Thursday, September 28, 2006
நரகாசூரன் !
நரகாசூரன் !
பள்ளியை மறந்து,
படிப்பைத் துறந்து
பட்டாசு தொழிற்சாலையில்
பாலகர்களை வதைக்க
வதைத்து எடுக்க,
ஆண்டு தோறும் அவதாரம்
எடுத்து அழிக்க முடியாதவனாக
கொக்கரிக்கிறான் நரகாசூரன் !
ஐந்து மாடிகள்
தி.நகர் கடைகளில் வளர்ந்தும்
அடிமையாய்
அதே சிறுவர்களை
உழைப்பிற்கேற்ற
ஊதியம் இல்லாமல்
ஊதாரியாக மாற்றிவிட
ஆண்டு தோறும் பிறக்கிறான்
அதே நரகாசூரன் !
பட்டு பளபளக்க,
மத்தாப்புக்களில்,
மந்தாகச புன்னகைப் பூத்து
மறுபடியும் வருவேன்,
மடிவென்பது என்றும்
இல்லை என்று
பட்டாசு ஒலியாய்
மார்தட்டிச் சிரிக்கிறான் நரகாசூரன் !
பி.கு: தேன் தந்த தலைப்பு இது...!
Subscribe to:
Post Comments (Atom)
21 : கருத்துக்கள்:
வாவ்,
ஒரு படத்துல அத்தனை கதைகள் சொல்லிட்டீங்க GK.
சூப்பரப்பூ..
கவிதை எங்கே மிஸ்டர் கண்ணன்?
பட்மே கவிதை சொல்லுவதால் படத்தோடு விட்டு விட்டீர்களா?
ம்ம்ம்ம்ம்ம் மிகவும் வருத்தமளிக்கும் படம்.
அந்த அன்னையும் மெளிந்த மகனும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்னமோ போங்க..
// சிறில் அலெக்ஸ் said...
வாவ்,
ஒரு படத்துல அத்தனை கதைகள் சொல்லிட்டீங்க GK.
சூப்பரப்பூ..
//
சிறில்...!
கவிதையை ஏற்றுவதற்குள் ப்ளாக்கர் கொஞ்சம் சொதப்பி விட்டது !
கவிதை போடும் போது தமிழ்மண முகப்பில் தெரியாமல் இருக்க, படத்தை மட்டும் ஏற்றிவிட்டு, பிறகு கவிதையை போடுவேன். இடையில் ப்ளாக்கர் சொதப்பியதால் சிறிது தாமதம் ஆகிவிட்டது !
கவிதையும் நன்றாக இருக்கிறது என்று சொல்வீர்கள் என்று நினைக்கிறேன் !
:)
// SP.VR.SUBBIAH said...
கவிதை எங்கே மிஸ்டர் கண்ணன்?
பட்மே கவிதை சொல்லுவதால் படத்தோடு விட்டு விட்டீர்களா?
//
ஐயா...!
வாருங்கள், நான் ஏமாற்றவில்லை.
ப்ளாக்கர் சொதப்பியதால் கவிதைக்கு சிறிது தாமதம் ஆகிவிட்டது !
:)
//Sivabalan said...
ம்ம்ம்ம்ம்ம் மிகவும் வருத்தமளிக்கும் படம்.
அந்த அன்னையும் மெளிந்த மகனும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்னமோ போங்க..
//
சிபா...!
நரகாசூரனை கிருஷ்ணன் அழித்ததால் யாருக்கெல்லாம் தொல்லை பாருங்கள் !
:((((
கவிதையும் ரெம்ப நல்லாருக்கு.
சரியான வார்த்தைகளில் சாடியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
GK,
சோகமான உண்மையை கூறும் கவிதையை கொடுத்திருக்கிங்க..ம்ம்ம்
படிக்க வேண்டியவர்கள் படித்தால் நன்றாக இருக்கும்..
சொன்னால் வருத்தம் வேண்டாம்
சொல்லிக்கொளள ஒன்றுமில்லை
சொர்க்க அசுரர்கள்தான் - இங்கேயுண்டு
சொல்லுங்கள் அவர்களைபற்றி எழுதும்படி
அரை நூறு பக்கம் கட்டுரை வேண்டுமா
ஆறு பக்கங்கள் கவிதை வேண்டுமா
அடுக்கு மொழியில் அவர்பெருமை பேச வேண்டுமா
அதெல்லாம் நொடியில் துவங்குவேன் செய்து முடிக்க!
நரக அசுரன்பற்றி எழுது என்றால்
நான் எப்படி அதைச் சொல்ல?
பள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகனை
பணியில் அமர்த்தியவனே நரகாசுரன்!
குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை நரகாசுரன் என்று கூறும் கருத்தாக்கம் மிக நன்று.
// நரகாசூரனை கிருஷ்ணன் அழித்ததால் யாருக்கெல்லாம் தொல்லை பாருங்கள் !
:(((( //
இந்த பதிலில் காட்சி கொடுக்கும் கோவி.கண்ணன் கொஞ்சம் சிரமப் படுத்துகிறார்.
கோ.க,
மனதைக் கலங்க வைத்த படமும் கவிதையும். உண்மையில் இச் சிறார்களை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. அவர்களின் குழந்தைப் பருவம் சூறையாடப்பட்டு விட்டது. பள்ளியில் இருந்து எழுது கோலைப் பிடிக்க வேண்டிய இந்தப் பிஞ்சுக்கரங்கள் இப்படி நச்சுப்பொருட்களுடன் வேலை செய்வது கொடுமையிலும் கொடுமையன்றோ!
கலக்கறீங்க தலை...
நேத்து இப்படித்தான் லிவிங் ஸ்மைல் வித்யா ஒரு படம் போட்டு கலங்கடிச்சாங்க..இன்னைக்கு நீங்க ஒரு படம் போடுறீங்க.....ம்ம்ம்ம்...மனசு கலங்குறதத் தவிர ஒன்னும் செய்ய முடியலையே!
என்ன கோவி, நீங்களும் கண்ணன் நரகனைக் கொன்றதுதான் தீபாவளின்னு முடிவுக்கு வந்துட்டீங்களா? வாரியார் கட்டுரையப் படிக்கலையா?
என்ன செய்ய படைத்தானே வயிற்றை ஆண்டவன் படைத்தானே கொடுத்தானே சம்பாதிக்க அந்த தொழிலையாவது கொடுத்தானே. சின்னஞ்சிறுவயதில் பள்ளிக்குச் செல்ல முடியாமல்.
கவிதை சூப்பர்
//சிறில் அலெக்ஸ் said...
கவிதையும் ரெம்ப நல்லாருக்கு.
சரியான வார்த்தைகளில் சாடியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
//
சிறில்...!
மறுபடியும் வந்து பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி.
விதை போட்டவர் தாங்கள், நீர் ஊற்றி பயிறாக்கினேன் நான் !
:)
//Sivabalan said...
GK,
சோகமான உண்மையை கூறும் கவிதையை கொடுத்திருக்கிங்க..ம்ம்ம்
படிக்க வேண்டியவர்கள் படித்தால் நன்றாக இருக்கும்..
//
சிபா...!
படிக்க வேண்டியவங்க பட்டாசுக் கடையில் பணத்தை எண்ணிக்கொண்டிருப்பார்கள் !
:)
//நரக அசுரன்பற்றி எழுது என்றால்
நான் எப்படி அதைச் சொல்ல?
பள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகனை
பணியில் அமர்த்தியவனே நரகாசுரன்! //
ஐயா...!
முழுக்கவிதையும் சிறப்பாக இருக்கிறது. மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை யென்றால் ஆசிரியர்கள் தான் உண்மையில் வருத்தமடைந்து குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவார்கள் என்பதை நன்றாக சொல்லி, குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பவர்களையும் சாடியிருக்கிறீர்கள். மறு மொழி கவிதைக்கு நன்றி, பாராட்டுக்கள் !
// குமரன் எண்ணம் said...
கலக்கறீங்க தலை...
1:33 AM
//
குமரன் எழுதிவிட்டு கலங்கினேன் !
:(
// G.Ragavan said... என்ன கோவி, நீங்களும் கண்ணன் நரகனைக் கொன்றதுதான் தீபாவளின்னு முடிவுக்கு வந்துட்டீங்களா? வாரியார் கட்டுரையப் படிக்கலையா? //
ஜிரா...!
திபாவளியின் உட்பொருள் (சூட்சமம் -) தெரியும்..!
அதைத்தாண்டி நடைமுறையில் உள்ள வலிதான் அதிகம் தெரிகிறது !
தீபாவளி வரிசை வந்திடுச்சா ?
//ENNAR said...
என்ன செய்ய படைத்தானே வயிற்றை ஆண்டவன் படைத்தானே கொடுத்தானே சம்பாதிக்க அந்த தொழிலையாவது கொடுத்தானே. சின்னஞ்சிறுவயதில் பள்ளிக்குச் செல்ல முடியாமல்.
கவிதை சூப்பர்
//
வாங்க என்னார் ஐயா...!
இதைவிடக் கொடுமை குழந்தைகளை பாலியல் தொழிலில் சில கயவர்கள் ஈடுபடுத்துவது !
:((
படம் சொல்லும் உண்மை, அதை விட அதை எடுத்துச்சொல்லும் கவிதை அருமை... கவிதைக்குள் ஒரு கம்யூனிசக் கொள்கையே புதைந்துள்ளதோ... எழுச்சி மிகு சிந்தனை.... வாழ்த்துக்கள் GK.
Post a Comment