Monday, September 04, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

எனக்கு மட்டும் அல்ல ! [புதுக் கவிதை]

சோம்பல் முறித்து காலையில்
எழுந்ததும் பெட் காஃபி,
இட்டெலியுடன் புதினாச் சட்டினி,
அயர்ன் பண்ணி தயாராக வைத்த உடை,
டிபன் பாக்ஸில் தயாராக மதிய உணவு,
அவ்வப்போது தொலைபேசியில்
அன்பாக அழைத்து விசாரிப்பு,
மாலை வீடு திரும்பியதும்
காலுரைகளை கழட்டும் கைகள்,
மென்று கொண்டே தொலைக் காட்சிப் பார்க்க
சிற்றுண்டியுடன் காஃபி,
அற்றாட செய்திகளை பற்றி
செய்தித் தாள்களில் ஒரு அலசல்,
இரவு தயாராக இருக்கும் உணவு
இத்தனையும்
தானும் வேலைக்குச் சென்று,
குடும்பத் தலைவியையும் வேலைக்கு அனுப்பும்
கணவர்களுக்கு கிடைக்குமா ?

பி.கு: இது நேற்றைய கவிதையின் தொடர்ச்சி

28 : கருத்துக்கள்:

said...

கிடைக்க வழியில்லை. ஜி.கே.

கவிதையில் வேண்டுமானால் எழுதலாம்.
20% நடக்கலாம்.!

said...

Such a type of better half never expect these things.
He is always happy with his rising bank balance.[}}}}}}}}}}

said...

கோ.க,

//இத்தனையும்
தானும் வேலைக்குச் சென்று,
குடும்பத் தலைவியையும் வேலைக்கு அனுப்பும்
கணவர்களுக்கு கிடைக்குமா ?//

குடும்பத் தலைவியை வேலைக்கு அனுப்பாது வீட்டில் வைத்திருக்கும் கணவன்மார்களுக்கு மட்டும் இதெல்லாம் கிடைத்துவிடவா போகிறது?! இப்ப வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் குடும்பத் தலைவிகள் பலர் தொலைக்காட்சிகளில் வரும் தொடர் நாடகங்களைப் பார்க்கவே நேரமில்லை எனும் கவலையில் இருக்கிறார்கள்! கணவன்மாருக்கு இவையெல்லாம் செய்து கொடுக்க நேரம் கிடைக்குமா? :))

said...

// valli said...
கிடைக்க வழியில்லை. ஜி.கே.

கவிதையில் வேண்டுமானால் எழுதலாம்.
20% நடக்கலாம்.!
//

வள்ளி..!
ஆடித் தள்ளுபடி போல சொல்கிறீர்கள் !
கிடைக்கிறவரை லாபம் தான் !
:))

said...

//SP.VR.SUBBIAH said...
Such a type of better half never expect these things.
He is always happy with his rising bank balance.[}}}}}}}}}}
//

ஐயா...!
எந்த பேங்கில் அவுங்க அக்வண்ட் இருக்குன்னு தெரியாதப்ப நீங்கள் சொல்வது சிரிப்பை வரவழைக்குது !
:))

said...

//வெற்றி said...
கோ.க,
குடும்பத் தலைவியை வேலைக்கு அனுப்பாது வீட்டில் வைத்திருக்கும் கணவன்மார்களுக்கு மட்டும் இதெல்லாம் கிடைத்துவிடவா போகிறது?! இப்ப வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் குடும்பத் தலைவிகள் பலர் தொலைக்காட்சிகளில் வரும் தொடர் நாடகங்களைப் பார்க்கவே நேரமில்லை எனும் கவலையில் இருக்கிறார்கள்! கணவன்மாருக்கு இவையெல்லாம் செய்து கொடுக்க நேரம் கிடைக்குமா? :))
//

குடுப்பத் தலைவி வேலைக்குச் செல்லாத வீட்டில் இதையல்லாம் எதிர்பார்க்க கூடாதென்றால், என்னோட ஆசை பேராசைதான் !
ஒப்புக்கொள்கிறேன் !
:))

said...

ஒரு தினுசாத்தான் கிளம்பி இருக்கீங்க! :)

said...

//விடாதுகருப்பு said...

ஒரு தினுசாத்தான் கிளம்பி இருக்கீங்க! :)
//

கருப்பு அவர்களே ...!
என்ன செய்றது சினிமா பார்த்து பார்த்து, பேராசை வந்துவிட்டது. அந்த காலத்து ஆட்கள் கொடுத்து வச்சவங்க, சின்னது, பெருசுன்னு விதவிதமா வாழ்ந்துட்டு போய்ட்டாங்க !
:)

said...

கொல்றாய்ங்கப்பு கவிதைன்ற பேருல, இவனுகள எல்லாம் பார்சல் பண்ணி பங்களாதேசுக்கு அனுப்பணும்போல

said...

இவை எல்லாம் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை.

"வாரம் ஒரு முறை தமிழ்மணத்தில் பதிவு போடும் போது, கொஞ்சம் கருணை கூர்ந்து முகத்தைச் சிரிச்சாப் போல் வச்சிக்கிட்டா நல்லாயிருக்குமே!

அதை விட, Blogger-இல் பின்னூட்டங்களை எல்லாம் குத்து மதிப்பா, allow பண்ணி வேலையைக் கொஞ்சம் சுளுவாக்கினா எவ்ளோ நல்லா இருக்கும்?",

என்று சில நண்பர்கள் கேட்கிறார்களே? என்ன சொல்ல??
:-):-):-)

said...

//ஷோக்காளி said...
கொல்றாய்ங்கப்பு கவிதைன்ற பேருல, இவனுகள எல்லாம் பார்சல் பண்ணி பங்களாதேசுக்கு அனுப்பணும்போல
//

ஷோக்காளி ...!
உங்கள் பின்னூட்டம் ரசித்தேன் ...:)

எதோ நம்பளால முடிந்த சேவை...!
அது பங்களாதேசுக்கும் தேவை என்கிறீர் நீங்கள்.. எனக்கு வங்காள பாசை தெரியாதே ! என்ன செய்யறது...! தமிழே தகராறு !
:))

said...

//kannabiran,Ravi Shankar (KRS) said...
இவை எல்லாம் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை.

"வாரம் ஒரு முறை தமிழ்மணத்தில் பதிவு போடும் போது, கொஞ்சம் கருணை கூர்ந்து முகத்தைச் சிரிச்சாப் போல் வச்சிக்கிட்டா நல்லாயிருக்குமே!

அதை விட, Blogger-இல் பின்னூட்டங்களை எல்லாம் குத்து மதிப்பா, allow பண்ணி வேலையைக் கொஞ்சம் சுளுவாக்கினா எவ்ளோ நல்லா இருக்கும்?",

என்று சில நண்பர்கள் கேட்கிறார்களே? என்ன சொல்ல??
:-):-):-)
//

ரவி...!
குத்துமதிப்பாதான் ஏற்கனவே பின்னூட்டங்கள் வருது...! யாரு பொறுமையாக படிச்சு பின்னூட்டம் போடுறாங்க என்று நினைக்கிறிங்க..!
நான் எந்த பதிவையும் உ முதல் உ வரைப் படிப்பதில்லை.

குத்துமதிப்பா அலோ பண்ணுவதற்கு அன்னியன் வெங்கட ரமணி ஒரு மென்பெருள் வைத்திருக்கிறார் வாங்கி உபயோகப்படுத்துங்கள். நான் முயற்'சிக்கவில்லை :)

said...

//குத்துமதிப்பா அலோ பண்ணுவதற்கு அன்னியன் வெங்கட ரமணி ஒரு மென்பெருள் வைத்திருக்கிறார்//

அய்யோ, மென்பொருள் - ல்லாம் வேணாங்க GK.

நம்ம வீட்டு மெல்லியலார், காபி டிபன் எல்லாம் கொடுக்காட்டியும் பரவாயில்லை; கொஞ்சம் பின்னூட்ட ஹெல்ப் பண்ணி, பதிவு போடும் போது, முகத்தைச் சிரிச்சாப் போல் வச்சிக்கிட்டாங்னா போதும் -கிற அர்த்தத்துல சொன்னேங்க.

ரொம்ப எதிர்பார்க்கிறமோ? ஹிஹி!

said...

//இத்தனையும்
தானும் வேலைக்குச் சென்று,
குடும்பத் தலைவியையும் வேலைக்கு அனுப்பும்
கணவர்களுக்கு கிடைக்குமா ?//

ஹி...ஹி...அம்மணிகளுக்காக ஒன்னு...ஆம்பளைங்களுக்காக ஒன்னு. கணக்கு சரியாப் போச்சு. அப்படித் தானுங்ளே?
:)

said...

/// kannabiran,Ravi Shankar (KRS) said...
அய்யோ, மென்பொருள் - ல்லாம் வேணாங்க GK.

நம்ம வீட்டு மெல்லியலார், காபி டிபன் எல்லாம் கொடுக்காட்டியும் பரவாயில்லை; கொஞ்சம் பின்னூட்ட ஹெல்ப் பண்ணி, பதிவு போடும் போது, முகத்தைச் சிரிச்சாப் போல் வச்சிக்கிட்டாங்னா போதும் -கிற அர்த்தத்துல சொன்னேங்க.

ரொம்ப எதிர்பார்க்கிறமோ? ஹிஹி! //

கண்ணபிரான்...!

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே வாழ்ந்திடுவோமே வாழ்நாளிலே !

:)

said...

// கைப்புள்ள said...
ஹி...ஹி...அம்மணிகளுக்காக ஒன்னு...ஆம்பளைங்களுக்காக ஒன்னு. கணக்கு சரியாப் போச்சு. அப்படித் தானுங்ளே?
:) //

கைப்புள்ள...!
சரிதான் அங்கேயும் அம்மனிகளுக்குத்தான் முதலிடம் கொடுத்து அப்பறம் பாவம்னு அய்யாங்களுக்கும் வக்காலத்து வாங்கினேன்.!

:))

said...

//குத்துமதிப்பா //

கோவி,
இந்த உள்குத்து, வெளி குத்துக்கெல்லாம் மதிப்பு இருக்கிறதா என்ன?

said...

உண்மையை சொல்லுங்க, கணவு தானே இந்த பதிவுக்கு தூண்டுகோல் ?

said...

//நான் எந்த பதிவையும் உ முதல் உ வரைப் படிப்பதில்லை.//

அது சரி இது வேற நடக்குதா அப்ப நாங்க எல்லாம் வேலையத்துப் போயி பதிவு போடுவமோ? நீங்க படிக்காம பின்னூட்டம் போடுவீங்க இல்லை இருங்க இப்ப ஒரு பதிவு போடுறேன்

said...

//மகேந்திரன்.பெ said...
அது சரி இது வேற நடக்குதா அப்ப நாங்க எல்லாம் வேலையத்துப் போயி பதிவு போடுவமோ? நீங்க படிக்காம பின்னூட்டம் போடுவீங்க இல்லை இருங்க இப்ப ஒரு பதிவு போடுறேன்//

மகி ...!
இதை வச்சே ஒரு பதிவா ...!
நடத்துங்க ! ஏமாந்த அனானிங்க இருந்த அதற்கும் பின்னூட்டம் போடுவாங்க !
:))

said...

:)))))))))))))))))))))))))
:)))))))))))))))))))))0

said...

போட்டுட்டமில்ல ஹா----ஹாஆஆஆஆஆஆ ஹ...... மனோகர் சிரிப்பை கற்பனை செய்துகொள்ளவும்

said...

//மகேந்திரன்.பெ said...
போட்டுட்டமில்ல ஹா----ஹாஆஆஆஆஆஆ ஹ...... மனோகர் சிரிப்பை கற்பனை செய்துகொள்ளவும்
//

மகி ... நடத்துங்க நடத்துங்க ...!
நல்லா இருங்க சாமி !

அது சரிரீ...!
உங்கள் பதிவெல்லாம் முழுசா படிச்சா பின்னூட்டம் போட முடியுமா ?
அப்படியும் போட்டுகிட்டு தானே இருக்கேன்.

அதான் திறமை !
:))))))))))))))))))

said...

// மகேந்திரன்.பெ said...
:)))))))))))))))))))))))))
:)))))))))))))))))))))0
//

லக்கியார் பதிவில் உங்களுக்கு நடந்த பாராட்டுகளைப் போல் எனக்கும் நடக்காமல் இருந்தால் சரி...!
:))

said...

இரு கவிதைகளிலும் 'அற்றாட' என்பதை 'அன்றாட' எனத் திருத்தாத எழுத்துப்பிழை கயமைத்தனம் மன்னிக்கக் கூடியதல்ல!

இருப்பினும், பொருட்குற்றம் இல்லாமையால் மன்னிக்கிறோம்!
இனிமேலாவது கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கிறோம்!

:))

said...

கிடைக்கும் அம்மாவை தன்னுடன் வைத்தக்கொண்டால்

said...

//ENNAR said...
கிடைக்கும் அம்மாவை தன்னுடன் வைத்தக்கொண்டால்
//
என்னார் ஐயா !
வைத்துக்கொண்டால் நல்லதுதான்... கிடைக்கனுமே.
:)

said...

இப்படியெல்லாம் கனவு காணாதீங்க.. கிடைக்க வழியேயில்லை :)