Sunday, October 22, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

காட் பாதர் (திரை விமர்சனம்)

அஜித் - கே எஸ் ரவிக்குமாரின் கூட்டணியின் மற்றொரு படம். ஒரு தலயின் ஆட்டமே தலையை கிறுகிறுக்க வைக்கும், இதில் அப்பா - இரட்டை மகன்கள் என்று மூன்று தல. இரட்டை மகன்களில் ஒருவரை வேறுபடுத்திக் காட்ட நீல நிற விழியில் ஒருவரை காட்டுகிறார்கள் (என்ன லாஜிக்கோ).

கதை ... கதை வழக்கமான கொத்து புராட்டா. அம்மா சொண்டி மண்டு + அப்பா செண்டி மண்டு சேர்த்து கொத்திய காரம் குறைவான புரோட்டா.

அஜித் பஞ்ச் டயலாக் கொஞ்சம் குறைவுதான். தல அஜித்தை விட அசின் வரும் காட்சிகளில் தியேட்டரில் விசில் தூள் பறக்குது. (நான் பார்த்த திரையரங்கு சிங்கப்பூரை ஒட்டிய மலேசிய நகரான ஜோகூர்பாரு) அசினுக்கு கூடிய விரையில் தமிழ் ரசிகர்கள் சன்னிதானம் அமைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

படத்தில் முக்கியமாக வருவது ப்ளாஸ் பேக் காட்சிகள். அஜித் பரதநாட்டிய கலைஞராக வாழ்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம். அவருக்கு அந்த பாத்திரம் சிறப்பாக பொருந்தியிருக்கிறது. நடை உடை பாவனைகளில் ஒவ்வொன்றையும் மனுசன் அபிநயத்தோடு செய்து அசத்தி காட்டி கைதட்டல் பெறுகிறார். அதுதான் கதைக்கு காராணமே (கரு). முழு கதையை சொல்லிவிட்டால் பின்பு படம் பார்க்கும் போது ஆர்வம் இல்லாமல் போய்விடும்.

ரகுமானின் இசையில் மூன்று பாடல்கள் நன்றாக இருந்தது. இசையில் ஹிந்துஸ்தானி வாடை கொஞ்சம் அதிகம். அம்மா செண்டி மண்டு பாடல் ரகுமானுக்கு சமீபகாலங்களில் நன்றாக வருகிறது. அம்மா பாடல்களுக்கு தயாரிப்பாளர்கள் இனி ஏ.ஆர் ரகுமானை நாடலாம்.

அஜித் - அசின் இருவருக்கும் காதல் உருவாகும் காட்சி எதார்த்தமாக எடுத்து இருக்கிறார்கள். முழுப் படத்திற்கும் அசின் ஊறுகாய் அளவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சண்டை காட்சிகள் ஒன்றைத் தவிர மற்ற இரண்டு சண்டைக் காட்சிகள் அஜித் - அஜித் மோதுவதாக படமாக்கியிருக்கிறார்கள். படம் முடிந்து வெளியே வருகையில் அப்பா அஜித் தவிர மற்ற அஜித்கள் நினைவில் நிற்கவில்லை. கே.எஸ்.ரவிகுமார் முன்பு இந்த கதை சூப்பர் ஸ்டார் நடிப்பதற்காக சொல்லப்பட்ட கதை என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் ( சூப்பர் ஸ்டார் தப்பித்தார்) .

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு காட் பாதர் அட்டகாசம், அமர்களம், சரவெடி

பொழுது போக்கிற்கு போகிறவர்களுக்கு 'ஓ மை காட்', புஷ்வானம்

25 : கருத்துக்கள்:

said...

துரித விமர்சனத்திற்கு நன்றி!

said...

// Boston Bala said...
துரித விமர்சனத்திற்கு நன்றி!
//

பாபா..!
நன்றி ! படம் பார்க்கும் போது விமர்சனம் எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை ! இதுவரை எழுதியதும் இல்லை ! தல அஜித் படம் தான் முதலில் மாட்டி இருக்கு !

விரைவாக வந்து பின்னூட்டியதற்கு நன்றி !

said...

:))

said...

கில்லி மாதிரி அட்டகாசமா மொத ஆளா விமர்சனம் எழுதிட்டிங்க!

said...

//SK said...
:))
//

எஸ்கே ஐயா !
அது காமடி படம் இல்லிங்கோ !
:))

said...

//தம்பி said...
கில்லி மாதிரி அட்டகாசமா மொத ஆளா விமர்சனம் எழுதிட்டிங்க!
//

தம்பி ...!
நன்றி ! மற்ற படங்களுக்கு விமர்சனம் எப்படி வருது என்று பார்ப்போம் !

said...

பதிவிறக்கம் செய்து பார்க்கலாம் என்று இருந்தேன் தேறாது போல இருக்கே கண்ணன் பார்க்கலாம்.

said...

GK,

படத்தை இவ்வளவே வேகமாக பார்த்து சுடச் சுட பதிவு கொடுத்து கலக்கிடீங்க..

அஜித் இதிலயாவது தேறுவாறான்னு பார்த்த, கவுத்துவிடுவார் போல இருக்கு..

சரி விடுங்க.. அவரு இரசிகர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்..

பதிவுக்கு நன்றி

said...

தமிழ்நாட்டு விமர்சனம் வேற மாதிரி இருக்குங்க கோவி. நிறைய மக்கள் படம் நல்லா இருக்குன்னே சொன்னாங்க(அவர்கள் அஜித் ரசிகர்கள் இல்லை)

said...

//சந்தோஷ் said...
பதிவிறக்கம் செய்து பார்க்கலாம் என்று இருந்தேன் தேறாது போல இருக்கே கண்ணன் பார்க்கலாம்.
//

சந்தோஷ்..!
ஏமாறும் அளவுக்கெல்லாம் இல்லிங்கோ ! வில்லன் படம் போல் இருக்கிறது பார்கலாம் !
:)

said...

//Sivabalan said...
GK,

படத்தை இவ்வளவே வேகமாக பார்த்து சுடச் சுட பதிவு கொடுத்து கலக்கிடீங்க..

அஜித் இதிலயாவது தேறுவாறான்னு பார்த்த, கவுத்துவிடுவார் போல இருக்கு..

சரி விடுங்க.. அவரு இரசிகர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்..

பதிவுக்கு நன்றி
//

சிபா...!
படத்தில் அஜித் ஏமாற்றவில்லை !
ரவிக் குமாரிடம் தான் சரக்கு தீர்ந்து போய் இருக்கிறது !

said...

//ILA(a)இளா said...
தமிழ்நாட்டு விமர்சனம் வேற மாதிரி இருக்குங்க கோவி. நிறைய மக்கள் படம் நல்லா இருக்குன்னே சொன்னாங்க(அவர்கள் அஜித் ரசிகர்கள் இல்லை)
//

இளா !
மோசம் என்று சொல்லும் அளவுக்கெல்லாம் இல்லை ! காமெடி உண்டு. செண்டி மெண்ட்களில் மூக்கை சிந்தவைக்காமல் இருந்திருந்தால் நன்றாகவே இருக்கும் !

said...

பார்க்கலாம்ங்கறீங்களா இல்ல வேணாம்ங்கறீங்களா?

said...

//தேவ் | Dev said...
பார்க்கலாம்ங்கறீங்களா இல்ல வேணாம்ங்கறீங்களா?
//

தேவ்...!
அஜித் படம் அத்தி பூத்தால் போல் வருகிறது ! பார்கலாம் ! அதுவும் தலபோல வருமா ?
:))

said...

Kovi, I have linked your review in my blog

said...

//தேவ் | Dev said...
Kovi, I have linked your review in my blog
//

தேவ் ...!
அது நான் செய்த பாக்கியம் !
:)

நன்றி !

said...

// தலபோல வருமா //

:-)))))))))))

AYYO AYYOO

said...

இந்த படத்திற்க்கு தமிழில் மூன்று தல வரலாறு என்று மாற்றியிருக்கிறார்களே அத பத்தி ஏதாவது படத்தில் ரசிகர்களூக்கு சொல்லியிருக்கிறார்களா? கண்ணன் சார்.

said...

//சோம்பேறி பையன் said...
// தலபோல வருமா //

:-)))))))))))

AYYO AYYOO
//

சோம்பேறி பையன் அவர்களே !
என்ன தலய பிச்சிக் கொள்றீங்க !

:)

said...

//கோவை ரவீ said...
இந்த படத்திற்க்கு தமிழில் மூன்று தல வரலாறு என்று மாற்றியிருக்கிறார்களே அத பத்தி ஏதாவது படத்தில் ரசிகர்களூக்கு சொல்லியிருக்கிறார்களா? கண்ணன் சார்.
//

ரவீ அவர்களே!
டைட்டில் நான் பார்க்கவில்லை அதில் வருகிறதா என்று தெரியவில்லை !
தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பதால் மாற்றி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் !

said...
This comment has been removed by a blog administrator.
said...

//Leo Simha said...
Sir Kovi Kannan.......

//

Mr Leo,
The Movie is not below average. These days Almost most of the movies are below average. This Godfathere is not so good as 'Villan' the movie which was released 2 years before with the same Group.

I also praised the Father Ajit Role which was played as flashback.

Thanks for your Comments and short explaination about the movie

said...

Sir Kovi Kannan....

Yes, I agree only to some. In "Villain", We got to see 2 Ajith's with good acting especially the handicapped one. The story of Godfather is just okay. But what needs to be seen is the great improvement in the acting ability of Ajith when compared to his previous movies. Ajith's Dialogue Delivery is a big plus....He has improved a lot on this and also you can find out the dialogue variations of 3 Ajith's including the Young Ajith as a Bharathanatyam Dancer....mindblowing....

said...

//a Bharathanatyam Dancer....mindblowing.... //

Leo !
It is excellent, Even Kamalhasan acted as a Bharadhanatyam dancerin 'Salangkai Oli' He did only the Dance. But in this movie Ajit acted and played well as Dancer Role with the True *Nalinam* so far no one performed as Ajit.

Thanks for the Comments again !

said...

//சூப்பர் ஸ்டார் தப்பித்தார்//

நச்சுனு சொன்னீங்க :-)