Saturday, September 23, 2006
ஞாயிறு போற்றி ... !
உன்னிடமிருந்து பிறந்தேன் ...
உன்னுடைய சக்தியில் வாழ்கிறேன் ...
உன்னையே அடைவேன் ...
நீ பிறந்த போது ...
இந்த பூமியும் ...
நானும் பிறந்தோம் ...
என் கண் எதிரே நிற்கும்
தெய்வம் உனையன்றி
வேறொறு தெய்வம்
என் சிந்தை நாடாது ... !
உன் வெப்ப மூச்சு கூட
எனக்கு என்தாய்
உன் அணைப்பாக
தெரிகிறது... !
எம்மை வாழ்விக்க,
வெம்மை உடலை உருக்கி,
உம்மை அழித்துக்கொள்ளும்
உமையாள் உண்மையில் நீ யன்றோ !
Subscribe to:
Post Comments (Atom)
9 : கருத்துக்கள்:
கோவி.கண்ணன்,
நல்ல கவிதை.
ஞாயிறு எல்லவிதத்திலும் நமக்கு உயிர் தான்.
உன்னில் பிறந்து உன்னில் அடங்கும்//
உன்னால் வாழும்//
அன்னைக்கே உரிய வார்த்தைகள்.
இது என் கவிதைக்களுக்காக தனியே ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ ... பிள்ளையார் சுழி மாதிரி .... நம்ம சூரியனை நினைத்து ஒரு சின்ன முன்னோட்டக் கவிதை. முதலில் வந்து பின்னூட்டம் போட்ட manu அவர்களுக்கு நன்றி !
கோவி நல்லா எழுதியிருக்கிறீங்க... நானும் இதே மாதிரி ஒரு கதை எழுதியிருக்கேன் நேரம் கிடைச்சா படிச்சுப் பாருங்க...
http://kathalregai.blogspot.com/2006/07/blog-post_115305997306154776.html
நன்றாக உள்ளது கண்ணன் சார்.
//என் கவிதைக்களுக்காக தனியே ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ ... //
புத்தகமாப் போடுமய்யா!
வாழ்த்துக்கள்!
//எம்மை வாழ்விக்க,
வெம்மை உடலை உருக்கி,
உம்மை அளித்துக்கொள்ளும்
உமையாள் உண்மையில் நீ யன்றோ//
கோ.க, நல்ல கவிதை. ஆதிகாலத் தமிழர் சூரியன் இன்றி உலகமே இயங்காது என்பதால் தானே சூரிய வழிபாடு செய்ததோடு நின்று விடாது நன்றிக்கடனாக தை முதல் நாளன்று பொங்கல் படைத்து நன்றி செய்கிறார்கள். உலகத்திலேயே நான் அறிந்த வரையில் சூரியனுக்கு நன்றி சொல்ல நாள் ஒதுக்கி விழாக்காணும் இனம் தமிழினம் ஒன்றுதான். நினைக்கவே பெருமையாக இருக்கிறது.
ஞாயிறே போற்றுதும் ஞாயிறே போற்றுதும்
உமையாள் என்பது உமையவளின் (சக்தியின்) திருநாமம்
சக்தியையும், சூரிய சக்தியையும் ஒன்றாக்கிய கடைசி வரி மிகவும் நன்றாக உள்ளது
GK
குட் மார்னிங். நேற்று இரவு நீங்க லேட்டாக உறங்கப் போனதன் காரணம் இப்போது தான் புரிகிறது! ஞாயிறை வரவேற்க ஆயத்தம் செய்து கொண்டு இருந்தீங்க போல!
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று உங்களுடன் சேர்ந்து நாங்களும் சொல்கிறோம்!
Post a Comment