Monday, September 25, 2006
மறைந்திருந்தே ...!
மறைந்திருந்தே ...!
பூவே...! பூச்சூடி சென்றயோ ...?
மறைந்துவிட்டாலும் என்றும் விலகாத
ஆச்சரியம் நீ ! இனி
மறைந்திருந்து தான் நீயே
எங்களைப் பார்க்கவேண்டும் என்பது
படைத்தவன் மட்டுமே
அறிவான் அந்த மர்மம் ...!
நலம் தானா ...? கேட்க இனி
நாங்கள் வரவேண்டும் உன்னிடத்தில் !
நீ செல்லும் முன்,
மன்னவன் சென்றானடி தோழி !
உன் நாட்டியம் அரங்கேற்றம்
தேவலோகத்தில் மட்டும் தானா ?
சுந்தரி நீ சென்றதால்,
ரம்பா, ஊர்வசி, மேனகை
மூன்று பேருக்கும் வேலை
இருக்குமோ இனி இந்திரசபையில் !
இன்னொருத்தி நிகராகுமோ !
உனக்கு இன்னொருத்தி நிகராகுமோ !
நடராஜனின் பாதத்தில் இனி
நிதம் ஒலிக்கும் உன் பரதம் !
பி.கு : நாட்டிய பேரொளி பத்மினி அம்மாவுக்கு இதய அஞ்சலி
Subscribe to:
Post Comments (Atom)
5 : கருத்துக்கள்:
GK,
கவிதாஞ்சலி தெரிவித்துள்ளீர்கள்.. நானும் இதில் கலந்துகொள்கிறேன்.
அவருக்கு எனது இதய அஞ்சலி.
//
Sivabalan said...
GK,
கவிதாஞ்சலி தெரிவித்துள்ளீர்கள்.. நானும் இதில் கலந்துகொள்கிறேன்.
//
சிபா...!
நன்றி.
அஞ்சலி அஞ்சலி.
நானும் இதில் கலந்துகொள்கிறேன்.
//துளசி கோபால் said...
அஞ்சலி அஞ்சலி.
நானும் இதில் கலந்துகொள்கிறேன்.
//
துளசியம்மா ...!
நன்றி !
அங்கே சிக்கல் சண்முகம் அழைத்தாராம் தில்லாணமோகனாளை
வியட்னாம் வீடு பத்மநாபன் அழைத்தாரம்
மாமியை
அதன் பப்பி அங்கு செற்றுள்ளார்
Post a Comment