Friday, September 08, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

உலகநாயகனின் தசவதாரம் பகுதி 2: (காமடி)

பகுதி 1*/*பகுதி 2*/*பகுதி 3*/*பகுதி 4

முன் குறிப்பு : பகுதி 1ஐ படித்தவர்கள் பலர் (?) ... படத்தின் கதாநாயகிகள் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்கிறார்கள். கதாநாயகிகளைப் பற்றிய கதையின் விவாதங்கள் கடைசிப் பகுதியில் நிச்சயம் வரும்... இனி பகுதி 2 தொடர்ச்சி ...
ரவி: அடுத்து கதையை எப்படி நகர்த்தப் போறிங்க கமல் சார் ... திரில்லர் ஸ்டைலில் இருக்கு !

கமல் : இப்பதான் அந்த திருப்பம் நடக்குது... நல்லா கேட்டுக்குங்க

ரவி : சொல்லுங்க சொல்லுங்க கமல் சார்

கமல் : அந்த ஏர்கோஸ்டஸ் மாமிக்கு ப்ளைட்டை சரியாக திருப்பத் தெரியலை...ப்ளைட் மேலும் கீழும் ஆடுது... டெல்லி தாண்டி ... பராளுமன்றதின் மேல் வட்டம் அடிக்குது.. அப்பறம் ...தாஜ்மகாலை ஒரு ரவுண்ட் அடிக்குது .... எல்லோரும் ஆகாயத்தைப் பார்த்துக்கிட்டே ஓடி வர்றாங்க ... இங்க இங்கிலிஸ் படம் எபெக்ட் இருக்கனும்... அப்பறம் ப்ளைட் எவரெஸ்டை ஒரு ரவுண்ட் அடிக்குது... அதுக்குள்ள பெட்ரோல் தீந்து போரதால .... திடீர் திருப்பம் ... ஏர்கோஸ்டஸ் என்னமோ செய்து அருகில் உள்ள ஆப்கானுக்குள் போயிடுராங்க.. !

ரவி : வாவ் கிரேட் ... திரில்லிங் திரில்லிங் !

கமல் : ஜார்ஜ் புஷ் ப்ளைட்டுக்குள் இருப்பது எப்படியே பின்லேடன் ஆளுங்களுக்கு தெரிஞ்சிடுது... ஏவுகனையால குறிவச்சி எச்சரிக்கிறாங்க... உடனே ஏர்கோஸ்டஸ் மாமி பக்கத்தில் உள்ள கண்டகார் ஏர்போர்டில் லாவகமாக தரையிறக்கிராங்க !

ரவி : நம்ம கண்டகார் போய் சூட்டிங் பண்ணனுமா ... விபரீதமாகபடுது... கேரளா இஞ்சினியரை நினைச்சிப் பாருங்க கமல் சார் ... நெனச்சாலே நடுங்குது !

கமல் : அவ்வளவு தூரம் போகவேண்டாம் ஜெய்ப்பூர் பக்கத்தில் ஏதாவது இடத்தில் என்னோட விக்ரம் படத்துக்கு போட்டது போல் செட் போட்டு எடுத்துக்கலாம்.. முதலில் கதையை முழசா கேளுங்க !

ரவி : ம் எனக்கு உயிர்பயம் வந்துடுச்சி .. மண்ணிச்சிக்குங்க கமல் சார்.. கதையை சொல்லுங்க

கமல் : இப்ப ப்ளைட்டை சுத்தி தலிபான் காராங்க முகமூடியோட நிக்கிறாங்க.. ஜார்ஜ் புஷ்சை ஒப்படைக்கனும் னு சொல்லி துப்பாக்கியால வானத்தை நோக்கி சூட்டுக் எச்சரிக்கிறாங்க... !

ரவி : ம் ... நடுக்கமாக இருக்கு...!

கமல் : பேச்சு வார்த்தை நடத்த ஆள் இல்லாததால் ஏர்கோஸ்டஸ் மாமியே வந்து பேச்சு வார்த்தை நடத்துது... அப்பறம் அது போய் ப்ளைட்டுக்கு உள்ளே உள்ள ஜார்ஜ் புஷ்ஷுக்கிட்ட என்னமோ பேசுது... !

ரவி : ம் ... அருமை

கமல் : அவரு மாமிகிட்ட காதில் கிசு கிசுக்கிறார் ... இங்க தான் ஒரு சஸ்பென்ஸ்

ரவி : ஜார்ஜ் புஷ்சே வந்து தலிபான்காரன்கிட்ட பேச்சு வார்த்தை நடத்தப் போறாரா ?

கமல் : அதுதான் இல்லை ... அந்த ஏர்கோஷ்ட்ஸ் மாமி வந்து தலிபான்காரங்களிடம் 30 நிமிசம் டைம் கேட்குது

ரவி : ஏன் ஜார்ஜ் புஸ் குளிச்சிட்டு வர்ரேன்னு சொன்னாரா ?

கமல் : அதெல்லாம் இல்லை... அவுங்க ஒத்துக்கிறாங்க .... அங்க ஒரு குத்தாட்டம் வெச்சு அரை மணிநேரம் டைம் போறதைக் காட்டனும் ... ரகசியாவையோ, பிபாசாவையோ யாராவது ஒருவரை போடுங்கள்.

ரவி : ம் ...

கமல் : பாட்டு முடிந்ததும் ... பளைட் கதவை திறந்து கொண்டு பின்லேடன் குதிக்கிறார்... !

ரவி : சஸ்பென்ஸ் தாங்கவில்லையே எப்படி எப்படி ?

கமல் : அங்க தான் நீங்க யோசிக்கனும்... இங்க ஜார்ஜ் புஷ்சா நடிக்கிறவர் ஏற்கனவே பின்லேடனா வேசம் போட்டவர்... புஷ் வேசத்தை கலைச்சிட்டு அவரே தான் அரை மணி நேரத்தில் பின்லேடன் வேசம் போட்டுகிட்டு வருகிறார்.

ரவி : இதை நான் யோசிக்கவே இல்லை.

கமல் : ரவி நீங்க பீல்டுக்கு வந்து 15 வருசம் தான் ஆவுது... நான் பொறந்ததிலிருந்து இதில தானே இருக்கேன்.. அதான் தடாலடியாக யோசிக்க முடியுது

ரவி : நீங்க பிறவிக் கலைஞன் கமல் சார்

கமல் : தாங்க்ஸ் ... இங்க கதையில் ஒரு முக்கிய விசயம் என்னவென்றால் அந்த பின்லேடன்
வேசம் போட்டிருக்கப்ப ஆப்கான் பாசையான பழங்குடியினர் பாசையைப் பேசனும்... இதுக்காக ஒரு ஆறுமாசம் பயிற்சி எடுக்கனும் ... ஆப்கானில் இருந்து பாசைக் கத்துக் கொடுக்க இப்பவே ஒரு ஆள் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கிறேன்.

ரவி : ம் நீங்க தான் பர்பெக்ஸனில் குறைவைக்காதவர் ஆயிற்றே... சபாஷ் !

கமல் : அதே தான்.. இப்ப பின்லேடனா வேசம் போட்டு இருக்கிற நாடக நடிகர் பழங்குடியினர் பாசையை அட்சரம் பிசகாமல் பேசி தலிபான்காரங்களை தான் தான் பின்லேடன் என்று நம்ப வைத்துவிடுகிறார்

ரவி : ம் தமிழ் சப் டைட்டில் வச்சிடுவோம்

கமல் : அப்படி அவர் என்ன பேசினார் என்று கேட்கவில்லையே ?

ரவி : அதான் சொல்லப் போறிங்களே ?

கமல் : எப்படி தெரியும் ?

ரவி : இப்பதான் சொன்னிங்களே மறந்திட்டிங்களா ?

கமல் : ஹ ஹ் ஹா ... இது ஒளவை சண்முகி டைலாக் ... சரி சீரியசாக கேளுங்க ... அதாவது
பின்லேடன் ... ஜார்ஸ் புஷ்ஸை ப்ளைட்டுக்குள் கட்டிப் போட்டு வைத்திருப்பதாகவும் ... அவரை வைத்துக் கொண்டு தானே லெபனான் இதே ப்ளைட்டில் போகப் போறதாகவும்... ஐநா கோபி அன்னானுடன் பேசி அமெரிக்காவில் இருக்கும் ஈராக் படைகளை வாபஸ் வாங்கும்வரை புஷ்சை பிணைய கைதியாக வைத்திருப்பதாகவும் சொல்கிறார்

ரவி : மூச்சி வாங்குது...

கமல் : இதுக்கே மூச்சி வாங்கினால் எப்படி இன்னும் 4 வேசம் பாக்கி இருக்கே

ரவி : சரி ... கதையை சொல்லுங்க

பகுதி 3 தொடரும் ...!

11 : கருத்துக்கள்:

said...

GK,

HA HA HA...

பேசாம காமடி கண்ணன் என்று பேரை மாத்தி வெச்சுங்க..

நல்ல காமடி வருது..

கமலகாசன் படம் நல்லாயிருக்கு..

said...

இன்னும் உங்களின் காமெடியைப் படிக்கவில்லை! வலைப்பதிவுக்கு மீண்டும் வந்தாச்சுனு சொல்லவே இந்த அட்டன்டென்ஸ் பின்னூட்டம், காமெடி படிச்சிட்டு மீண்டும் வருவேன்!
(அப்பாடி சிவபாலனுக்கு முன்னாடி வந்து பின்னூட்டம் போட்டாச்சு:))))

அன்புடன்...
சரவணன்.

said...

போச்சா!!
வந்துட்டீங்களா சி.பா!
இந்தத் தபாவும் டபாய்ச்சு முதல் பின்னூடம்மா! கலக்குங்க சி.பா
(இந்தப் பின்னூட்டத்திற்க்கும் பதிவிற்க்கும் சம்பந்தமில்லை,இந்தப் பின்னூட்டம் முதல் பின்னூட்டமிட்ட சிவபாலனுக்கு மட்டுமே,:)))))))


அன்புடன்...
சரவணன்.

said...

சரவணன்,

Better Luck Next Time...

HA HA HA...

said...

//Sivabalan said...
GK,
HA HA HA...
பேசாம காமடி கண்ணன் என்று பேரை மாத்தி வெச்சுங்க..
நல்ல காமடி வருது..
கமலகாசன் படம் நல்லாயிருக்கு.. //

சிபா...!
சிலபேரு கடி கண்ணன் என்றும் சொல்லுவார்கள் !
:)

said...

பகுதி ஒன்றை படித்துவிட்டு இங்கே வந்து பின்னூட்டம் போடுகிறேன்(புகை)....

என்னங்க கமல் பேசுனா இப்படில்லாம் இருக்காது நிறையா ப்ரஞ்சு, ஷ்பானிஸ் படத்து பேரு, அப்புறம் , இந்த மிலொஸ் போர்மென், காலிகூலா, இதெல்லாம் கலந்து கட்டி பேசுவாரு நீங்க அவரை என்னமோ அஜித் படத்துக்கு கதைசொல்றவர்மாதிரி ஆக்கிட்டீங்களே? :))

said...

//மகேந்திரன்.பெ said...
பகுதி ஒன்றை படித்துவிட்டு இங்கே வந்து பின்னூட்டம் போடுகிறேன்(புகை)....

என்னங்க கமல் பேசுனா இப்படில்லாம் இருக்காது நிறையா ப்ரஞ்சு, ஷ்பானிஸ் படத்து பேரு, அப்புறம் , இந்த மிலொஸ் போர்மென், காலிகூலா, இதெல்லாம் கலந்து கட்டி பேசுவாரு நீங்க அவரை என்னமோ அஜித் படத்துக்கு கதைசொல்றவர்மாதிரி ஆக்கிட்டீங்களே? :))

9:41 PM
//

மகி.. !
படத்துல தான் கமல் அப்படி பேசுவாரு..!
இது கத டிஸ்கஷன்
:)

said...

:-))))))))))))))))))

said...

//உங்கள் நண்பன் said...
இன்னும் உங்களின் காமெடியைப் படிக்கவில்லை! வலைப்பதிவுக்கு மீண்டும் வந்தாச்சுனு சொல்லவே இந்த அட்டன்டென்ஸ் பின்னூட்டம், காமெடி படிச்சிட்டு மீண்டும் வருவேன்!
(அப்பாடி சிவபாலனுக்கு முன்னாடி வந்து பின்னூட்டம் போட்டாச்சு:))))

அன்புடன்...
சரவணன்.
//

அட்டென்டன்ஸுக்கு நன்றி... அட்டேன்சன் எப்போ !
சிபா ...முந்திக் கொண்டார் !
ஹா ஹா !

said...

//மகி.. !
படத்துல தான் கமல் அப்படி பேசுவாரு..!
இது கத டிஸ்கஷன் //

கதை டிஸ்கஷனைல் இன்னும் தெளிவா பேசுவார் நீங்க குழப்புறீங்க ஆமா :))

said...

//
ஒரு குத்தாட்டம் வெச்சு அரை மணிநேரம் டைம் போறதைக் காட்டனும் ... ரகசியாவையோ, பிபாசாவையோ யாராவது ஒருவரை போடுங்கள்
//
இது மேட்டரூ

கலெக்சன் பாக்கவேணாமா??

அவ்வ்வ்

சூப்பர் கோவி. கண்ணன் கலக்கியிருக்கீங்க அடுத்த பாகத்துக்கு போறேன் ஜூட்