Wednesday, September 06, 2006
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே !
கர்ணனுக்கு பிறக்கும் போதே
உடலுடன் ஒட்டிப் பிறந்த கவச குண்டலம் போல்
உலகில் பிறக்கும் அனைவருக்கும்
பிறப்புடன் சேர்ந்தே ஒட்டிக் கொள்கிறதிந்த மதம் !
இந்தியர் அதிலும் பெரும் புண்ணியம் (?) செய்தவர்கள் !
பிறக்கும் அனைவருக்கும் இரு மூட்டைகள்
முதுகில் ஏற்றப்படுகிறது
ஒன்று மதம், மற்றொன்று சாதி !
முன்னேறவிடாமல் அழுத்துவது இந்த
மூட்டை என்று அறியாமல்
என் மூட்டைகளே உயர்ந்ததென்றும்,
என் மூட்டைகளும் தாழ்ந்ததல்ல வென்றும்
எந்த மூட்டையும் பாரமே யென்று கருதாமல்
மூட்டைகளை தூக்கிச் சுமப்பதில் நமக்குள்
ஆயிரம் சண்டைகள் !
மூட்டைக்குள் இருப்பதென்ன அறிவுப் புதையலா ?
அவையாவும் ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளாக சேர்த்து வைத்த
அழுக்குகள் தானே !
மலம் சுமந்தவனும்,
மந்திரம் சொல்பவனும் மனிதனே !
அழுக்கு மூட்டைகளை
தூக்கி எறிந்துவிட்டு, நம் தோள்களை
தோழமைக்கு தோள்கொடுக்க
துடைத்து வைப்போம் ! வாருங்கள் !
Subscribe to:
Post Comments (Atom)
35 : கருத்துக்கள்:
GK,
உணமையிலே "அருமை" "அருமை" "அருமை".
கழுதைப் படம் உவமை..Excellent..
இது நியாயமான பேச்சு!
//Sivabalan said...
GK,
உணமையிலே "அருமை" "அருமை" "அருமை".
கழுதைப் படம் உவமை..Excellent..//
சிபா...!
கழுதைகளின் கால்களைப் பாருங்கள்...!
யாரோ போட்ட கட்டு(ப்பாட்டினால்) நெருங்கமுடியாமல் சங்கடத்துடன் கழுதைகள் நிற்கின்றன.
:)
//ஜோ / Joe said...
இது நியாயமான பேச்சு! //
ஜோ ...!
எல்லோருக்கும் ஞாயம் புரிகிறது. பழம்பெருமைதான் தடுக்கிறது ! இதையாரும் புரிந்துகொள்வதில்லை
:(
ஆஹா! ஆஹா!
என்னென்று சொல்வேன்.
அட்டகாசம் போங்க.
அழுக்கு மூட்டையை தூக்கி போடுவது மட்டும் அல்லாமல்,எதிர்காலத்தை மட்டும் மனதில் வைத்து உழைத்தால் இன்னும் முன்னேறலாம்.
ஆனாலும் இது ஓவர் வெயிட்டுங்க பாவம் "அவங்கள" இந்த மாதிரி கிண்டல் பன்னக் கூடாது
//துடைத்து வைப்போம் ! வாருங்கள் !//
மிஸ்டர் ஜி.கே
கொஞ்சம் தெளிவு ப்டுத்தினால் நன்று
அந்த 2 மூட்டைகளையும்
1.துடைத்து வைக்க வேண்டுமா?
2.துவைத்து வைக்க வேண்டுமா?
3.தூக்கி எறிய வேண்டுமா?
இதோ கிளம்பி விட்டேன்
கோ.க,
//மலம் சுமந்தவனும்,
மந்திரம் சொல்பவனும் மனிதனே !
அழுக்கு மூட்டைகளை
தூக்கி எறிந்துவிட்டு, நம் தோள்களை
தோழமைக்கு தோள்கொடுக்க
துடைத்து வைப்போம் ! வாருங்கள் !//
ஆகா, அருமை. அற்புதமான கருத்துக்கள்.
//வணக்கத்துடன் said...
கோவி.கண்ணன்,
சுமப்பது என்னவோ அழுக்குகள் தான்!
சுமக்க வைத்து ஆதாயம் பெறுபவர்கள், இறக்கி வைக்க அனுமதிப்பார்களா என்ன?
//
வணக்கத்துடன் அவர்களே ...!
சுமப்பது அழுக்கென்று தெரிந்தபின் / உணர்ந்த பின்பு, யாருடைய அனுமதிக்காக காத்திருக்க வேண்டும் ?
// வடுவூர் குமார் said...
ஆஹா! ஆஹா!
என்னென்று சொல்வேன்.
அட்டகாசம் போங்க.
அழுக்கு மூட்டையை தூக்கி போடுவது மட்டும் அல்லாமல்,எதிர்காலத்தை மட்டும் மனதில் வைத்து உழைத்தால் இன்னும் முன்னேறலாம். //
குமார்... அவர்களே !
நன்றாக சொன்னீர்கள்.. உழைப்பால் தான் உயரமுடியும் !
கருத்துக்களுக்கு நன்றி !
///
முன்னேறவிடாமல் அழுத்துவது இந்த
மூட்டை என்று அறியாமல்
என் மூட்டைகளே உயர்ந்ததென்றும்,
என் மூட்டைகளும் தாழ்ந்ததல்ல வென்றும்
எந்த மூட்டையும் பாரமே யென்று கருதாமல்
மூட்டைகளை தூக்கிச் சுமப்பதில் நமக்குள்
ஆயிரம் சண்டைகள் !
///
தலை பிரிச்சிட்டீங்க சூப்பரா இருக்கு உங்க கவிதை.
//மகேந்திரன்.பெ said...
ஆனாலும் இது ஓவர் வெயிட்டுங்க பாவம் "அவங்கள" இந்த மாதிரி கிண்டல் பன்னக் கூடாது //
மகி,
கழுதைகளின் சுமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவை தாங்கள் அழுக்குகளை சுமக்கிறோம் என்ற அறியாமையில் இருக்கின்றன !
// SP.VR.SUBBIAH said...
மிஸ்டர் ஜி.கே
கொஞ்சம் தெளிவு ப்டுத்தினால் நன்று
அந்த 2 மூட்டைகளையும்
1.துடைத்து வைக்க வேண்டுமா?
2.துவைத்து வைக்க வேண்டுமா?
3.தூக்கி எறிய வேண்டுமா?
இதோ கிளம்பி விட்டேன் //
சுப்பைய்யா அய்யா...!
ஆயிரம் ஆண்டுகளின் சுமை என்கிறேன். துவைக்கவா, துடைக்கவா என்று கேட்கிறீர்கள்.
தூக்கி எறியவேண்டும் !
வெற்றி said...
//கோ.க,
ஆகா, அருமை. அற்புதமான கருத்துக்கள். //
வெற்றி அவர்களே பாரார்ட்டுக்கு நன்றி !
//Mouls said...
அது எப்படி இப்படி ஒரு படம் எடுத்தீர்கள்?... ஓரு கழுத மட்டும் கால்ல கட்டு போட்டு?.....இந்த விவகாரத்திர்க்கு ரொம்ப சரியான படம்.
//
Mouls ...!
எந்த கழுதையும் தனக்குதானே கட்டுப் போட்டுக் கொள்வதில்லை. யாரோ போட்ட கட்டுடன் தான் நிற்கின்றது !
அருமையான பாடல்... ஆழ்ந்த கருத்துக்கள்... தீர்ந்தது சந்தேகம்...
ஆமாம்... பாடலை நீரே எழுதினீரா அல்லது மண்டபத்தில் யாரேனும் எழுதிக்கொடுத்ததை கொண்டு வந்து பாடினீரா?
:-P
(சும்மா கிண்டலுங்க... மற்றபடி உண்மையில் அருமையான கவிதை... பலர் உணரத் தேவையான கருத்து)
//குமரன் எண்ணம் said...
தலை பிரிச்சிட்டீங்க சூப்பரா இருக்கு உங்க கவிதை. //
வழக்கம் போல் வந்து பாராட்டிய குமரன் அவர்களே நன்றி !
// கோபி(Gopi) said...
அருமையான பாடல்... ஆழ்ந்த கருத்துக்கள்... தீர்ந்தது சந்தேகம்...
ஆமாம்... பாடலை நீரே எழுதினீரா அல்லது மண்டபத்தில் யாரேனும் எழுதிக்கொடுத்ததை கொண்டு வந்து பாடினீரா?
:-P
(சும்மா கிண்டலுங்க... மற்றபடி உண்மையில் அருமையான கவிதை... பலர் உணரத் தேவையான கருத்து) //
கோபி...!
சரியாத்தான் சொன்னிங்க...! மண்டபத்தில் இருவர் எழுதிய கவிதைகளை ஒட்டுக்கேட்டு... ஒட்டுப்போடவுதற்காக எழுதியது இது !
:))
சண்டே அன்னைக்கு சண்டை போடலாம், மண்டே அன்னைக்கு மண்டைய போட முடியாது என்பது போல் உள்ளது உமது கருத்து..
///
வழக்கம் போல் வந்து பாராட்டிய குமரன் அவர்களே நன்றி !
///
வழக்கம் போல என்றாலும் இந்த தடவை என்னோட கருத்துக்களோட அப்படியே ஒத்துப் போயிருக்கீங்க. என்னைப் பொறுத்த வரை மதம் தான் இந்த உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்கு காரணம். இதை எதோ எனக்கு தெரிஞ்ச பாமர மொழியில் என் வலைப் பூவில அங்கங்கே பதிஞ்சிருக்கேன்.
//தி.ராஸ்கோலு said...பாராட்டுகிறேன் கோவி. அருமையான கவிதை ஆழத் தைக்கும் வரிகள். தைக்குமா?
கேள்விக்குறி தான் //
தி.ராஸ்கோலு ...அவர்களே !
தங்களின் முழுப்பின்னூட்டத்தையும் வெளியிட முடியாததற்கு வருந்துகிறேன் !
பொதுவாக எனது பதிவுகளில் தனிப்பட்டவர்களை தாக்கும் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை.
அவரவர் கருத்துக்களை அவரவர் எழுதுகிறார்கள் அதில் மாறுபட்ட கருத்து இருக்கும் போது அவர்களது பதிவில் சுட்டிக் காட்டினால் நன்று !
இந்த பதிவு யாரையும் (வ)தைப்பதற்கு எழுதவில்லை. எல்லோரும் தாழ்ந்த / உயர்ந்த வேறுபாடுகளை உணர்ந்து கலைந்து நாம் எல்லோரும் மனிதரே என்று உணரவேண்டும் என்பதற்குத் தான் எழுதினேன்.
//செந்தழல் ரவி said...
சண்டே அன்னைக்கு சண்டை போடலாம், மண்டே அன்னைக்கு மண்டைய போட முடியாது என்பது போல் உள்ளது உமது கருத்து..
//
ரவி... கருத்தா சொல்லுறிங்க ?
தேர்ஸ்டே அன்னிக்கு வந்து மண்டைய உருட்டுறிங்களே...!
அனானி ஆளுங்களிடம் சொல்லி நல்லா கவனிக்கச் சொல்றேன் :)
//குமரன் எண்ணம் said...
வழக்கம் போல என்றாலும் இந்த தடவை என்னோட கருத்துக்களோட அப்படியே ஒத்துப் போயிருக்கீங்க. என்னைப் பொறுத்த வரை மதம் தான் இந்த உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்கு காரணம். இதை எதோ எனக்கு தெரிஞ்ச பாமர மொழியில் என் வலைப் பூவில அங்கங்கே பதிஞ்சிருக்கேன். //
குமரன்...!
உங்கள் 'எண்ணம்' நன்றாக தெரியும் !
நேசக் குமாருக்கு நீங்கள் அளித்த பின்னூட்டம் படித்திருக்கிறேன். அதே போல் தங்கள் எழுத்துக்களையும் தொடர்ந்து படிக்கிறேன்.
குமரன் எண்ணம் ... அதில் நடுநிலைமை இருப்பது திண்ணம் !
:))
வருத்தம் எல்லாம் இல்லை கோவி..
கொஞ்சம் உணர்ச்சி வசத்தால் தனிமனிதத் தாக்குதல் போலப் போய்விட்டது என நினைக்கிறேன்.
ஆனாலும் நீங்கள் எழுதிய இந்தக் கவிதை வரிகள் தைக்க வேண்டியவர்களுக்கு தைக்கும் என உங்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன்..
இதிலும் ஏதாவது தனி மனிதத் தாக்குதல் உள்ளதா?:)
//தி.ராஸ்கோலு said...
வருத்தம் எல்லாம் இல்லை கோவி..
கொஞ்சம் உணர்ச்சி வசத்தால் தனிமனிதத் தாக்குதல் போலப் போய்விட்டது என நினைக்கிறேன்.
ஆனாலும் நீங்கள் எழுதிய இந்தக் கவிதை வரிகள் தைக்க வேண்டியவர்களுக்கு தைக்கும் என உங்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன்..
இதிலும் ஏதாவது தனி மனிதத் தாக்குதல் உள்ளதா?:)
//
தி.ராஸ்கோலு ... அவர்களே !
நன்றி !
நான் தைப்பதற்கோ வதைப்பதற்கோ எழுதவில்லை. நல்ல கருத்தை விதைப்பதற்காக எழுதினேன். எரியும் தீயில் என்னோடு நல்லுள்ளங்கள் இணைந்து தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன்.
நல்ல கவிதை!
நிறைந்த சிந்தனை!
நான் தயார்!
இது போன்ற ஒத்த கருத்துகள் வலையெங்கும் பரவ, முருகனுக்கு முன்னின்று வேண்டுகிறேன்
சூப்பர் சாமி. கலாய்ச்சுட்டீங்க.
நல்ல கவிதை மட்டுமல்ல, சமூக அக்கரையோடும் எழபதப்பட்ட கவிதை. வாழ்த்துக்கள்.
// SK said...
நல்ல கவிதை!
நிறைந்த சிந்தனை!
நான் தயார்!
இது போன்ற ஒத்த கருத்துகள் வலையெங்கும் பரவ, முருகனுக்கு முன்னின்று வேண்டுகிறேன்
//
எஸ்கே ஐயா!
பாராட்டுக்களுக்கு நன்றி ... உங்கள் அவா மு மு புண்ணியத்தில் நடக்கட்டும் !
//சிறில் அலெக்ஸ் said...
சூப்பர் சாமி. கலாய்ச்சுட்டீங்க.
//
சிறில் ... !
தலைப்பை பார்ர்த்து வந்தீர்களா ? நல்ல வேளை கருத்துக்கள் ஏமாற்றவில்லை !
:))
// மா.கலை அரசன் said...
நல்ல கவிதை மட்டுமல்ல, சமூக அக்கரையோடும் எழபதப்பட்ட கவிதை. வாழ்த்துக்கள்.
//
கலை ... !
நன்றி ... நல்லுள்ளங்கள் சார்பில் எழுதப்பட்டது இது... உங்கள் பாராட்டுக்களை பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்து அளிக்கிறேன்.
தலைப்பு பாத்துதான் ஒங்க பதிவுக்கு வரணுமா?
இப்பத்தாங்க பதிவைப் பார்த்தேன்.
சூப்பர் பதிவுங்க.
படம்..........?
வருத்தமா இருந்துச்சு. கழுதை எங்கியும் ஓடாம இருக்கக் கட்டுப் போட்டு
வச்சுருக்கு பார்த்தீங்களா?
மனுஷனை மாதிரி சுயநலம் பிடிச்ச ஜீவராசி வேற எதாவது
இருக்கா இந்த உலகத்துலே?(-:
// சிறில் அலெக்ஸ் said...
தலைப்பு பாத்துதான் ஒங்க பதிவுக்கு வரணுமா?
//
சிறில் ...!
எனக்கு புடிச்சவங்களை கலாய்கிறது எனக்கு இனிக்கும் :)
//துளசி கோபால் said...
இப்பத்தாங்க பதிவைப் பார்த்தேன்.
சூப்பர் பதிவுங்க.
படம்..........?
வருத்தமா இருந்துச்சு. கழுதை எங்கியும் ஓடாம இருக்கக் கட்டுப் போட்டு
வச்சுருக்கு பார்த்தீங்களா?
மனுஷனை மாதிரி சுயநலம் பிடிச்ச ஜீவராசி வேற எதாவது
இருக்கா இந்த உலகத்துலே?(-:
//
துளசியம்மா ...!
உங்கள் மறுமொழி ஆயிரம் கவிதையை எழுதத்தூண்டுகிறது.
எல்லோருமே ஒரு மாயக் கட்டினால் மயக்கமுற்று இருக்கின்றனர். புரிந்துகொள்பவர்கள் அதை மலர்செண்டாக மாற்றி பரிமாறிக் கொள்ளலாம்.
கருத்துக்களுக்கும் கழுதைகள் மீதான தங்களின் அன்பிற்கும் நன்றி !
Post a Comment