைக்கு எதிரான வாதங்களே. ஆத்திகம் கடவுள் ஏற்பு என்று சொல்லப்பட்டாலும் அதைத் தாண்டி அதில் உள்ளது மதம் சார்ந்த நம்பிக்கைகளே. கடவுள் என்பது இந்த இரு பிரிவுகளிலும் ஊறுகாயக்த்தான் பயன்படுகிறது. அன்பை போதிக்கும் எவரும் தேடலில் இது இரண்டையும் ஏற்றுக் கொள்வர்.
ஆத்திகன் இருப்பதை தேடுகிறான் ஆனால் அவன் தேடலுக்கு எல்லை உண்டு. நாத்திகனும் இல்லாத ஒன்று என்று சொல்லிக் கொண்டே தேடி அலைந்து நிருபிக்க முயல்கிறான்.
கருத்துக்கு நன்றி !

said...

சாமியை வணங்குகிறார், அனால் சாமியை நாக்கை பிடுங்கிக்கொள்ளும் அளவுக்கு கேள்விகள் கேட்பவர் ஆத்திகரா நாத்திகரா?

இது எனது பலநாள் குழப்பம்.

said...

//naathigan said...
Interesting comments.

I am writing this with high regards to all the theists.

Certainly the invention of god was done by only human being. I strongly believe that this inventor must be an atheist. Why ?

Today every radical approach on human being is done with an objective. Examples like religious terrorism, Religious politics, Racial aggression..etc.

Does it help the human being in any way, not at all and it will not. Never in the future.

So the Intention of invention of god was aimed to suppress the society by the name of religion and race.

11:07 PM
//

நாத்திகன்,
மனிதன் தன் இறந்துபோனதும் எல்லாம் முடிந்து போனதாக நம்புவதற்கு தயாராக இல்லை. எனவே இறப்புக்கு பின்னால் என்று சில கற்பனைகளை வளர்த்துக் கொண்டு இறப்புக்குப் பின்னால் மறுமை இருப்பதாக நம்பத் துடங்கி அதற்கான கோட்பாடுகளாக அமைத்துக் கொண்டதே மதங்களாக பரிணாமித்துள்ளது. அது அத்துடன் நில்லாமல் தன் சமூகம், வாழ்வியல் சார்ந்த கடவுள் கொள்கைகளை படைத்தான். பின்பு தனது கொள்கையே சிறந்தது என்றும், தான் வணங்கும் கடவுளே சிறந்தவர் என்றும் சொல்லத் துடங்க நம்பிக்கைகள் என்பது மதங்கள் என வளர ஆரம்பித்தது.

இவற்றில் நன்மை ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். அதாவது தன் கூட்டத்தினரை ஒருங்கிணைக்க அதை ஒரு கருவியாக பயன்படுத்தினான் என்றே சொல்லவேண்டும். காலவெள்ளத்திலும், இடப் பெயர்ச்சி, புலம் பெயர்தல் மூலம் தனக்குண்டான நம்பிக்கையை மற்ற இனத்தாரும் வழிப்பெற்ற வேண்டும் என்று நினைத்ததே மதங்களால் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்கள் ஆயிற்று. இதில் மூடப் பழக்கவழக்கங்கள் அதிகமாக ஊடுறுவி பொதுவாழ்வையே நாசப் படுத்த ஆரம்பித்த போது அங்கே நாத்திகம் அவசியமாயிற்று. அந்தந்த காலகட்டங்களில் தோன்றிய நாத்திக அறிஞர்களை, ஞானிகளை மக்கள் வரவேற்கவே செய்திருக்கின்றனர். அவர்கள் கொள்கைகள் புகழ்பெற்றதற்கும் மக்கள் வரவேற்பே காரணம். வேறு வழியின்றி ஆத்திக மதங்களும் தங்கள் கொள்கைகுள் நாத்திக கருத்துக்களை ஏற்றுக் கொண்டு வளர்ந்திருக்கின்றனர். அது போல் வளந்ததே இந்து மதம். இல்லையென்றால் இந்துமதம் எப்போதோ அழிந்து இருக்கும். பழமை வாதிகளே மதங்கள் மூலம் மட்டும் தான் வாழ்வியல் சிறக்க முடியும் என்று இன்னும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அத்தகைய நம்பிக்கை இருந்தாலும் வாழ்வியலை தாண்டி கற்பனைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் மதங்களுக்கு இடையே பெரும் குழப்பங்களும் கூச்சலும் ஏற்படுகிறது. இறைவன் என்பதை விட மதநம்பிக்கை என்பதே இன்றைய காலத்தில் ஆத்திகம் எனப்படுகிறது.

said...

//பூங்குழலி said...
சாமியை வணங்குகிறார், அனால் சாமியை நாக்கை பிடுங்கிக்கொள்ளும் அளவுக்கு கேள்விகள் கேட்பவர் ஆத்திகரா நாத்திகரா?

இது எனது பலநாள் குழப்பம்.
//

எங்க ஊரில் காளிவேசம் போட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு கூத்து கட்ட வருவார்கள். நீளமான சிகப்பு நாக்கு இருக்கும் ! அவ்வப்போது நாக்கை பிடிங்கிவிட்டு தேனீர் குடிப்பார்கள் பார்த்திருக்கிறேன். அடுத்தமுறை பார்க்கும் போது கேட்டு சொல்கிறேன்.
:)