Monday, September 11, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பசி ... ! (கவிதை)


கருப்பையின் இருப்பு துண்டிக்கப்படும் போது
முதன் முதலாக,
விழித்துக்கொண்டு வீறிடச்செய்கிறது பசி !
அன்று ஆரம்பித்து,
தேடலின் மையமாக,
ஒரு குழந்தையின் ஆர்வத்தை போல் தோன்றி
கல்லரையை அடையும் வரை
வாழ்க்கை முழுவதும் நீள்கிறது பசிகள் !

குழந்தைப் பருவத்தில் விளையாட்டாகவும்,
இதயத்தின் ஓசையில் காதலாகவும்
இளமையின் துடிப்பில் காமமாகவும்
உறவுகளின் அணைப்பில் அன்பாகவும்,
துன்ப வேளைகளில் நட்பு நாடியும்,
முதுமைப் பருவதில் ஓய்வை வேண்டியும்,
வெவ்வேறு உணர்வுகளாய் பசிகள் !

இந்தப் பசிகள்,
மறுக்கப்படும் போதும்
மறக்கப்படும் போதும்,
மறைக்கப்படும் போது,
ஒழுங்கு படுத்தாத போதும்,
பசிப்பிணிகள் தொற்றிக் கொண்டு
வாழ்வை வேரறுக்கின்றன.

14 : கருத்துக்கள்:

said...

நல்லவேளை ஞாபகப் படுத்தினீர்கள் சாப்பிட்டுவிட்டு வருகிரேன் :$ வழக்கம் போல படித்த பின் போட்ட பின்னூட்டம் $

said...

தங்கள் பசி கவிதையைப் படித்ததும்,ஔவையின் 'இடும்பைக்கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிதே' நினைவுக்கு வந்தது.

said...

// மகேந்திரன்.பெ said...
நல்லவேளை ஞாபகப் படுத்தினீர்கள் சாப்பிட்டுவிட்டு வருகிரேன் :$ வழக்கம் போல படித்த பின் போட்ட பின்னூட்டம் $
//
மகி,
அங்கே அப்படியா, இங்கே நான் உண்ட மயக்கத்தில் தூக்கம் வர இதை எழுதிப் போட்டேன். புசித்தப் பின் போட்ட பதிவு :)

said...

//மாதங்கி said...
தங்கள் பசி கவிதையைப் படித்ததும்,ஔவையின் 'இடும்பைக்கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிதே' நினைவுக்கு வந்தது.
//

மாதங்கி அவர்களே...!
ஒளவை மூதாட்டி மிக அழகாக பசிப்பிணி நோய் பற்றி அந்த பாடலில் சொல்லியிருப்பார்.

மறுமொழி ஒப்பீட்டுக்கு நன்றி !

said...

தங்களின் பசி கவிதையை படித்ததும், பசி எடுத்து, சாப்பிட போறேன்..

said...

//செந்தழல் ரவி said...
தங்களின் பசி கவிதையை படித்ததும், பசி எடுத்து, சாப்பிட போறேன்..
//
ரவி...!
உங்க சாட் தடைபடுவதற்கு நான் தான் காரணமாகி விட்டேனா!
யரோ விளங்காதவன் என்று திட்டுவது கேட்கிறது !
சாப்பிட்டுவிட்டு சாட்டைத் தொடருங்கள் !
:)))))))))))

said...

nalla kavidhi..

said...

///////ரவி...!
உங்க சாட் தடைபடுவதற்கு நான் தான் காரணமாகி விட்டேனா!
யரோ விளங்காதவன் என்று திட்டுவது கேட்கிறது !
சாப்பிட்டுவிட்டு சாட்டைத் தொடருங்கள் !
:)))))))))))//////////

ஏனய்யா வயித்தெரிச்சலை கிளப்புகிறீர்..சாட் என்றாலே வாந்தி வாந்தியாய் வருகிறது..

உவ்வ்வ்வ்வே...

எப்படி உமது பசி கவிதையில் வாந்தி வெச்சுட்டேன் பாத்தீங்களா ஹி ஹி

சாட்டில் இருப்பவரெல்லாம் ஒரே கொரியா காரங்களா இருக்காங்க..

தப்பும்தவறுமா அவங்க டைப் செய்யும் ஆங்கிலத்தை பார்த்தால் அப்படித்தான்..

:)))))))))

எந்த பிகரும் சாட்டில் இல்லை என்ற உண்மையை தெரிவித்துக்கொள்கிறேன்..

said...

//கருப்பையின் இருப்பு துண்டிக்கப்படும் போது
முதன் முதலாக,
விழித்துக்கொண்டு வீறிடச்செய்கிறது பசி !//

அருமை வரிகள்...
வாழ்த்துக்கள்...

said...

//செந்தழல் ரவி said... சாட்டில் இருப்பவரெல்லாம் ஒரே கொரியா காரங்களா இருக்காங்க..//

ரவி...!
நல்லவேளை கொரில்லா காரங்களா இல்லாதவரைக்கும் சந்தோசப் படுங்க !

//எந்த பிகரும் சாட்டில் இல்லை என்ற உண்மையை தெரிவித்துக்கொள்கிறேன்.. //

நான் நம்பினால் மட்டும் போதுமா..?
அன்பு அனானிகளும், மகியும் நம்ப வேண்டுமே !
:))

said...

//shanmuhi said...
அருமை வரிகள்...
வாழ்த்துக்கள்...
//

சன்முகி அவர்களே ...!
பாராட்டுக்கள் நெகிழ்ச்சியாக இருக்கிறது !

:)

said...

கவிதை நல்லாயொருக்கு..

said...

//Sivabalan said...
கவிதை நல்லாயொருக்கு..
//

சிபா!
நன்றி !

said...

(பிரசுரிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை)
கல்லரையை - கல்லறையை