Tuesday, September 05, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தமிழ்மணம் நிர்வாகத்தினரின் பார்வைக்கு...!

தமிழ்மணம் சேவையை பயன்படுத்துவர்களின் நானும் ஒருவர் என்பதில் மகிழ்வடைகிறேன். தமிழ்மணம் தமிழ் வலைகள் இணைப்பில் தொடர்ந்து சாதனைப் படைத்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி

தமிழ்மணம் வலைப்பதிவுகளின் புள்ளிவிபரம்
மொத்தப் பதிவுகள்: 1196
கடந்த ஒரு மாதத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 3041
கடந்த ஒரு வாரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 717
கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 76
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள்: 101
பின்னூட்ட நிலவரம் காட்டப்படும் பதிவுகள்: 656
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள்: 891

இது மொழிவளர்ச்சியிலும், பதிவர்களின் எழுத்தாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்தது மட்டுமின்றி, பதிவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் தமிழ்மணத்தின் தமிழ் மொழிமீதான பங்களிப்பில் மாபெரும் சாதனையாகும்.

மேலும் நல்ல முன்னேற்றம் வந்து தமிழ்மணம் தனது இலட்சிய இலக்கை அடைய வேண்டும், எல்லோரும் பயனடைய வேண்டும் என்பதே எம் போன்றவர்களின் அவா. இடுகை பட்டியலிலும், மறுமொழிப் பட்டியிஅலிலும், சிறிது மாற்றம் கொண்டுவந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். இது புதிதாக வலைப்பதிய வருபவர்களுக்கு நல்ல ஊக்கமாக அமையும் என்று கருதி சில எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1. தமிழ் மணத்தில் சுமார் 1200 வலைப்பூக்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக பதிய வருபவர்களின் வலைப்பூக்கள் இடதுபக்கம் சில நாட்கள் மட்டும் காட்டப்பட்டு மறைந்து விடுகின்றன. இதில் ஏற்கனவே வலைப்பதிவர்களின் புதிய வலைப் பதிவுகளும் அடக்கம்.

2. புதிதாக வலைப்பதிக்க வருபவர்களின் இடுகைகளும், மறுமொழிகளும் ஏற்கனவே உள்ள இடுகைப்பட்டியலிலும், மறுமொழிகள் பட்டியலிலும் வருவதால் புதிதாக வருபவர்களின் பதிவுகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்த முடியவில்லை.

3. புதிதாக வலைப்பதிப்பவர்களுக்கு தனியாக ஒரு இடுகை அமைப்பும் (அண்மையில் எழுதப்பட்டவை - coloumn), மறுமொழி இடுகை அமைப்பும் (அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் - coloumn) இருந்தால் புதிய பதிவர்களை கண்டுகொண்டு ஊக்கப்படுத்த ஏதுவாக இருக்கும்.

4. புதிய பதிவர்களின் புதிய பதிவுகளையும், மறுமொழி இடுகைகளையும் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் அதாவது 1 அல்லது 2 மாதம் மேற்கண்ட புதிய இடுகை அமைப்பில் வெளியிடலாம்.

5. ஏற்கனவே உள்ள மற்ற பதிவர்களின் (ஒன்றுக்கும் மேற்பட்ட சில பதிவுகள் வைத்திருப்பவர்கள்) புதிய வலைப்பூக்களின் இடுகைகளையும், மறுமொழியையும் உள்ளிடுவதில் மாற்றம் தேவையில்லை.

மேற்கண்ட சிறு மாற்றத்தின் மூலம் புதிய பதிவர்களை உற்சாகப் படுத்தி அவர்களின் எழுத்தாற்றலை ஊக்கப்படுத்தவும், பாராட்டவும் நல்ல வழியாக அமையும் என்று கருதுகிறேன்.


தமிழ்மணம் நிர்வாகத்தின் ஒவ்வாத பதிவுகள் நீக்குதல் குறித்த செய்திகள் தொடர்பில் எழுதிய சில எண்ணங்கள் இங்கே

4 : கருத்துக்கள்:

said...

நான் கூட புதிதாக எழுதுபவன் தான். நீங்கள் சொல்வது போலவே எனது பதிவுகள் கவனம் பெறவே இல்லை.சரியாக சொன்னீர்கள்

said...

//வேந்தன் said...
நான் கூட புதிதாக எழுதுபவன் தான். நீங்கள் சொல்வது போலவே எனது பதிவுகள் கவனம் பெறவே இல்லை.சரியாக சொன்னீர்கள்
//

வேந்தன் அவர்களே !
புதியபதிவாளர்கள் அனைவருக்கும் இந்த நிலைதான். நானும் புதிதாக பதிய வரும்போது என் பதிவுகளும் பலரது கவனத்துக்குச் செல்லாமல் போனது! அதையெல்லாம் மனதில் வைத்து தான் வேண்டுகோள் வைத்திருக்கிறேன். நிச்சயம் தமிழ்மணத்தின் பார்வையில் கவனம் பெறும் என்று நம்புகிறேன்....!

உங்கள் பதிவுக்கும் வருகிறேன்
நன்றி !

said...

GK,

நல்ல அலோசனைதான்..

said...

தமிழ் மணம் திரட்டி கடந்த 5 மணி நேரமாக வேலை செய்யவில்லை !
:(((