Thursday, September 14, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

அனானிகளுக்கு மட்டும்...!

அன்பு அனானிகள் பலர்(?) என் மீது அன்பு(?) கொண்டு... பல பதிவர்ளின் பதிவுகளுக்குச் சென்று தங்களுக்கும் என் பதிவில் அனானி பின்னூட்ட இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடுகிறார்கள். அவர்கள் எனது பதிவுகளை தொடர்ந்து படித்து கருத்து (?) ஆழங்களில் ஈர்க்கப்பட்டு, கவிதைகளின் நயத்தில்(?) மெய் மறந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அனானிகள் முன்னேற்ற சங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் பல நல்ல உள்ளங்கள் இருக்கும் போது என்னுடைய ஆதரவு இப்'போதை'க்கு தேவையில்லை என நினைகிறேன். மேலும் அனானி ஆப்சன், அதர் ஆப்ஸன் இரண்டும் சேர்ந்தே இருப்பதால் எப்படி அனானிகளுக்காக மட்டும் கதவை திறந்துவிட முடியும் ? அதர் ஆப்ஸ்சன் மூலம் யாராவது சமோசா (எல்லோரும் போட்டதால் போலியை விட்டுடுவோம்) போட்டு பதிவர் பெயரில் விளையாடினால் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஞானம் இல்லை. ஆகவே கண்மணிகளே என் மீதி மதிப்பு வைத்திருப்பது உண்மையானால் (சென்டிமென்ட் போட்டு தாக்குறேன் பாருங்க :) ! ) தங்கள் கோரிக்கையை திரும்பப் பெருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் வழக்கமாக கும்மியடிக்கும் பதிவுகளை என்னுடைய பதிவுகளாக நினைத்து தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு(?) கொடுக்குமாறு இந்த பதிவின் மூலம் வேண்டிக் கொள்கிறேன்.

உங்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைப்பதால் ஒரு கவிதையை இங்கு சமர்பிக்கிறேன்

னானி நண்பனே !

பெயரில்லாத பெயரை வைத்து, பதிவு
பயிர் வளர்க்க பின்னூட்ட உரம் தந்து
உயர்த்தும் அனானி நண்பர்களே!
துயர் வேண்டாம் உமக்கு !

பிறப்பதற்கு முன்பு எல்லோரும் அனானி !
இறந்த பிறகு எப்பவுமே அனானி !
கால ஓடையில் எல்லோரும் அனானிகளே !
காலத்தில் ஒரு நாள் கதவும் திறக்கலாம் !

கலங்காதே கண்மணியே !


அன்புடன்
கோவியார்

27 : கருத்துக்கள்:

said...

இறந்த பிறகு அனானி அல்ல!
அமானுஷ்ய ஆவி!

(நாமக்கல்லார் பி.டி.சாமி மன்னிப்பாராக)

said...

இப்படி ஒரு கவிதை எழுதினா?. விட்டுடுவோமா?.

"அனானிகள் சார்பில் கோவியாருக்கு இங்கும் ஒரு கண்டனம்...."

அவர் பதிவில் எங்களுக்கு இடம் தரும்வரை, அவர் பின்னுட்ட்ங்களிடும் இடங்களில் நாங்க மேல சொன்ன கண்டன வாக்கியங்களை இடுவதாக அ மு க பாசறை தீர்மானம்....பதிவர்கள் தாங்களாகவே தங்கள் பதிவுகளில் மேலெ கூறிய வாக்கியங்களை சேர்த்திட அ மு க அறிவுருத்துகிறது.


அ மு க
செந்தழலார் பாசறை
அல்சுர், பெங்களூர்

said...

//அமானுஷ்ய ஆவி said...
இறந்த பிறகு அனானி அல்ல!
அமானுஷ்ய ஆவி!

(நாமக்கல்லார் பி.டி.சாமி மன்னிப்பாராக)
//
எதுக்கும்,
நாமக்கல்லாரிடம் தாயத்து வாங்கி கட்டிக்கிறேன் :))

said...

//அமுக பெங்களூர் said...
இப்படி ஒரு கவிதை எழுதினா?. விட்டுடுவோமா?.
//

அன்பு அனானி...!
அனானி ஆப்சன் .. அதை ஒண்ணும் மட்டும் கேட்காதிங்க
அப்பறம் விடிய விடிய ஒங்க பின்னூட்டத்த மட்டுறுத்தல் செஞ்சி பொழப்பு போய்டும் !
நான் பாவம் !

said...

அமுக விற்கு வெளியில் இருந்து(ஒற்றைப் புளிய மரத்திலிருந்து) ஆதரவு அளிக்கிறேன்.

said...

GK, எப்படியோ, அனானி ஆவிகள் முதற்கொண்டு ப்ளாக்கர் ஆக்கிட்டீங்க :))

said...

அன்பு ஜிகே,

எமக்கு துயரெல்லாம் ஒன்றே அதுவும்
என்றும் பின்னுட்டநாயகனின் பதிவில் எங்கள்
கும்மியும், கோலாட்டமும் நற்றமிழும் சிறக்க
நமக்கு வேண்டும் இடம்.

said...

சரிங்க ஜிகே,

மறப்போம் மன்னிப்போம்...

எதோ எல்லோரும் பெருசு அப்படின்னு சொல்லறதால, விட்டுடறேன்....

said...

அதென்னங்க அனானிகளுக்கு மட்டும்!
ஆவிகளுக்கும் ஒரு பதிவு/கவிதை எழுதுங்க!

said...

இப்படியெல்லாம் என் ஃபோட்டோவை போட்டு பயமுறுத்த வேண்டி இருக்கு!

said...

ஏய் ஆவி, வந்திருக்கேண்டா பூசாரி!.. உன்னைத் துரத்த!!

கோவி, நீ ஒண்ணும் பயப்படாத துர.. ஆவியை ஓட ஓட விறட்டுறேன் பாரு!!

said...

GK,

நீங்களே மறுத்துட்டா எப்படி.. கொஞ்சம் கதவை திறந்துவிடுங்க.. காற்று வரட்டும்..

எப்படியோ உங்களை மாட்டிவிட்டா நமக்கு ஒரு சந்தோசம்..

said...

ரொம்பத்தான்...

எலிக்குட்டி சோதனைதான் இருக்கே..

அப்புறமும் இந்த மாதிரி அடம்பிடித்தால் என் பாசறையை சேர்ந்தவர்கள், இ-மெயிலில் ஆந்தராக்ஸ் அனுப்புவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்..

:))))))))))))

said...

//அமானுஷ்ய ஆவி said...
அமுக விற்கு வெளியில் இருந்து(ஒற்றைப் புளிய மரத்திலிருந்து) ஆதரவு அளிக்கிறேன். //

கூடவே வேதளத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் !
:)

said...

//பொன்ஸ் said...
GK, எப்படியோ, அனானி ஆவிகள் முதற்கொண்டு ப்ளாக்கர் ஆக்கிட்டீங்க :)) //

பொன்ஸ் ...!
எல்லாம் அவன் மகிமை !
:)

said...

//அமுக பெங்களூர் said...
அன்பு ஜிகே,

எமக்கு துயரெல்லாம் ஒன்றே அதுவும்
என்றும் பின்னுட்டநாயகனின் பதிவில் எங்கள்
கும்மியும், கோலாட்டமும் நற்றமிழும் சிறக்க
நமக்கு வேண்டும் இடம். //

அமுக...!
ஒரு பதிவுக்கு 10 தடவை வந்தால் போதும்!
:)

said...

// அமானுஷ்ய ஆவி said...
அதென்னங்க அனானிகளுக்கு மட்டும்!
ஆவிகளுக்கும் ஒரு பதிவு/கவிதை எழுதுங்க!
//

ராத்திரியில் தூக்கம் வரணும் :(
படத்தைப் பார்த்த இனி தூங்க முடியுமான்னு தெரியலை !

said...

//அமானுஷ்ய ஆவி said...
இப்படியெல்லாம் என் ஃபோட்டோவை போட்டு பயமுறுத்த வேண்டி இருக்கு!
//

எங்கேர்ந்து இந்த படம் கிடைச்சிது ?
ஆவிங்களை படம் புடிக்க முடியாதாமே !
இது வரைஞ்சது தானே !
:)

said...

//பூசாரி பொன்னையன் said...
ஏய் ஆவி, வந்திருக்கேண்டா பூசாரி!.. உன்னைத் துரத்த!!

கோவி, நீ ஒண்ணும் பயப்படாத துர.. ஆவியை ஓட ஓட விறட்டுறேன் பாரு!!
//

யப்பா பூசாரி...!

அவிக்கு பின்னூட்டம் போட்டு கட்டுபடியாகளை !
எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டு திரும்பவம் கேட்குது !

ஆவி வந்தா நீயே போட்டு விடு !
:)

said...

// Sivabalan said...
GK,

நீங்களே மறுத்துட்டா எப்படி.. கொஞ்சம் கதவை திறந்துவிடுங்க.. காற்று வரட்டும்..

எப்படியோ உங்களை மாட்டிவிட்டா நமக்கு ஒரு சந்தோசம்.. //

சிப...!
சமாளிக்க எனர்ஜி பத்தாது சிபா...!
:)

said...

//செந்தழல் ரவி said...
ரொம்பத்தான்...

எலிக்குட்டி சோதனைதான் இருக்கே..

அப்புறமும் இந்த மாதிரி அடம்பிடித்தால் என் பாசறையை சேர்ந்தவர்கள், இ-மெயிலில் ஆந்தராக்ஸ் அனுப்புவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்..

:))))))))))))
//

ரவி...!
நான் ப்ளாக்கைவிட்டு ஓடப்போறேன் !
:)

said...

கதவைச் சாத்தி வைத்தாலும் ஆவிகளுக்குக் கவலை இல்லை!

நாளை காலையில் பாருங்கள். உங்கள் பதிவில் 500+க்கு அடித்து ஆடப் போகிறோம். இதற்காக மலேசிய,சீன, அமெரிக்க, ஐரோப்பிய, அராபிய ஆவிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

said...

//நான் ப்ளாக்கைவிட்டு ஓடப்போறேன் //

எங்க உலகத்துக்கு வந்துடுங்க! இந்த தொல்லையெல்லாம் இருக்காது.

said...

// அமானுஷ்ய ஆவி said...
கதவைச் சாத்தி வைத்தாலும் ஆவிகளுக்குக் கவலை இல்லை!

நாளை காலையில் பாருங்கள். உங்கள் பதிவில் 500+க்கு அடித்து ஆடப் போகிறோம். இதற்காக மலேசிய,சீன, அமெரிக்க, ஐரோப்பிய, அராபிய ஆவிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. //


பின்னூட்டப் பெட்டியை நிரந்தரமாக மூட வைத்திவிடுவீர் போலிருக்கு !

ஞாயமா இது !

said...

//பின்னூட்டப் பெட்டியை நிரந்தரமாக மூட வைத்திவிடுவீர் போலிருக்கு !
//

அப்போதும் கவலை இல்லை!
உங்கள் வலைப்பூவில் 500+ பதிவுகளாகப் போட்டு விளையாடுவோம்.

said...

கலக்கிட்ட ஆவி, வாழ்க உன் தொண்டு...வளர்க GKயின் வம்பு...

said...

இன்னிக்கு எங்க ஊர்ல கோ.வி 65தான் டின்னர்.