Tuesday, September 19, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

சாமி கண்ணைக் குத்துமா ?

திரு என்னார் அவர்களின் சிருஷ்டி பற்றிய பதிவைப் படித்த போது, எனக்கு ஏற்பட்ட ஒரு சில எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன். இது அவரது பதிவிற்கான எதிர்வினை அல்ல.

குழந்தைகள் வளரும் போது பெற்றோர்கள் அறிமுகப்படுத்தும் முக்கிய விசயங்களில் கடவுள் நம்பிக்கையும் ஒன்று. பயத்தின் மூலமாக குழந்தைகளுக்கு பக்தி போதிக்கப் படுகிறது. இதைச் செய்தால் சாமி கண்ணைக் குத்தும், அதைச் செய்தால் தண்டிக்கும் என்று பூச்சாண்டியாக கடவுள் நம்பிக்கை குழந்தைளுக்கு அறிமுகப் படுத்தப்படுகிறது. குழந்தைகளின் அடுத்த வளர்ச்சியில் இது நம்ம சாமி, அது அவர்களுடைய சாமி என்று வேற்று மதங்களின் கடவுள்களின் அறிமுகம் கிடைக்கிறது.

அதன் பிறகு மதம் சார்ந்த நம்பிக்கைகளை பண்டிகை மூலம் ஓரளவு வளரும் போது குழந்தைகள் தெரிந்து கொள்கிறார்கள். இவ்வாறாக கடவுள் நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை என்ற அளவில் நின்றுவிடுகிறது. சிறுவயது முதல் ஏற்பட்ட பயம் காரணமாக கடவுள் குறித்து கேள்வி எழுப்பாமலே தொடர்ந்து எத்தகைய நம்பிக்கை நம் மதத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்.

எல்லா மதங்களுமே சொர்கம், நரகம் என்ற கோட்பாடுகளை புகுத்தி அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் யுக்தியை தனக்குள் வைத்திருக்கின்றன. தத்துவங்கள் என்ற பெயரில் சில நம்பிக்கைகள் கட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ராகு காலத்தில் காரியம் தொடங்கக் கூடாது, தேய்பிறையில் தொடங்கக்கூடாது, வெள்ளிக்கிழமை செய்தால் நல்லது என்பது போல் பல நம்பிக்கைகள் கட்டுப்பாட்டில் நாம் செயல்படுகிறோம். இவை ஏன் என்ற கேள்வி எழும் போது பாதிக்கப்பட்ட அல்லது லாபம் பெற்ற ஒருவரையோ, ஒரு கதையையோ சொல்லி அதற்குமேல் யோசிக்க விடாமல் செய்துவிடுகின்றன.

இந்த தத்துவங்கள் அல்லது நம்பிக்கைகள் எல்லாம் உண்மையானவையா ? உண்மையானவை என்றால் அதை ஏன் சூட்சமாக சொல்லவேண்டும். கண்ணை மூடிக் கொண்டு இதில் ஏதோ சூட்சமம் இருக்கிறது அல்லது ஒரு தத்துவம் ஒளிந்திருக்கிறது என்று நம்புவர்களுக்கு அதனால் என்ன பயன் ?. நமக்கு என்னவென்றே தெரியாத விசயத்தை எல்லோரும் செய்கிறார்கள் கேள்வி எழுப்பாமல் நாமும் ஏன் செய்யவேண்டும் ? என்றெல்லாம் நாம் பார்பது இல்லை.

எவரோ ஒருவரோ , பலரோ இருட்டுக்காலத்தில் சொல்லிய ஒன்றை இந்த காலத்துக்கு அது எவ்வாறு பொருந்தும் என்று பார்கமலேயே பல நம்பிக்கைகள் காலம் காலமாக வளர்க்கப் படுகின்றன. இவை வாழ்வியலுக்கு எவ்வாறு பயனிளிக்கிறது என்று பெரும்பாலான நம்பிக்கையாளர்கள் பார்ப்பது இல்லை. இன்னும் இந்த நம்பிக்கைகளை நம் கெளரவ சின்னங்களாக நினைத்து அவற்றைப் பற்றி கேள்வி எழுப்புபவர்களை சாடியே வருகிறோம்.

ஒரே மாதிரி வித்தைகள் செய்பவர்களில் ஒருவர் வேறு ஒருவரை இரத்தவாந்தி எடுக்கவைத்தால் அவர் மோடி மஸ்தான். அதேபோல ஒரு வித்தை மூலம் வேறு ஒருவர் தனக்கு தானே எடுக்கும் வாந்தியில் லிங்கம் வரவழைத்தால் அவர் அவதாரமாக பார்க்கப்படுகிறார். மோடி மஸ்தானா ? அவதாரமா ? எடுக்கப்படும் வாந்தியின் மதிப்பை பொறுத்து வித்தைக்காரார் போற்றப்படுகிறார். இதெல்லாம் நமக்கு தெரியாமல் இருக்கிறதா என்ன ?

உண்மையான கடவுள் நம்பிக்கை என்பது ஒரு தேடலாக இருக்கவேண்டும், அப்படி இருக்கும் போது 'சாமி கண்ணைக் குத்தும்' என்ற பயமே இல்லாமல் கேள்விகள் வரும்.

இப்பொழுது பெரும்பாலோருக்கு இருப்பது கடவுள் நம்பிக்கையில்லை, மதம் சார்ந்த நம்பிக்கைகளே. கடவுள் நம்பிக்கை இருந்தால் மாற்று மதக் கடவுள்களை தூற்றத் துணிவரோ? கடவுள் படைப்பில் உயர்வு தாழ்வு பார்ப்பாரோ ? நமக்கு பிறப்பு முதல் ஊட்டப்படும் 'சாமி கண்ணைக் குத்தும்' என்ற பயம் மதங்களில் பாதுகாப்புடன் இருக்கும் மூட நம்பிக்கைகளைப் பற்றி கேள்வி எழுப்பதை மறைமுகமாக தடுக்கவே அதிகம் பயன்படுகிறது. கடைசிவரை நமக்குவிடை கிடைக்காமல் போகும் விசயங்களை நாம் நம்புவதால் நமக்கு என்ன பயன் என்ற கேள்வி எப்போதும் எழுவதே இல்லை என்பதும் ஆச்சரியமான விசயம்.

16 : கருத்துக்கள்:

said...

கோவி, இந்தக் கண்ணைக் குத்தும் அச்சுறுத்தல் எல்லா மதத்திலும் உண்டு. ஆனால் கேட்டுப் பாருங்கள்...தங்கள் மதமே அன்பு மதம் என்று நிரூபிக்க எல்லாரும் வரிகளோடு வருவார்கள். சாமி கண்ணை இன்றைக்கே குத்தும், நாளைக்குக் குத்தும், செத்தப்புறம் குத்தும் என்று எல்லா மதங்களும் சொல்கின்றன. இது தவறுதான் என்பது என்னுடைய கருத்து.

இறைவன் அன்பு மயமானவன். தன்னை வணங்கினால் மட்டுமே வாழ வைப்பான். இல்லையென்றால் தண்டிப்பான் என்பதெல்லாம் வரட்டு வாதம். எந்த மதம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பல பெரியவர்களும் ஏற்றுக் கொண்டதில்லை.

said...

ஆஹா எனக்கு பிடிச்ச டாபிக்ல ஒரு பதிவு போட்டுட்டீங்களா சூப்பர். ஒரு பெரிய பின்னூட்டமா உங்களுக்கு போடணும்ன்னு நினைச்சிகிட்டே இருந்தேன் சான்ஸ் கிடைச்சிருச்சு. உங்களோட ஒத்துப் போகிற அதே சமயம் முரண்படவும் செய்கிறேன். என்னடா குழப்பறான்னு பார்க்கறீங்களா?

ஒத்துப் போகிற விஷ்யம் என்னன்னா எதையும் கண்மூடித் தனமா நம்பக் கூடாதுன்னு சொல்லுறீங்களே அதை.

///
உண்மையான கடவுள் நம்பிக்கை என்பது ஒரு தேடலாக இருக்கவேண்டும்
///

எல்லோருக்கும் தேடல் இருக்கணும் ஒத்துக்கிறேன் இன்றைய அறிவியலோட இணைந்து எப்படி கடவுள் என்பதை விளக்க முடியும் என்பதுதான் என் தேடல். ஆனா இதே இடத்தில் தான் நான் உங்களோட வேறு படுகிறேன்.

ஐன்ஸ்டினோட சார்பு நிலைத் தத்துவம் அவர் கண்டு பிடிச்சிட்டார் அதை மறுபடியும் நாமே கண்டு பிடிக்கணும் அதை ஒத்துக்கக் கூடாது நாமே அதை அறிந்து உணர்ந்தால் தான் அது சரி என்று சொல்வதும் தவறு.

அதே போல உங்களால அறிந்து உணர முடியாவிட்டால் அதனை தவறு என்று சொல்வதும் தவறு.

சில நம் அறிவுக்கு எட்டாத சில விஷயங்களையும் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

உங்களுக்கு ஜப்பானில் ஷுவான் ஷுவே என்று ஒருவர் இருக்கிறார் என்று தெரியாது அவர் இருப்பதற்கான எந்த வித ஆதாரமும் உங்களுக்கு இல்லை என்பதற்காக அவர் இல்லை என்றாகி விடுமா? உங்களுக்கு தெரியாது என்பதற்காக அவர் இல்லவே இல்லை என்றால் அது எவ்வளவு பெரிய தவறு .

இந்த சின்னஞ் சிறு உலகில் இருக்கும் ஒருவரைத் தெரியாது என்பதால் அவரைத் தெரியாது என்று சொல்லி விடுவது எவ்வாறு தவறோ அதே போல இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் கடவுள் இல்லை என்று சொல்வதும் தவறுதான்.

அதே போல தான் சில பழக்கங்களும் அதை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள் என்று ஒதுக்கி விடுவது அதனை தவறு என்பதும் தவறுதான்.

இந்த மாதிரி சமயத்தில் தான் ஒரு dilemma வந்து விடுகிறது என்ன செய்வது என்று இங்கு தான்

என்றோ எனக்கு வந்த fwd எனக்கு உதவுகிறது. அந்த fwdல் சொல்லப் பட்ட செய்தி என்ன என்றால் எதை செய்யும் முன்னும் அதனை இரண்டு சோதனைகளுக்கு உட்படுத்து

அதை செய்வதால் யாருக்கேனும் தீமை ஏற்படுகிறதா? ஏற்படுகிறது என்றால் செய்யாதே.

அதை செய்வதால் யாருக்கேனும் நன்மை ஏற்படுகிறதா? ஏற்படுகிறது என்றால் செய்.

இன்று மதம் என்ற அமைப்பின் மேல் எனக்கு நம்பிக்கை போய் விட்டதற்கும் இதுதான் காரணம் நன்மைகள் குறைவு தீமைகள் அதிகம் என்பதால் தான்.

சிம்பிளா சொல்லணும் என்றால் என்னார் அவர்கள் சொல்வதைச் செய்வதால் தீமைகள் இல்லை அதில் ஒரு அர்த்தம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் தீமைகள் இல்லை என்பதால் என்னால் ஒத்துக் கொள்ள முடிகிறது.

இதே வேறு ஒரு விஷயம் எடுத்துக் கொண்டு அதற்கு அர்த்தம் இருந்தாலும் தீமைகள் இருக்கிறது என்றால் செய்யாதே.

எதோ உங்க பதிவோட contextக்கு ஒத்து வர மாதிரி எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்.

இது எல்லாம் எனக்குத் தெரிஞ்சது தவறுன்னா மாத்திக்கிடுவேன்.

said...

நட்சத்திர பதிவில் உமக்கு ஒரு கேள்வி விழுந்துள்ளது அய்யா...வாரும் வந்து ஆசீர்வதியும்..

said...

கோவி.கண்ணன்,

நீங்கள் நம்பிக்கைகளைப் பற்றிக் கூறும்போது ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு வீட்டிலே வளர்ந்து வந்த நாய், அந்த வீட்டில் எப்போது மணி அடித்துப் பூஜை செய்தாலும் ஊளையிடும். எனவே, பூஜையை ஆரம்பிக்குமுன் அந்த நாயைக் கொண்டு போய் தூரத்தில் ஒரு மூலையில் கட்டிவிட்டுப் பின்னர் பூஜையைச் செய்வார்கள். நாய்க்கு மணி அடித்தாலும் பெரிதாகக் கேட்காது. அது ஊளையிட்டாலும் பூஜையைக் குழப்பாது. இவ்வாறு பல ஆண்டுகள் நடந்து வந்தது. அந்த நாய் இறந்த பின்னர் வேறு நாயை அவர்கள் வளர்க்கத் தொடங்கினர். ஆயினும், நாயைக் கட்டும் வழக்கம் அது தேவையா இல்லையா என்று யோசிக்காமலேயே தொடர்ந்தது. பல தலமுறைகளுக்குப் பிறகும் இந்த வழமை தொடர்ந்தது, ஏனென்று தெரியாமலே!

இப்படித்தான் இருக்கும் அனேகமான நம்பிக்கைகள்.

வைசா

said...

// மதம் சார்ந்த நம்பிக்கைகளே. கடவுள் நம்பிக்கை இருந்தால் மாற்று மதக் கடவுள்களை தூற்றத் துணிவரோ? //

It is good point Mr.Ji.Ke

said...

ஜிரா...!

உங்களின் மறுமொழி,
கடவுள் உள்ளமே கருனை வெள்ளமே ... !

அன்பென்ற மழையிலே...!

என்ற பாடல் வரிகளையும் நினைவுபடுத்தி விட்டது !

அருமையாக... கடவுள் அன்பே உருவானவர். அன்பே கடவுள் !
என்பதை சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

said...

//குமரன் said...
எதோ உங்க பதிவோட contextக்கு ஒத்து வர மாதிரி எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்.//

குமரன் ...!
நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி !

நீங்கள் கேட்பது ஜப்பானில் ஒருவர் இருக்கிறார் அதை நம்புகிறாயா ? இல்லையா ?
நிச்சயமாக நம்பலாம். ஏனென்றால் உங்களுக்கு அவர் இருப்பது தெரிந்திருக்கிறது. உங்களை எனக்கு தெரிந்திருக்கிறது எனவே நம்பலாம்.

கடவுள் நம்பிக்கை அதைச் சேர்ந்ததா ?
ஒரு சிவன் உண்டு என்கிறார், மற்றவர் ஆதிகேசவன் மகாவிஷ்னுவே உயர்ந்த கடவுள் என்கிறார், மற்றவர்கள் அவரவர் மதத்திற்கு உள்ள இறைவனை மிகப் பெரியவன் என்கிறார்கள். இதில் எது உண்மை ?

தனிப்பட்ட முறையில் பக்தியாளர்கள்
உணர முற்படவேண்டும், அடைய முற்படவேண்டும் அதுவே உண்மையான கடவுள் நம்பிக்கை எனத் தெரிகிறது. மற்றதெல்லாம் மதம் சார்ந்த நம்பிக்கையே !

said...

GK,

தலைவர் GK எனக் கூப்பிட வேண்டும் என்று தோன்றியது ... ஏனென்றால் இப்பதிவு அப்படி...

கலக்கிடீங்க..

//கடவுள் படைப்பில் உயர்வு தாழ்வு பார்ப்ரோ ? //

நாட்டில் நிறைய பேரு இப்படித்தான் சுத்திட்டு இருக்காங்க.. அவங்க இதற்கு பதில் சொன்னால் நல்லாயிருக்கும்..

சில பேர் தான் இந்த சாதியில் பிறந்ததே கடவுள் சித்தத்தால் என சொல்வது மிகவும் வருந்தகூடியது. இது மாதிரி ஆட்கள் பல சாதியில் இருக்காங்க.. யாரையும் தனியா குறிப்பிடவில்லை.

மொத்தத்தில் கடவுளை மற மனிதனை நினை...

அவ்வளவே.

இப்பதிவிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

said...

GK,
தலைவர் GK எனக் கூப்பிட வேண்டும் என்று தோன்றியது ... ஏனென்றால் இப்பதிவு அப்படி...
கலக்கிடீங்க..
//கடவுள் படைப்பில் உயர்வு தாழ்வு பார்ப்ரோ ? //
நாட்டில் நிறைய பேரு இப்படித்தான் சுத்திட்டு இருக்காங்க.. அவங்க இதற்கு பதில் சொன்னால் நல்லாயிருக்கும்..

சில பேர் தான் இந்த சாதியில் பிறந்ததே கடவுள் சித்தத்தால் என சொல்வது மிகவும் வருந்தகூடியது. இது மாதிரி ஆட்கள் பல சாதியில் இருக்காங்க.. யாரையும் தனியா குறிப்பிடவில்லை.

மொத்தத்தில் கடவுளை மற மனிதனை நினை...

அவ்வளவே.

இப்பதிவிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்//

சிபா ... !

**மொத்தத்தில் கடவுளை மற மனிதனை நினை...** இது நான் சொல்லவில்லை.

நான் சொல்வது,
மதத்தை மற மனிதனை நினை என்று கொள்ளலாம்.

உங்கள் பின்னூட்ட கருத்து மிகவும் நன்று !

நன்றி !!!

said...

//இப்பொழுது பெரும்பாலோருக்கு இருப்பது கடவுள் நம்பிக்கையில்லை, மதம் சார்ந்த நம்பிக்கைகளே. கடவுள் நம்பிக்கை இருந்தால் மாற்று மதக் கடவுள்களை தூற்றத் துணிவரோ? கடவுள் படைப்பில் உயர்வு தாழ்வு பார்ப்பாரோ ?//

பளிச் கருத்துக்கள் மொத்தப் பதிவையும் இதைவைத்து மதிப்பிடலாம். வாழ்த்துக்கள்.

said...

//செந்தழல் ரவி said...
நட்சத்திர பதிவில் உமக்கு ஒரு கேள்வி விழுந்துள்ளது அய்யா...வாரும் வந்து ஆசீர்வதியும்..
//

சீரியஸ் ஆக ஒரு பதிவு எழுதினாலும் இப்பிடி கும்மி அடிக்கிற ஆளுங்களை பக்கத்தில் வைத்திருக்கும் பலன் !
:)))

said...

//வைசா said...
கோவி.கண்ணன்,

நீங்கள் நம்பிக்கைகளைப் பற்றிக் கூறும்போது ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.

//

வைசா...!
அருமையான கதை ஒன்று சொல்லி கட்டுறைக்கு மேலும் மெருகு சேர்த்திருக்கிறீர்கள்.

நன்றி !!!

said...

// SP.VR.SUBBIAH said...
It is good point Mr.Ji.Ke //

பாராட்டுக்கு நன்றி ஐயா...!

said...

//சிறில் அலெக்ஸ் said...
பளிச் கருத்துக்கள் மொத்தப் பதிவையும் இதைவைத்து மதிப்பிடலாம். வாழ்த்துக்கள்.//

சிறில்...!
அடுத்தமாதம் தேன்கூடு போட்டிப் படைப்புகளை மதிப்பீடு செய்ய ஆள் தேடுகிறார்களாம் !

just kidding !
:))

உங்கள் பாராட்டுக்கு நன்றி ! மகிழ்ச்சி !
நெகிழ்ச்சி !
:)))

said...

well said!!!

Pls pass it to all.

I saw few debates and found still even in blogs people fighting each other by supporting their religion.

Even whatever the technology improved not really use.We need moral education more and more.

said...

கோவி.க.
நேற்று எனது vsnl இணைப்பு செயல் படவில்லை இன்று தான் வந்தது மாலை வந்து இதில் கலந்து கொள்கிறேன்