Tuesday, September 05, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

வலைப்பதிவாளர்கள் சந்திப்பு (நகைச்சுவை) !



பதிவர் 1 : மாபெரும் வலைப்பதிவாளர் சந்திப்பு என்று அறிவித்தும் 5 பேருதான் வந்திருந்தாங்களா ?
பதிவர் 2 : இருந்தாலும் அது மா பெரும் சந்திப்புதான்
பதிவர் 1 : எப்படி
பதிவர் 2 : வந்த ஐஞ்சு பேருக்கும் ஆளுக்கொரு மா ஏற்பாடு செய்துவிட்டோம். ஆதாவது மாம்பழம்

பதிவர் 1 : வலைப்பதிவாளர் சந்திப்பில் இந்த தடவை முக்கிய முடிவாக என்ன தீர்மானம் ?
பதிவர் 2 : வர வர பின்னூட்டம் குறைகிறதால் அனானி, மற்றும் அதர் ஆப்சனை அனைத்துப் பதிவர்களும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் வைத்திருக்கிறோம்
பதிவர் 1 : அப்ப போலிகள் தொல்லை இருக்குமே
பதிவர் 2 : போலி பின்னூட்டங்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு பரிசு ... இதுதான் இரண்டாவது தீர்மானம்

பதிவர் 1 : தனிமனித தாக்குதலைப் பற்றி என்ன நினைக்கிறிங்க ?
பதிவர் 2 : இதுக்காக இந்தியன் ஐட்டி ஆக்ட் ஒரு புதுச் சட்டம் கொண்டுவந்து சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து ஆயுள் தண்டனை வழங்க வழிசெய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்

பதிவர் 1 : வேறு எதாவது புதுத் திட்டம் இருக்கிறதா ?
பதிவர் 2 : ஏற்கனவே பதிவு எழுதி ஓய்ந்தவர்களின் பதிவை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இலவச பதிவு எழுதித்தரும் திட்டம் இருக்கிறது.

பதிவர் 1 : வலைப்பதிவாளர் சந்திப்பில் சிலர் கோஷ்டியாக செயல் படுவதாக குற்றம் இருக்கிறதே
பதிவர் 2 : இது வேண்டாதவர்கள் கிளப்பிவிடும் வீன் வதந்தி. அப்படி பட்டவர்களுக்கு இனி பதிவர் சந்திப்பில் அழைப்பு இருக்காது என்று எங்கள் குழு ஒட்டுமொத்தமாக தீர்மாணித்திருக்கிறது

பதிவர் 1 : இந்த வலைப்பதிவாளர் சந்திப்பு உங்களுக்கு திருப்தி இருந்ததா ?
பதிவர் 2 : என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். அதுக்காகத் தானே வயிற்றை காலியாக வைத்துக் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தோம், பத்துவகை உணவோடு சந்திப்பு திருப்தியாக அமைந்தது

பி.கு : நகைச் சுவைக்காக எழுதியது... யாரையும் தாக்குவதற்கு அல்ல ... படித்துவிட்டு சிரித்தால் போதும் ... உங்களின் அடுத்த சந்திப்பில் இதுபற்றி பேசி மகிழவேண்டும் என்பதே என் அவா.

25 : கருத்துக்கள்:

said...

// போலி பின்னூட்டங்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு பரிசு ... இதுதான் இரண்டாவது தீர்மானம் //

HA HA HA...

GOOD..

said...

//அதுக்காகத் தானே வயிற்றை காலியாக வைத்துக் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தோம், பத்துவகை உணவோடு சந்திப்பு திருப்தியாக அமைந்தது
//

எங்கள் வீட்டிற்கு வருபவர்க்கு நல்ல யோசனை

பி.கு. கால்கரியில் வலைபதிவர் கம்மிய்யாக இருக்கும் தைரியம் தான். நம்பர் கூடினால் donut க்கு மாறி புதுமை படைப்போம்

said...

நம்ம தீர்மானத்தில ஒன்னு விட்டுப்போச்சே?
பின்னூட்ட போனஸ் தொடர்பா அனானிகளோட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அனானிகள் சங்கத்துக்கு வைத்த கோரிக்கை

said...

ஹா ஹா ஹா

கோவி....பேப்பர்ல பேரு வந்ததில் இருந்தே நீங்க சரியில்லை....

said...

:-))))))))))))))

said...

அந்த T-Shirt படம் எதற்கு கோவி சார்?
குழு, கோஷ்டி எல்லாம் தாண்டி, சீருடை??? :-)

// G.Ragavan said...
ஹா ஹா ஹா
கோவி....பேப்பர்ல பேரு வந்ததில் இருந்தே நீங்க சரியில்லை.... //

வழி மொழிகிறேன் :-)

said...

அங்க கிடைப்பதே போண்டா அல்லது காய்ந்த வடைதான்...

இதில் வயத்தை காயப்போட்டு வேற வரனுமா ?

:)))))))))))))))))))))

said...

தீர்மானத்தில் இன்னொன்றும் விடுபட்டுள்ளது!

சந்தித்த ஐவரில் அடியேனைத்தவிர - மற்ற
அனைவருமே கணினி வல்லுனர்கள் -
பின்னூட்டம் போடுதற்கு மென்பொருள் ஒன்றை
எழுதி முடித்துச் செய்லபடுத்த
எடுத்த தீர்மானம் என்னவாயிற்று?

said...

// Sivabalan said...
HA HA HA...
GOOD.. //

சிபா ...!
நன்றி !

said...

//குமரன் (Kumaran) said...
:-)))
//
குமரன் ஹி ஹி !
:)

said...

//கால்கரி சிவா said...
எங்கள் வீட்டிற்கு வருபவர்க்கு நல்ல யோசனை

பி.கு. கால்கரியில் வலைபதிவர் கம்மிய்யாக இருக்கும் தைரியம் தான். நம்பர் கூடினால் donut க்கு மாறி புதுமை படைப்போம் /

சிவா...!
நம்பர் கூடினால்.. கவலையை விடுங்கள் ...சின்ன கவுண்டர் படத்தில் வருவதுபோல் மொய்விருந்து வைத்து சமாளிக்கலாம் :))

said...

// மகேந்திரன்.பெ said...
நம்ம தீர்மானத்தில ஒன்னு விட்டுப்போச்சே?
பின்னூட்ட போனஸ் தொடர்பா அனானிகளோட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அனானிகள் சங்கத்துக்கு வைத்த கோரிக்கை
//
மகி
ஆகா ...! அனானிகளை எடுப்பார் கைப்பிள்ளையாக நினைத்து மிஸ் பண்ணிவிட்டேன்... வருந்துகிறேன் !
:))

said...

//G.Ragavan said...
ஹா ஹா ஹா

கோவி....பேப்பர்ல பேரு வந்ததில் இருந்தே நீங்க சரியில்லை....
//

ஜிரா....!
அதான் ஜாமினில் வந்துட்டோம்ல. கேஸ் சுப்ரீம் கோட்டுக்கு (?) போவட்டம் அப்பறம் பொடி பொடியா ஆவுதா இல்லையான்னு பாருங்க !
:))

said...

//luckylook said...
:-))))))))))))))

9:38 PM
//
லக்கியாரே ...!
நான் அங்கே கூட்டத்துக்கு வந்தேன் பார்த்திங்களா ?
:))

said...

:)))))

said...

//செந்தழல் ரவி said...
அங்க கிடைப்பதே போண்டா அல்லது காய்ந்த வடைதான்...

இதில் வயத்தை காயப்போட்டு வேற வரனுமா ?

:)))))))))))))))))))))
//

ரவி,

நிறைய நிதி உதவினால் உணவும் பிரமாதமாக இருக்கும் ! யாராவது ஒருவர் பக்கெட் பஞ்சரானால் வடை, போண்டாதான்.
:))

said...

//SP.VR.SUBBIAH said...
தீர்மானத்தில் இன்னொன்றும் விடுபட்டுள்ளது!

சந்தித்த ஐவரில் அடியேனைத்தவிர - மற்ற
அனைவருமே கணினி வல்லுனர்கள் -
பின்னூட்டம் போடுதற்கு மென்பொருள் ஒன்றை
எழுதி முடித்துச் செய்லபடுத்த
எடுத்த தீர்மானம் என்னவாயிற்று?

10:36 PM
//

அதில் நீங்களும் ஒருவரா ?
தீர்மானம் என்ன ஆயிற்றா ?

தேர்தல் வாகுறுதி கேள்விப்பட்டதில்லையா ?

வலைப்பதிவாளர் பேச்சு ! பதிவு போட்டா போச்சு !
:))

said...

:))

said...

//கப்பி பய said...
:))
//

கப்பி பாய்!
வந்து மகிழ்ந்ததற்கு நன்றி !

said...

காய்ந்த வடை?

ஓ......... ( நன்கு)காய்ந்த (எண்ணெயில் சுட்ட) வடை என்பதின் சுருக்கம்தானே ரவி?:-))))

said...

//துளசி கோபால் said...
காய்ந்த வடை?

ஓ......... ( நன்கு)காய்ந்த (எண்ணெயில் சுட்ட) வடை என்பதின் சுருக்கம்தானே ரவி?:-))))
//

துளசியம்மா ...!
குடும்பதலைவி கமெண்ட் போட்டா இப்படித்தான் இருக்கும் :)

said...

//வருந்துகிறேன் !
:))//

வருந்துகிறேன்னு சொல்லிட்டு ஸ்மைலி போட்டா என்ன அர்த்தம்?

said...

//ஏற்கனவே பதிவு எழுதி ஓய்ந்தவர்களின் பதிவை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இலவச பதிவு எழுதித்தரும் திட்டம் இருக்கிறது.//

ஆஹா! இது நல்லாருக்கே! நெஜமாலயே செயல் படுத்தலாம் போலிருக்கு.
:)

said...

// மகேந்திரன்.பெ said...
வருந்துகிறேன்னு சொல்லிட்டு ஸ்மைலி போட்டா என்ன அர்த்தம்?
//

மகி...!
திருக்குறள் படிச்சதில்லையா ... ?
வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே துன்பம்வரும் (வருத்தப்படு) நேரத்தில் சிரிங்கள் என்று !
:))

said...

// கைப்புள்ள said...
ஆஹா! இது நல்லாருக்கே! நெஜமாலயே செயல் படுத்தலாம் போலிருக்கு.
:) //

கைப்புள்ள...!
யாராவது அப்படி இருந்தால் கொஞ்சம் அடையாளம் காட்டுங்க... பதிவு எழுதிதருகிறேன்.

:))