
தயாரிப்பாளர் தாணு யாருன்னு தெரியும் தானே ஆளவந்தான் எடுத்து ஆட்டம் கண்டவர். அவரு ஒரு ரகசிய கேமரா மூலம் கேஎஸ்.ரவிகுமார் - கமல் கூட்டணியில் உருவாகும் தசாவதாரம் பற்றிய கதை விவாதத்தினை பதிவு செய்துவிடுகிறார். அந்த கதையை வச்சு தல அஜித்தையோ, சீயான் விக்ராமையோ போட்டு அதே கதையை எடுத்து கே.எஸ்.ரவிகுமார் - கமல் படம் வருவதற்குள் ரிலிஸ் பண்ணி ஆளவந்தானில் போட்ட பணத்தை எப்படியும் மீட்டுவிட வேண்டும் திட்டம் தீட்டுகிறார். இந்த விசயம் திருட்டு விசிடி (திருட்டு விசிடியின் திருட்டு விசிடி) எப்படியோ வெளியில் கசிந்து எனக்கும் வந்துவிட்டது.
அப்பறம் என்ன நம்ம காதுக்கு வந்துச்சின்னா உங்களிடம் சொல்லாமல் விடமுடியுமா ? உஷ் ...ரகசியம் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.
மேலே உள்ளது முன் குறிப்பு டிஸ்கி, இனி நேரா கதை டிஸ்கஷன் தான் !
உலகநாயகனின் தசவதாரம் பகுதி 1:
இடம் : அடையாறு பார்க் ஷரட்டன், மேல்மாடி (மாதிரி தெரியுது)
கேமரா தெளிவாக இல்லை, ஆடியோ குரல் பேசுவது கே. எஸ் ரவிக்குமார், உலக நாயகன் கமல் என்று தெரிகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் : கமல் சார் வே.வி நல்லா போகுது !
கமல் : ஆன படத்துல ஏதோ ஒரு குறை இருக்கு
ரவி : அப்படின்னு சொல்றிங்க ?
கமல் : எனக்கு குறைன்னு தெரியுது, ஆனால் என்னான்னு தெரியல, உங்களுக்கு எதேனும் ?
ரவி : ஆங், புரிஞ்சிடுச்சி !
கமல் : அப்படியா என்னனு சொல்லுங்க !
ரவி : உங்க முகத்தை சிதைக்காம முழுசா வச்சி இருக்கிங்க !
கமல் : ஓஓஒ ஆமாம் ரவி .. சரியா சொல்றிங்க !
ரவி : கவலையை விடுங்க ... கமல் சார் ...! நம்ப படத்திலதான் 1க்கு 10 ஆக வேசம் கட்டப் போறிங்களே !
கமல் : ரவி..! இதுவரையில் வராத வேசமா இருக்கனும் !
ரவி : நீங்க தான் எல்லாமே பண்ணிட்டிங்களே கமல் சார் !
கமல் : இன்னும் இருக்கு ரவி !
ரவி : சொல்லுங்க கமல் சார்
கமல் : பின்லேடன் வேசம், வீரப்பன் வேசம் எல்லாம் விட்டு வச்சிருக்கேனே
ரவி : அதெல்லாம் சரிதான்... ஆனா கதைக்கு ஒட்டனுமே
கமல் : முகத்துக்கு ஒட்டினா போதும் கதைக்கு ஒட்டவச்சிடலாம் !
ரவி : கமல் சார்... ஒங்க முகத்துக்கு ஒட்டாததா ? கோபி அன்னான் வேசம் போட்டாக் கூட பொருத்தமாகத் தான் இருக்கும் 1
கமல் : 10 வேசத்துக்கும் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்.
ரவி : சொல்லுங்க கமல் சார்
கமல் : கதைப்படி கதாநாயகன் ஒரு நாடக நடிகர்.
ரவி : இருங்க பெக்கை புல் பண்ணிக்கிறேன் ....ம் சொல்லுங்க
கமல் : அவரு தீவிரவாதம் பற்றிய விழிப்புணர்வுக்காக பின்லேடன் வேசம் கட்டுகிறார்
ரவி : இது நல்ல தீம்
கமல் : அவரு கெட்டப்பை பார்த்து, அமெரிக்க தூதரகத்தில் வேலைப் பார்க்கிற பிராகஷ் ராஜ், நிஜம் பின்லேடன் என்று நினைத்து FBI க்கு தகவல் கொடுத்துவிடுகிறார்
ரவி : இன்டரஸ்டிங்
கமல் : இதைக் கேள்விப் பட்ட ஜார்ஜ் புஷ்... உடனே இந்தியாவுக்கு புரப்பட்டு வரனும்னு துடியா துடிக்கிறார்.
ரவி : அப்ப இன்னும் ஒருதர அமெரிக்கா போய் சூட்டிங் எடுக்கனுமா?
கமல் : அது தேவையில்லை, டிவியில் வரும் நிஜ புஷ்க்கு டப்பிங் பேசி சமாளிச்சிடலாம்
ரவி : அடுத்து ?
கமல் : FBI லிருந்து ஜார்ஜ் புஷ்சை அது ஆபத்து எண்று எச்சரிக்கிறாங்க... அதனால அமெரிக்க உளவுத்துறை ஜார்ஜ் புஷ¤க்கிட்ட ஒரு யோசனை தெரிவிக்கிறாஙக்
ரவி : கதை பிரமாதாம இருக்கே, சொல்லுங்க சொல்லுங்க
கமல் : அதாவது உங்க கெட்டப்புல நடிக்கிறத்து தமிழ் நாட்டில் ஒரு நாடக நடிகர் இருக்கிறார். அவரை ஜார்ஜ் புஷ் வேசம் போட சொல்லிடலாம். வேசம் போட்டால் அவரு அச்சு அசலாக உங்கள மாதிரியே இருப்பாருன்னு ஜார்ஜ்புஷ்சை ஏத்திவிடுராங்க.
ரவி : வெர்ரி இன்டரஸிடிங்... இன்னுமொரு பெக்
கமல் : ம் வேணாம்னு சொன்னால் கேட்கவா போறிங்க... ம் கதையை கேளுங்க ... அதனால் அமெரிக்க உளவுத்துரை நாடக நடிகரான என்னிடம் வந்து பேசுறாங்க, நான் ஜார்ஜ் புஷ் வேசம் போட்டு பார்க் ஷரட்டினில் தங்கி இருக்கிறேன்.
ரவி : வாவ் !
கமல் : இதை மோப்பம் பிடித்த அல்லும்மா தீவிரவாதி ஒருத்தன் ஜார்ஜ் புஷ்சை கடத்தனும் என்று திட்டம் தீட்டுகிறான்.
ரவி : அதுக்கு எந்த நடிகரைப் போடலாம் ? நாசரைப் போடலாமா ?
கமல் : ரவி நாசர் என் படத்தில் நடிக்க வேண்டும் என்று விதி இருக்கு.. ஆனா அவருக்கு வேற வேசம் வெச்சிடுங்க... தீவிரவாதி வேசம் போடறதும் நான் தான்.. இது மூனாவது வேசம்
ரவி : ச்சே எனக்கு இந்த யோசனை தெரியாமல் போயிடுச்சே... முனாவது பெக் எடுத்துக்கிறேன்
கமல் : ஆமாம் அவன் கடத்த வர்றப்ப அங்கு நான் டபுள் ஆக்ட் ... நீங்க டபுள் ஆக்ட் சீன் வைக்கனும்
ரவி : வெச்சிடுவோம்... அப்பறம்
கமல் : அவன் ஜார்ஜ் புஷ்சை கடத்தியது ... இந்திய CBI காரங்களுக்கு தெரிஞ்சிடுது
ரவி : வாவ் கதை நன்றாக திரும்புகிறதே
கமல் : இன்னும் கேளுங்க !
ரவி : ம்
கமல் : தீவரவாதியை மடக்கி பிடிக்கும் CBI ஆபிசாராக இன்னுமொரு வேசம் ... அதையும் நான் தான் போடுகிறேன்
ரவி : சூப்பர் .. நீங்க போடாத வேசம்
கமல் : கடத்தல் சீனில் CBI துறத்தலும் சேர்ந்து கொள்கிறது ... அங்கு இந்த மூனு வேசத்தையும் மாறி மாறி நீங்க சூட் பண்ணனும்
ரவி : செஞ்சிடலாம் ... மூனும் கவராவது போல் லங்சாட் வச்சிடுவோம்
கமல் : அப்படியே சேசிங் சீன் ஏர்போர்டில் போய் நிக்குது, தீவிரவாதி ஜார்ஜ் புஷ்சைக் இழுத்துக் கொண்டு தயாராக நின்ற பிளைட்டில் ஏறிவிடுகிறான்
ரவி : அங்கு பைலட் வேசம் போடப் போறிங்களா?
கமல் : அங்க தான் நீங்க புரிஞ்சிக்கனும்... இங்கே இந்திய ஏர்லைன்சில் இருக்கும் ஒரு 50 வயது ஏர்கேஸ்டஸ் மாமி வேசம்... கொஞ்சம் அவ்வை சண்முகி டைப்பில் இருக்கும் அது 5 வது வேசம்
ரவி : வெர்ரி குட் .. நாலு முடிந்தது அஞ்சாவது பெக் எடுத்துக்கிறேன்
கமல் : அந்த ஏர்கோஸ்டசுக்கு இந்த கடத்தல் விசயம் தெரிஞ்சிடுது... பைலட்டை மிரட்டி தீவிரவாதி ப்ளைட்டை நேரிடையாக டெல்லிக்கு ஓட்டச் சொல்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் நடக்க பைலட் தாக்கப்பட்டு ப்ளைட் கன்ட்ரோல் இல்லாமல் பறக்குது
ரவி : ஹை ஜாக் எல்லாம் இருக்கா ... ம் (மனதுக்குள் ) தயாரிப்பாளரை ஆண்டவன் காப்பாத்தனும் ...!
கமல் : அந்த ஏர்கோஸ்டஸ் என்ன செய்யுறாங்க என்றால் தீவிரவாதி அசந்து இருக்கிற நேரமாபாத்து தொடைக்கு இடையில் பறந்துவந்து திரும்பி பின்னாங்காளால் நங்குன்னு இடிக்கிறாங்க... தீவிரவாதி அப்படியே அடிவயித்தை பிடிச்சிக்கிட்டு சரிந்துவிடுகிறான், ஏர்கோஸ்டஸ் ப்ளைட்டை காக்பிட்டில் உட்கார்ந்து ... லாவகமாக கன்ட்ரோலுக்கு கொண்டுவர்ராங்க
ரவி : அப்படியா ... லாஜிக் உதைக்கிதே ... ஏர்கோஸ்டஸ் எப்படி பைலட்டாக இருக்க முடியும்
கமல் : அதுக்கு ஒரு சின்ன ப்ளாஸ் பேக் வச்சிடுவோம்... ஆக நாடக நடிகரோட சேர்ந்து ஆறு வேசம் ஆயிடுச்சி...!
தொடரும் ...
பகுதி 1*/*பகுதி 2*/*பகுதி 3*/*பகுதி 4
19 : கருத்துக்கள்:
GK,
Ha..Ha..Ha...
பாகம்-2 எப்ப ரீலிஸ்..?
எதுக்கும் உங்க கதைக்கு Copy Right வாங்கி வைச்சுங்க.. பின்னாடி உதவும்..
ha ha ha good comedy waiting for part 2
// Sivabalan said...
GK,
Ha..Ha..Ha...
பாகம்-2 எப்ப ரீலிஸ்..?
எதுக்கும் உங்க கதைக்கு Copy Right வாங்கி வைச்சுங்க.. பின்னாடி உதவும்.. //
சிபா... அதுவே ஒட்டுக் கேட்ட கதை !
Copy Right ?
பாகம்-2 உங்களுக்கு வேண்டுமானால் ப்ரிவுயூ அனுப்புகிறேன்...!
மொத்தம் 4 பகுதி உள்ளது.
:))
GK,
சென்னையில் உங்க வீடு கோடம்பாக்கம் சைடா?
நாலு படத்துக்கு உண்டான கதைகள் உங்க கையிலே இருக்கே
பிளேனுக்குள்ள பாம்பு வர்ரமாதிரி படம் எடுத்துட்டாங்க...
நீங்க பிளேனுக்குள்ள டைனோசார் வர்ர மாதிரி எடுங்க..
நம்ம ஆச்சி மனோரமாவையோ - வடிவுக்கரசியையோ ஒரு ஹீரோயினா போடுவீங்க தானே ??
ஆமா, பத்து வேசம்னா பத்து ஹீரோயினி தானே ??
கண்ணன்,
நல்லா இருக்குங்க.......
:))
நீங்களும் தசாவதாரம் கதை ரிலீஸ் பண்ணிட்டீங்களா?
கதாநாயகிகளே யாரும் காணோம்?? இண்டர்வெல் அப்புறம் தான் அவங்க எண்ட்ரியா?? ;)
//gulf-tamilan said...
ha ha ha good comedy waiting for part 2
//
நன்றி ...
பகுதி 2 நாளைக்கு நிச்சயம் வரும்!
//கால்கரி சிவா said...
GK,
சென்னையில் உங்க வீடு கோடம்பாக்கம் சைடா?
நாலு படத்துக்கு உண்டான கதைகள் உங்க கையிலே இருக்கே //
சிவா ...!
ஒரு பகுதியே 4 கதையா ?
ஐயோ இன்னும் 3 பகுதி மீதம் இருக்கே !
:))
// செந்தழல் ரவி said...
பிளேனுக்குள்ள பாம்பு வர்ரமாதிரி படம் எடுத்துட்டாங்க...
நீங்க பிளேனுக்குள்ள டைனோசார் வர்ர மாதிரி எடுங்க..
நம்ம ஆச்சி மனோரமாவையோ - வடிவுக்கரசியையோ ஒரு ஹீரோயினா போடுவீங்க தானே ??
ஆமா, பத்து வேசம்னா பத்து ஹீரோயினி தானே ?? //
ரவி 10 ஹீரோவுக்கு ஏன் 20 ஹீரோயின் இருக்கக் கூடாது... நீங்க குசும்பு உலக நாயகனை குறைச்சி மதிப்பிடுறிங்க !
:))
//ராம் said...
கண்ணன்,
நல்லா இருக்குங்க.......
//
ராம் ... !
நன்றி ! நாளைக்கு பகுதி 2 யும் படிச்சிடுங்க !
//கப்பி பய said...
:))
நீங்களும் தசாவதாரம் கதை ரிலீஸ் பண்ணிட்டீங்களா?
கதாநாயகிகளே யாரும் காணோம்?? இண்டர்வெல் அப்புறம் தான் அவங்க எண்ட்ரியா?? ;)
//
கப்பி பாய் ...!
கமல் படத்துல ஹீரோயின் இல்லாமலா ? கடைசிப் பகுதியில் அதுபற்றி தெரியவரும் !
:)
நல்ல காமெடிப் பதிவு கோவியாரே!
ரவிக்குமார்னுங்கிர பெயரில் பெக்குப் போட்டது நீங்க தான்னு இப்"போதை"க்கு யாருக்கும் தெரியாதா என்ன?
//கமல் படத்துல ஹீரோயின் இல்லாமலா ? கடைசிப் பகுதியில் அதுபற்றி தெரியவரும் !//
நானும் காத்திருக்கேன், அடுத்து
பகுதி-2 படிக்கனும்,
அன்புடன்...
சரவணன்.
//எதுக்கும் உங்க கதைக்கு Copy Right வாங்கி வைச்சுங்க.. பின்னாடி உதவும்..//
சி.பா சொன்னா மாதிரி காப்பிரைட் வாங்கி வெச்சிருந்தா இப்போ உங்களுக்கு ராயல்டி கிடைத்து இருக்கும். மிஸ் பண்ணிட்டீங்களே. அடுத்த படத்துக்கு ட்ரை பண்ணவும்
wow excellent.
just now i got this page link from chennaicutcherry
//மங்களூர் சிவா said...
wow excellent.
just now i got this page link from chennaicutcherry
//
:)
பின்னூட்டம் மேலே வருதான்னு பார்க்கிறேன்.
பின்னூட்டம் மேல வந்திருச்சா???
பாத்துட்டீங்களா???
வம்புடன் ச்ச அன்புடன்
மங்களூர் சிவா
பின்னூட்டம் மேல வந்திருச்சா???
இருங்க நானும் உதவி பண்ணுறேன்
//மங்களூர் சிவா said...
பின்னூட்டம் மேல வந்திருச்சா???
பாத்துட்டீங்களா???
வம்புடன் ச்ச அன்புடன்
மங்களூர் சிவா
//
சிவா,
நான் கவனிக்கவே இல்லை. சுட்டியதற்கு நன்றி !
Post a Comment