Wednesday, September 20, 2006
இன்னும் இருக்கிறது ஆதாயம் !
இன்னும் இருக்கிறது ஆதாயம் !
நாமெல்லாம் ஒரே இனம்,
ஆனால் எதையும் என் குலம்
அல்லாதவர்க்கு விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !
நாமெல்லாம் இறைவனின் பிள்ளைகள்
ஆனால் என்கடவுளே உயர்ந்தவர்,
என்மதத்தை விட்டுகொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !
அரசியல் வாதிகள் எல்லோரும் ஊழல் செய்பவர்கள்
ஆனால் என் கட்சியே சிறந்தது
என் தலைவரை விட்டுகொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !
எல்லா மொழியும் சமமானது
ஆனால் என் மொழியே உயர்ந்தது
கருவரையை விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !
Subscribe to:
Post Comments (Atom)
20 : கருத்துக்கள்:
போட்டியில் போட்டதா இல்லை புதுசா?
அரசியல்வாதிங்க எல்லாரும் ஊழல் செய்பவர்கள் என்று சொல்லுறீங்களே...
இது உண்மையா ?
அப்பாவியாய்..
நாந்தான்..
கடைசி நாலுவரிகள் சற்று தொடர்பற்று இருக்கிறது...அதாவது, மொழி பற்றி ஆரம்பித்து, மத-சாதியில் முடிப்பதற்கு பதிலாக, இன்னொறு 4 வரிகள் தனியாக சாதியை சாடியிருக்கலாமோ?
அப்பாடா. ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு எளிமையான ஆனால் ஆழ்ந்த பொருளுடையக் கவிதையைப் படிச்சாச்சு. நன்றி கோவி.கண்ணன் ஐயா.
//பொன்ஸ் said...
போட்டியில் போட்டதா இல்லை புதுசா?
//
பொன்ஸ் போட்டிக்கு 'ஆகாயம்' அது வேற !
இது ஆதாயம் பற்றியது !
:)
//செந்தழல் ரவி said...
அரசியல்வாதிங்க எல்லாரும் ஊழல் செய்பவர்கள் என்று சொல்லுறீங்களே...
இது உண்மையா ?
அப்பாவியாய்..
நாந்தான்.. //
ரவி...!
எல்லோரும் அல்ல 99 % அப்படித்தான் இருக்கிறார்கள் ரவி.
//மெளல்ஸ், பெங்களூர் said...
கடைசி நாலுவரிகள் சற்று தொடர்பற்று இருக்கிறது...அதாவது, மொழி பற்றி ஆரம்பித்து, மத-சாதியில் முடிப்பதற்கு பதிலாக, இன்னொறு 4 வரிகள் தனியாக சாதியை சாடியிருக்கலாமோ?
//
மெளல்ஸ்...!
எல்லா சாதிகளும் கெட்டுப்போய் தான் இருக்கு !
என்னத்த செய்றது...! சாதியற்ற சமுதாயம் வேண்டும் என்று சொல்பவர்களேயானாலும் திருமணம் என்று வந்துவிட்டால் அதற்குள் தானே தேடுகிறார்கள்.
:(
//குமரன் (Kumaran) said...
அப்பாடா. ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு எளிமையான ஆனால் ஆழ்ந்த பொருளுடையக் கவிதையைப் படிச்சாச்சு. நன்றி கோவி.கண்ணன் ஐயா.
//
குமரன் ...!
ஆழ்ந்த பொருளா ? நான் எழுதியது அழுகிய பொருள்கள் பற்றி ...!
:))
கவிதை மகிழ்ச்சியையும் கருப்பொருள் வருத்தத்தையும் தந்தது. ஹும்ம்..
எல்லாருக்கும் தெரிந்த உண்மைகளைப் புட்டு வைத்திருக்கிறீர்கள்!
எளிமையாக!
படித்து மேலே செல்வோம் அவரவர் வழியில்!
ஏனெனில்..
இன்னும் இருக்கிறது ஆதாயம்!
:))
GK,
ஆகா அருமை.. கலக்கிடீங்க..
//ஆனால் என் மொழியே உயர்ந்தது
கருவரையை விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் //
அதுவும் இந்த வரிகள் சூப்பர்..
//மணியன் said...
கவிதை மகிழ்ச்சியையும் கருப்பொருள் வருத்தத்தையும் தந்தது. ஹும்ம்..
//
மணியன்,
கரும்பு சாறு, இனிப்பு, சக்கை துவர்ப்பு !
:)
இன்னும் தேவையாய் இருக்கிறது ஆதாயம் என்றிருந்திருக்கலாமோ?
SK said...
//எல்லாருக்கும் தெரிந்த உண்மைகளைப் புட்டு வைத்திருக்கிறீர்கள்!
எளிமையாக!
படித்து மேலே செல்வோம் அவரவர் வழியில்!
ஏனெனில்..
இன்னும் இருக்கிறது ஆதாயம்!
:))
11:41 AM
//
எஸ்கே ஐயா !
அவரவர் வலியில்!
ஏனெனில்..
இன்னும் இருக்கிறது ஆதாயம்!
என்று இருக்க வேண்டும் !
******//Sivabalan said...
GK,
ஆகா அருமை.. கலக்கிடீங்க..
Sivabalan said...
GK,
ஆகா அருமை.. கலக்கிடீங்க..
//ஆனால் என் மொழியே உயர்ந்தது
கருவரையை விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் //
அதுவும் இந்த வரிகள் சூப்பர்..
8:25 PM
அதுவும் இந்த வரிகள் சூப்பர்..
8:25 PM
//******
சிபா...!
நன்றி...எதோ நம்மால் முடிந்த குழப்பத்தை ஏற்படுத்த முயலலாம் என்று தான் போட்டேன் !
:))
//குமரன் எண்ணம் said...
இன்னும் தேவையாய் இருக்கிறது ஆதாயம் என்றிருந்திருக்கலாமோ?
//
குமரன் ...!
இன்னும் இருக்கிறது ஆகாயம்
இன்னும் இருக்கிறது ஆதாயம்
'கா'வுக்கு பதில் 'தா' போட்ட பின்பு எழுதினேன். ! தலைப்பு தான் எழுத தூண்டியது !
கோ.க,
அருமையான கவிதை. யாதர்த்தத்தை மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
கவிதை எழுதும் பல பதிவர்கள் கவிஞர்களே!
ஆனால் கோவி.கண்ணனின் கவிதையே சிறந்தது
என் அன்பு நண்பரை விட்டுக் கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கின்றது ஆதாயம்!
(பி.கு:இங்கு ஸ்மைலி போடவில்லை)
அன்புடன்...
சரவணன்.
//வெற்றி said...
கோ.க,
அருமையான கவிதை. யாதர்த்தத்தை மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
//
வெற்றி அவர்களே !
தங்களின் மேலான பாராடுக்கு நன்றி !
//உங்கள் நண்பன் said...
கவிதை எழுதும் பல பதிவர்கள் கவிஞர்களே!
ஆனால் கோவி.கண்ணனின் கவிதையே சிறந்தது
என் அன்பு நண்பரை விட்டுக் கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கின்றது ஆதாயம்!
(பி.கு:இங்கு ஸ்மைலி போடவில்லை)
அன்புடன்...
சரவணன்.
//
ஆகா சரா...!
என்ன தவம் செய்தனை பாராட்டு சிலிர்க்க வைக்கிறதே !
அதுவும் ஸ்மைலி போடாமால் என்று சொல்லி விட்டிர்கள்.
மகிழ்ச்சி, நெகிழ்சி ... பறக்க வைக்கிறது !
Post a Comment