Sunday, September 10, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

உலகநாயகனின் தசவதாரம் பகுதி 3: (காமடி)

பகுதி 1*/*பகுதி 2*/*பகுதி 3*/*பகுதி 4

ரவி : நம்ம லெபனான் போகப் போறோமா ?

கமல் : இல்லை அது தலிபான்காரங்களுக்கு பின்லேடன் வேசம் போட்டிருக்கும் நாடகநடிகர் எஸ்கேப் ஆக செய்யும் தந்திரம், அதைக் கேட்டுவிட்டு அவர்கள் கலைந்து செல்கின்றனர்

ரவி : ம்

கமல் : மறுமடியும் ஏர்கோஸ்டஸ் மாமி ப்ளைட்டை கிளப்புறாங்க

ரவி : ஏர்கோஸ்டசுக்கு ப்ளைட்டை எப்படி டேக் ஆப் பண்ணறதுன்னு தெரியுமா ?

கமல் ; இதை நீங்க கேட்பிங்கன்னு தெரியும், அதனால காக்பிட்டில் இருக்கும் 30 நிமிடத்தில் நீங்களும் பைலட் ஆகலாம் என்ற புத்தகத்தை ஏர்கோஸ்டஸ் மாமி படிக்கிறதா நீங்க 2 சாட் இதுக்கு முந்திய காட்சியில் அதாவது டேக் ஆப் ஆகும் முன்பு வைக்கனும்

ரவி : அப்படி ஒரு புத்தம இருக்கா ?

கமல் : என்ன அப்படி கேட்டுட்டிங்க, பாலாஜி பப்ளிகேசனில் இல்லாதா புத்தகாம... அப்படி இல்லையென்றால் படம் பட்ஜட்டோ சேர்த்து நாமளே பிரிண்ட் பண்ணிடுவோம்

ரவி : ப்ளைட் கிளம்புது...ம்

கமல் : இந்த தடவை ஏர்கோஸ்டஸ் சரியாக டெல்லி ஏர்போர்டில் கொண்டுவந்து நிருத்துறாங்க

ரவி : ம்

கமல் : அப்போ ஏற்கனவே இதுபற்றி தகவல் தெரிந்ததால் இந்திய ராணுவம் ப்ளைட்டை சுத்தி நிக்குது

ரவி : திடீர் திருப்பம், இப்ப ப்ளைட்டில் இருப்பது ஜார்ஜ் புஷ்சா அல்லது பின்லேடனா ?

கமல் : இங்கேயும் சஸ்பென்ஸ்

ரவி : ஆவலை அடக்க முடியவில்லை சொல்லுங்கள்

கமல் : வேசத்தை கலைத்துக் கொண்டு இருப்பவர் நாடக நடிகர்

ரவி : இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை, ஜார்ஜ் புஷ் என்ன ஆனார் என்று இந்திய அரசாங்கம் கேள்வி கேட்காதா ?

கமல் : இங்க தான் நாடக நடிகர் தன்னோட ஹீரோ இசத்தை வெளிப்படுத்துகிறார்

ரவி : எப்படி ? எப்படி ?

கமல் : அதாவது ஹீரோ சொல்றார்... பின்லேடன் ஆளுங்களுடன் ஆப்கானில் சண்டையிட்டு புஷ்சைக் காப்பாற்றி அமெரிக்க ராணுவத்திடம் தான் ஒப்படைத்துவிட்டு திரும்புவதாக

ரவி : சபாஷ் !

கமல் : அப்பறம் ஏர்கோஸ்டசும், ஹீரோவும் டெல்லி பார்க் ஷரடனில் தங்க வைக்கப்படுறாங்க

ரவி : அதோட கதை முடிந்ததா

கமல் : இல்லை இன்னும் 4 வேசம் பாக்கியிருக்கே... ! இதையும் கேளுங்க

ரவி : தூக்கம் வருது... இதோட 6 ஆச்சு

கமல் : அதுதான் அப்பவே சொன்னேனே ஆறுவேசம் முடிஞ்சிடிச்சு...

ரவி : இது அது அல்ல , பெக்கோட கணக்கு

கமல் : இன்னிக்கு முழுக்கதையும் கேட்காம தூங்கக் கூடாது... அப்பறம் எனக்கு கதைசொல்ற கண்டினியுட்டி கெட்டுடும்

ரவி : மனதுக்குள் 'தலையெழுத்தை யாரால மாத்தமுடியும்' ம் சொல்லுங்க

கமல் : புஷ்தான் பார்க் ஷரடனில் இருக்கிறார் என்று நினைத்து ஒரு காஷ்மீர் தீவிரவாதி அங்கே கோபி அன்னான் வேசத்தில பார்க் ஷரடனில் சைரன் வச்ச காரில் வந்து இறங்குகிறான்

ரவி : கோபி அன்னான் வேசம் யாரு போடப் போறது வடிவேலுக்கு கொடுத்துடுவோமா

கமல் : அவரு இப்ப ஹீரோ அவருக்காக இந்த கேரக்டர் நான் கிரியேட் பண்ணலை... இது எனது ஏழாவது வேசம்

ரவி : நான் சற்றும் யோசிக்கவில்லை

கமல் : நான் யோசித்தேன்

ரவி : சொல்லுங்க

கமல் : எப்படியோ நாடக நடிகர் இருக்கும் ரூமுகுள்ள கோபி.அன்னான் நுழைஞ்சிடுறார்

ரவி : அவருக்கு ஏமாற்றமாக இருக்குமே

கமல் : ஆமாம்.. அதிர்ந்து நிற்கிறார்... ஆனால் வந்திருக்கிறது போலி கோபி.அன்னான் என்று ஏர்கோஸ்டஸ் மாமி கண்டுபிடிச்சுடுறார்

ரவி : எப்படி உங்களுக்குதான் வேசம் கரெக்டா செட் ஆகியிருக்குமே

கமல் : இங்க ஒரு சின்ன இடரல் இருக்கு

ரவி : என்னது

கமல் : அதாவது அந்த தீவிரவாதி கோபி.அன்னானோட 40 வயசு போட்டாவை வச்சு அதே போல மேக்கப் போட்டுக்கொண்டுள்ளார்... இதை மாமி சரியாக கண்டுபிடிச்சிடுறாங்க

ரவி : சூப்ப்ப்ப்ர்

கமல் : ஆமாம் ரவி ... கோபி.அன்னான் மேக்கப் போடும் போது இப்ப
கோபி.அன்னானுக்கு இருப்பதைவிட கொஞ்சம் நரைமுடி கம்மியாக வைத்து மேக்கப் போடனும், இது அந்த மாமிக்கு க்ளுவா அமைச்சிடுது

பகுதி 4 தொடரும் ...!

9 : கருத்துக்கள்:

said...

தசாவதாரத்துக்கு ஹீரோயினே இல்லையா ஜிகே :((

said...

கமல்ஹாசனுக்கு இதுவரை ஒரு முத்த சீன்கூட வைக்காமல் கதை விவாதம் நடத்தும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு கண்டனம்

said...

சூப்பர்..

நாலாவது பதிவு போடுங்க .. படிப்போம்..

said...

நல்ல காமெடி

அப்படியே நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.

said...

//மகேந்திரன்.பெ said...
தசாவதாரத்துக்கு ஹீரோயினே இல்லையா ஜிகே :((
//

மகி...!
கமல் படத்தில் நாயகி(கள்) இல்லாமாலா ?
பகுதி 5ல் வரும் ! காத்திருங்கள் !

said...

//மகேந்திரன்.பெ said...
கமல்ஹாசனுக்கு இதுவரை ஒரு முத்த சீன்கூட வைக்காமல் கதை விவாதம் நடத்தும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு கண்டனம்
//

மகி...!
கே.எஸ்.ரவிக்குமார் பாவம் விட்டுடுங்க.. அவரை சிங்கிதம் சீனிவாஸ் ரேஞ்சில் கமல் வச்சிருக்காரேன்ன்னு நானே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் !
:)

said...

//Sivabalan said...
சூப்பர்..

நாலாவது பதிவு போடுங்க .. படிப்போம்..
//

சிபா...!
4 வது பதிவோட கதை விவாதம் முடிந்து கதாநாயகிகள் பற்றிய விவாதம் வரும்...!

:)

said...

//கார்த்திக் பிரபு said...
நல்ல காமெடி

அப்படியே நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.
//

கார்த்தி...!
காமடியை ரசித்ததற்கு நன்றி...!
உங்கள் தேன்கூடு கதைக்கு ஒரு + குத்து போட்டாகிவிட்டது !
:)

said...

//
ரவி : ஏர்கோஸ்டசுக்கு ப்ளைட்டை எப்படி டேக் ஆப் பண்ணறதுன்னு தெரியுமா ?

கமல் ; இதை நீங்க கேட்பிங்கன்னு தெரியும், அதனால காக்பிட்டில் இருக்கும் 30 நிமிடத்தில் நீங்களும் பைலட் ஆகலாம் என்ற புத்தகத்தை ஏர்கோஸ்டஸ் மாமி படிக்கிறதா நீங்க 2 சாட் இதுக்கு முந்திய காட்சியில் அதாவது டேக் ஆப் ஆகும் முன்பு வைக்கனும்

ரவி : அப்படி ஒரு புத்தம இருக்கா ?

கமல் : என்ன அப்படி கேட்டுட்டிங்க, பாலாஜி பப்ளிகேசனில் இல்லாதா புத்தகாம... அப்படி இல்லையென்றால் படம் பட்ஜட்டோ சேர்த்து நாமளே பிரிண்ட் பண்ணிடுவோம்

ரவி : ப்ளைட் கிளம்புது...ம்
//
பட்டைய கிளப்புறீங்க கண்ணன்.

வாழ்த்துக்கள்.

//
மகேந்திரன்.பெ said...
கமல்ஹாசனுக்கு இதுவரை ஒரு முத்த சீன்கூட வைக்காமல் கதை விவாதம் நடத்தும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு கண்டனம்
//
ஹி ஹிஹி
நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.